செல்பேசி இதழியலின் தோற்றம்

IMG_20191022_073522இதழியல் துறை தான் எத்தனை வேகமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. செல்பேசி அறிமுகமான காலத்தில், அந்த சாதனம் பெரும்பாலும் இடைஞ்சலாக கருதப்பட்டது. தகவல் தொடர்பிற்கு செல்பேசி பயனுள்ளதாக அமைந்தாலும், நிகழ்ச்சிகள், மாநாடுகள் போன்றவற்றில் அது குறுக்கீட்டிற்கான சாதனமாகவே கருதப்பட்டது.

அந்த கால கட்டத்தில் நிகழ்ச்சிகளிலும், மாநாடுகளிலும், செய்தியாளர்கள் சந்திப்புகளிலும், உங்கள் செல்போனை அனைத்து வைக்கவும் அல்லது மவுனமாக வைத்திருக்கவும் என துவக்கத்தில் வேண்டுகோள் விடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. முக்கிய மாநாடுகள் எனில் ஜாமர் சாதனங்கள் மூலம் செல்பேசி செயலிழக்க செய்யப்படும்.

பல சந்திப்புகள் அல்லது நிகழ்ச்சிகள் இடையே செய்தியாளர்களின் செல்போன் ஒலித்து, சங்கடத்தை ஏற்படுத்துவதும் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.

இந்த சங்கடங்களை மீறி, உடனுக்குடன் செய்திகள் தொடர்பான தகவலை தெரிவிக்கும் சாதனமாக செல்பேசி உணரப்பட்டது. அந்த வகையில், பேஜர் சாதனத்தைவிட அது வெகுவேகமாக பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்தது.

ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. செல்பேசி குறுக்கீடுகள் இப்போதும் உண்டு என்றாலும், அந்த ஒற்றை சாதனம் எல்லாம் வல்ல கருவியாக மாறியிருக்கிறது. நவீன செல்போன் கையில் இருந்தால், அதிலிருந்தே செய்தி சேகரித்து ஒளிபரப்புவது சாத்தியமாகி இருக்கிறது. நிகழ்ச்சிகளை செல்பேசியிலேயே நேரலை செய்ய முடிகிறது. பல இடங்களில் தகவல் சேகரிப்பிற்கான முதல் சாதனமாக செல்பேசி இருக்கிறது.

இதழாளர்களை பொருத்தவரை செல்பேசி இருந்தால் போதும் எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் செல்பேசி இதழியலாக உருவாகி இருக்கிறது. மோஜோ ( மொபைல் ஜர்னலிசம்) என பிரபலமாக குறிப்பிடப்படும் இந்த மாற்றம் குறித்தும், இந்த இதழியலுக்கான அடிப்படை அம்சங்கள், நுணுக்கங்கள் குறித்தும், மொபைல் ஜர்னலிசம் புத்தகம் விவரிக்கிறது. மோஜோ பரப்பில் முன்னணியில் இருப்பவர்களின் செயல்பாட்டையும் இந்த புத்தகம் விவரிக்கிறது.

செச்பேசி இதழியல் ஒரு அலையாக வீசிக்கொண்டிருப்பதை விவரித்து, அதன் முக்கிய போக்குகளையும் அறிமுகம் செய்கிறது இந்த நூல். கிழக்கு பதிக்கப வெளியீடாக வந்திருக்கிறது. அமேசானில் வாங்கலாம். :https://www.amazon.in/Books-Cyber-Simman/s?rh=n%3A976389031%2Cp_27%3ACyber+Simman

மொபைல் ஜர்னலிசம்- சைபர்சிம்மன்

கிழக்கு பதிப்பக வெளியீடு

செல்பேசி இதழியல் கையேடு ஒரு அறிமுகம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.