இணைய நாயர்களின் கதை!

Screenshot_2019-01-06 cybersimman books - Google Searchஇந்த புத்தக கண்காட்சிக்கு புதிதாக என் புத்தகம் எதுவும் வெளி வரவில்லை. செல்பேசி இதழியலுக்கான கையேடு வெளி வந்திருக்க வேண்டியது. தள்ளிப்போகிறது. எனினும், இதுவரை வெளியான நான்கு புத்தகங்களை கண்காட்சியில் பார்க்கவும், வாங்கவும் வாய்ப்பிருக்கிறது.

  1. இணையத்தால் இணைவோம்: தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த, சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள இணையதளங்கள் விரிவான அறிமுகம் அடங்கிய தொகுப்பு நூல் இது. மொத்தம் 110 க்கும் மேற்பட்ட இணையதளங்கள் இருக்கலாம். இந்த புத்தகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அலெர்டிபீடியா உள்ளிட்ட சில தளங்கள் இப்போது இல்லை என்றாலும், ஐசெக்மூவீஸ் ,ஸ்லேஷ்டாட் போன்ற இணையதளங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். பிரிண்டருக்குள் மறைந்திருக்கும் உளவு பார்க்கும் மஞ்சள் புள்ளி தொடர்பான இணையதளம் எனது அபிமான தளங்களில் ஒன்று. வெளியீடு- விவேக் எண்டர்பிரைசஸ்
  2. நெட்சத்திரங்கள்: இணையம் மூலம் பிரபலமாகி நட்சத்திரங்களான சாமானியர்களின் அறிமுக சித்திரம். சர்சையால் பிரபலமானவர்களின் கதைகளும் அடங்கும். உலகிற்கே ஆங்கிலம் கற்றுத்தந்து பிரபலமான, அமெரிக்க இந்திய அனு கார்க், இணைய கல்வியை ஜனநாயகமாக்கிய சல்மான் கான் ஆகிய நட்சத்திரங்கள் எனக்கு பிடித்தமானவர்கள். ஒய் திஸ் கொலவெரி வரைலாக கதையும் இதில் உண்டு. இப்போது, சங்கம் முக்கியமா? சோறு முக்கியா ? எனும் வீடியோவில் பிரபலமான சிறுவன் போலவே பல ஆண்டுகளுக்கு முன் பல்வலியால் இணையத்தில் பிரபலமான டேவிட்டின் கதையையும் இதில் வாசிக்கலாம். வெளியீடு- விவேக் எண்டர்பிரைசஸ்
  3. நம் காலத்து நாயகர்கள்: புதிய தலைமுறை கல்வி இதழியில் எழுதிய, நம் காலத்து நாயகர்கள் தொடரின் புத்தக வடிவம். வாட்ஸ் அப், பேஸ்புக், பிளாகர், டிராப்பாக்ஸ் உபெர் உள்ளிட்ட நம் காலத்து இணைய அடையாளங்களாக விளங்கும் சேவைகளை உருவாக்கிய இணைய நாயர்களின் கதையை விவரிக்கும் புத்தகம் இது. இவர்கள் தவிர அதிக அறியப்படாத ஆனால் இணையத்தின் ஆதார சேவைகளான கிக்ஸ்டார்ட்டர், லைப்ரரி திங் போன்ற சேவைகளின் நாயகர்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். ஏர்பிஎன்பி தளம் எனக்கு மிகவும் பிடித்தமாது, மற்றொரு அபிமான சேவையான கேள்வி பதில் தளமான குவோரா உருவான கதை புத்தகத்தில் இடம்பெறவில்லை. வெளியீடு : புதிய தலைமுறை.

( புதிய தலைமுறை கல்வியில் வெளியான ஸ்டார்ட் அப் கனவுகள் மற்றும் புதிய தலைமுறையில் எழுதிய எண்டெர் நெட் ஆகிய தொடர்களின் நூலாக்கம் குறித்து நண்பர்கள் சிலர் விசாரிப்பதால், இவற்றை மின்னூல் வடிவிலாவது கொண்டு வரவிருப்பம்,).

  1. டிஜிட்டல் பணம்: பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் ரொக்கமில்லா சமூகம் பற்றி எழுதிய நூல் இது. ரொக்கமில்லா சமூகத்தின் சாத்தியம், தேவை வரலாற்றை அறிமுகம் செய்யும் இந்த புத்தகம், உண்மையில் நவீன சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மொபைல் பணம், மற்றும் அனைவருக்குமான வங்கிச்சேவை ஆகிய அம்சங்கள் குறித்து பேசுகிறது. வெளியீடு; கிழக்கு பதிப்பகம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *