Category Archives: iphone

குழந்தை பேறுக்கு உதவிய ஐபோன் செயலி

செல்போன் செயலிகளில் பல அற்புதமானவை.சில அற்பமானவை.இன்னும் சில அலுப்பூட்டக்குடியவை.இவற்றுக்கு நடுவே அடிப்படையில் எளிமையான செயலிகளும் இருக்கின்றன.இந்த எளிமையான செயலிகள் பயன்படுத்தும் விதத்தில் அற்புதத்தை சாத்தியமாக்கலாம்.

இப்படி தான் ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கருவுற்று குழந்தை பெற ஐபோன் செயலி கைகொடுத்துள்ளது.

லேனா பிரைஸ் மற்றும் அவரது கணவரான டட்லே ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்காவில் வசித்து வருபவர்கள் .குழந்தை பெறாமல் இருக்கும் தம்பதிக்கு ஏற்படக்கூடிய தவிப்பை இவர்கள் நான்கு ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர்.வாரிசு உண்டாகாதா என்னும் ஏக்கத்தில் இந்த தம்பதி பல மருத்துவர்களின் ஆலோசனையை நாடினர்.மருத்துவ சோத‌னையில் இருவரிடமுமே எந்த குறையும் இல்லை என்பது தெரிந்தது.ஆனாலும் லேனா கருவுறாததற்கான காரணம் என்ன என்பது மருத்துவர்களுக்கே புரியாத புதிராக இருந்தது.

காலம் கணியட்டும் என்று காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.லேனா காத்திருக்க தயாராக இருந்தாலும் அவருக்கு உள்ளுக்குள் கவலை இல்லாமல் இல்லை.எனவே அவரும் அவரது கணவரும் செயற்கை கருவுறுதல் மற்றும் குழந்தையை தத்தெடுத்தல் உட்பட பல்வேறு வழிகளை பரிசீலித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தான் லேனாவின் 30 தாவது பிறந்த நாளுக்கு கணவர் டட்லே புத்தம் புதிய ஐபோனை வாங்கி பரிசளித்தார்.

ஐப்போனை வாங்குபவர்கள் முதலில் அல்லது ஒரு கட்டத்தில் அதில் டவுண்லோடு செய்து பயன்படுத்தக்கூடிய செய‌லிகள் மீது கவனம் செலுத்துவது இயல்பாக நிக‌ழக்கூடியது.அதிலும் ஐபோனின் பிரபலமான விளம்பர வாசக‌ம் போல எல்லாவற்றுக்கும் ஏதாவது செயலிகள் இருப்பதால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செயலிகளை பதிவிற‌க்கி பயன்படுத்தலாம்.

இந்த வகையில் கருவுறும் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு உதவக்கூடிய செயலிகளும் இருக்கின்றன. லேனா எதிர்பார்க்ககூடியது போலவே ஐபோனில் க‌ருவுறுதல் தொடர்பான தேடலில் ஈடுபட்டிருந்த போது கருவுற உதவக்கூடிய செயலி ஒன்றை பார்த்தார்.

அடிப்படையில் இந்த செயலி பெண்களின் மாதவிலக்கு நாட்காட்டியை புரிந்து கொள்ள உதவக்கூடியது.லேனா மிகுந்த ஆர்வத்தோடும் எதிர்பார்ப்புடனும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்த துவங்கினார்.அதிசயிக்க தக்க வகையில் அடுத்த இரண்டே மாதங்களில் லேனா கருவுற்றார்.மாதவிலக்கு நாட்காட்டி மற்றும் கருமுட்டை உருவாகும் சுழற்சியை சரியாக கணக்கிட்டு செயல்பட்டதாலேயே அவர் கருவுற்றார்.

