இவர் இன்ஸ்டாகிராம் பாட்டி

granmdaபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத்தோடு நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள். புற்றுநோயின் பாதிப்பை மீறி நாட்கள் உற்சாகமானதாகவும் இருக்கும். தினமும் புதிய நண்பர்களை பெற்றுத்தருவதாகவும் இருக்கும். சந்தேகம் இருந்தால் அமெரிக்க பாட்டி கிராண்ட்மாபெட்டியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து பாருங்கள். அவரது உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். அவரது 4 லட்சத்துக்கும் அதிமான இணைய நண்பர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்.

இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை. ட்விட்டர் குறும்பதிவுகளுக்கான களம் என்றால்,இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பேசலாம். புகைப்படங்கள் வாயிலாக புதியவர்களோடு தொடர்பு கொள்ளலாம். அறிமுகம் இல்லாதவர்களை எல்லாம் நண்பர்களாக்கி பின் தொடர வைக்கலாம். இப்படி லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்களை பெற்றுள்ள பிரபலங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஹாலிவுட் நட்சத்திரங்களும் , பாடகிகளும் கோலோச்சும் இன்ஸ்டாகிராமில் இப்போது 80 வயது பாட்டி கிராண்ட்மாபெட்டி பிரபலமாகி இருக்கிறார்.

பெட்டி என்னவோ பொக்கை வாய் பாட்டி தான்.ஆனால் அவரது புன்னகையோடு உற்சாகமாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பார்த்தால் பாட்டிம்மா என்று பாசத்தோடு அழைக்கத்தோன்றும். இப்படித்தான் பலரும் பாட்டிக்கு அடிமையாகி கொண்டிருக்கின்றனர். பலர் பாட்டியை பின் தொடர்வதற்காக என்றே இன்ஸ்டாகிராமில் உறுப்பினராகி வருகின்றனர்.பாடகி மைலி சைரஸ் உட்பட பிரபலங்களும் பாட்டியின் நண்பர்களாகி இருக்கின்றனர்.

கிராண்ட்மாபெட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் ஆயிரக்கணக்கானோரால் பார்த்து ரசிக்கப்படுகின்றன. பலரும் பாட்டியுடன் பேசுவது போல பின்னூட்டம் வழியே உருகி வழிகின்றனர். எல்லாம் பாட்டியின் பேரன் துவக்கி வைத்தது. பிலடல்பியாவில் வசிக்கும் கிராண்ட்மா பெட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்ததும் பேரன் ஜேக் பெல்டன் மிகுந்த வேதனைக்குள்ளானார். சில மாதங்கள் அல்லது அதிகபட்சம் சில ஆண்டுகளில் பாட்டியை நிரந்தரமாக பிரிய வேண்டியிருக்கும் என்ற எண்ணம் வாட்டியது. பாட்டியின் இறுதி நாட்களை வாழ்க்கையை நினைவில் நிறுத்தும் வகையில் அவரது இறுதி நாட்களை பதிவு செய்ய விரும்பினார். ஜேக்கின் பல நண்பர்களுக்கும் பாட்டி அறிமுகமானவர் என்பதால் அவர்களுடனும் பாட்டியின் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டது போல இருக்கும் என்ற எண்ணத்தில் இன்ஸ்டாகிராமில் பாட்டி பெயரில் கிராண்ட்மாபெட்டி எனும் பக்கத்தை துவக்கி , புகைப்படங்களை வெளியிடத்துவங்கினார்.

பாட்டியின் மீதான பாசத்தின் வெளிப்பாடாக அமைந்ததே தவிர, பேரன் ஜேக் வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கிராண்ட்மாபெட்டி, புற்றுநோய் போராளி, இயேசுவை ந்ம்புவர் … எனும் சுருக்கமான அறிமுகத்துடன் அமைந்திருந்த அந்த பக்கத்தில் வெளியான பாட்டியின் புகைப்படங்கள் மற்றவர்களையும் கவரத்துவங்கியது. முதல் வார்த்திலேயே 100 பேர் பாட்டியின் நண்பர்களாகி அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடரத்துவங்கினர். புற்றுநோயின் பாதிப்பையும் மீறு புன்னகையுடன் காட்சி அளித்து வாழ்வின் மீதான பாசத்தையும் நேசத்தையும் பகிர்ந்து கொண்ட அந்த பாட்டியின் தோற்றம் பலருக்கு பிடித்துப்போனது. பல்ரும் தங்கள் அபிமானத்தை பின்னூட்டம் மூலம் வெளிப்படுத்தினர். “ நீங்கள் தான் மிகவும் அழகான்வர் ‘ என் ஒருவர் குறிப்பிட்ட
ார். இன்னொருவர்’ உங்கள் முடி அழகாக உள்ளது. அதை விட உங்கள் உள்ளம் அழகாக இருக்கிறது ‘ என தெரிவித்திருந்தார். இப்படி பலரும் பாட்டியின் மன உறுதியை பாராட்ட அவரது ஆதரவாளர்களின் எண்ணுக்கை கூடிக்கொண்டே சென்றது. மிக விரைவிலேயே பாட்டியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்வது பற்றியும் அவற்றைப்பார்க்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தயாராக இருப்பதையும் பேரன் சொல்லக்கேட்ட பெட்டி பாட்டி மகிழ்ந்து போனார்.

நோயின் பாதிப்பை தள்ளி வைத்துவிட்டு அவர் அன்பு பொங்க சிரித்தபடி காட்சி அளிக்கும் புகைப்படங்கள் மேலும் ஆயிரக்கணக்கானோரின் உள்ளத்தை உருக் வைத்தது. இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாட்டிக்காக பேரன் உருவாக்கிய இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் கவனத்தை ஈர்க்க பாட்டி மேலும் பிரபலமாகி விட்டார். பாட்டிக்கு அன்பும் ஆதரவும் தெரிவித்து கடிதங்களும் குவிந்து வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பலரும் பாட்டியின் உறுதியை பாராட்டி பாசத்தோடு கருத்து பதிவு செய்து வருகின்றனர்.

இணையம் சாத்தியமாக்கும் எளிய அற்புதங்களுக்கு எத்தனையோ அழகான உதாரணங்கள் இருக்கின்றன. கிராண்ட்மாபெட்டி அந்த வரிசையில் நெகிழ வைக்கிறார்.

பாட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கம்; http://instagram.com/grandmabetty33

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

4 Comments on “இவர் இன்ஸ்டாகிராம் பாட்டி

  1. அன்பின் சைபர்சிம்மன், பயனுள்ள தகவல் – பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      இணையம் பயன்படுத்தப்படும் விதம் என்னை வியப்பில் ஆழ்த்திக்கொண்ட்டே இருக்கிறது. அதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி உண்டாகிறது.
      இது போன்ற உதாரண்ஙக்ள் வான்ழ்வின் இருண்ட கணங்களை ஒளி மிகக்கதாக்கும் அல்லாவா?நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

      அன்புடன் சிம்மன்

      Reply
      1. அன்பின் சிம்மன் – உண்மை உண்மை – இது போன்ற உதாரணங்கள் வாழ்வின் இருண்ட கணங்களை ஒளி மிகக்கதாக்கும் . உண்மை உண்மை – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

        Reply
        1. cybersimman

          நன்றி நண்பரே

          Reply

Leave a Comment

Your email address will not be published.