Tag Archives: amazon

whatsout

படம்,பாட்டு,புத்தகம்,விளையாட்டு… எல்லாம் ஒரே தளத்தில்

திரைப்பட ரசிகர்களை பொருத்தவரை புதிதாக என்ன படம் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.இதற்காக என்று இணையதளம் இருக்கிறது. அதே போல புத்தக பிரியர்கள் என்றால் என்ன புத்தகம் புதிதாக வெளியாகியுள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.இசை பிரியர்களை பொருத்தவரை புதிய ஆல்பங்களை அறிய விரும்புவார்கள்.இவற்றுக்கும் இணையதளங்கள் இருக்கின்றன.

திரைப்பட ரசிகரோ,புத்தக பிரியரோ,இசை பிரியரோ யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோர் கேள்விக்கும் அழகாக பதில் சொல்கிறது வாட்ஸ் அவுட் இணையதளம்.

ஆம் இந்த தளம் புதிதாக வெளியாகியுள்ள படங்கள்,பாடல்கள்,புத்தகங்கள் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் வழங்குகிறது. இவற்‌றோடு புதிய வீடியோ கேம் வெளியீட்டு தகவலகளையும் வழங்குகிறது.

படம்,பாட்டு,புத்தகம் என எல்லா தகவல்களும் ஒரே பக்கத்தில் இருப்பதோடு எல்லாமே மிக எளிமையாக இருக்கின்றன.அதிகப்படியான தகவல்களோ அநாவசிய விவரங்களோ கிடையாது.எப்போது வெளியாயின எங்கே கிடைக்கும் அல்லது எங்கே பார்க்கலாம்,கேட்கலாம் போன்ற விவரங்கள் மட்டுமே நச் என இடம் பெற்றுள்ளன.

திரைப்படங்கள் திரையரங்குகள் மற்றும் படங்கள் என இரண்டு தலைப்புகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாவற்றிலும் வரிசையாக படத்தின் போஸ்டர்கள் வரவேற்கின்றன.திரையரங்க பகுதியில் உள்ள ப‌டத்தை கிளிக் செய்தால் அந்த படம் வெளியான தேதி வந்து நிற்கிறது.அதோடு அந்த படத்தின் டிக்கெட்டை வாங்குவதற்கான இனைப்பு மற்றும் டிரைலரை காண்பதற்கான இணைப்பு இடம் பெறுகிறது .அவ்வளவு தான்.

இதை தவிர கடந்த வாரம்,இரண்டு வார்த்திற்கு முன்,கடந்த மாதம் வெளியான படங்களை அடையாளம் காட்டும் வசதியும் இருக்கிறது.அடுத்த வாரம் வரும் படங்களையும் அறியலாம்.

அதே போல புத்தக பகுதியில் புத்தக அட்டையில் கிளிக் செய்தால் அவை வெளியான நாள் மற்றும் அமேசானில் வாங்குவதற்கான இணைப்பு இருக்கிறது.பாடல்கள் ,மற்றும் வீடியோ கேமிலும் இதே போன்ற இணைப்புகள் வரவேற்‌கின்றன.

இமெயில் முகவ்ரியை சம‌ர்பித்தால் புதிய படங்கள் அல்லது பாடல்கள் ,புத்தகங்கள் வெளியாகும் போது தகவல் தெரிவிக்கும் சேவையையும் இந்த தளம் வழங்குகிறது.

ப‌டங்களை எடுத்து கொண்டால் மூவி டேட்டாபேஸ் விவரம்,விமர்சனம், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் குறிப்புகள்,ரசிகர்களின் ரேட்டிங் என விலாவரியாக தகவல்களை திரட்டித்தந்து திணறடிக்கும் தளங்கள் எல்லாம் இருக்கின்றன.பாடல்களூக்கும்,புத்தகங்களுக்கும் விதவிதமான வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன.எல்லா தளங்களுமே விவரங்கள் மூச்சு முட்ட வைத்துவிடும்.

ஆனால் வாட்ஸ் அவுட் தளம் அப்படியெல்லாம் திணற வைக்காமல் என்ன படம் ,என்ன புத்தகம்,என்ன பாடல் புதிதாக வந்துள்ளன என்பதை மட்டும் அடையாளம் காட்டி ஒதுங்கி கொள்கிறது.இந்த எளிமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

வாட்ஸ் அவுட அமெரிக்க தளம் என்பது மட்டும் தான் கொஞ்சம் ஏமாற்றம்.நம்மூருக்கும் இதே போன்ற தளம் உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

இணையதள‌ முகவரி:http://whatsoutt.com/

moviegram

திரைப்பட ரேட்டிங்கிற்கான தேடியந்திரம்.

திரைப்பட ரசிகர்கள் குறித்து வைக்க வேண்டிய இணையதளங்களில் மூவிகிராமையும் சேர்த்து கொள்ளலாம்.இத்தனைக்கும் மூவிகிராம் எந்த சேவையையும் பிரத்யேகமாக வழங்கவில்லை,தானாக எந்த தகவலையும் தருவதில்லை.இணைய கலாச்சாரப்படி பல இடங்களில் இருக்கும் தகவல்களை உருவி ஒரே இடத்தில் வழங்குகிறது.

ஆனால் இதை மிக அழகாக செய்கிற‌து.அது தான் விஷயம்.

எந்த படத்தின் கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்றாலும் சரி மூவிகிராமில் அந்த படத்தின் பெயரை சமர்பித்தவுடன் அந்த படம் தொடர்பான தகவல்களை ஒரே பக்கத்தில் கச்சிதமாக எடுத்து காட்டுகிற‌து.

இதற்கு வசதியாக கூகுல் போன்ற தேடல் கட்டம் இருக்கிறது.அதில் படத்தின் பெயரை குறிப்பிட்டதுமே அந்த படத்திற்கான தகவல் பக்கம் வந்து நிற்கிறது.படம் பற்றிய சுருக்கமான அறிமுகம் மற்றும் அதன் ரேட்டிங் நடு நாயகமாக இடம் பெறுகிறது.

அறிமுக தகவல்கள் மற்றும் ரேட்டிங் இரண்டுமே திரைப்பட களஞ்சியமான ஐஎம்டிபி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.அருகிலேயே நறுக் திரைப்பட விமர்சனங்களுக்காக அறியப்படும் ராட்டன் டமேடோஸ் தளத்தின் விமர்சன‌ குறிப்பு மற்றும் இதே போன்ற தளமான மெட்டகிரிட்டிக்கில் உள்ள தகவலும் தொகுத்தளிக்கப்படுகின்றன.கூடவே யூடியூப்பில் இருந்து வவீடியோ காட்சிகளும்,டிரைல காட்சிகளுக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன .

இவை எதுவுமே பெரிய விஷய‌ம் அல்ல.திரைப்பட ரசிக‌ர்கள் ஐஎம்டிபுக்கும் ராட்டன் டமேடோசுக்கும் தவறாமல் விஜயம் செய்கின்றனர்.அதிலும் ஐஎம்டிபியில் ஒரு படத்தின் ஜாதகத்தையே அலசி விடலாம்.

ராட்டம் டமேடொஸ் இணையதளத்தில் மணி மணியான விமர்சங்களை படிக்கலாம்.

ஆனால் ஏற்கனவே சொன்னபடி மூவிகிராம் இந்த தகவல்களை தனித்தனியே தேடி அலையும் தேவை இல்லாமல் ஒரே பக்கத்தில் அழகாக திரட்டி தருகிற‌து.ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமா என போகிற‌ போக்கில் முடிவு எடுக்க விரும்பினால் மூவிகிராம் அதற்கு கைகொடுக்கிற‌து.

பொதுவாக எல்லா திரைப்பட தளங்களிலும் பார்க்க கூடியது போலவே சமீபத்தில் தேடப்பட்ட படங்கள் பிரபலமான படங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.குறிப்பிட்ட எந்த படமும் மனதில் இல்லை என்றால் இந்த பட்டியலை அலசிப்பார்க்கலாம்.அதோடு ரசிகர்கள் தாங்கள் பார்க்கும் பக்கத்தை அப்படியே கிளிக் செய்து டிவிட்டர் ,பேஸ்புக்,கூகுல் பிளஸ் வழியே நண்ப‌ர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

ஒருவிதத்தில் பார்த்தால் இந்த தளமும் வாட்ச்.லே போல தாம்.திரைப்பட தேடியந்திரம் என்று சொல்லக்கூடிய வாட்ச்.லே எந்த படம் எங்கெல்லாம் இணையம் வழியே காணக்கிடைக்கிறது என்னும் விவரங்களை நெட்பிலிக்ஸ் ,யூடியூப் போன்ற திரைப்பட சேவை தளங்களில் இருந்து திரட்டித்தருகிறது என்றால் மூவிகிராம் திரைப்பட ரேட்டிங் தகவல்களை திரட்டித்தருகிறது.

ஹாலிவுட ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

இணையதள முகவரி;http://moviegr.am/

intro-img

தினம் ஒரு புத்தகம் படிக்கலாம் வாங்க.

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்?புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கேன் செய்தபடி முன் அட்டையையும் பின் அட்டையையும் திரும்பி பார்ப்பீர்கள்.அதில் எழுதியுள்ள அறிமுக குறிப்புகளை படிக்கும் போதே புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ஒரு அபிப்ராயம் உருவாகத்துவங்கியிருக்கும்.அடுத்ததாக புத்தகத்தை புரட்டிய படி முன்னுரையையும் நடுவே உள்ள பக்கங்களில் சில வரிகள் அல்லது பத்திகளை படித்து பார்ப்பீர்கள்.