இதனால் லேனாவும் அவர் கனவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.சில மாதங்கள் கழித்து லேனா அழகான பெண் குந்தைக்கு தாயானார்.இந்த செய்தியை அவரகல் மகிழ்ச்சியோடு பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்டனர்.பத்திரிகைகளும் முதல் ஐபோன் குழந்தை என்னும் அடைமொழியோடு செயலியின் உதவியால் குழந்தை பிறந்தது பற்றி பரபரப்பாக எழுதின.

இது முழுக்க முழுக்க த‌ற்செயலானதாக இருக்கலாம்.லேனா மருத்துவர்கள் சொன்னபடி காத்திருந்தால் சில மாதங்களில் கருவுற்றிருக்கலாம்.அல்லது பல மாதங்க‌ள் ஆகியிருக்கலாம்.ஆனால் ஐபொன் செயலி அவருக்கு ஒரு நம்பிக்கையையும் கருவுறுதல் குறித்த புரிதலையும் ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை.

செயலிகளின் தன்மையும் தனித்தன்மையும் இது தான்.

செயலியின் அருமையை உணர்த்திய செயலி

செயலிகள் இன்று இணைய உலகில் சர்வ சகஜமாகிவிட்டன.செல்போன்களில் செயல்படக்கூடிய சின்னஞ்சிரியசாப்ட்வேர்கள் என்ற விளக்கம் தேவையில்லாமலேயே செயலி என்றதுமே புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு இவை பிரபலமாகவும் பரவலாகவும் ஆகிவிட்டன.

செயலிகள் குறிப்பிட்ட செயல்பாட்டுக்காக செல்போனில் குடியிருப்பவை(டவுண்லோடு செய்யப்படுபவை)என்பது உலாபேசிகள் உலகில் அனைவரும் புரிந்து கொள்ளத்துவங்கிவிட்டனர் என்றாலும் செயலிகள் எந்த அளவுக்கு பயன்மிக்கவையாக விளங்கும் என்பதை முதலில் உணர்த்திய ஆரம்பகால வெற்றிகரமான செயலிகளில் ஒன்றாக டியூப் எக்ஸிட் செய்லியை சொல்ல வேண்டும்.

லண்டன் சுரங்க ரெயிலில் பயணிகளுக்கு வழிகாட்டும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட டியூப் எக்ஸிட் சுவாரஸ்யமானது மற்றும் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளூம் பிரச்ச்னைக்கு தீர்வாக மையக்கூடியது என்னும் செயலிகள் சார்ந்த அனைத்து அம்சங்களுக்கான அழகான உதாரணமாகவும் திகழ்கிறது.

எல்லாவற்றுக்கும் மேல் செயலிகளின் பின்னே உள்ளே இருக்கும் தனிமனித முயற்சியின் அடையாளமாகவும் , வெற்றிகரமான செயலியின் மூலம் சாமன்யர்கள் சாப்ட்வேர் அதிபர்களாகவும் உருவாகும் டிஜிட்டல் கதைகளுக்கான சான்றாகவும் இது விளங்குகிறது.

ஒரு தேவை,அதற்கு தீர்வு காணும் வேட்கை ஆகியவற்றின் பயனாக பிறந்தது இந்த செயலி.

டியூப் ரெயில் என்று பிரபலாமாக குறிப்பிடப்படும் லண்டன் சுரங்க ரெயிலில் பயணிகள் எந்த பெட்டியில் அமர்ந்தால் இறங்கும் போது வசதியாக இருக்கும் என்பதை  உணர்த்தும் நோக்கத்தோடு லான்ஸ் ஸ்டுவர்ட் என்னும் லண்டன்வாசி இந்த செயலியை உருவாக்கினார்.

