ஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்

Screenshot_2018-07-18 ஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக் முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்நீங்கள் பயன்படுத்திய முதல் செயலி நினைவிருக்கிறதா? இந்த கேள்வியை கேட்டுக்கொள்ள இது பொருத்தமான நேரம். ஏனெனில், செயலிகள் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக திகழும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்ஸ்டோர் அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகின்றன. இந்த பத்தாண்டுகளில் செயலிகள் இணையவாசிகளுக்கு மிகவும் பரிட்சியமான சங்கதியாகி இருக்கின்றன. செய்திகளை தெரிந்து கொள்வது முதல், இணையத்தில் பொருட்கள் வாங்குவதை வரை எல்லாவற்றுக்குமே செயலிகள் இருக்கின்றன. செயலிகள் இணைய பயன்பாட்டை எளிதாக்கி இருப்பதோடு, பயனுள்ளதாகவும் மாற்றியிருக்கிறது.

செயலிகளை அறிமுகம் செய்தது ஆப்பிள் இல்லை என்றாலும், அவற்றை பிரபலமாக்கியதில் அந்நிறுவனத்திற்கு முக்கிய பங்குண்டு. அதன் ஸ்மார்போனான ஐபோன் வருகைக்கு பிறகே செயலிகள் உருவாக்கத்தில் புது வேகம் பிறந்து புதுமையான செயலிகள் அறிமுகத்துவங்கின. 2007 ல் ஐபோன் அறிமுகமான நிலையில், 2008 ஜூலை மாதம் ஐபோனில் செயல்படக்கூடிய செயலிகளுக்கான ஆப்ஸ்டோர் உதயமானது. அறிமுகம் ஆகும் போது 500 செயலிகள் தான் இருந்தாலும், ஆப்ஸ்டோர் மேடையை மூன்றாம் தரப்பு மென்பொருளாலர்களுக்கு திறந்துவிட்டதன் காரணமாக புதுப்புது செயலிகள் ஆயிரக்கணக்கில் அறிமுகமாயின.

இவற்றில் புதுமையான செயலிகள் ஆயிரக்கணக்கில் டவுண்லோடு செய்யப்பட்ட போது கவனத்தை ஈர்த்து பெரிய அளவில் பேசப்பட்டன. ஆப்ஸ்டோரில் அதிகம் டவுண்லோடு செய்யப்பட்டது என்பது புதிய செயலிகளுக்கான அங்கீகாரம் போல் அமைந்தது. கவனத்தை ஈர்த்த பல செயலிகள் வர்த்தக நோக்கில் வெற்றி பெற்று அவற்றை உருவாக்கியவர்களுக்கு வருவாயை அள்ளிக்கொடுத்தன. பெரிய அளவில்  முதலீடு கூட வேண்டாம், சின்னதாக ஒரு தனித்துவமான ஐடியா இருந்தால் போதும் அருமையான செயலியை உருவாக்கி வெற்றி பெறலாம் எனும் நம்பிக்கை பலருக்கு உண்டானது. இதுவே செயலி சார்ட்ந்த பொருளாதாரமாக உருவானது. இதனிடையே கூகுள் பிளேஸ்டோர் ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமாக, செயலிகள் எங்கும் நிறையத்துவங்கின. அடுத்த கட்டமாக பார்த்தால், உபெர், ஸ்னேப்சேட், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என செயலிகள் மாபெரும் வர்த்தக நிறுவனங்களாக உருவாகத்துவங்கின. இன்று செயலிகள் அசைக்க முடியாத சக்தியாக இருக்கின்றன.

இந்த பயணத்தில், முத்திரை பதித்த செயலிகளை திரும்பிப்பார்க்கலாம்:

திரையில் ததும்பிய மது

beerஐபீர், ஐபோனில் அறிமுகமான ஆரம்ப செயலிகளில் ஒன்று. ஐபீர் (iBeer) செயலி பயனுள்ள செயலி என்றெல்லாம் சொல்ல முடியாது. உற்சாகம் தரும் கேளிக்கை செயலி என்று வேண்டுமானாலும் சொல்லலாம். இந்த செயலியை பற்றி அறிந்து கொண்டால், இப்படி எல்லாமா செயலிகள் அறிமுகமாயின என வியக்கத்தோன்றும். ஐபீர் செயலி அப்படி என்ன செய்தது என்றால், ஐபோனில் இருந்து பீர் குடிக்க வழி செய்தது. அதாவது அத்தகைய உணர்வை ஏற்படுத்தியது. ஆம், இந்த செயலி ஐபோன் திரையை நுரை பொங்கும் மது கோப்பையாக்கி காட்டியது. போனை கையில் பிடித்திருந்தால் பீர் கோப்பையை பிடித்தது போல இருக்கும் என்பதோடு, அதை வாயருகே வைத்து சாய்த்தால் பீர் காலியாகிவிடும்.

இப்படி பீர் அருந்துவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய இந்த செயலி, ஐபோனில் செய்யக்கூடிய ஜாலங்களுக்கான உதாரணமாக அமைந்து கவனத்தை ஈர்த்தது. இது கட்டண செயலியாக அறிமுகமானது என்பது தான் இன்னும் விஷேசம்.

ஒளி மயமான செயலி

ஐபீர் போலவே அபத்தமானது என்று சொல்லக்கூடிய இன்னொரு செயலி சோனிக் லைட்டர். ஐபீர் போனை மதுக்கோப்பையாக மாற்றியது என்றால், சோனிக் லைட்டர் போனை லைட்டராக மாற்றியது. இந்த செயலியை இயக்கினால், லைட்டரை தட்டி விட்டது போல போன் திரையில் தீப்பிழம்பு உண்டாகும். இது போன்ற மாய லைட்டர்கள் பல அறிமுகமாகி இருந்தாலும், சோனிக் லைட்டர், இந்த அனுபவத்தை சமூகமயமாக்கி அசர வைத்தது. அதாவது இந்த செயலியை பயன்படுத்துபவர்கள் லைட்டரை பற்ற வைத்து அதை இணையத்தில் பகிர்ந்து கொண்டால், உலக வரைபடத்தில் அவை காட்சிகளாக தோன்றுவதை பார்க்கலாம். பல நாடுகளில் பயனாளிகள் தங்கள் போன்களில் லைட்டரை ஏற்றி வைத்து அந்த காட்சியை பகிர்ந்து கொண்டனர். இதற்காக ஒரு டாலர் கட்டணம் செலுத்தவும் தயாராக இருந்தனர். இந்த செயலியை உருவாக்கிய ஸ்மியூல் நிறுவனம் அடுத்தாக ஆக்கரினா (Ocarina) எனும் இசை மயமான செயலியை உருவாக்கி அசத்தியது. ஆக்கரினா என்பது பழங்காலத்து இசைக்கருவி. அதை ஐபோனுக்குள் கொண்டு வந்து இசைக்க வைத்தது. புல்லாங்குழலை ஊதுவதன் போல போனில் காற்றை ஊதி இதை இசைக்கலாம். இந்த இசையையும் உலகம் முழுவதும் உள்ள சக பயனாளிகளோடு பகிர்ந்து கொள்ளலாம். இந்த செயலியும் வைரலாக பரவி புகழ் பெற்றது.

இந்த இரண்டு செயலிகளை அறிந்திருக்காவிட்டலும் கூட, பிரபலமான பாடலின் பின்னணி இசையில் நம் குரலில் பாடவழி செய்யும் இதன் கரோக்கி செயலி எல்லோருக்கும் அறிமுகமானது தான். ஒரு விதத்தில் மியூசிகல்லி செயலிக்கு எல்லாம் இது தான் முன்னோடி.

ரெயில் பயணங்களில்!

ocaகேளிக்கை அம்சங்களை பிரதானமாக கொண்ட செயலிகளுக்கு மத்தியில் பயனுள்ள் அம்சத்தால் கவர்ந்த முதல் செயலி டியூப் எக்சிட்ஸ் (Tube Exits  ). லண்டன் சுரங்க ரெயில் சேவைக்கான வழிகாட்டியாக இது அறிமுகமானது. சுரங்க ரெயிலில் 200 க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் உண்டு. ரெயிலில் பயணித்து இறங்கும் போது, வாயில் கதவு அருகே நிலைய வாயிலும் அமைந்தால் ஜாக்பாட் அடிப்பது போல் தான். இல்லை எனில், கூட்டத்தில் காத்திருக்க வேண்டும். லான்ஸ் ஸ்டூவர்ட் என்பவர், இப்படி பலமுறை சுரங்க ரெயில் பயணத்தில் வாயில் அருகே நிற்காத பெட்டியில் பயணித்து கடுப்பாகி இருக்கிறார். இதற்கு தீர்வே கிடையாதா என யோசித்தவர், தானே அதற்கான வழியை கண்டுபிடித்தார். அது தான் டியூப் எக்சிட்ஸ் செயலி. ஒவ்வொரு ரெயில் நிலையத்திற்கும் எந்த பெட்டியில் ஏறினால், வாயிலுக்கு அருகே இறங்கலாம் என வழிகாட்டி அசத்தியது இந்த செயலி. நடைமுறை பிரச்சனைக்கான தீர்வாக அமைந்ததால் இந்த செயலி, ஸ்டூவர்ட்டை ஒரு நாயகனாக்கியது. இதே போலவே ஏடிஎம் இயந்திரங்கள் இருப்பிடத்தை கண்டறிய உதவும் பயனுள்ள செயலிகளும் அறிமுகமாயின.

மேட்டுக்கேற்ற பாட்டு எது?

ஐபோனில் அறிமுகமான அசத்தலான செயலிகளில் ஷாசம் (Shazam  ) செயலிக்கு தனி இடம் உண்டு. இதுவும் ஒரு இசைமயமான செயலி. மெட்டை கேட்டால் அதற்கான பாட்டை கண்டறிந்து சொல்லும் செயலியாக இது அறிமுகமானது. ஐபோன் மைக் மூலம், எந்த ஒரு பாடலை ஒலியை 10 விநாடி கேட்டால், அது என்ன பாடல் என்பதை இது கண்டறிந்து சொல்லும் திறன் கொண்டது. 10 மில்லியனுக்கு மேலான பாடல்களை தனது டேட்டாபேசில் வைத்துக்கொண்டு,எங்கும்  கேட்கும் பாடலை கண்டறிய வழி செய்யும் இந்த செயலி பல ஆண்டுகள் அதிகம் டவுண்ட்\லோடு ஆன செயலியாக இருந்தது.

ஜோடிப்புற செயலி

இணைய உலகில் டேட்டிங் சேவைகளுக்கு பஞ்சமே கிடையாது. ஆனால் டிண்டர் செயலி (Tinder ) இணைய டேட்டிங்கை மாற்றி அமைத்தது. ஒரு விரலாம் இப்படி தள்ளினால் பிடித்திருக்கிறது, எதிர்திசையில் தள்ளினால் பிடிக்கவில்லை என இணை தேடலில், புதிய ஸ்வைப் மொழியை அறிமுகம் செய்தது. இந்த செயலி புத்தாயிரம் தலைமுறையின் அபிமான டேட்டிங் செயலியானது.

புகைப்பட மொழி

ஸ்மார்ட்போன் காமிராவை அழகாக பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டிய புகைப்பட பகிர்வு செயலி. போனில் கிளிக்கிய காட்சியை சதுர வடிவிலான பிரேமில், கலக்கலான பில்டர்களுடன் பகிர்ந்து கொள்ள வழி செய்த இந்த செயலி பெரும் வரவேற்பை பெற்றது. லட்சக்கணக்கான பயனாளிகளை ஈர்த்து அவர்களில் பலரை இன்ஸ்டாகிராம் நட்சத்திரங்களாகவும் உருவாக்கியது இந்த செயலி.

அழியும் படங்கள்

இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வில் வெற்றி பெற்றது என்றால், மேசேஜிங் செயலியான, ஸ்னேப்சேட் மறுமுனையில் பார்க்கப்பட்டதும் தானாக அழியும் வகையில் புகைப்பட செய்திகளை பகிர்ந்து கொள்ளும் அந்தரங்க பாதுகாப்பு கொண்ட சேவையை அறிமுகம் செய்து புதுயுக செயலியாக வெற்றி பெற்றது.

பயண வழிகாட்டி

கைத்தட்டினால் ஆட்டோ வரும் என்பது போல, ஒரு கிளிக்கில் கால்டாக்சிகளை அழக்கும் சேவையாக உபெர் அறிமுகமானது. போக்குவரத்து துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த செயலியாக அறியப்படுகிறது. பயணிகளையும், வாகன ஓட்டிகளையும் இணைக்கும் உபெர் செயலி பலநகரங்களில் போக்குவரத்தை புறட்டிப்போட்டிருப்பதோடு, வாகன ஓட்டிகளுக்கு தனி சுதந்திரத்தை பெற்றுத்தந்திருக்கிறது.

birdவிளையாட்டு பறவைகள்

செயலிகள் என்றதும் கேம்ப்கள் இல்லாமலா? டெம்பிள்ரன், கிலாஷ் ஆப் கிலேம், கேண்டி கிரஷ் என எண்ணற்ற கேம்கள் இருந்தாலும், முதலில் இந்த பிரிவில் கவர்ந்தது ஆங்கிரிபேர்ட் தான். பின்லாந்து நாட்டு நிறுவனம் உருவாக்கிய இந்த விளையாட்டு, செயலி உலகில் கலக்கியதோடு, தாய் நிறுவனத்தையும் தூக்கி நிறுத்தியது. இதே போலவே வியட்னாம் மென்பொருளாலர் உருவாக்கிய பிளாப்பி பேர்ட் விளையாட்டும் அறிமுகமான புதிதில் மெகா ஹிட்டானது.

டிஜிட்டல் புத்தக கடை

செயலி உலகில் இந்தியர்களின் பங்களிப்பும் கணிசமாகவே இருக்கிறது. இவற்றில் மேக்ஸ்டர் செயலியின் கதை விஷேசமானது. சென்னையை சேர்ந்த தொழில்முனைவோரான கிரிஷ் ராமதாஸ், செயலிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கலாட்டா.காம் சினிமா இதழை செயலி வடிவில் கொண்டு வந்தார். அதைப்பார்த்த பலரும் தங்கள் இதழுக்கான செயலி வடிவத்தை உருவாக்கித்தருமாறு கேட்டனர். இதனையடுத்து பத்திரிகைகளை செயலி வடிபமாக்கும் மேக்ஸ்டர் (Magzter) செயலியை உருவாக்கினார். இன்று உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் புத்தக கடையாக இது உருவாகியுள்ளது.

இன்னும் எண்ணற்ற முத்திரை செயலிகள் இருக்கின்றன. இவை உதாரணங்கள் மட்டுமே!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *