வீடியோ வழிகாட்டி இணையதளங்கள்

what-to-watch-next-findie-670x330’என்ன புத்தகம் படிக்கலாம்’ எனும் கேள்வி புத்தக புழுக்களுக்கு இருப்பது போல, ’என்ன வீடியோ பார்க்கலாம்’ எனும் கேள்வி வீடியோ பிரியர்களுக்கு இருக்கலாம். அதிலும் இப்போது ஆன்லைனில் அப்லோட் செய்யப்படும் வீடியோக்கள் அதிகரித்து வரும் நிலையில், பார்த்து ரசித்து பயன்பெற ஏற்ற வீடியோக்களை கண்டறிவது என்பது சவாலானது தான். ஒரு புள்ளிவிவரப்படி பார்த்தால் யூடியூப்பில் மட்டும் நிமிடத்திற்கு 100 மணி நேரத்திற்கு நிகரான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இன்னொரு கணக்குபடி பார்த்தால் அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கிய வீடியோக்களை விட அதிக வீடியோ 30 நாட்களில் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன.

வீடியோ இணையதளங்களில் யூடியூப் முன்னணியில் இருந்தாலும், வேறு பல வீடியோ இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. அதோடு, வழக்கமாக அறியப்படும் பொழுதுபோக்கு, நகைச்சுவை வீடியோக்கள் தவிர எண்ணற்ற வகை வீடியோக்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றின் மத்தியில் தேடிப்பார்த்தால் அசர வைக்கும் பொக்கிஷங்களை கண்டறியலாம். இதற்காக இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாட வேண்டும் என்றில்லை. சுவாரஸ்யமான வீடியோக்களை அடையாளம் காட்டும் அருமையான இணையதளங்கள் இருக்கின்றன. அவற்றில், நீங்கள் புக்மார்க் செய்ய வேண்டிய தளங்கள் இதோ:

ஆன்லைன் டிவி

ஹைப்பர்ஸ்கிரீன் இணையதளத்திற்கு விஷயம் செய்தால் அதன் முகப்பு பக்கத்திலேயே வரிசையாக வீடியோ நிகழ்ச்சிகளை பார்க்கலாம். ஆன்லைன் டிவி என வர்ணித்துக்கொள்ளும் இந்த தளம், பல்வேறு வகையான சுவாரஸ்யாமான வீடியோ நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு பரிந்துரைக்கிறது. ஷேக்ஸ்பியரை புரிந்து கொள்வது என்பதில் துவங்கி, ஜப்பானில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் வரை பலவகையான வீடியோ நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

எந்த வீடியோவை பார்க்க விருப்பமோ அதை கிளிக் செய்தால் போதும், வீடியோ ஓடத்துவங்கி விடுகிறது. அதாவது முகப்பு பக்கத்திலேயே பார்க்கலாம். ஒரு சில வீடியோக்கள் மட்டும் வெளியே சென்று அதற்கான இணையதளத்தில் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த பட்டியலே சுவாரஸ்யமாக இருந்தாலும், பயனாளிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, வீடியோக்களை அவற்றின் வகைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட வீடியோவை தேடிப்பார்ப்பதற்கான தேடல் வசதியும் இருக்கிறது. உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் கூடுதல் வசதிகளும் இருக்கின்றன. தினமும் புதிய வீடியோக்கள் பட்டியலிடப்படுகின்றன.

இணைய முகவரி: https://www.hypescreen.com/

பரிந்துரை புதிது

வீடியோக்களை தேடும் போது பொதுவாக அவற்றின் வகைகளை தான் குறிப்பிட்டு தேடுவோம். உதாரணத்திற்கு கல்வி வீடியோ அல்லது அறிவியல் வீடியோ எனத்தேடுவோம். இதற்கு மாறாக, பயனாளிகள் தங்கள் மனநிலைக்கு ஏற்ற வீடியோக்களை தேட வழிசெய்யும் புதுமையான இணையதளமான ஃபைண்டி விளங்குகிறது. மகிழ்ச்சி, சோகம், உற்சாகம், ஊக்கம், ஆர்வம், நம்பிக்கை, பரிவு என பலவகையான மனநிலைகளை குறிப்பிட்டு அதற்கு உரிய வீடியோக்களை தேடிப்பார்க்கலாம். இந்த மனநிலைகள் அழகான இமோஜிகள் மூலம் உணர்த்தப்படுகின்றன. அவற்றில் இருந்து தேர்வு செய்த பின், வீடியோ வகையையும் தேர்வு செய்து கொள்ளலாம். வீடியோவுக்கான கால அளவையும் தேர்வு செய்து கொள்ளலாம். முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்படும் வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம்.

