நான் ஏன் கூகுளின், இந்த ஆண்டு அதிகம் தேடிய பட்டியலை நிராகரிக்கிறேன்?

gஇணையத்தில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியலை கூகுள் அண்மையில் வெளியிட்டது. இதே பட்டியலை இந்திய அளவிலும் வெளியிட்டுள்ளது. இது ஒரு வருடாந்திர நிகழ்வு தான். ஒவ்வொரு ஆண்டும் கூகுள், இதே போல அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
கூகுளின் இந்த தேடல் பட்டியல், ஊடகங்களிலும் சரி, பொதுவாக மக்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. இந்த ஆண்டு இந்தியர்கள் தேடியது எதை எல்லாம் தெரியுமா? என்பது போன்ற தலைப்புடன் ஊடகங்கள் இந்த பட்டியலை செய்தியாக்கி இருக்கின்றன. அநேகமாக இந்த செய்திகள் இணையவாசிகளாலும் விரும்பி படிக்கப்பட்டதாகவே கருதலாம்.
ஆனால், என்னளவில் கூகுளின் இந்த அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியல் ஈர்ப்புடையதாக இல்லை. இந்த பட்டியலை அலட்சியம் செய்யவே விரும்புகிறேன். அதற்கு காரணம் பட்டியலின் தரம் மீது விமர்சனம் இருப்பதோ அல்லது அதன் தேர்வு குறித்த புகார்கள் இருப்பதோ அல்ல. கூகுளின் இந்த பட்டியலுக்கு மிகை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கருதுகிறேன். அதன் காரணமாக இதை நிராகரிக்க விரும்பகிறேன்.
கூகுளின் பட்டியலை நான் நிராகரிப்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்று எனக்குத்தெரியும். இருந்தாலும், கூகுளின் பட்டியல் மீதான கவனத்திற்கு எதிரான கருத்தை பதிவு செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
இங்கு நான் கேட்க விரும்பும் கேள்வி, கூகுளின் தேடல் பட்டியலுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது தான். ஏனெனில் கூகுள் முன்னணி தேடியந்திரமாக இருப்பதும், இணையவாசிகள் பெரும்பாலும் கூகுள் மூலம் தேடுவதும் தான் இதற்கான முக்கிய காரணங்கள் என்பது எனக்கும் தெரியும் தான்.
ஆனால், அதையும் மீறிய அப்பாவித்தனத்துடனே, கூகுள் பட்டியலுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என கேட்க விரும்புகிறேன். ஏனெனில், இது போன்ற பட்டியலை தயாரிக்க கூகுளை விட்டால் நமக்கு வேறு வழியில்லையா என்று கேட்க விரும்புகிறேன். ஏன் கூகுள் தேர்வு செய்து அளிக்கும் பட்டியலை நாம் எந்தவித கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம் என்றும் கேட்க விரும்புகிறேன்.
பொதுவாகவே முன்னணி பத்து பட்டியல்களுக்கு வரவேற்பு அதிகம் தான். முன்னணி பத்து நடிகர்கள் என சொல்லும் போது அல்லது முன்னணி பத்து தொழிலதிபர்கள் என்று சொல்லும் போது ஒரு ஈர்ப்பு வந்து விடுகிறது. பெஸ்ட் செல்லர் புத்தகங்கள் பட்டியல், அதிகம் சம்பாதிக்கும் பணக்காரர் பட்டியல், செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியல் என இப்படி கவனத்தை ஈர்க்கும் பட்டியல்கள் அதிகம் இருக்கின்றன.
இணைய யுகத்தில் கூகுள் வெளியிடும் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் பட்டியலும் இதில் சேர்ந்துள்ளது. கூகுள் மட்டும் அல்ல, வேறு பல இணைய நிறுவனங்களும் இது போன்ற பட்டியலை வெளியிடுகின்றன. உண்மையில் இது போன்ற பட்டியல்கள் தேவை தான். இணையவாசிகளால் பெரும்பளவு பயன்படுத்தப்படும் இணைய சேவைகள் மூலம் கண்டறியக்கூடிய போக்குகளையும், மேலெழும் விஷயங்களையும் வெளியிடுவது அவசியம் தான்.
