டிவிட்டரில் அப்பா என்னை பின் தொடர்ந்த போது!

தொழில்நுட்பத்திலும் ஆர்வம் மிக்க ஒரு பாசமிகு தந்தை டிவிட்டரில் தனது மகளை பின் தொடர்ந்தால் என்ன நிகழும் என்பதை கேத்தரின் கோல்ட்ஸ்டின் என்னும் பெண்மணி சுவைபட விவரித்திருக்கிறார்.

அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் இணைய இதழான ஸ்லேட்டில் பணியாற்றி வருகிறார்.குறிப்பாக இணையம் மற்றும் சமூக ஊடகம் சார்ந்த விஷயங்கள் பற்றி அவர் எழுதி வருகிறார்.

கேத்தரினின் தந்தை கடந்த தலைமுறையை சேர்ந்தவர் என்றாலும் தொழில்நுட்பத்தை கண்டு மிரண்டு ஒதுங்கி கொள்பவர் அல்ல;புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்.அந்த வகையில் தான் டிவிட்டரையும் அவர் பயன்படுத்த துவங்கியிருந்தார்.

டிவிட்டரில் கணக்கை ஏற்படுத்தியிருந்தாரே தவிர அவருக்கு டிவிட்டரின் அடிப்படை அம்சங்கள் குழப்பமாகவே இருந்தது.அதில் தெளிவு பெறுவதற்காக அவர் மகளின் உதவியை நாடினார்.மகளும் அப்பாவுக்கு ஆர்வத்தோடு டிவிட்டரில் குறும்பதிவு செய்வது எப்படி,ரீடிவீட் செய்வது என்றால் என்ன,பின் தொடர்வது என்றால் என்ன, போன்ற விஷயங்களை பாடம் நடத்துவது போல ஆர்வத்தோடு சொல்லிக்கொடுத்தார்.

ஒரு பணிவான மாணவனை போல அவரது அப்பாவும் அவற்றை கவனத்தோடு கேட்டு புரிந்து கொண்டார்.டிவிட்டர் பற்றி இனி எனக்கு பிரச்சனை இல்லை என்று உற்சாகமாக கூறினார்.

அப்பாவிற்கு டிவிட்டரின் அடிப்படை அம்சங்களை சொல்லிக்கொடுத்த போது அவரது டிவிட்டர் பக்கத்தில் எல்லாமே தன்னுடைய குறும்பதிவுகளாக இருப்பதை கேத்தரின் கவனித்தார். தன்னை தவிர டிவிட்டரில் அப்பா மிகச்சிலரை மட்டுமே பின் தொடர்ந்ததால் இந்த நிலை எனப்தை அவர் புரிந்து கொண்டார்.

ஆனால் சில நாட்கள் கழித்து தான் அதன் விளைவுகள் கேததரினுக்கு புரியத்துவங்கியது.

கேத்தரின் எதை குறும்பதிவு செய்தாலும் அதனை அவரது தந்தை படித்து கொண்டிருந்தார்.அது மட்டும் அல்ல குறும்பதிவுகள் மூலம் பகிர்ந்து கொன்ட விஷயங்கள் குறித்து தனது கருத்துக்களையும் உடனுக்குடன் இமெயில் வழியே
அனுப்பி வைத்தார்.

கேத்தரின் சாப்பிட்வதற்கான நல்ல ரெஸ்டாரன்ட் பற்றியோ அல்லது புதிதாக வந்துள்ள திரைப்படம் பற்றியோ குறும்பதிவு செய்தால் தந்தை இநத ரெஸ்டாரண்டுக்கு போம்மா என்றோ அல்லது ஓயாமல் படம் பார்க்காதே என்றோ அறிவுரை கூறினார்.

காலையில் கேட்ட பாடல்,அலுவலகத்தில் நடந்த சம்பவம் என்று எதைப்பற்றி குறும்ப்திவு செய்தாலும் அப்பாவிடம் இருந்து உடனடியாக இமெயில் வந்தது.இது பற்றி விசாரித்த போது தந்தை அவரிடம் டிவுட்டரில் உனது புதிய பதிவு வரும் போதெல்லாம் எனது போனில் தெரியும் படி செய்திருக்கிறேனே என்று உற்சாகமாக கூறினார்.

