புகைப்படங்களை வீடியோவாக மாற்ற உதவும் ஸ்லைட்.லே

நம் இணைய வாழ்க்கையில் சேர்ந்து கொண்டே போகும் புகைப்படங்களை அழகிய வீடியோ தொகுப்பாக மாற்றித்த‌ரும் பிகோவிகோ போலவே ஸ்லைட்.லே தளமும் புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்றி இணையவெளி முழுவதும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

பிகோவிகோ தனிப்பட்ட புகைப்படங்களுக்கான சேவை போல தோன்றுகிறது என்றால் ஸ்லைட்.லே பொதுவில் பகிர்ந்து கொள்ளக்கூடிய புகைப்படங்களுக்கான சேவையாக காட்சி தருகிறது.

ஸ்லைட்.லே தளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் அழகிய புகைப்பட வீடியோ தொகுப்பாக காட்சி அளிக்கிறது.எல்லாமே பிரபல நட்சத்திரங்கள் அல்லது பாடகர்கள்,விளையாட்டு வீரர்களின் தொகுப்பாக இருக்கின்றன.அழகான இடங்கள் மற்றும் தனிநபர் படத்தொகுப்புகளும் கூட இருக்கின்றன.

இந்த சேவையை பயன்படுத்த துவங்குவதற்கு முன் இந்த தொகுப்புகளை பார்த்தாலே சொக்கிப்போய்விடுவோம்.இந்த பிரம்முப்புக்கு நடுவே இந்த தளத்தை எப்பைட்யெல்லாம் பயன்படுத்தலாம் என்ற புரிதலும் உண்டாகலாம்.

திரைப்படத்தில் ஒட்டி வெட்டப்பட்ட காட்சிகளை போல புகைப்படங்கள் நகரும்படங்களாக புகைப்பட கொலாஜாக தோன்றுவது கிரங்கடிக்கிறது.

அபிமான பாடகி அல்லது நடிகையின் விதவிதமான தோற்றத்தை நகரும் புகைப்படங்களாக பின்னணி இசையோடு பார்ப்பது சுவாரச்யமான அனுபவம் தான்.

நீங்களும் கூட இதே போன்ற புகைப்பட வீடியோ தொகுப்புகளை எளிதாக உருவாக்கி கொள்ளலாம்.

அதற்கு பேஸ்புக் மூலம் இந்த தளத்தில் நுழைந்தால் போதுமானது.அதன் பிறகு புதிய தொகுப்பை உருவாக்கவும் என்னும் பகுதியை கிளிக் செய்து விட்டு உங்களுக்கான புகைப்படங்களை தேர்வு செய்ய வேண்டியது தான்.புகைப்படங்களை எங்கிருந்து வேன்டுமானாலும் உருவலாம்.பேஸ்புக்கில் இருந்து புகைப்பட் சேவையான பிலிக்கரில் இருந்து,இன்ஸ்டாகிராமில் இருந்து என எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.இவ்வளவு ஏன் இந்த தளம் மூலமே இணையத்தில் உள்ள புகைப்படங்களை தேடி எடுத்து தொகுக்கலாம்.

புகைப்படங்களை தேர்வு செய்த பின் அதற்கான பொருத்தமான பின்னணி இசையையும் தேர்வு செய்து சேர்த்து விட்டு ஒரே கிளிக்கில் நகரும் புகைப்பட தொகுப்பை உருவாக்கிவிடலாம்.பின்னணி வண்ண கோர்வையையும் கூட நாமே முடிவு செய்து கொள்ளலாம்.

இந்த புகைப்பட வீடியோ காட்சியை பேஸ்புக் ,டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இமெயில் மூலமும் பகிர்ந்து கொள்ளலாம்.இணைய முகவரியை பெறு அதனை வலைப்பதிவிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த தொகுப்புகள் தானாக தளத்திள் உள்ள தொகுப்புகளின் பட்டியலிலும் சேர்ந்து விடும்.எனவே மற்ற உறுப்பினர்களும் அவற்றை பார்த்து ரசிக்க முடியும் .கருத்து தெரிவிக்க முடியும்.

சமீபத்திய தொகுப்புகள்,மிகவும் பிரபலமானவை என்ற அடிப்படையிலும் புகைப்படங்கள பார்த்து ரசிக்கலாம்.அவற்றைன் வகைகளுக்கு ஏற்பவும் தொகுப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வெறும் புகைப்படங்களாக பார்ப்பதியும் பகிர்வதையும் விட இது போல புகைப்பட வீடியோ தொகுப்பாக பார்த்து ரசிக்க முடிவது மிகவும் சுவாரஸ்யமானது.

நடசத்திரங்கள் மட்டும் அல்லாது குறிப்பிட்ட நிகழ்வு சார்ந்த தொகுப்புகளையும் உருவாக்கலாம்.

இணையதள முகவரி;https://slide.ly/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.