வெறும் பட்டன் என்றா நினைத்தாய் -2

  1. search_evolution__தேடல் பெட்டி ரகசியங்கள் அல்லது குழப்பங்கள்

இணையத்தில் எல்லோரும் நன்கறிந்த தேடல் வசதியும் ஒரு பட்டன் தான். இணைய பட்டன்கள் எத்தனை முக்கியமானவை என்பதற்கும் அதே நேரத்தில் அவை எந்த அளவுக்கு கவனிக்கப்படாமல் இருக்கின்றன என்பதற்கும் தேடல் வசதி பட்டன் நல்ல உதாரணம்.

நாம் எல்லோருமே தேடல் பட்டனை பயன்படுத்துகிறோம். ஆனால் அவை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும், அவற்றுக்கு பின்னே உள்ள வடிவமைப்பு சித்தாந்தங்களையும் உணர்வதில்லை. ஆம், தேடல் பட்டன் எளிதானதே தவிர அதை வடிவமைப்பு எளிதானது அல்ல. தேடல் பட்டனை உருவாக்கும் போது பல்வேறு அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தாக வேண்டும்.

இதற்கு உதாரணமாக, நீல்சன் நார்மன் குழும இணையதளத்தில் இடம்பெற்றுள்ள, தேடல் கட்ட வடிவமைப்பில், பூதக்கண்ணாடி இடம் பெறுவது தொடர்பான கட்டுரை ஒன்றை கவனிக்கலாம்.

தேடல் வசதியை குறிக்கும் பட்டனுக்கு என்று சில அடிப்படையான அம்சங்கள் இருக்கின்றன. தேடுவதற்கான தேடல் கட்டம் இருக்க வேண்டும். அது தேடல் கட்டம் என்பதை உணர்த்தும் தேடல் பட்டன் அருகே இருக்க வேண்டும். இந்த பட்டனில், தேடல் எனும் வார்த்தை இருக்க வேண்டும். இதன் காட்சிரீதியான அடையாளமாக, தேடலை உணர்த்தும் பூதக்கண்ணாடியும் இடம்பெற்றிருக்கலாம்.

இவற்றில், தேடல் கட்டம் அருகே தேடு எனும் வார்த்தை எழுதப்பட்ட பட்டன் பாரம்பரிய பட்டனாகவும், தேடு வார்த்தைக்கு பதில் பூதக்கண்ணாடி ஐகான் மட்டும் இடம்பெறுவது நவீன வடிவமைப்பாகவும் கருதப்படுகிறது. ஆம், தேடல் பட்டனின் பரிணாம வளர்ச்சியாக இது அமைகிறது.

இணைய உலகில், பூதக்கண்ணாடி ஐகான் தேடலுக்கான அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டாலும், தேடல் வசதியை உணர்த்த இதை மட்டுமே பயன்படுத்துவது போதுமானதா எனும் கேள்வி வடிவமைப்பாளர்களை வாட்டி வதைத்து வருகிறது. ஆம், தேடல் கட்டத்தில் பூதக்கண்ணாடி ஐகான் மட்டும் இடம் பெற வேண்டுமா அல்லது தேடு எனும் வார்த்தையும் சேர்த்து இடம்பெற வேண்டும் எனும் கேள்வியை பல வடிவமைப்பாளர்கள் முக்கியமாக கருதுகின்றனர்.

தேடல் பட்டன் வளர்ச்சியில், தேடு வார்த்தையில் இருந்து பூதக்கண்ணாடி ஐகானுக்கான மாற்றம் எதிர்பார்த்த அளவு சிக்கல் இல்லாமல் இல்லை என நீல்சன் நார்மன் குழும ஆய்வு உணர்த்துவதாக இந்த கட்டுரை குறிப்பிடுகிறது.

