’ஜிமெயில் 15’: உலகின் பிரபலமான இமெயில் சேவை பற்றி நீங்கள் அறியாத அம்சங்கள்!

gmஇப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன், இதே தினத்தன்று தான் ஜிமெயில் சேவை முதலில் அறிமுகமானது. ஆம், 2004 ம் ஆண்டு, முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ம் தேதி தான், ஜிமெயில் அறிமுகமானது. அறிமுகமான போது, பலரும் ஜிமெயில் சேவையை உண்மையென நம்பவில்லை, இது முட்டாள்கள் தின ஏமாற்று வேலை என்றே நினைத்தனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், ஜிமெயில் இ ஜிபி சேமிப்புத்திறனை அளிப்பதாக கூறிவது. அப்போது பிரபலமாக இருந்த இமெயில் சேவைகள் அளித்த சேமிப்புத்திறனைவிட இது பல மடங்கு அதிகம். புதிய இமெயில்களை பெற வேண்டும் என்றால் பழைய மெயில்களை எல்லாம் டெலிட் செய்தாக வேண்டும் எனும் கட்டுப்பாட்டை இணைய இயல்பாக அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்த காலத்தில், திடிரென அறிமுகமாகும் ஒரு இமெயில் சேவை, 1 ஜிபி சேமிப்பு வசதி அளிக்கிறது என்றால் யார் தான் நம்புவார்கள்.

அதிலும், கூகுள் இமெயில் சேவையை அறிமுகம் செய்ய இருக்கும் தகவல் ஏப்ரல் 1 ம்  தேதிக்கு முன் கசிந்ததால், இது நிச்சயம் முட்டாள்கள் தின விளையாட்டு தான் என்று பலரும் முடிவு செய்தனர். ஆனால், இந்த சந்தேக பார்வைகளை மீறி ஜிமெயில் உண்மையான சேவையாக அறிமுகமாகி , கடந்த 15 ஆண்டுகளில் இணையத்தின் முக்கிய சேவைகளில் ஒன்றாக நிலைப்பெற்றிருக்கிறது. ஜிமெயில் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:

  • 2004 ல் ஜிமெயில் அறிமுகமானது போது, யாஹு மெயில் மற்றும் ஹாட்மெயில் ஆகியவை முன்னணி இமெயில் சேவைகளாக இருந்தன. இவை அதிகபட்சம் 2 முதல் 4 ஜிபி சேமிப்பு இடம் வழங்கின. 1 ஜிபி சேமிப்பு இடம் என நம்ப முடியாத தன்மையோடு அறிமுகமான ஜிமெயில் அடுத்து வந்த ஆண்டுகளில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, யாஹு மெயிலையும், ஹாட்மெயிலையும் செல்வாக்கு இழக்கு வைத்தது.
  • ஜிமெயில் அறிமுகமானது போது, பலரும் அதை உண்மை என நம்பாமல் இருந்ததற்கு காரணம், அது வழங்கிய அதிகப்படியான சேமிப்பு வசதி மட்டும் அல்ல, தேடியந்திரமான கூகுள் இப்படி ஒரு சேவையை அளிக்க முன்வரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. 1998 ல் அறிமுகமான கூகுள், அதன் பிறகு தேடல் உலகில் நம்பர் ஒன் இடத்தை பெற்றிருந்தாலும், அடிப்படையில் தேடல் சேவையை மையமாக கொண்ட நிறுவனமாகவே தொடர்ந்தது. தேடல் தான் கூகுளின் பலம் என்பதால் கூகுள் வேறு சேவைகளில் கவனம் செலுத்தாது என கருதப்பட்டது. ஆனால் கூகுள் தனது வளர்ச்சிப்பாதையில் புதிய பாதையை காண விரும்பியதன் விளைவாக ஜிமெயில் அறிமுகமானது.
  • ஜிமெயிலின் வெற்றி, கூகுளுக்கே சரியான டானிக்காக அமைந்தது. அதற்கு முன், கூகுள் செய்தி சேவை மட்டுமே தனி சேவையாக அறிமுகமாகி இருந்தது. ஆனால் அதுவும் கூட ஒரு விதத்தில் தேடல் சார்ந்தது என்பதால், ஜிமெயில் தான் கூகுளின் முதல் தனிச்சேவையாக அமைந்தது. ஜிமெயிலின் வெற்றியே கூகுளுக்கு விரிவாக்கம் பற்றிய நம்பிக்கையை கொடுத்தது. தொடர்ந்து அறிமுகமான கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கூகுள் சேவைகளுக்கு ஜிமெயில் வெற்றி தான் அடித்தளம்.
  • ஜிமெயில் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, அது வாரி வழங்கிய சேமிப்பு வசதி மட்டும் அல்ல: ஒரு சேவையாக ஜிமெயில் துடிப்பானதாகவும், வேகமாக செயல்படக்கூடியதாகவும் இருந்தது. யாஹு மெயில் போன்றவற்றில் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அந்த இணைய பக்கம் தரவிறக்கம் ஆகும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். ஆனால், கூகுளில் எல்லாம் விரல் சொடுக்கும் நேரத்தில் வந்து நின்றது. மற்ற மெயில்கள் போல, ஒரு இணையதளமாக உருவாக்கப்படாமல், இணைய செயலியாக ஜாவா ஸ்கிரிப்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததால் ஜிமெயில் சேவை வேகமான செயல்பாட்டை கொண்டிருந்தது.
  • பால் புச்சியட் (Paul Buchheit ) எனும் கூகுள் ஊழியரே ஜிமெயிலை உருவாக்கியவர். கூகுள் குருப் சேவையை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய இவரிடம் தான் ஜிமெயிலை உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பால், ஹாட்மெயில் சேவை அறிமுகமாவதற்கு முன்பே, எளிமையான இமெயில் சேவையை உருவாக்க நினைத்தவர். ஆனால் ஏனோ அது கைகூடவில்லை. பின்னர் கூகுளில் அது சாத்தியமானது. 1999 ல் கூகுளின் 23 வது ஊழியராக பணிக்குச்சேர்ந்தவர் 2001 ல் இதற்கான பணியை துவக்கினார்.
  • ஜிமெயில் திட்டம் துவங்கிய போது, அந்த சேவை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக கூகுளுக்கு தெளிவான எந்த வரையறையும் இருக்கவில்லை. இமெயில் போன்ற ஒரு சேவையை உருவாக்கலாம் என்றே தெரிவிக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த திட்டத்திற்கு கரிபோ (Caribou ) என்றே பெயரிடப்பட்டிருந்தது.
  • ஜிமெயில் ஆதார அம்சங்களில் ஒன்றாக அமைந்தது அதன் தேடல் வசதி ஆகும். இமெயில் சேவைகளில் தேடல் வசதி என்பது அப்போது அதிகம் அறியப்படாதது. ஜிமெயிலை உருவாக்கிய பால் புச்சியட் இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த போது, தனது சர்வரில் தேடல் வசதியையும் ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அவர் சக ஊழியர்களிடம் கருத்து கேட்ட போது அனைவருமே தங்கள் இமெயிலிலும் தேடல் வசதி இருக்க வேண்டும் என கூறினார். இதன் விளைவாகவே தேடல் அம்சம் ஜிமெயில் பிரதானமாக இடம்பெற்றது.
  • தேடல் வசதி அளிக்க வேண்டும் என்றால், அனைத்து மெயில்களையும் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது பழைய மெயில்களை எல்லாம் டெலிட் செய்யாமல் இருக்க வேண்டும். எனில், சேமிப்பு வசதி போதுமானதாக இருக்க வேண்டும். கூகுள் 1 ஜிபி வசதி அளிக்க இதுவே காரணமானது.
  • ஜிமெயில் தேடல் வசதியை இடம் பெறச்செய்யும் முடிவுக்கு ஆதரவு இருந்தது போல எதிர்ப்பும் இருந்தது. பலரும் இது தேவையற்றது என நினைத்தனர். ஆனால் கூகுள் நிறுவனர்லாரி பேஜ், இதற்கு பச்சைக்கொடி காட்டினார்.
  • ஜிமெயில் குழு செயல்படத்துவங்கிய சில மாதங்களில், இந்திய மென்பொருள் வல்லுனரான சஞ்சீவ் சிங் அதில் இணைந்து கொண்டார். இவரும் பாலும் பின்னர் இணைந்து பிரெண்ட் பீட் சேவையை உருவாக்கினர்.1549707218-tfyfg
  • ஜிமெயில் அறிமுகமானது போது பெரும் வரவேற்பை பெற்றதோடு, கடும் சர்ச்சைக்கும் இலக்கானது. மெயிலில் தேடல் வசதி சாதகமானது அம்சமாக அமைந்தாலும், இதற்காக இமெயிலின் உள்ளடக்கம் நிறுவனத்தால் ஸ்கேன் செய்து பார்க்கப்படும் என்பது பிரைவசி கவலையை உள்ளடக்கியது. ஆனால், கூகுள் ஸ்கேனிங் செய்வது மனிதர்கள் அல்ல, இயந்திரங்கள் தான் என்று விளக்கம் அளித்தது.
  • ஜிமெயிலின் தேடல் வசதி, பிரைவசி சர்சையை மீறி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, மெயில் வாசகத்திற்கு பொருத்தமான வரி விளம்பரங்களை இடம்பெற வைத்து கூகுளால் வருவாயை அள்ள முடிந்தது.
  • ஜிமெயில் சேவை அறிமுகமானது போது, எல்லோருக்குமானதாக இருக்கவில்லை. அதற்கான அழைப்பு இருப்பவர்கள் மட்டுமே ஜிமெயில் சேவையை பெற முடிந்தது. அந்த காலத்தில் பலரும் ஜிமெயில் சேவைக்கான அழைப்புக்கு ஏங்கினர். ஜிமெயில் அழைப்புகான கிராக்கி அதிகரித்ததால், ஏல தளமான இபேவில் ஜிமெயில் அழைப்புகள் பட்டியலிடப்பட்டு அதிக விலைக்கு விற்றன.
  • ஜிமெயில் முகவரியை டைப் செய்யத்துவங்கும் போதே, அது யூகிக்கப்பட்டு பரிந்துரைக்கப்படும் ஆட்டோ கம்ப்ளிட் வசதி துவக்கத்திலேயே அறிமுகமானது.
  • கூகுளின் சி.இ.ஒ சுந்தர்பிச்சை, கூகுளில் முதல்முறை கூகுளில் நேர்காணலுக்கு சென்ற போது அவரிடம் ஜிமெயில் சேவை பற்றி தான் கேட்கப்பட்டது. 2004 ஏப்ரல் முதல் தேதியில் தான் அவரிடம் நேர்காணல் நடைபெற்றது. அப்போது ஜிமெயில் சேவையை பார்த்திருக்கிறீர்களா? என கேட்கப்பட்டது. பிச்சை இல்லை என பதில் அளித்தார். மற்றவர்கள் போல பிச்சையும் ஜிமெயிலை உண்மை என அப்போது நினைக்கவில்லை. ஆனால் நேர்காணல் செய்தவர் பிச்சையிடம் ஜிமெயில் பற்றி விளக்கினார். பின்னர் அடுத்த நேர்காணலில் ஜிமெயில் பற்றி மீண்டும் கேட்கப்பட்ட போது பிச்சை சிறந்த முறையில் பதில் அளித்தார்.

நன்றி . தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.