எனவே கூகுள் ஆண்டு தேடல் பட்டியலை வெளியிடுவதும், அதன் செல்வாக்கு காரணமாக அதற்கு பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. கூகுளின் இந்த செல்வாக்கு கண்ணுக்குத்தெரியாத ஆதிக்கமாக உருவாகி இருப்பதும், இதன் தாக்கம் நமது கருத்துக்கள் மற்றும் விருப்பத்தின் போக்கை தீர்மானிக்க கூடியதாக இருப்பதுமே எனக்கு பிரச்சனையாக தெரிகிறது.
கூகுள் அதன் தேடல் தரவுகள் அடிப்படையிலேயே இந்த பட்டியலை வெளியிடுகிறது. இதில் அது எந்தவித தேர்வையும், விடுபடல்கள் அல்லது சேர்க்கையை செய்யவில்லை என நம்பலாம். ஆனால் அவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்பு இருப்பதை நம்மால் மறுக்க முடியுமா?
இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் என்று கூகுள் சொல்வதே ஒரு விதமான தேர்வு தான். இந்த தேர்வு இணைய உலக போக்குகள் குறித்து நமக்கு ஒரு செய்தியை தெரிவிக்கிறது. ஒரு புரிதலை கொடுக்கிறது. அதனடிப்படையில் நாம் பலவற்றை தீர்மானிக்கிறோம். ஆனால், இந்த பட்டியல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டால் என்னாகும் என்று நாம் யோசித்திருக்கிறோமா? இதன் பொருள் கூகுள், இவ்வாறு செய்கிறது என்பதோ அல்லது இவ்வாறு செய்யக்கூடும் என்பதோ அல்ல. இதற்கான சாத்தியம் இருக்கிறது இல்லையா எனும் கேள்வியை எழுப்புவதும் அவ்வாறு நிகழும் பட்சத்தில் அதை கண்டறியவும், எதிர்கொள்ளவும் நம்மிடம் என்ன ஆற்றல் இருக்கிறது என்பதை கேள்வி எழுப்புவதே என் நோக்கம்.
கூகுள் போன்ற நிறுவனங்கள் நினைத்தால் அல்லது அவை நிர்பந்திக்கப்பட்டால், தேடல் பட்டியலில் ஒரு திருத்தத்தை செய்தால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் தெரியுமா? வர்த்தக நோக்கில் இதை கூகுள் எப்படி எல்லாம் செய்கிறது என்று அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் ஜர்னல் ஒரு புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
கூகுள் பட்டியல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு சூழலில், இனி வரும் காலத்தில் இந்த பட்டியல் நம் இணைய போக்கை தீர்மானிக்க தவறாக, பயன்படுத்தப்படமாட்டாது என்று என்ன நிச்சயம்? அதைவிட முக்கியமான கேள்வி, இதை நாம் உறுதி செய்து கொள்வது எப்படி? கூகுளின் பட்டியல் உண்மையானது என்பதை நாம் எடை போட்டு பார்ப்பது எப்படி?
ஒரு பொதுவான பட்டியல் எனில் அது மூன்றாம் தரப்பு அணுக கூடியதாக தானே இருக்க வேண்டும். எனில், கூகுள் தனது தேடல் ஏபியை பொதுவெளியில் வைத்து, அதிலிருந்து தேடல் போக்குகளை மூன்றாம் தரப்பு அமைப்புகள் தீர்மானிக்க அனுமதிக்குமா? வர்த்தக நோக்கில் இது சாத்தியம் இல்லை. கூகுள் எப்படி தனது தேடல் ரகசியத்தை மற்றவர்களுக்கு அளிக்க முன்வரும்? நியாயம் தான். எனில், அதனிடம் இருப்பது ஒரு தனியார் நிறுவனத்தின் தேடல் பட்டியல் தானே. அதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் தர வேண்டும்?
எனவே தான் கூகுளின் அதிகம் தேடல் பட்டியலை அலட்சியம் செய்ய வேண்டும் என்கிறேன். நான் இணைய பிரபலமோ, செல்வாக்கு மிக்க புள்ளியோ இல்லை தான். அதனால் என்ன.
இணைய உலகில், பிக் 3 என்று சொல்லப்படும் கூகுள், பேஸ்புக் மற்றும் அமேசானின் செல்வாக்கு மிதமிஞ்சிய அளவில் அதிகரித்து வருவது தொடர்பாகவும், இதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிர விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இணையத்தின் ஆற்றல் மீது நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில், இந்த கருத்தை மிக மிக ஈனஸ்வரத்திலேனும் எழுப்பவே முற்படுகிறேன்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.