அதாவது நம்மூரில் இரெயிலில் பயணம் செய்யும் போது காலை நேர பரபரப்பில் இறங்கியவுடன் படிகளில் ஏறி செல்வதற்காக படிகளுக்கு அருகே வரக்கூடிய கடைசி பெட்டியில் ஏறிக்கொள்வது உண்டல்லவா?அதே போல லண்டனில் படிகளுக்கு அருகே இறங்கி கொள்வது என்பது அத்தனை சுலபம் அல்ல.காரணம் எந்த பெட்டி எந்த நிலையத்தில் படிகளின் அருகே நிற்கும் என்பது யாருக்கும் தெரியாது.எனவே படிகளின் அருகே நிறகும் பெட்டியில் இருப்பவர்கள் தங்கள் அதிர்ஷ்ட்டத்தை மெச்சியபடி உடனே படிகளில் ஏறிச்சென்றுவிடலாம்.மற்றவர்கள தங்கள் அதிர்ஷ்ட்டத்தை நொந்தபடி கூட்டத்தில் காத்திருந்து படிகளில் ஏறிச்செல்லவேண்டும்.

சுரங்க ரெயிலில் பயணம் செய்யும் ஆயிரக்கனக்கான பயணிகள் இந்த நிலையை அனுபவித்து வருகின்றனர்.ஆனால் இதற்கு தீர்வு காண முடியும் என எந்த பயணியும் நினைத்தில்லை.ஒரு பயணத்தின் போது லான்ஸ் ஸ்டூவர்ட்டுக்கு இந்த எண்ணம் தோன்றியது.

அன்றைய தினம் அவர் வர்த்தக சந்திப்பில் கலந்து கொள்வதற்காக அவசரமாக சென்றுகொண்டிருந்தார்.ஆனால் ஆக்ஸ்போர்டு சர்கஸ் ரெயில் நிலையத்தில் தவறான இடத்தில் இறங்க நேர்ந்ததால் அவர் கூட்டத்தின் வால் முனையில் சிக்கிகொண்டு தவித்தார்.இதனால் ஏற்பட்ட கால தாமதத்தால் அன்ரை சந்திப்புக்கு குறித்த நேரத்தில் சொல்ல முடியமால் போனது.அட இன்றைய தினம் படிகளில் அருகே வரும் ரெயில் பெட்டியில் ஏறியிருக்க கூடாதா என நினைத்து பார்த்த அவர் ஒவ்வொரு முறையும் ஏன் இப்படி தெரியாமல் தவிக்க வேண்டும் என்றும் நினைத்துப்பார்த்தார்.

அப்போது தான் மின்னல் கீற்று போல சுரங்க ரெயிலில் எந்த பெட்டிகள் எந்த நிலையங்களில் படிகள் அருகே நிற்கும் என்பதை செல்போனில் சுட்டிக்காட்டகூடிய ஒரு சாப்ட்வேரை அதாவது செயலியை உருவாக்கினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

இப்படி ஒரு செயலியை உருவாக்கினால் ரெயிலில் ஏறும்போதே சரியான பெட்டியாக் பார்த்து ஏற்க்கொண்டு இறங்கும் போது குட்டத்திற்கு முன்பாகவே வாயில்படியில் ஏறிசென்றுவிடலாம் என்ற எண்ணமே அவரை உற்சாக்த்தில் ஆழ்த்தியது.

அந்த உற்சாகம் தந்த உதவேகத்தோடு செயலியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.ஐடி துறையில் அவருக்கு அனுபவம் உண்டே தவிர சாப்ட்வேரை உருவாக்குவதில் முன் அனுபவம் இல்லை.இருப்பினும் துடிப்புடன் இந்த முயற்சியில் இறங்கினார்.முதலில் ஒரு சில வாரங்களில் செயலியை உருவாக்கிவிடலாம் என நினைத்தார்.ஆனால் அது தப்பு கணக்காகி போனது.

காரணம் லண்டன் சுரங்க ரெயில் பாதையில் மொத்தம் 270 ரெயில் நிலையங்களும் 700 நடைமேடைகளும் இருக்கின்றன.ஒவ்வொன்றிலும் ரெயில் பெட்டிகள் எங்கெங்கு நிற்கும் என்ற தகவல்களை திரட்டினால் மட்டுமே வழிகாட்டும் செயலியை முழுமையாக உருவாக்க முடியும்.

முதலில் இந்த தகவல்களை திரட்டும் பணியை வேறொருவரிடம் ஒப்படைத்திருந்தார்.ஆனால் அந்த நபரின் பணி திருப்தியை தராததால் ஸ்டுவர்ட்டே களத்தில் இறங்கி ஒவ்வொரு ரெயில் நிலையமாக ஏறி இறங்கி ரெயில் பெட்டி நிற்கும் இடங்கள் பற்றீய விவரங்களை திரட்டினார்.இதற்கு பல மாதங்கள் ஆனது.

பின்னர் சாப்ட்வேர் உருவாக்கம் பற்றி அறிந்த தனது நண்பரின் உதவியோடு டியூப் எக்ஸிட் என்னும் பெயரிலான செயலியை வடிவமைத்தார்.

ரெயிலி ஏறுவதற்கு முன் இந்த செயலியில் பயண இடத்தை கிளிக் செய்தால் ரெயில் பெட்டி நிற்கும் இடத்தை அது சுட்டிக்காட்டிவிடும்.

ஆப்பிளின் ஐபோனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த செயலி 2007 ஜூன் மாதம் அறிமுகமானதுமே லண்டன்வாசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட்டானது.

ஐபோன் நிராகரிப்புகளுக்கு ஒரு தளம்

ஆப்பிள் அருமையான நிறுவனம் தான். அதைவிட அதன் தாயாரிப்புகள் அருமையான‌வை.முதலில் ஐ பாடு,இப்போது ஐ போன் என ஆப்பிள் கலக்கி கொண்டிருக்கிறது.(அத்ற்கெல்லாம் முதலில் மேக்)குறிப்பாக தற்போது ஐபோன் சார்ந்த செயலிகள் வியக்கவும் மலைக்கவும் வைத்துக்கொண்டிருக்கின்றன.

ஐ போன் ஆப்ஸ் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் செயலிகள் புதிய காலாச்சாரத்தையே உருவாக்கியுள்ளன. பயன்பாட்டு நோக்கில் இந்த செயலிகள் கொண்டு வந்துள மாற்றம் குறித்து நிறையவே எழுதலாம்.அது மட்டும் அல்ல ஐபோன் செயலிகள் சிறிய அளவிலான மென்பொருளாலர்களுக்கு புதிய வாயில்களை திறந்து வீட்டு அவர்களை பொருளாதார ரீதியாக நிமிர வைத்துள்ளது.

ஐபோனுக்காக‌ ஒரு வெற்றிக‌ர‌மான‌ செய‌லியை உங்க‌ளால் ஒரு மென்பொருளாரால் உருவாக்க‌ முடியும் என்றால் பொருளாதார‌ நோக்கில் அவ‌ர் த‌ன்னிரைவு பெற‌ அதிக‌ வாய்ப்புக‌ள் உள்ள‌ன. நூற்றுக்க‌ண‌க்காண சுயேட்சை மென்பொருளாள‌ர்க‌ள் இப்ப‌டி உருவாகியுள்ள‌ன‌ர்.ஐபாடிற்க்காக ஆப்பிள் ஐடியூன்ஸ் இணைய‌க‌டையை அமைத்து அத‌ன் வெற்றிக்கு வ‌ழி வ‌குத்த‌து போல‌ ஐபோனுக்காக‌ ஒரு செய‌லி க‌டையை ஆப்பிள் அமைத்துள்ள‌து.

இத‌ன் மூல‌ம் புதிய‌ செய‌லிக‌ள் ப‌திவேற்ற‌ப்ப‌டுவ‌தும் புதிய‌ செய‌லிக‌ளை த‌ர‌விற‌க்க‌ம் செய்வ‌தும் சுல‌ப‌மாகியுள்ள‌து.இந்த‌ க‌டையில் ஒரு ல‌ட்ச‌த்திற்கும் மேல் செய‌லிக‌ள் உள்ள‌ன்.