அப்போது தான் கேததரினுக்கு தந்தை தன்னை பின் தொடர்வது போல கண்காணித்து கொண்டே இருப்பது போல தோன்றியது.அவரது தந்தை பொதுவாக பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடுபவர் அல்ல;அவர்கள் சுயமாக முடிவெடுத்து செய்லபட வேண்டுமென்றே விரும்புவர்.

ஆனால் டிவிட்டர் சேவையின் புதுமை அவரை மகளின் குறும்பதிவுகளை பின் தொடர் வைத்தது.மகளின் பதிவுகளை படித்து அதற்கு பதில் சொல்வதை அவர் இயல்பானதாகவே கருதினார்.மகளுக்கு ஆலோசனை சொல்வதை தனது கடமையாகவும் நினைத்தார்.

குடும்ப நிகழ்ச்சிகளில் சந்தித்து கொண்டால் கூட மகளின் டிவிட்டர் செய்திகள் பற்றியும் தன்னைவிட அவளுக்கு அதிக பின் தொட்ர்பாளர்கள் இருப்பதையும் பெருமையோடு கூறி வந்தார்.

கேத்தரினுக்கு தான் சங்கடமாக இருந்தது.தொழில் முறையிலான கேல்விகளை வெளியிட்ட போது கூட தந்தை அது பற்றி உடனே போனில் பேசியது அவரை நெளிய வைத்தது.

வேறு வழியில்லாமல் அவர டிவிட்டரில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்த்தார்.எதையும் பதிவிடும் முன் இதற்கு அப்பாவிடம் இருந்து பதில் வருமா என்று யோசிக்கத்துவங்கினார்.டிவிட்டரை விட பேஸ்புக்ககையே அதிக பயன்படுத்த துவங்கினார்.

ஆனால் நல்ல வேளையாக கொஞ்ச நாட்களில் எல்லாம் அப்பா அவரது பதிவுகளுக்கு உடனே பதில் சொல்வதை குறைத்து கொண்டு விட்டார்.டிவிட்டர்ல் அவருக்கு கவனம் செலுத்த வேறு பின் டொடர்பாளர்கள் கிடைத்திருக்க வேண்டும் என்று கேத்தரின் நினைத்து கொண்டார்.

ஆனால் இதற்குள் அவர்து அம்மா டிவிட்டரை பார்த்து விட்டு அது குறித்து விளக்கம் கேட்ட துவங்கிவிட்டதாக கேத்தரின் இந்த கட்டுரையை ஒரு சிறுகதை போல முடிந்திருந்தார்.

டிவிட்டர் கால கருத்து பரிமாற்றம் எப்படி குடும்ப உறவிலும் பிரதிபலிக்ககூடும் என்பதை அழாக உணர்த்தும் கட்டுரை இது.

டிவிட்டர் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் புதியதொரு கருத்து பறிமாற்றத்திற்கும் வழி வகுக்கலாம்.

பிள்ளைகளை அப்பா அம்மாக்கள் டிவிட்டரில் பின் தொடர்வது மேலும் சக்ஜமாகலாம்.நீ என் ப்திவுகளை படிப்பதே இல்லை என்று பிள்ளைகளும் கோபித்து கொள்ளலாம்.இல்லை தயவு செய்து டிவிட்டரில் என்னை பின் தொடராதே என்று கட்டளையிடலாம்.

டிவிட்டர் பதிவை படித்து விட்டு அப்பாவோ அம்மாவோ பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளலாம்.

வாழ்க டிவிட்டர்.

—————–

டிவிட்டருக்கு எத்தனையோ பரிமானம் இருக்கிறது.டிவிட்டர் குடும்ப உறவை மேம்படுத்த கைகொடுக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது.இதில் டிவிட்டரில் மகளும் தந்தையும் நெருங்கி வந்தனர் என்றால் டிவிட்டர் மூலம் நெருங்கி வந்த தாய் மகள் பற்றி முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்.

இரண்டும் பதிவுகளுக்குமே அடிப்படையான கட்டுரைகள் நான் விரும்பி வாசிக்கும் இணைய இதழான சலோன் டாட் காமில் வெளியாகின என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அன்புடன் சிம்மன்.

0 thoughts on “டிவிட்டரில் அப்பா என்னை பின் தொடர்ந்த போது!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *