இணைய புகைப்பட கேலரியை உருவாக்க!

இதோ இந்த நொடி இணையத்தில் யாரெல்லாமோ புதிய புகைப்படங்களை பதிவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.அது இன்ஸ்டாகிராம் மூலமாக இருக்கலாம்.டிவிட்டர் மூலமாக இருக்கலாம்.பிலிக்கர் மூலமாக இருக்கலாம்.வலைப்பதிவு மூலமாக இருக்கலாம்.இன்னும் பல வழிகளில் இருக்கலாம்.

ஆக இணையத்தில் கடலென புகைப்படங்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.இணையத்தில் குவியும் புகைப்படங்களை நினைத்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.

எல்லாம் சரி,இந்த புகைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கும் ஏற்ற வழி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

பிக்ஷோ இணைய சேவையை இந்த ஏக்கத்தை போக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வெளியாகும் புகைப்படங்களை கொண்டு அழகிய கேலரியை உருவாக்கி கொள்ள இந்த சேவை உதவுகிறது.

இணைத்தில் இருந்து புகைப்படங்களை திரட்டுவது பெரிய விஷய‌மல்ல;ஆனால் அவற்றை சரியாக தொகுக்க வேண்டும் அல்லவா?அது தான் இந்த சேவை ஹாஷ்டேக் மூலம் புகைப்படங்களை தொகுத்து பிறரோடு பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.

ஹாஷ்டேக் என்பது சமூக வலைப்பின்னல் உலகில் பிரபலமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.பகிரப்படும் தகவல்களை அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி அடையாளப்படுத்தி கொள்ள ஹாஷ்டேகுக்கள் கைகொடுக்கின்றன.

டிவிட்டரில் குறும்பதிவுகள் பொருத்தமான ஹாஷ்கேகுகளுடன் பகிரப்படுவது பிரபலமாக இருப்பதோடு பிரபலமாகும் ஹாஷ்டேகுகள் எந்த தலைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதையும் உணர்த்த வல்லவையாக இருக்கின்றன.

குறும்பதிவுகள் மட்டும் அல்ல புகைப்படங்களும் ஹாஷ்டேகுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

செல்போனில் புகைப்படத்தை பகிர உதவும் இன்ஸ்டாகிராம்,புகைப்பட பகிர்வு சேவை பிலிக்கர் போன்ற சேவைகளில் பகிரப்படும் புகைப்படங்கள் ஹாஷ்டேகுடன் பகிரப்படுகின்றன.இதே போல டிவிட்டரிலும் கூட புகைப்படங்கள் பகிரபப்டுகின்றன.டிவிட்பிக் மூலமும் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன.

எனவே விருப்பமான ஹாஷ்டேகை தேர்வு செய்துவிட்டால் அந்த குறிப்பிட்ட பதத்திற்கு உரிய புகைப்படங்களை மட்டும் தேர்வு செய்ய முடியும்.

பிக்ஷோ இதை தான் செய்கிறது.

இதில் விருப்பமான ஹாஷ்டேகை சமர்பித்தால் அதற்கேற்ற சமீபத்திய புகைப்படங்களை இந்த தளம் திரட்ட இணைய கேலரியாக தருகிறது.

ஹாஷ்டேகை தேர்வு செய்வது போலவே எந்த எந்த சேவையில் இருந்து புகைப்படங்கள் தேவை என தேர்வு செய்து கொள்ளலாம்.தேர்வு செய்யப்பட்ட கேலரியை அப்படியே சேமித்து நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்,இல்லை அப்படியே பார்த்து ரசிக்கலாம்.

எப்படி பார்த்தாலும் இணைய கடலில் சங்கமிக்கும் புகைப்படங்களை புதிய கோணத்தில் பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற சேவை இது.

இணையதள முகவரி;http://picsho.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இணைய புகைப்பட கேலரியை உருவாக்க!

  1. மிகவும் நல்ல பயன்னுள்ள தகவல்……உங்கள் பகிர்வுக்கு நன்றி……..

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    Reply
  2. நல்ல பயனுள்ள தகவல்…பகிர்வுக்கு மிக்க நன்றி…

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    Reply
    1. cybersimman

Leave a Comment

Your email address will not be published.