Tag Archives: dropbox

கூகுல் நிறுவனர்கள் பற்றி எழுதாது ஏன்?

img005நம் காலத்து நாயகர்கள் புத்தகம் தொடர்பான எதிர்வினை என்று எதிர்பார்க்க கூடியவற்றில், இந்த பட்டியலில் ஏன் கூகுள் நிறுவனர்கள் இல்லை எனும் கேள்வியை யாரேனும்  கேட்கலாம் என நினைக்கிறேன்.

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் இணையத்தின் இளம் முன்னோடிகளை அறிமுகம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. பயணங்களின் போது தங்குமிட வசதியில் புதுமை படைத்த ஏர்பிஎன்பி தளத்தின் நிறுவனர் பிரைன் செஸ்கியில் துவங்கி, வாடகை கார் பிரிவை தலைகீழாக மாற்றிய உபெர் நிறுவனர் கலானிக் வரையான முன்னோடிகள் வாழ்க்கை பற்றியும், அவர்கள் மனதில் இந்த சேவைக்கான எண்ணம் உண்டான விதம் மற்றும் ஒரு வர்த்தகமாக அதை அவர்கள் வளர்த்தெடுத்த முறையையும் இதில் உள்ள கட்டுரைகள் விவரிக்கின்றன.

இந்த இளம் முன்னோடிகள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்ஜ் ஜக்கர்பர்க், வாட்ஸ் அப் நிறுவனர்களில் ஒருவரான ஜேன் கவும் உள்ளிட்ட தெரிந்த ஆளுமைகளையும் பார்க்கலாம். செய்தி சேவையை ஜனநாயகமயமாக்கிய டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இணையதள புகமார்கிங் சேவையை சமுக மயமாக்கிய டெலிஷியஸ் நிறுவனர் ஜோஷுவா ஷேகடர் என அதிகம் அறியப்படாத ஆளுகளையும் பார்க்கலாம்.

ஆனால், அனைவருமே அறிந்து கொள்ள வேண்டிய நபர்கள். ஏனெனில் இவர்கள் உருவாக்கிய சேவைகள் தான் நவீன இணையத்தின் அடையாளமாக இருக்கின்றன.

நிற்க, இந்த பட்டியலில் ஏன் கூகுள் நிறுவனர்கள் சேர்க்கப்படவில்லை எனும் கேள்விக்கான பதில், இதில் உள்ள சேவைகள் அனைத்தும், 2000 மாவது ஆண்டுக்கு பிறகு உருவாக்கப்பட்டவை என்பது தான். 2000 என்பது இங்கு வெறும் கால வரம்பு மட்டும் அல்ல. இந்த புத்தகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட முன்னோடிகள் அனைவருமே இரண்டாம் அலை இணைய சேவைகளை உருவாக்கியவர்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

இரண்டாம் அலை, அதாவது வெப்.2.0 என்பது இணையவாசிகளின் பங்கேற்பு அம்சத்தையும் பிரதானமாக கொண்ட இணைய சேவைகளை குறிக்கிறது. இத்தகையை இணைய சேவைகளை உருவாக்கிய இளம் ஆளுமைகளை தேடிப்பிடித்து தொகுத்திருப்பதால், கூகுள் நிறுவனர்கள் இடம்பெறவில்லை.

நோக்கம் மற்றும் செயல்பாட்டில் கூகுள் கொஞ்சம் பழைய நிறுவனம். ஆனால் புதிய இணைய அலையிலும் அது தாக்குப்பிடித்திருப்பது சாதனை.

 

 

இன்ஸ்டாகிராமில் உயிர்பெறும் தீப்பெட்டி கலைகள்

Untitledகையிலே கலைவண்ணம் என்பது போல,பெட்டியில் கைவண்ணம் என்கிறார் ஸ்ரேயா கத்தூரி.அவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ஆர்ட் ஆன் எ பாக்ஸ்-க்கு (https://www.instagram.com/artonabox/ ) சென்றால் இதன் அர்த்ததை பளிச்சென புரிந்து கொள்ளலாம்.அப்படியே தீப்பெட்டிகளின் அழகிலும் மெய்மறந்து நிற்கலாம்.ஆம், ஸ்ரேயா தீப்பெட்டிகளின் மேலே உள்ள படங்களை ஆர்வத்துடன் சேகரித்து வருபவர்.இப்படி தான் சேகரிக்கும் தீப்பெட்டி படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

அடடா! தீப்பெட்டிகளின் மீது இடம்பெறும் படங்கள் தான் எத்தனை அழகாக இருக்கின்றன. அவற்றின் வகைகள் தான் எத்தனை! இந்த வியப்பை தான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் உண்டாக்குகிறது.

தீப்பெட்டிகளை சாதாரணமாக நினைத்துவிட முடியாது என்கிறார் ஸ்ரேயா. அவை பலவற்றை வெளிப்படுத்துவதாகவும்,அவற்றை வெறும் பெட்டிகளாக பார்க்கத்தயாராக இல்லை என்றும் ஒரு பேட்டியில் உற்சாகமாக கூறியிருக்கிறார். தீப்பெட்டிகள் பிரச்சார சாதனமாக ,விளம்பர வாகனமாக பயன்படலாம் என்கிறார்.
தீப்பெட்டி மேலே இருக்கும் ஒவ்வொரு படமும் மேலும் ஆழமான ஒன்றை,கனவின் கதைகளை,தினசரி பொருட்களின் கதைகளை ,சமூகத்தின் மனப்போக்கை பேசுவதாக அவர் சொல்கிறார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி கொண்டிருக்கும் தீப்பெட்டி படங்களை ஒரு முறை வலம் வந்தால் இதே கருத்தை அவை ஒவ்வொன்றும் வலியுறுத்துவதை புரிந்து கொள்ளலாம்.
இந்தியா முழுவதும் வெளியாகும் தீப்பெட்டிகளில் உள்ள படங்கள் பெரும்பாலும் கடவுளின் உருவங்களை கொண்டிருக்கின்றன என்றாலும் பலவகையான படங்களையும் அலங்கரிக்கின்றன.

குடியரசு தின வாழ்த்துடன், இந்திய தேசியக்கொடி படம் கொண்ட தீப்பெட்டி சித்திரம் மற்றும் ராஜஸ்தான் சுற்றுலாத்துறை விளம்பரம் தொடர்பான குறிப்புடன் ராஜஸ்தான் அரண்மனை பட தீப்பெட்டி சித்திரத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளதை பார்க்கும் போது தீப்பெட்டி கலை என்பது எத்தனை பரந்துவிரிந்தது என்பது மட்டும் அல்ல நம் நாட்டின் இயல்பை அவை எப்படி பிரதிபலிக்கின்றன என்பதையும் உணர முடிகிறது.

ஸ்ரேயாவின் ஆர்வத்தை அறிந்து அவரது உறவுனர்களும் நண்பர்களும் எங்கே சென்றாலும் தீப்பெட்டிகளை சேகரித்து வந்து தருகின்றனராம். அதோடு இண்டாகிராம் பக்கம் மூலம் உலகம் முழுவதும் உள்ளவர்களும் அவருடன் தீப்பெட்டி கலையை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

எல்லாம் சரி, ஸ்ரேயாவுக்கு எப்படி தீப்பெட்டி கலை மீது ஆர்வம் வந்தது? சில ஆண்டுகளுக்கு முன் இதழியல் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்க வேண்டியிருந்த போது , தீப்பெட்டி படங்கள் உணர்த்தும் செய்தி எனும் தலைப்பை தேர்வு செய்திருக்கிறார். அப்போது துவங்கிய தீப்பெட்டி சேகரிப்பு இப்போது இன்ஸ்டாகிராமில் விரிவாக்கம் பெற்றுள்ளது.

——-


வீடியோ புதிது;நேர்க்காணல் வழிகாட்டி

வேலைவாய்ப்புக்கான நேர்க்காணலின் போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என பெரிய பட்டியலே இருக்கிறது. இவற்றில் சிலவற்றை நீங்களும் கூட அறிந்திருக்கலாம். இந்த பட்டியலில் கைகளுக்கான பிரதேயக குறிப்புகள் இருப்பது தெரியுமா? அதாவது நேர்க்காணலின் போது கைகளை எப்படி வைத்திருக்க வேண்டும் எப்படி எல்லாம் வைத்திருக்க கூடாது என்பதற்கு தெளிவான விதிகள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு மேஜை மீது கைகளை தாளமிட்ட படி இருப்பதையும், உள்ளங்கை மறைந்திருக்கும் நிலையில் வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். முன்னது பதற்றத்தின் வெளிப்பாடாக அமையும் என்றால் இரண்டாவது சைகை ஒருவர் எதையோ மறைப்பதாக நினைக்க வைக்கும். அதே போல கைகளை கட்டியபடியும் இருக்க கூடாது. உள்ளங்கையை வெளிப்புறமாக வைத்திருக்கலாம். இது நம்பகத்தன்மையை உணர்த்தும். கைகளை கூப்புவது போல ஒன்றாகவும் வைத்திருக்கலாம்.
கிரேசி குட் இண்டர்வியூவிங் எனும் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்த குறிப்புகளை அருமையான வீடியோவாக பிஸ்னஸ் இன்சைடர் தளம் உருவாக்கியுள்ளது: https://www.youtube.com/watch?v=uAHb6uzDVrU

———–
comments-section-640x440
டிராப் பாக்ஸ் ரகசியம்

கோப்பு பகிர்வு சேவையான டிராப் பாக்சில் கோப்புகளை அனுப்பி பெறுவதை தவிர பல துணை அம்சங்களும் கூடுதல் வசதிகளும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று, இணையத்தில் டிராப் பாக்ஸ் மூலம் பகிரும் கோப்புகள் மீதான கருத்தறியும் வசதி. உங்கள் கோப்பின் வலது பக்க பட்டையில் பார்த்தால், பகிர்க பட்டன் கீழ்யே ,பின்னூட்டம் எனும் பகுதியை பார்க்கலாம். இதன் மூலம் கோப்பு தொடர்பான கருத்துக்களை பகிரலாம். கருத்தறிய விரும்பும் நபரை பற்றிய விவரத்தை @ எனும் குறியீட்டுடன் குறிப்பிட்டால் அது தொடர்பான தகவல் அருக்கு தெரிவிக்கப்பட்டு கருத்து கோரப்படும். இதற்கு அந்த நபர் டிராப் பாக்ஸ் பயனாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

Animated-Gif.0

கோப்புகளை பெற டிராப்பாக்சில் புதிய வசதி

கோப்பு பகிர்வு சேவையான டிராப்பாக்ஸ் நண்பர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெற்றுக்கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டிராப்பக்சில் உறுப்பினர்களாக இல்லாதவர்களிடம் இருந்து கூட கோப்புகளை பெற்று டிராப்பாக்சில் சேமித்துக்கொள்ளலாம்.

கிளவுட் முறையில் கோப்புகளை சேமித்து வைக்கவும்,பகிர்ந்து கொள்வதற்குமான சேவையாக டிராப்பாக்ஸ் திகழ்கிறது. புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை சேமித்து வைப்பது உட்பட பலவிதங்களில் டிராப்பாக்ஸ் சேவையை பயன்படுத்தலாம்.

இணையத்தில் பயன்படுத்தும் கோப்புகளை நிர்வகிக்க உதவும் டிராப்பாக்ஸ் இப்போது மற்றவர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெறுவதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. பைல் ரிக்வஸ்ட்ஸ் எனும் பெயரிலான இந்த வசதி மூலம் யாரை வேண்டுமானாலும் உங்களுக்கு தேவையான கோப்பை உங்கள் டிராப்பாக்ஸ் கணக்கில் பதிவேற்ற வைக்கலாம்.

இதற்கு முன்னர் , டிராப்பாக்ஸ் உறுப்பினர் அல்லாத ஒருவரிடம் இருந்து ஏதேனும் கோப்பை பெற வேண்டும் என்றால் அவருக்கு இமெயில் மூலம் கோரிக்கை அனுப்ப வேண்டும். அதன் பிறகு அவர் மெயிலில் கோப்பை அனுப்புகிறாரா என பார்த்து அதை டிராப்பாக்சில் பதிவேற்ற வேண்டும். குழுவாக பலரிடம் இருந்து கோப்புகளை பெறும் தேவை இருந்தால் இது மிகவும் சிக்கலாகிவிடும்.

ஆனால் இப்போது யாரிடமேனும் கோப்பு தேவை என்றால் டிராப்பாக்சில் உள்ள பைல் ரிக்வஸ்ட் பகுதியில் கிளிக் செய்து அதில் இமெயில் முகவரியை சமர்பித்தால் போதுமானது. உடனே அந்த நபருக்கும் கோப்பை கோரும் மெயில் போய்ச்சேரும். அதை அவர் கிளிக் செய்தததும் என்ன வகையான கோப்பு தேவை என தெரிந்து கொண்டு அதை பதிவேற்றினால் போதும் அது கோரியவரின் டிராப்பாக்ஸ் பக்கத்தில் வந்து சேர்ந்துவிடும்.
கோப்புகளை கோரிப்பெறுவதற்கான எளிதான வழியாக இது கருதப்படுகிறது.

பலவிதங்களில் இந்த வசதி கைகொடுக்கும். ஒரு மைய நிகழ்ச்சி சார்ந்த புகைப்படங்களை பலரிடம் இருந்து பெற விருப்பமா? அவர்கள் அனைவருக்கும் கோரிக்கை அனுப்பி தொடர்புடையை புகைப்படங்களை பதிவேற்ற வைக்கலாம். அதே போல அலுவலக பணி சார்ந்த விஷ்யங்களை குழு உறுப்பினர்களிடம் இருந்து கோப்புகளாக பெற விரும்பினாலும் இது கைகொடுக்கும்.

டிராப்பாக்ஸ் புதிய வசதி பற்றி அறிய; https://blogs.dropbox.com/dropbox/

—–

நன்றி; விகடன்.காம்

நண்பர்களுக்கு கோப்புகளை எளிதாக அனுப்ப ஒரு இணைய சேவை

http _filestofriends.com_இணையத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ள இமெயிலை மட்டுமே நம்ப வேண்டிய அவசியமும் இப்போது  இல்லை. அளவில் பெரிய கோப்புகளை அனுப்ப முடியாமல் திண்டாடும் அனுபவமும் இப்போது ஏற்படுவது இல்லை. டிராப் பாக்ஸ் சேவையில் துவங்கி , கூகுல் டிரைவ், மைக்ரோசாப்டின் ஒன் டிரைவ் ( ஸ்கை டிரைவ்) என பல வழிகள் இருக்கின்றன. இருந்தாலும் கோப்பு பகிர்வில் உதவ புதிய சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன.

இந்த திசையில் சமீபத்திய வரவு, பைல்ஸ் ஆப் பிரெண்ட்ஸ். நண்பர்களுக்கு பெரிய கோப்புகளை அனுப்பி வைக்கும் அவசியம் ஏற்பட்டால் இந்த சேவையை பயன்படுத்த்தலாம்.

கோப்புகளை பகிர்வது எளிதாகவே இருக்கிறது. அனுப்ப வேண்டிய கோப்பை கிளிக் செய்தோ , அல்லது இழுத்து வந்தோ அதற்குறிய கட்டத்தில் வைத்துவிட வேண்டும். அதன் பிறகு உங்கள் இமெயில் முகவரியை சமர்பித்து நண்பரின் மெயில் முகவரியையும் குறிப்பிட்டால் போதும். கோப்பு போய் சேர்ந்துவிடும். அனுப்பும் போது கோப்பு தொடர்பான செய்தியையும் சேர்த்து குறிப்பிடலாம்.

எளிமையான பயனுள்ள சேவை. அடிப்படையில் இலவசமானது. ஆனால் ஒரு ஜிபி கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும்.

கட்டண சேவைக்கு மாறினால் அதிக கோப்புத்திறன் உள்ளிட்ட கூடுதல் வசதி உண்டு. பழைய கோப்புகளை பார்ப்பது, நமக்கென தனி இணைய முகவரி ஆகிய அம்சங்கள் இதில் அடக்கம்.

வர்த்தக நோக்கில் அதிக கோப்புகளை பகிர்ந்து கொள்பவர்களுக்கு இந்த கட்டண சேவை பயனுள்ளதாக இருக்கும்.

இணைய முகவரி: https://filestofriends.com/

———————-

 

பி.கு; டிராப் பாக்ஸ் பற்றி ஒரு குறுந்தொடர் எழுதும் அளவுக்கு விஷ்யம் இருக்கிறது. உங்களில் எத்தனை பேருக்கு அதை படிக்கும் ஆர்வம் இருக்கிறது. தெரிவித்தால் மற்ற பதிவுகளோடு டிராப்பாகஸ் பற்றியும் அடிக்கடி எழுத விருப்பம். இன்றைய கிலவுட் கம்பூட்டிங் யுகத்தில் டிராப்பாக்ஸ் போன்ற சேவைகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். நம்முடைய எல்லா கோப்புகளையும் அவர்களை நம்பி ஒப்படைத்து விடுகிறோமே !

 

அன்புடன் சிம்மன்.

 

———

கிலவுட் சேவையில் தகவல்களை பாதுகாப்பதற்கான வழிகள்.

cloudபுகைப்படங்களை சேமிப்பதாகட்டும், கோப்புகளை பகிர்வதாகட்டும் இப்போது கிலவுட் முறையிலான சேவைகளை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். நிறுவனங்களும் கில்வுட் சார்ந்த சேவைகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. கில்வுட் முறையில் சேமிப்பதும் பகிர்வதும் சுலபமாக இருக்கிறது. பல நேரங்களில் இலவசமானதாகவும் இருக்கிறது. இவ்வளாவு ஏன் பத்திரங்கள், அடையாள அட்டை போன்றறை கூட கிலவுட் முறையில் சேமித்து வைக்கிறோம். நாம் பயன்படுத்தும் டிராப்பாக்ஸ் சேவையில் துவங்கி பல சேவைகள் கிலவுட்டில் தான் இயங்கின்றன. வருங்காலத்தில் மேலும் பல சேவைகளுக்கு கிலவுட் தொழில்நுட்பம் பயன்படப்போகிறது என்பதிலும் சந்தேகமில்லை. அது மட்டுமா, 2014 ல் பல பணிகளில் கம்ப்யூட்டரில் இருந்து கிலவுட்டுக்கு மாறிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கிலவுட் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றியோ பயன்பாடு பற்றியோ எந்த கேள்வியும் இல்லை. எல்லாம் சரி, கில்வுட் தொழில்நுட்பத்தில் தகவல்களை சேமிப்பது எந்த அளவுக்கு பாதுக்கப்பானது. கிலவுட் பயன்பாட்டிற்கான விதிகளும் சட்டங்களும் என்ன சொல்கிண்றன? கிலவுட்டில் சேமிக்கப்படும் தகவல்களுக்கு யார் பொறுப்பு? இப்படி பல கேள்விகள் கிலவுட் பயன்பாட்டில் எழுகின்றன.

நாம் மேலும் மேலும் அதிக அளவில் கிலவுட் சேவையை பயன்படுத்த துவங்கியிருக்கும் நிலையில் அவற்றின் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்வது நல்லது. மிகவும் அவசியமும் கூட.

பெரும்பாலான கில்வுட் சேவைகளின் சர்வர்கள் அமெரிக்காவில் இருக்கின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்துபவர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றனர். எனில் சேமிக்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் பிரச்ச்னை என்றால் எந்த நாட்டு சட்டம் பொருந்தும் என்பது சிக்கலானது. அதோடு குறிப்பிட்ட சூழலில் , தலவல்களை அணுகும் உரிமை யாருக்கு உண்டு என்னும் கேள்வியும் சிக்கலாகலாம். பயனாளிகள் தாங்கள் சேமித்து வைத்த தகவல்கள் தங்களுக்கு சொந்தமானவை என்று நம்பலாம். ஆனால் அவை சேமிக்கப்பட்ட இடம் இன்னொரு நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை மறந்துவிடக்கூடாது. ஏதேனும் காரணத்துக்காக குறிப்பிட்ட அரசாங்கங்கள் தகவல்களை கேட்டால் கொடுக்க வேண்டி வரலாம். அப்போது என்னுடையது எனும் வாதம் எடுபடாது.

 

எனவே கிலவுட் சேவையை பயன்படுத்தும் போது சில வழிமுறைகளை பின்பற்றுவது சரியாக இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

முக்கிய விவரங்களில் கவனம்:

 

கிலவுட் சேவையை பயன்படுத்துவது பல நேரங்களில் ஆபத்தாக முடியலாம். அதற்காக கிலவுட் சேவையையே பயனப்டுத்தக்கூடாது என்றில்லை. மாறாக கவனமாக பயன்படுத்த வேண்டும். சாதரானமான தகவல்கள் என்றால் யோசிக்காமல் கிலவுட்டில் சேமித்து வைக்கலாம். ஆனால் ரகசியமானவை மற்றும் முக்கிய தகவல்கள் என்றால் கிலவுட்டிற்கு கொண்டு செல்லும் முன் யோசியுங்கள். உதாரணத