வெறும் பட்டன் என்றா நினைத்தாய்!- 4

search_evolution__ஒரு தேடல் பெட்டி எப்படி இருக்க வேண்டும்?

தேடல் வசதி உங்களுக்கு மிகவும் பரிட்சயமானது தான். ஆனால், தேடல் வசதியை அளிக்கும் தேடல் பெட்டி பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு நல்ல தேடல் பெட்டிக்கு என்று தனி இலக்கணம் இருப்பது உங்களுக்குத்தெரியுமா?

தேடல் பெட்டி வடிவமைக்கப்படும் விதம் குறித்து பயனாளிகள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்றாலும், இணைய பயன்பாட்டில் இது மிக முக்கிய அம்சமாக இருக்கிறது.

தேடல் பெட்டி என்பது, உள்ளீடு கட்டம் மற்றும் சமர்பி பட்டன் ஆகிய இரண்டு அம்சங்களை மட்டுமே கொண்டதாக இருந்தாலும், அதன் வடிவமைப்பு நுணுக்கமான விஷயங்களை கொண்டிருக்கிறது. பெரும்பாலான இணையதளங்களில், அதிலும் குறிப்பாக உள்ளடக்கம் அதிகம் உள்ள தளங்களில் பயனாளிகள் தேடல் வசதியை தான் அதிகம் நாடுகின்றனர்.

எனவே கச்சிதமான முறையில் தேடல் பெட்டியை வடிவமைப்பது அவசியம். இதற்கான வழிகளை இணைய வடிவமைப்பு வல்லுனர் நிக் பாபிச் சுவாரஸ்யமாக விவரிக்கிறார்.

  • தேடல் பெட்டி எப்போதுமே, தேடலை குறிப்பால் உணர்த்தும் பூதக்கண்ணாடி கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலான பயனாளிகள் அடையாளம் காணக்கூடிய ஐகான்களில் ஒன்றாக பூதக்கண்ணாடி இருக்கிறது. பூதக்கண்ணாடி எளிமையான வடிவில் இருப்பது இன்னும் நல்லது.
  • தேடல் பெட்டி வடிவமைப்பில் சிக்கனம் கூடாது. செயலியில் அல்லது இணையதளத்தில் தேடல் பெட்டி பளிச் என கண்ணில் படும் படி அமைந்திருக்க வேண்டும். தேடலை குறிக்கும் பூதக்கண்ணாடியை மட்டும் சின்னதாக அளிப்பதில் பயனில்லை. திறந்த வெளி தேடல் கட்டமும், அதன் ஓரத்தில் பூதக்கண்ணாடியும் இருப்பதே சிறந்தது. ஏனெனில், பூதக்கண்ணாடி பின்னே தேடல் வசதி இருப்பது, பயனாளிகளை திண்டாட வைக்கும்.
  • தேடல் பெட்டி தனித்து இருக்க கூடாது. அது பட்டன் வடிவில் இருந்தால் மட்டுமே பயனாளிகளால் எளிதில் அடையாளம் காணப்படும். அதேபோல தேடல் கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்யும் படி தாராளமான வசதி அளிக்க வேண்டும்.
  • இணையதளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தேடல் வசதியை அளிக்க வேண்டும்.
  • தேடல் பெட்டி, பயனாளிகள் பொதுவாக அது இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படும் இடத்தில் இருக்க வேண்டும். தளத்தின் மேல் பகுதியில் இருப்பது நல்லது.
  • தேடல் பெட்டி அளவிலும் கஞ்சத்தனம் காட்டக்கூடாது. எழுத்துகளை தொடர்ந்து டைப் செய்ய வசதியாக தேடல் கட்டம் சற்று பெரிதாக இருக்க வேண்டும். பொதுவாக, 27 எழுத்துகள் இடம்பெறக்கூடிய அளவு பெரிதாக இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. டைப் செய்யும் போது நீளும் வகையிலும் தேடல் கட்டத்தை அமைக்கலாம்.
  • வார்த்தைகள் டைப் செய்யும் போதே அவை சுட்டிக்காட்டபடும் ஆட்டோகரெக்ட் வசதி இடம்பெற்றிருக்க வேண்டும். டைப் செய்யப்படும் வார்த்தையும், பரிந்துரைக்கப்படும் வார்த்தையும் வேறுபடுத்திக்காட்டப்பட வேண்டும்.
  • எவற்றை எல்லாம் தேடலாம் என்பதை பயனாளிகளுக்கு தெளிவாக உணர்த்த வேண்டும்.

https://uxplanet.org/design-a-perfect-search-box-b6baaf9599c

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.