இணைய தேடலில் ஒரு சுவாரஸ்யம்.

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவே செய்யும்.

ரைட் வித் இமேஜஸ் என்னும் இந்த தளம் நீங்கள் டைப் செய்வதை எல்லாம் புகைப்பட உருவமாக மாற்றிக்காட்டுகிறது.அதாவது எந்த சொல்லை டைப் செய்தாலும் அதற்கு பொருத்தமான உருவத்தை காட்டுகிறது.

இந்த மாற்றத்தை உருவ மொழி என இந்த தளம் குறிப்பிடுகிறது.

டைப் செய்யப்படும் சொல்லுக்கு நிகரான உருவத்தை கூகுல் உருவ தேடலில் இருந்து கொண்டு வந்து காட்டுகிறது.ஆம் குறிப்பிட்ட சொல்லுக்கான கூகுல் உருவ தேடலில் எந்த உருவம் முதலில் வருகிறதோ அந்த உருவத்தை முன் வைக்கிறது.

இடது பக்கம் உள்ள தேடல் கட்டத்தில் சொற்களை டைப் செய்தால் வலது பக்கத்தில் கூகுல் உருவ தேடல் படம் தோன்றுகிறது.இந்த உருவ மொழியை பேஸ்புக் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

சொற்களையும் உருவங்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட அழகான இணைய பரிசோதனை முயற்சி என இந்த தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் ஒரு சொல்லை டைப் செய்யும் போது ஒரு சொல் வரக்கூடும் என்பது தான் இந்த சோதனையில் உள்ள சுவாரஸ்யம்.காரணம் கூகுல் தேடலில் உருவங்களின் வரிசை மாறிக்கொண்டே இருக்கிறது அல்லவா?

நேரமும் ஆர்வமும் இருந்தால் பிடித்தமான ஒவ்வொரு சொல்லாக அல்லது சொற்றொடராக டைப் செய்து என்ன உருவங்கள் வருகிரது என பார்க்கலாம்.கவனம் சில நேரங்களில் அற்புதமான படங்கள் தோன்றலாம்.சில நேரங்களில் அலுப்பூட்டும் படங்களும் ஏன் மோசமான படங்களும் கூட தோன்றலாம்.

இணைய உலகின் பிரலமான தேடியந்திரமான கூகுலை வைத்து கொண்டு உருவாக்கப்பட்ட இன்னொரு அழகான சேவையாகவே இது தோன்றுகிற‌து.இதனை இணையம் சார்ந்த கலை ப‌டைப்பு என்று கூட சொல்லலாம்.

இணையதள முகவரி;http://writewithimages.com/index.php

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இணைய தேடலில் ஒரு சுவாரஸ்யம்.

  1. நல்ல பயன்னுள்ள பதிவு….. உங்கள் பகிர்வுக்கு நன்றி……

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    Reply
  2. உங்கள் பகிர்வுக்கு நன்றி….

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    Reply
  3. chollukireen

    சும்மா நாமும் டைப் பண்ணி பார்க்கலாம் என்று பார்த்தேன்.
    என்னுடைய சமையல் குறிப்பு போட்டோகூட ஒன்றிரண்டு வந்தது. இப்படி சில ஸந்தோஷங்களும் இருக்கு என்று
    நினைத்து உங்களுக்கு எழுதினேன். நன்றாக இருக்கிறது.
    பொழுதுகூட போக்க உதவும்.

    Reply
    1. cybersimman

      ஆம் சுவாரஸ்யமான கொஞ்சம் புத்திசாலித்தனமான சேவையும் கூட!.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.