பேஸ்புக் தவிர நீங்கள் அறிய வேண்டிய சமூக வலைத்தளங்கள்!

2நீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பேஸ்புக் முன்னணி சமூக வலைத்தளமாக இருக்கும் போது இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அநேகமாக உங்கள் இணைய காலைகள் பேஸ்புக்கிலேயே துவங்கலாம். அதன் பிறகு பேஸ்புக்கில் பதிவிடுவதும், பகிரவதும் கூட உங்கள் வேலைகளில் ஒன்றாக இருக்கலாம். பேஸ்புக் மூலம் ஆயிரக்கணக்கில் நண்பர்களை பெற்றிருக்கலாம். உங்கள் நிலைத்தகவல்களுக்கு லைக்குகளை அள்ளியிருக்கலாம். பேஸ்புக்கில் நீங்கள் கருத்துப்போராளியாக ஜொலித்திக்கொண்டிருக்கலாம். இன்னும் பலவிதங்களில் பேