வலை 3.0: தீபாவளியும், முதல் இந்திய இணையதளமும்!

rajesh_jainஇந்தியாவேர்ல்டு இணையதளத்தை நினைவில் இருக்கிறதா? இணையம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இந்தியர்கள் மத்தியில் உண்டாக்கிய ஆரம்ப கால இணையதளங்களில் இதுவும் ஒன்று. பல விதங்களில் முன்னோடி இந்திய தளம்!

இந்தியாவேர்ல்டு அறிமுகமான கால கட்டத்தில், இந்திய இணைய பரப்பில் செய்தி தளங்கள் இல்லை. இந்திய இணையதளங்களே இல்லை என்றும் கூட சொல்லிவிடலாம். தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட இந்தியர்கள் மத்தியில் மட்டுமே இணைய பயன்பாடு இருந்தது. அவர்கள் எண்ணிக்கையும் சொற்பமாகவே இருந்தது.

இந்த பின்னணியில், இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் இணையம் அறிமுகமான 1995 ம் ஆண்டில், அதற்கு சில மாதங்களுக்கு முன் இந்தியாவேர்ல்டு இணையதளம் அறிமுகமானது. அதன் சர்வர் அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருந்தது. ஏனெனில், அந்த இணையதளம் அமெரிக்க இந்தியர்களை மனதில் கொண்டு துவக்கப்பட்டிருந்தது.

அந்த காலத்தில் இந்திய இணைய பரப்பு அப்படி தான் இருந்தது. புதிய இணையதளங்கள் மற்றும் இணைய சேவைகள், அமெரிக்க வாழ் இந்தியர்களை மையமாக கொண்டு தான் துவங்கப்பட்டன. அந்த வகையில் அமெரிக்கா வாழ் இந்தியரான ராஜேஷ் ஜெயின், இந்தியாவேர்ல்டை துவக்கினார்.

ஐஐடி பட்டதாரியான ஜெயின், அமெரிக்காவில் கொலம்பியா பல்கலையில் மேற்படிப்பு முடித்து அங்கு இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இந்தியா திரும்பி, ரவி டேட்டாபேஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தார். புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் அலசும் சேவையை வழங்கும் நிறுவனமாக இது செயல்பட்டது. ஹர்ஷத் மேத்தா ஊழல் வழக்கில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், அதை பொய்யாக்க இதன் நுட்பம் பயன்பட்டது.

ஆனால் இந்நிறுவனம் தோல்வி அடையவே, ஜெயின் 1994 ல் அமெரிக்கா திரும்பிச்சென்றார். அப்போது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான செய்தி இணையதளத்தை துவக்கலாம் என தீர்மானித்தார். இதன் விளைவாக, 1995 மார்ச் மாதல், இந்தியாவில் இருந்து முதல் இணையதளமாக இந்தியாவேர்ல்டு துவக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்திய தளத்தில் புகழ் பெற்ற கார்ட்டூனிஸ்டான ஆர்.கே.லட்சுமன் கார்ட்டூன்கள் மற்றும் இந்தியா டுடே இதழின் செய்திகள் மட்டும் இடம்பெற்றன. அது மட்டும் அல்ல, முதல் மூன்று மாதங்களுக்கு, சர்வதேச தொலைபேசி அழைப்பு மூலம், தினமும் 2,000 ரூபாய் வரை செலவு செய்தி செய்திகளை பதிவேற்றிக்கொண்டிருந்தனர்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியா தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ள அப்போது இந்தியா அபோர்ட் எனும் சேவை மட்டுமே இருந்ததால், உள்ளூர் செய்திகளை அளித்த இந்தியாவேர்ல்டு நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வந்த இமெயில்கள் இதை உணர்த்தின என்று அவுட்லுக் இதழிடம் ஜெயின் கூறியிருக்கிறார்.

மேலும், இந்தியாவேர்ல்டு தளத்தில், லட்சுமன் கார்ட்டூன்களை வரிசையாக சேமித்தும் வைத்திருந்தனர். எனவே புதிதாக வருபவர்கள், பழைய கார்ட்டூகளையும் பார்க்க முடிந்தது. தளத்தின் பயன்பாட்டுத்தன்மையை இது கூட்டியது.

இந்த நிலையில், அமெரிக்க நிறுவனம் சர்வரை பராமரிக்க 5 மில்லியன் டாலர் கேட்டது. மிரண்டு போன் ஜெயின், அப்போது வி.எஸ்.என்.எல் இயக்குனராக இருந்த அமிதாப் குமாரை சந்தித்து தனது பிரச்சனையை எடுத்துரைத்தார். தீபாவாளி பண்டிகை நெருங்கி கொண்டிருந்த நிலையில், இந்தியாவேர்ல்டுக்காக சர்வர் அமைத்து தர அமிதாப் குமார் ஒப்புக்கொண்டார். அது மட்டும் அல்ல, தீபாவளிக்கு முன்னதாக சர்வர் தயாராகிவிடும் என்றும் உறுதி அளித்தார்.

இப்படி தான், 1995 தீபாவளி பண்டிகையின் போது, இந்தியாவேர்ல்டு.கோ.இன் எனும் இந்திய முகவரியுடன் அந்த தளம் செயல்படத்துவங்கியது. துவக்கத்தில், பெரும்பாலும் மற்ற ஊடகங்களில் இருந்து செய்திகளை திரட்டி தொகுத்தளிக்கும் வகையிலேயே இந்தியாவேர்ல்டு செயல்பட்டது. மேலும், அந்த காலகட்டத்தில் பல்வேறு ஊடகங்களும், இணைய பதிப்பையும் துவக்கிய நிலையில், அவற்றில் இருந்து செய்திகளை தொகுத்தளிப்பது தேவையானதாகவும் இருந்தது.

இந்தியாவில் இணையம் வளரத்துவங்கிய நிலையில், இந்தியாவேர்ல்டும் வளர்ந்தது. ஆனால் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, 90 சதவீதத்திற்கு மேல் பயனாளிகள் அமெரிக்காவில் தான் இருந்தனர்.

1997 வாக்கில் நிலைமை மாறத்துவங்கியது. உள்ளூரிலும் மக்கள் இணையதளங்களை செய்திகளுக்காக நாடத்துவங்கினர். இதனையடுத்து இந்திய இணைவாசிகளை மையமாக கொண்ட சேவைகளை இந்தியாவேர்ல்டு வழங்கத்துவங்கியது.

முதல் சேவையாக, கோஜ்.காம் தேடியந்திரம் துவக்கப்பட்டது. கிரிக்கெட் செய்திகளுக்கான கேல்.காம். செய்திகளுக்கான சமாச்சார்.காம், வரலாற்றுக்கான இதிஹாஸ்.காம் உள்ளிட்ட துணை இணையதளங்கள் துவக்கப்பட்டன. கிரிக்கெட் தகவல்களுக்கான கேல், தேடலுக்கான கோஜ் உள்ளிட்ட தளங்கள் இந்தியா வேர்ல்டு தளத்தை மேலும் பிரபலமாக்கியது. தேடியந்திரமாக கூகுள் அறிமுகமாகாத நிலையில், தேடல் என்றால் யாஹுவும், அல்டாவிஸ்டா போன்றவையும் அமைந்திருந்த நிலையில், இந்தியர்களுக்கு தேடல் வசதி என்பது கோஜ் மூலம் அறிமுகமானது.

இணைய விளம்பரத்திற்கான வலைப்பின்னலையும் இந்தியாவேர்ல்டு அறிமுகம் செய்தது. திரப்பட செய்திகள், சோதிட தகவல்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கியது.

இந்தியர்கள் பலரும் இணையம் என்பதை கேள்விபடத்துவங்கிய நிலையில், இந்தியாவேர்ல்டு முன்னணி இணைய சேவையாக உருவெடுத்திருந்தது. இந்த நிலையில் தான், சத்யம் இன்போவே நிறுவனம், இந்தியாவேர்ல்டு நிறுவனத்தை ரூ.499 கோடிக்கு விலைக்கு வாங்குவதாக 1999 ல் அறிவித்தது.

இந்திய இணைய உலகை மட்டும் அல்ல, வர்த்தக உலகையும் இந்த அறிவிப்பு உலுக்கியது. வெற்றிகரமான இணைய நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுவது வழக்கமானது என்றாலும், இந்திய பரப்பில் இது புதிய நிகழ்வாக அமைந்தது.

ஒரு இணைய நிறுவனம், கிட்டத்தட்ட 500 கோடிக்கு வாங்கப்பட்டது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. ஊடகங்கள் இதை பெரிய அளவி செய்தியாக்கின. சிபி ( சத்யம் இன்போவே) ஒரு இணைய நிறுவனத்திற்கு இத்தனை விலை கொடுத்தது ஏன் எனும் கேள்வி எழுந்தது.

இணைய போக்குவரத்து, அதனால் உண்டாகும் மதிப்பு போன்ற புதிய விஷயங்கள் பேசப்பட்டன. ராஜேஷ் ஜெயின் இணைய தொழில்முனைவோராக கொண்டாடப்பட்டார். இந்தியாவேர்ல்டின் வெற்றி மேலும் பலரை இணையத்தை நோக்கி ஈர்த்தது. வெகுஜன பரப்பில் இணையம் பற்றிய உரையாடலுக்கு முக்கிய தூண்டுதலாக இந்தியாவேர்ல்டு அமைந்தது.

இதன் பின் சத்யம் நிறுவனம் சிக்கலுக்கு உள்ளானதும், அப்போது இந்தியா வேர்ல்டு கையகப்படுத்தல் விசாரணைக்கு உள்ளானதும் வேறு விஷயம். ஆனால், இந்திய இணையவெளியில் வெற்றிக்கதைகளில் ஒன்றாக இந்தியாவேர்ல்டு விளங்கியது. டைம் பத்திரிகை ஆசிய இணையத்தின் எழுச்சியின் உதாரணமாக ஜெயினை அடையாளம் காட்டியது.

ராஜேஷ் ஜெயின் நெட்கோர் சொல்யுஷன்ஸ் நிறுவனத்தை துவக்கினார். பின்னர் 2014 ல் மோடி தலைமையில் பாஜக தேர்தலில் வெற்றி பெற்ற போது அதன், ஐடி உத்தி வகுத்த குழுவில் முக்கிய பங்காற்றினார் என்பது துணைத்தகவல்கள். அதே போல, இந்தியாவேர்ல்டு, பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த போது, அதன் டொமைன் பெயர் தொடர்பான சிக்கல் நிலவியதும் ஒரு கிளைக்கதை. பங்குதாரருடனான பிரச்சனை காரணமாக, நிறுவனம், இந்தியாவேர்ல்டு.கோ.இன் எனும் முகவரியில் செயல்பட்டது. பங்குதாரர் இந்தியாவேர்ல்டு,காம் தளத்தை நடத்திக்கொண்டிருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தினாலும், ஜெயினின் இந்தியாவேர்ல்டு வெற்றிக்கதையானது.

https://www.nayidisha.com/about/about-rajesh/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.