தேடு வார்த்தைக்கு பதில் பூதக்கண்ணாடியை பயன்படுத்தும் போது, இடப்பரப்பு மிச்சமானாலும், ( வடிவமைப்பு நோக்கில் இடம் என்பது தங்கம் தெரியுமா?), காட்சி நோக்கில், தேடல் வசதியின் ஈர்ப்பு குறைந்து, அதன் காணும் தன்மையும் பாதிக்கப்படுகிறதாம். விளைவு, பூதக்கண்ணாடி மட்டுமே இடம்பெறும் போது, பயனாளிகளுக்கு தேடல் வசதியை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இணைய வடிவமைப்பை பொறுத்தவரை பயனாளிகளே முதல் மரியாதைக்குரியவர்கள். எனவே அவர்களுக்கு ஒரு விஷயம் சிக்கலாக இருக்கிறது என்றால் அதை உடனே கவனித்தாக வேண்டும். எனவே தான் பூதக்கண்ணாடியை மட்டுமே பயன்படுத்துவது ஏற்றதா எனும் கேள்வியை வடிவமைப்பாளர்கள் முக்கியமாக கருதுகின்றனர்.

இதற்கு தீர்வாக, பூதக்கண்ணாடி ஐகான் மட்டுமே இடம் பெறும் வடிவமைப்பை கையாள வேண்டாம் என்று இந்த கட்டுரை பரிந்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக, டெஸ்க்டாப் தளங்களில், தேடல் வசதியில் பூதக்கண்ணாடி ஐகானுடன், தேடு எனும் வார்த்தையும் இடம்பெறுவது அவசியம் என்கிறது. வேண்டுமானாலும் மொபைல் திரைக்கான வடிவமைப்பில் இடப்பரப்பு சிக்கனம் கருதி, பூதக்கண்ணாடியை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் அதே நேரத்தில் பெரும்பாலான பயனாளிகள் பூதக்கண்ணாடி ஐகானை தேடல் வசதியுடன் இணைத்தே புரிந்து கொள்கின்றனர் என்கிறது கட்டுரை. எனவே பூதக்கண்ணாடி ஐகான் பளிச்சென தெரியக்கூடியதாக இருந்தால் அதை மட்டுமே பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறது. இதில் உள்ள வசதி என்னவெனில், சர்வதேச பதிப்புகளை கொண்டு இணையதளங்களில், தேடு வசதிக்கான ஆங்கில வார்த்தையை பிற மொழியில் மாற்ற வேண்டாம். எல்லா மொழிகளிலும் பூதக்கண்ணாடி ஐகானே பேசும் அல்லவா!

அதோடு தேடல் பட்டனை எங்கே வைப்பது என்பதும் முக்கியமாகிறது. பயனாளிகள் தேடல் வசதியை எதிர்பார்க்க கூடிய இடத்தில் அதை வைப்பது அவசியம். பெரும்பாலும், இணைய பக்கத்தின் மேல் பக்கத்தில் தேடு வசதி இருக்கும் என பயனாளிகள் பழகியிருப்பதால், அந்த பகுதியே தேடல் பட்டனுக்கு பொருத்தமானதாக கருதப்படுகிறது. இல்லை என்றால் தேடும் வசதியை தேடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். வடிவமைப்பு நோக்கில் இது பெருந்தவறு!

ஆனால், பூதக்கண்ணாடி ஐகான் மட்டுமே கொண்டிருக்கும் தேடல் பட்டனை எதிர்கொள்ளும் போது, பயனாளிகள் அதை புரிந்து கொள்ள அல்லது உணர தாமதமாகலாம். அந்த ஐகானை கிளிக் செய்து தேடல் கட்டம் வந்த பிறகு அதில் டைப் செய்யத்துவங்கலாம். இந்த தாமதம் செலவு மிக்கதாக அமையலாம். மாறாக தேடு எனும் வார்த்தை இருந்தால், பயனாளிகள் அதை பார்த்த மாத்திரத்தில் கட்டத்தில் டைப் செய்ய ஆரம்பித்துவிடலாம்.

எனவே தான், ஐகான் மட்டும் போதுமா அல்லது தேடு கட்டளையும் இடம் பெற வேண்டுமா எனும் கேள்வி அழுத்தமானதாகிறது.

மேலும், தேடல் வசதியை உணர்த்தும் ஐகான், கிராபிக் அலங்கார வடிவில் இருப்பதைவிட, மிக எளிமையான கோட்டுருவ வடிவத்தில் இருப்பதே சிறந்தது என்றும் கட்டுரை பரிந்துரைக்கிறது.

இப்போது சொல்லுங்கள் தேடல் வசதி பட்டனை சர்வ சாதாரனமாக எடுத்துக்கொள்ள முடியுமா?

இணைப்பு: https://www.nngroup.com/articles/magnifying-glass-icon/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.