சுவாரஸ்யமான வீடியோக்களை கண்டறிவதற்கான சுவாரஸ்யமான தளமாக இது விளங்குகிறது.

இணைய முகவரி: https://www.findie.me/

செய்தி விடியோக்கள்

செய்தி நோக்கிலான வீடியோக்கள் தேவை எனில் டிக் விடியோ பகுதி ஏற்றதாக இருக்கும். சமூக திரட்டி வகை சேவைகளில் முன்னோடியான டிக் அறிமுகமான காலத்தில் பயனாளிகள் செய்தி இணைப்புகளை பகிர்ந்து கொள்ள வழி செய்தது. பயனாளிகளே அந்த இணைப்புகளை வாக்களித்து முன்னிலைப்பெறச்செய்யலாம் என்பது டிக் அறிமுகம் செய்த புதுமை அம்சமாக விளங்கியது. சில ஆண்டுகள் செல்வாக்குடன் திகழ்ந்த நிலையில் பின் தங்கிப்போன டிக் இப்போது வீடியோ பரிந்துரை சேவையாக உருமாற்றம் பெற்றிருக்கிறது. இதன் முகப்பு பக்கத்தில் அருமையான செய்தி வீடியோக்களை பார்க்கலாம். வேறு வகையான வீடியோக்களையும் பார்க்கலாம்.

அறிவியல், தொழில்நுட்பம், செய்தி, பொழுதுபோக்கு என பலவேறு பிரிவுகளில் இருந்தும் தேர்வு செய்யலாம். இப்போது பெரிதாக பேசப்படும் செய்தி சார்ந்த வீடியோக்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

இணைய முகவரி: http://digg.com/video

கதை சொல்லும் படங்கள்

இலக்கில்லாத வீடியோக்களை விட அர்த்தம் உள்ள வீடியோக்களை பார்க்க விருப்பம் எனில், ஷார்ட் ஆப் தி விக் இணையதளம் கச்சிதமாக இருக்கும். குறும்படம் மற்றும் ஆவணப்பட வகைகளை சேர்ந்த வீடியோக்களில் இருந்து கவனமாக தேர்வு செய்யப்பட்ட அருமையான வீடியோக்களை இந்த தளம் பரிந்துரைக்கிறது. எல்லாமே ஏதோ ஒரு வகையில் கதை சொல்லும் வீடியோக்கள்.

ஒவ்வொரு வீடியோவுடனும் அதற்கான அறிமுகமும் சுருக்கமாக இடம்பெறுகிறது. இந்த அறிமுகம் வீடியோவில் எதிர்பார்க்க கூடிய விஷயங்களுக்கான வழிகாட்டியாக அமையும். ஈரானிய படங்களில் துவங்கி இசை  வீடியோ வரை பலவகை குறும்படங்களை பார்த்து ரசிக்கலாம். இதன் நேர்த்தியான முகப்பு பக்கமும் கவர்கிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இணையதளம் இது.

இணைய முகவரி: https://www.shortoftheweek.com/

கல்வி வீடியோக்கள்

அன்பிளக்டிவி மிகவும் எளிமையான வீடியோ சேவை. ஆனால் மிகவும் சுவாரஸ்யமானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பதிலாக பயனுள்ள வீடியோக்களை பரிந்துரைப்பது தான் இந்த தளத்தின் நோக்கம். முகப்பு பக்கத்தில் எப்போதும் ஒரு வீடியோ பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வீடியோ பிடிக்காவிட்டால், அடுத்த வீடியோவுக்கு கிளிக் செய்யலாம். இல்லை எனில் அடுத்த வீடியோவுக்கு கிளிக் செய்யலாம். இப்படி வரிசையாக வீடியோக்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். எல்லாமே புதிய விஷயங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வீடியோக்கள்.

இணைய முகவரி: http://unplugthetv.com/

சுட்டிஸ்களுக்கான வீடியோ

சிறுவர், சிறுமிகள் பார்த்து ரசிக்கும் வகையில் அவர்கள் பிஞ்சு மனதுக்கு ஆர்வம் அளிக்கும் வகையிலான வீடியோக்களை பரிந்துரைக்கிறது திகிட்ஸ்ஷுட்சீதிஸ் இணையதளம். அறிவியல், தொழில்நுட்பம், இசை, அனிமேஷன் என பலவகையான வீடியோக்களை பார்க்கலாம். எல்லாமே கவனமாக தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்படுபவை.

இணைய முகவரி: http://thekidshouldseethis.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

One Comment on “வீடியோ வழிகாட்டி இணையதளங்கள்

  1. Ravichandran R

    இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம்மன் சார்.

    Reply

Leave a Comment to Ravichandran R Cancel Reply

Your email address will not be published.