டெக் டிக்ஷனரி-17 கெர்னல் (kernel ) – இயங்குதள மையம்.

LinuxKernel-Linux-Kernel-Mapகம்ப்யூட்டர் உலகில் கெர்னல் என்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறியப்படும் இயங்குதளத்தின் மையமாகும். தாயில்லாமல் நானில்லை என சொல்வது போல, கெர்னல் இல்லாமல் எந்த இயங்குதளமும் இல்லை. மைக்ரோசாப்டின் விண்டோஸ், ஓபன் சோர்ஸ் பிரியர்கள் கொண்டாடும் லினக்ஸ் என எல்லா இயங்குதளங்களிலும் கெர்னல் உண்டு.

கெர்னல் இயங்குதளத்தின் மையம் என்பதால், அதன் மற்ற பகுதிகள் அனைத்திற்குமான அடிப்படை சேவைகளை அளிக்கிறது. இயங்குதளத்தை இயக்கும் போது முதலில் லோடு ஆவது அதன் மையமான கெர்னல் தான். ஏனெனில், கம்ப்யூட்டரில் இயங்கும் மென்பொருளான இயங்குதளம் மற்றும் வன்பொருளான கம்ப்யூட்டருக்கும் இடையே பாலமாக இருப்பது அது தான்.

கெர்னல் இயங்குதளத்தின் பிரதான நினைவகத்தில் வீற்றிருக்கிறது. எனவே அதிக இடத்தில் அடைத்துக்கொள்ளாமல் சிக்கனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் இயங்குதளத்திற்கு தேவையான எல்லா சேவைகளையும் அளிக்க வேண்டும். இயங்குதளத்தின் வளங்களையும் கெர்னல் தான் நிர்வகிக்கிறது. அதாவது மென்பொருள் சேவைகளுக்கு தேவையான நினைத்திறன் இருப்பதை அது உறுதி செய்கிறது.

கம்ப்யூட்டரில் எது செய்வதாக இருந்தாலும் அதற்கான கட்டளை கெர்னலுக்கு தான் செல்கிறது. உதாரணமாக, ஸ்பீக்கரின் ஒலியை அதிகரிக்க விரும்பினால், மென்பொருள் அதற்கான கோரிக்கையை கெர்னலுக்கு அனுப்புகிறது. கெர்னர்ல் ஸ்பிக்கரை இயக்கி ஒலியை அதிகரிக்கிறது.

கெர்னல் என்பது எல்லா இயங்குதளத்திற்கு பொதுவானது என்றாலும், பொதுவாக லினக்ஸ் கெர்னல் என்றே குறிப்பிடப்படுகிறது. காரணம், லினக்ஸ் இயங்குதளத்தில் கெர்னல் மிக முக்கியம். ஏனெனில், லினக்ஸ் ஒரு முழுமையான இயங்குதளமாக உருவாக்கப்படவில்லை. அது தன்னார்வலர்கள் கூட்டு முயற்சியால் வளர்ந்தது.

லின்கஸ் என சொல்லும் போது உண்மையில் அதன் பிரம்மா லினஸ் டோர்வல்ஸ் உருவாக்கிய லினக்ஸ் கெர்னலை தான் குறிப்பிடுகிறோம். 1991 ல் லினக்ஸ் கெர்னலை இவர் உருவாக்கினார். லினக்ஸ் டெஸ்க்டாப் இயங்குதளத்திற்கு தேவையான அடிப்படைகள் அனைத்தும் ஜி.என்.யூ எனும் ஓபன்சோர்ஸ் திட்டத்தில் ஏற்கனவே இருந்தது. அதில் கெர்னல் இல்லாததே குறையாக இருந்தது. லினஸ் டோர்வல்ஸ் லினக்ஸ் கெர்னலை உருவாக்கி இந்த இயங்குதளத்தை ஓபன்சோர்ஸ் முறையில் வெளியிட்டார். அதன் பிறகு லினக்ஸ் வெற்றிக்கொடி நாட்டியது வரலாறு.

லினக்ஸ் கெர்னல் பற்றி விரிவான கட்டுரை: https://www.makeuseof.com/tag/what-is-kernel-in-linux-check-version/

முந்தைய டெக் டிக்‌ஷனரி : http://cybersimman.com/2019/03/10/tech-17/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.