ஆனால் ஒன்று இந்த‌ க‌டையில் இட‌ம்பெறும் செய‌லிக‌ள் ஆப்பிளால் அங்கிக‌ரிப்ப‌ட‌ வேண்டும். அவ‌ற்றை நிராக‌ரிக்கும் உரிமை ஆப்பிளின் வ‌ச‌ம் உள்ள‌து.இந்த‌ நிராக‌ரிப்பு சில‌ நேர‌ங்க‌ளில் ச‌ர்ச்சைக்குறியாதாக‌ இருந்து வ‌ருகிற‌து.ப‌ல‌ மென்பொருளாள‌ர்க‌ள் ஆப்பிள் உரிய‌ கார‌ண‌ம் செல்லாம‌ல் த‌ங்க‌ள் செய‌லியை நிராக‌ரித்து விட்ட‌தாக‌ குமுறுகின்ற‌ன‌ர்.

நிராக‌ரிக்கும் உரிமை ஆப்பிளுக்கு உண்டு என‌றாலும் அதில் ஜனநாயக ம‌ய‌ம் இல்லை என்ப‌தே பொதுவான குற்ற‌ச்சாட்டு.நிராக‌ரிப்பத‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளையும் ஆப்பிள் வெளிப்ப‌டையாக‌ தெரிவிக்காம‌ல் ச‌ர்வாதிகார‌ ம‌ன‌ப்பான்மையோடு ந‌ட‌ந்து கொள்வ‌தாக‌ ஒரு க‌ருத்து இருக்கிற‌து.

இந்த‌ பின்ன‌ணி ஆப்பிளை வ‌சைபாட‌வோ குற்ற‌ம் சாட்ட‌வோ அல்ல‌.அத‌ற்கு மாறாக‌ ஆப்பிளின் இந்த‌ குறையை பதிவு செய்து வ‌ரும் அருமையான‌ இணைய‌த‌ள‌த்தை அறிமுக‌ம் செய்ய‌.

அமெரிக்காவைச்சேர்ந்த‌ ஆட‌ம் மார்டின் என்ப‌வ‌ர் இந்த‌ த‌ள‌த்தை அமைத்துள்ளார்.’ஐபோன்ஆப்ஸ்ரிஜக்ச‌ன்ஸ்’ என்ப‌து இந்த‌ த‌ல‌த்தின் முக‌வ‌ரி.அதாவ‌து ஆப்பிலால் நிராக‌ரிக்க‌ப்ப‌டும் செய‌லிக‌ளை இந்த தள‌ம் ப‌திவு செய்து வ‌ருகிற‌து.

மார்டின் ஐபோன் அலோச‌க்ராக‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருப‌வ‌ர் எனப‌து குறிப்பிட‌த்த‌க்க‌ விஷ‌ய‌ம்.
ஆப்பிள் நிராக‌ரிப்பு ப‌ற்றி எந்த‌ த‌க‌வ‌லும் இல்லாத்தால் மென்பொருளாள‌ர்க‌ளின் வ‌ச‌திக்காக‌ இந்த‌ த‌ள‌த்தை துவ‌க்கிய‌தாக‌ அவ‌ர் கூறியுள்ளார்.

இது வ‌ரை ஆப்பிள் எத‌த‌னை செய‌லிக‌ளை நிராக‌ரித்துள்ள‌து என்றி தெரியாத‌ நிலையில் அத‌ற்கான‌ ப‌திவாக‌ இந்த‌ த‌ள‌ம் விள‌ங்குகிற‌து.ஆப்பிலின் ச‌ர்வாதிகார‌த்தை எதிர்த்து ஒரு சிறிய‌ முய‌ற்சி.பென்பொருளாள‌ர்க‌ளின் குர‌லால் அவிள‌ங்கும் அரிய‌ முய‌ற்சி.

