ஒரு வைரல் வீடியோவும், வாழ்க்கை பாடமும்!

getty_489356577_108668ஜேக்சன் எனும் பெயரில் ஒரு மாயம் இருக்கத்தான் செய்கிறது போலும்! மறைந்த பாப் இசை நட்சத்திரம் மைக்கேல் ஜேக்சனில் துவங்கி உலகப்புகழ் பெற்ற ஜேக்சன்கள் பலர் இருக்கின்றனர். ஜேக்சன் பெயர் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஜேக்சன் பெயரில் ஊர்களும் நகரங்களும் அநேகம் இருக்கின்றன. விக்கிபீடியா , ஜேக்சன் என்பது மனிதர்களை குறிக்கலாம், இடங்களையும் குறிக்கலாம் என தெரிவித்து, ஜாக்சன் பெயரில் உள்ள நகரங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டிலயை பார்த்தால் அமெரிக்காவில் பல மாநிலங்களில்ஜேக்சன் நகரம் இருக்கிறது. அமெரிக்காவுக்கு வெளியே ஆஸ்திரேலியாவிலும் ஜேக்சன் நகரங்கள் இருக்கின்றன.

இந்த ஜேக்சன் நகர பெயர் ஆய்வுக்கு காரணம் இல்லாமல் இல்லை. அமெரிக்காவின் உள்ள ஜேக்சன் நகரங்களில் ஒன்று இப்போது இணையத்தில் புகழ் மிக்க நகரமாக மாறியிருக்கிறது. அந்த நகரில் இருந்து ஒளிபரப்பாகும் வீடியோ காட்சி ஒன்று தான் இந்த திடீர் புகழுக்கு காரணம். லைவ்ஸ்டீரிமிங் முறையில் நேரடியாக ஒளிபரப்பாகும் இந்த காட்சியை ஆயிரக்கணக்கான இணையவாசிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். அது மட்டும் அல்ல, அந்த வீடியோவில் பார்க்கும் விஷயங்களை மையமாக கொண்டு இணைய அரட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக என்றே பிரத்யேக ஹேஷ்டேகும் உருவாக்கப்பட்டு டிவிட்டரிலும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

புரியாத புகழ்
இந்த வீடியோவின் திடீர் புகழ் இணையத்தின் கவனத்தை ஈர்த்திருப்பதுடன் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.
குழப்பத்திற்கு காரணம் அந்த வீடியோ ஏன் பார்க்கப்படுகிறது என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை என்பது தான். அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
குறிப்பிட்ட அந்த வீடியோவை முதல் முறை பார்க்கும் போது உங்களுக்கும் இந்த கேள்வி நிச்சயம் மனதில் எழலாம். ஆனால் ஆச்சர்யமான விஷயம் என்ன எனில், நீங்களும் கூட அந்த வீடியோவை ரசிக்கலாம் என்பது தான்! அது மட்டும் அல்ல, இந்த வீடியோவை ஏன் ரசிக்கிறோம் என்பது உங்களுக்கும் கூட புரியாத புதிராக இருக்கலாம்.

இப்படி, வைரலாக பரவும் வீடியோக்கள் இணையத்திற்கு புதிதல்ல. ஆனால் பெரும்பாலும் அந்த வீடியோக்கள் வைரலாக பரவியதற்கான காரணம் ஒன்று இருக்கும். வீடியோவை பார்க்கும் போதே அதை புரிந்து கொள்ளலாம். ஆனால், இணையத்தை கவர்ந்திருக்கும் ஜேக்சன் நகர வீடியோவை பொருத்தவரை இப்படி எந்த காரணத்தையும் கூற முடியாது.

crmcaqowyaa38s3அமெரிக்காவின் யோமிங் மாநிலத்தில் இந்த ஜேக்சன் நகரம் அமைந்துள்ளது. ஜேக்சன் ஹோல் என குறிப்பிடப்படும் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள இந்த நகரின் சதுக்கத்தின் சாலை சந்திப்பு காட்சி தான் வீடியோவில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சுற்றிலும் இயற்கை எழிலான சூழல் அமைந்திருந்தாலும் ஒரு சாலை சந்திப்பு காட்சியில் சுவாரஸ்யமாக என்ன இருந்துவிட முடியும்.

கார்களும், டிரக்குகளும் என வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். மனிதர்கள் கடந்து செல்வார்கள். மற்ற நேரங்களில் அதிக இயக்கம் இல்லாமல் அமைதியாக இருக்கும். இந்த காட்சி தான் வெப்கேம் வழியே பதிவாகி யூடியூப்பில் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கப்படுகிறது. இது ஏன் என்று தான் யாருக்கும் புரியவில்லை.
ஒரு சாலை சந்திப்பு காட்சியை நேரில் பார்த்தாலே அலுப்பூட்டுகிறது என அலட்சியம் செய்து விடுவோம்: அப்படியிருக்க, காமிரா மூலம் பதிவாகும் சாலை சந்திப்பு காட்சியை அலுப்பில்லாமல் பலரும் பார்த்து ரசிப்பது எப்படி? இத்தனைக்கும் ஜேக்சன் நகரில் இதே போல பல காமிரா காட்சிகள் பதிவாகி ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன. உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா காட்சிகளை பிரபலமாக்க அமைக்கப்பட்ட ஜேக்சன்ஹோல் இணையதளத்தில் இவை ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றில் சாலை சந்திப்பு வீடியோ காட்சி மட்டும் இப்போது பிரபலமாகி இருக்கிறது.

வீடியோ விருப்பம்
ஒரு வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கானோரால் ரசிக்கப்படுகிறது, ஆனால் அது ஏன் என்று தான் புரியவில்லை எனும் கேள்வியையே இது தொடர்பான செய்திகளில் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த புதிருக்கும் இப்போது மெல்ல விடை கிடைத்து வருகிறது. மெதுவான இணையத்தை பலரும் விரும்புவதே இதற்கான காரணம்!
அதென்ன மெதுவான இணையம் என்று கேட்கலாம். இதற்கான பதில் மெதுவான தொலைக்காட்சியில் இருக்கிறது.
இந்த நிகழ்வு ஸ்லோ டிவி என குறிப்பிடப்படுகிறது. நார்வே நாட்டில் தான் ஸ்லோ டிவி உருவானது. அந்நாட்டில் தான் விரும்பி பார்க்கப்படுகிறது.

வழக்கமான டிவி நிகழ்ச்சிகள் போல பரபரப்பு , விறுவிறுப்பு, திடீர் திருப்பம் போன்ற அமசங்கள் எல்லாம் இல்லாமல், ஒரே நேர்க்கோட்டில் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சியை தான் ஸ்லோ டிவி என்கின்றனர். உண்மையில் இது நிகழ்ச்சி கூட கிடையாது. சாதாரணம் நிகழ்வின் ஒன்றின் தொடர் ஒளிபரப்பாகவே இது அமைகிறது. உதாரணத்திற்கு ஒரு நீண்ட ரெயில் பயணத்தை அப்படியே ஒளிபரப்பு செய்வதை நினைத்துப்பாருங்கள். திரைக்கதையோ, திருப்பங்களோ இல்லாமல் பயண நிகழ்வுகள் அப்படியே பதிவானால் எப்படி இருக்கும்? இப்படி தான் 2009 ல் நார்வேயில் பெர்ஜன் மற்றும் ஆஸ்லோ நகரங்களுக்கு இடையிலான 7 மணி நேர ரெயில் பயணம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இதே பாணியிலான ஸ்லோ டிவி நிகழ்ச்சிகள் பிரபலமாயின. பின்னலாடை பின்னும் காட்சி போன்றவை எல்லாம் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன. இந்த ஸ்லோ டிவி இப்போது நெட்பிளிக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்காவிலும் அறிமுகமாகி இருக்கிறது.

இதை எல்லாம் யார் பார்ப்பார்கள் என நாம் கேட்கலாம். இவற்றில் பார்த்து ரசிக்க என்ன இருக்கிறது என்றும் கேட்லாம். ஆனால், ஒன்றும் இல்லை எனும் காரணத்திலான் தான் இவை பார்த்து ரசிக்கப்படுகின்றன என்பது தான் விஷயம்.

இந்த வகை நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க பார்வையாளர்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. இஷ்டம் போல பார்க்கலாம். நடுவே பல நொடிகள் பார்க்காமல் விட்டாலும் எதுவும் ஆகிவிடாது. அதனால் தான் இவை விரும்பி பார்க்கப்படுகின்றன.
crn9yshwiauiijs
ஸ்லோ டிவி தாக்கம்!

இதே காரணத்தினால் தான் ஒன்றுமே நிகழாத ஜேக்சன் சாலை சந்திப்பு வீடியோ விரும்பி பார்க்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த வீடியோவில் ஒருவித தியான தன்மை இருக்கிறது. பரபரப்பும், மன அழுத்தமும் மிக்க நவீன வாழ்க்கைக்கு நடுவே இந்த வீடியோ ஒருவித ஆசுவாசத்தை அளிக்கிறது.
இந்த காட்சியில் சுவாரஸ்யமாக ஒன்றும் இல்லை என நமது வழக்கமான மனது நினைத்தாலும், இந்த காட்சியில் ஏதாவது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு டிரெக் செல்கிறது- அதிலும் சிவப்பு டிரெக். ஒரு கார் செல்கிறது. மனிதர்கள் பேசிய படி செல்கின்றனர். இவை எல்லாம் தான் கவர்கிறது.

இதில் காணும் காட்சிகள் பற்றி ஒற்றை வரியில் யூடியூப் பின்னூட்டம் வழியே அரட்டை அடிப்பது, ஸ்டீரிமிங் யுகத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் உள்ளார்ந்த தேவையை இது பூர்த்தி செய்கிறது. தனிமை மற்றும் நிராகரிப்பின் அச்சத்தை இது போக்குவதாகவும் கருதப்படுகிறது. மொதத்தில் மிக ஆழமான உளவியல் உணர்விற்கான வடிகாலாக இது அமைகிறது என்கின்றனர்.

ஆக, ஜாக்சன் சந்திப்பு வீடியோ மெதுவான இணையம் எனும் புதிய போக்கின் அடையாளமாக கருதப்படுகிறது. நீங்களும் ஒருமுறை இந்த வீடியோவை பார்த்து இந்த போக்கில் இணைந்து கொள்ளுங்கள்: https://youtu.be/psfFJR3vZ78

நன்றி தமிழ் இந்துவில் எழுதியது!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.