இதற்குள் புத்தகத்தின் சாரம்சம் பிடிபட்டிருக்கும்.சரி வாங்கலாம்,அல்லது வேண்டாம் என்று முடிவு செய்து விடுவீர்கள்!.

இது ஒரு புறம் இருக்க, தலைப்பு பார்த்தே புத்தகம் வாங்குபவர்கள் இருக்கின்றனர்.இன்னும் சிலர் தங்களுக்கு பிடித்த‌ எழுத்தாளரின் புத்தகத்தை பார்த்தால் வாங்கிவிடுவார்கள்.

இவை தவிர சிலர் ஒரு புத்தகத்தை வாங்கும் முன் முதலில் அதன் முதல் அத்தியாயத்தை பொருமையாக படித்து பார்த்து விடுவதுண்டு.முதல் சில பக்கங்களை படித்ததும் தொடர்ந்து படிக்கலாம் என்ற உண்ர்வு ஏற்பட்டால் புத்தகத்தை வாங்கி விட‌லாம்.

இந்த பழக்கம் உங்களுக்கும் இருந்து,புதிய புத்தகங்களை வாங்க இதுவே சிறந்த‌வழி என்று நீங்கள் நினைத்தால் புக் டெய்லி தளத்திற்கு நீங்கள் தினமும் செல்லலாம்.

புத்தக கடலில் இருந்து உங்களுகு தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம் என்ற போதிலும் இதனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .காரணம் கொஞ்சமாக படிக்கும் ஆர்வம் இருந்தால கூட இந்த தளம் உங்களை புத்தகங்களுக்கு அடிமையாக்கிவிடும்.அதாவது தினமும் புத்தகங்களை படிக்க வைத்துவிடும்.தினம் ஒரு புத்தகத்தை அதாவது புத்தக மாதிரியை படிக்க விருப்பம் என்றால் இதன் பக்கம் போகலாம்.

புத்தக மாதிரி என்றால் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படிப்பது.ஒரு சில இனிப்பு க‌டைகளில் இனிப்புகளை வாங்கும் முன் முதலில் கொஞ்சம் சுவைத்து பார்க்க தருவதில்லை,அதே போல இந்த தளம் ஒரு புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை இலவசமாக படிக்க தருகிற‌து.

இப்பைட் முதல் அத்தியாயத்தை படித்து பார்த்து அந்த புத்தகத்தை வாங்க‌ விரும்பினால் இந்த தலம் மூலமே அதனை வாங்கவும் செய்யலாம்.

முகப்பு பக்கத்தில் வரிசையாக புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப பட்டியலிட்டப்பட்டுள்ளது.எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் கிளிக் செய்து அவற்றின் முதல் அத்தியாயத்தை படித்து கொள்ளலாம்.புத்தக் வகைகலூக்கு ஏற்பவும் தேடிப்பார்க்கலாம்.அருகிலேயே இந்த தளத்தின் டாப் டென் புத்தக பட்டியல் இடம் பெற்றுள்ளது.அதிலும் தேடலாம்.

எப்படியோ எந்த புத்தகத்தையும் அதன் முதல் அத்தியாயத்தை படித்து பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.

ஒரு புத்தகத்தி சாரம்சத்தை உணர்த்தக்கூடிய சுருக்கத்தை படிப்பது போல முதல் அத்தியாய்த்தை படித்து புத்த்கம் வாங்குவதும் சிறந்த வழி தான்.ஒரு சில எழுத்தாளர்களின் இனையதளங்களில் இப்பைட் புத்தக்த்தின் முதல் அத்தியாயத்தை மட்டும் படித்து பார்க்கும் வசதி அளிக்கபடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.இந்த தள‌ம் 80 ஆயிரம் புத்தகங்களுக்கு இந்த வசதியை தருகிற‌து.

இந்த தள‌த்தில் இன்னொரு சுவாரஸ்யமான‌ விஷயம்.இதில் உங்கலுக்கு என்று ஒரு மாதிரி புத்தக அலமாரிட்யை உருவாக்கி கொண்டு அதில் நீங்கள் விரும்பும் புத்தகத்தை எல்லாம் சேர்த்து கொள்ளலாம்.அத‌ன் பிறகு தினமும் அடுத்த புத்தகத்தின் மாதிரி அத்தியாயம் இமெயில் மூலமே அனுப்பி வைக்கப்ப‌டும்.ஆக தினமும் கொஞ்ச‌ம படித்து கொண்டே இருக்கலாம்.

இணையதள‌ முக‌வரி:http://www.bookdaily.com/

வழக்கம் போல ஒரு விஷயம்.இந்த தளம் ஆங்கில புத்தகங்களுக்கானது .தமிழிலும் இதே போல ஒரு புத்தக சேவை துவங்கப்பட்டல் நன்றாக இருக்கும்.

(நேற்று புதிதாக பதிவை காணவில்லையே என்று கேட்டு இதனை எழுத தூண்டிய நண்பர் சதாவுக்கு நன்றிகள் பல).