—-

link;
http://apprejections.com/

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்

செல்போன் விற்பனையில் அகில உலக அளவில் முன்னணியில் இருக்குக் நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி லாபம் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது ஆப்பிள்.எல்லாம் ஐபோன் செய்யும் மாய‌ம்.

செல்போன் சந்தையில் நோக்கியைவை எட்டிப்பிபடிக்க முடியாமல் மற்ற முன்னணி நிறுவனங்கள் திணறிக்கொன்டிருக்க ஐபோன் மூலம் இந்த சந்தையில் நுழைந்த ஆப்பிள் மட்டும் நோக்கியாவுக்கு ஈடு கொடுத்து நிற்கிறது.வெகுஜன மாடல்களின் சந்தையில் வேண்டுமானால் நோக்கியா முடிசூடா மன்னனாக இருக்கலாம் ஆனால் விலை உயர்ந்த பிரிவில் அறிமுகமான ஐபோன் ஸ்மார்ட்போன் என்று வர்ணிக்கப்படும் இந்த பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக விளங்குகிறது.

நோக்கியாவின் என் 90 இந்த பிரிவில் அறிமுக‌மானாலும் ஐபோன் பக்க‌த்தில் கூட‌ நெருங்க‌ முடிய‌வில்லை.இருப்பினும் ஒட்டுமொத்த‌ ச‌ந்தையில் நோக்கியாவே முன்ன‌ணியில் இருக்கிற‌து. வ‌ருவாய் ம‌ற்றும் லாப‌த்தைலும் இதே நிலை தான்.

ஆனால் த‌ற்போது முத‌ல்முறையாக‌ ஆப்பிள் நோக்கிய‌வைவிட‌ அதிக‌ லாப‌ம் ஈட்டியிருக்கிற‌தாம்.இந்த‌ ஆண்டின் ச‌மீப‌த்திய‌ காலாண்டு முடிவுக‌ளின் ப‌டி நோக்கியா 1.1 பில்லிய‌ன் டால‌ர் லாப‌ம் ஈட்ட ஆப்பிள் 1.6 பில்லிய‌ன் டால‌ர் லாபம் ஈட்டியுள்ள‌து.

ஐபோனில் மோனோலிசா

lisaஆப்பிளின் ஐபோனில் செயல்படக்கூடிய விதவிதமான செயலிகளின் வரிசையில் இப்போது புகழ்பெற்ற ஒவியமான மோனோலிசா உள்ளிட்ட ஓவியங்களை காணக்கூடிய செயலி அறிமுகமாகியுள்ள‌து.

பிரன்சின் பாரீஸ் நகரில் உள்ள ல‌வுரே அருங்காட்சியகம் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது.பாரம்பரியம் மிக்க இந்த அருங்காட்சியகம் கடந்ட 1995 ம் ஆண்டு முதல் இணையதளம் அமைத்து தனது சேவைகளை இண்டெர்நெட் மூலம் வழங்கி வருகிற‌து.

இதன் அடுத்த கட்டமாக தற்போது ஐபோனுகான செயலி(சாப்ட்வேர்)வெளியிடப்பட்டுள்ள‌து.ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்சு மொழிகளில் செயல்படும் இந்த சாப்ட்வேரை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

இந்த செயலி மூலம் அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்களை காண்பதோடு அருங்காட்சியக‌ விவரங்களையும் பெற முடியும்.புக‌ழ்பெற்ற‌ மோனோலிசா ஓவிய‌ம் இங்கு தான் உள்ள‌து.

இண்டெர்நெட் யுக‌த்தில் அருங்காட்சிய‌க‌ங்க‌ள் எப்ப‌டி செய‌ல்ப‌ட‌ வேண்டும் என்ப‌த‌ற்கான‌ உதார‌ண‌மாக‌ இத‌னை க‌ருத‌லாம்.

——

link;
http://www.louvre.fr/llv/commun/home.jsp?bmLocale=en