கூகுல் இல்லாமல் ஒரு நாள்!

ஒரு நாள்,ஒரே நாள்!கூகுல் இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா?இந்த கேள்வியை கேட்பதற்காக என்றே ‘ஒன் டே விதவுட் கூகுல்’ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எதற்காக இப்படி ஒரு கேள்வி என்று கேட்பதற்கில்லை;காரணம் கூகுல் நமது உலகம் கூகுல்மயமாகி கொண்டிருக்கிறது.நாமெல்லாம் கூகுலுக்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம்.இதன் விளைவுகளையும் பாதிப்புகளையும் நாம் உடனடியாக உணர முடியுமா என்று தெரியவில்லை.இப்போதைக்கு கூகுலின் ஆதிக்கத்திற்கு நாம் விரும்பியே நம்மை ஒப்படைத்து கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் கூகுலாதிக்கம் குறித்து நம்மை யோசிக்க வைப்பதற்காக என்றே இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் வாழ்க்கையே கூகுலை சார்ந்து இருக்கிறது என்று துவங்கும் இந்த தளம் ,அதன் பிறகு தான் அந்த கேள்வியை கேட்கிறது.அது தான் ,கூகுல் இல்லாமல் ஒரு நாள் இருக்க முடியுமா?!.

இந்த கேள்வியின் அர்தத்தை புரிய வைக்கும் காரணங்களையும் வரிசையாக எடுத்து வைக்கிறது.

முதல் காரணம் இண்டெர்நெட் என்றால் கூகுல் என்றாகி இருப்பது தான்.கூகுல் என்றால் தேடியந்திரம் மட்டும் அல்லவே.கூகுல் தான் ,வலைப்பதிவு,ஜிமெயில்,யூடியூப்,பிக்காசோ,அன்ட்ராய்டு என அடுத்தடுத்து நமக்கு தேவையான சேவைகளை அறிமுகம் செய்து இண்டெர்நெட்டின் மறுவடிவமாக மாறிவிட்டது.

இப்படி விவரித்து விட்டு அந்த தளம் கூகுல் இல்லாமல் இண்டெர்நெட் சாத்தியமா என்று கேட்டு விட்டு அதற்கான பதிலாக ,ஜிமெயில்,யூடியூப்,பிக்காசோ,கூகுல் டாக்குமென்ட்,குரோம்,கூகுல் மேப்ஸ்,கூகுல் நியூஸ் உள்ளிட்ட கூகுல் சேவைகளை பட்டியலிட்டு இவை எல்லாம் இல்லாமல் இருக்க முடியுமா என்று மேலும் ஒரு கேள்வி கேட்டு ,நல்ல வேளையாக கூகுல் சேவை எல்லாவற்றுக்குமே மாற்று இருக்கிறது என்று உற்சாகம் அளிக்கிறது.

கூகுலுக்கு மாற்று சேவைகளை ஏன் தேட வேண்டும்?ஏன் என்றால் கூகுல் பெரியண்ணனாக இருக்கிரது.நாம் செய்வதையெல்லாம் கூகுல் அறிந்திருக்கிறது.இணையத்தில் நாம் எதை தேடுகிறோம் என கூகுல் அறிந்திருக்கிறது,நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதை அறிந்திருக்கிறது,நாம் பதிவிடுவைதை அறிந்திருக்கிறது,நாம் படிப்பதை அறிந்திருக்கிறது…!நமக்கு தேவையானவற்றை அளிக்க முயல்வதன் மூலம் கூகுல் நம்மிடம் இருந்து தேவையான‌ அந்தரங்க விவரங்களை திரட்டி விடுகிறது.

எனவே தான் கூகுல் இல்லாமல் ஒரு நாளேனும் இருக்க முடியுமா என்று பார்க்கலாம் என்கிறது இந்த தளம்.

கூகுல் அந்தரங்க விவரங்களை சாம்ர்த்தியமாக சேகரிப்பதோடு அதன் பாதிப்பு முடிந்துவிடவில்லை.கூகுலால் இக்கால சிறுவர்கள் கணக்கு போடுவதையே மறந்து விடலாம்.எழுதும் பழக்கமும் மறையலாம்,இலக்கியத்தின் மீதான ஆர்வம் இல்லாமல் போகலாம்…

அது மட்டுமா வெகு விரைவிலேயே எல்லா விவரங்களும் இணையத்தில் பதிவேற்றப்பட்டு அது உண்மை எது பொய் என தெரியாமல் போகலாம்…ஆம் தேடியந்திர யுகத்தில் தேடல் பட்டியலில் முதலில் தோன்றும் முடிவுகள் தானே பார்க்கப்பட்டு உண்மையாக கருதப்படுகின்றன.

ஆதலினால் கூகுல் இல்லாமல் ஒரு நாள் இருந்து பாருங்களேன் என்கிறது இந்த தளம்.நானும் அதனை பரிந்துறைக்கிறேன்.

கூகுலை விட்டால் வேறு வழியில்லை என்னும் நிலை ஏற்படுவது ஏற்கத்தக்கதல்ல!.

இணையதள முகவரி;http://www.onedaywithoutgoogle.org/

0 thoughts on “கூகுல் இல்லாமல் ஒரு நாள்!”

 1. நிச்சயமாக கூகுலால் ரொம்ப நாளைக்கு தாங்க முடியாது. ஒரு காலத்தில் பிரௌஸரை திறந்தவுடன் netaddress.com, அதன் பிறகு சிறிது நாள் கழித்து hotmail.com, yahoo.com. google 10 வருடங்களாக, முன்னிலையில் இருப்பதால் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிகிறது. மக்களுக்கு மாற்று தெரிந்தவுடன் மாறி விடுவார்கள். மாற்றம் ஒன்றே மாறதது.

  நம் மக்களின் சமீபத்திய உதாரணம் orkut.

  1. அப்படி நடந்தால் நல்லது தான்!ஆனால் கூகுல் சாம்ப்ராஜயம் ஆழ வேறூன்றியிருப்பதாகவே கருதுகிறேன்.

   அன்புடன் சிம்மன்

 2. ஏன் இந்த கொலைவெறி!!!!!!நல்லா தான போயிட்டு இருக்கு!!!!!!!!!!

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  1. தங்கள் தளத்தின் தமிழ் பதிப்பை அணுக முடியவில்லை.தங்கள் சேவை பற்றி விரிவாக குறிப்பிடவும்.

   அன்புடன் சிம்மன்

  1. இலவச சேவை என்பதால் மட்டுமே அந்தரங்கம் மீதான் தாக்குதலையும் ஊடுருவலையும் பொறுத்து கொள்ள முடியாது.மேலும் கூகுல் இலவசமாக த்ரும் சேவை மூலம் கோடிகளில் சம்பாதிக்கிறது.தவிர எனக்கு கூகுல் மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது.ஆனால் அதன் மீதான விமர்சனத்தை அப்படியே பதிவு செய்கிறேன்.

   அன்புடன் சிம்மன்

 3. அன்பின் சிம்மன் – உண்மை – கூகுள் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. கூகுள் இல்லாமல் நாம் உயிர் வாழ இயலாது. தகவல் பகிர்வினிற்கு நன்றி – நட்புடன் சீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *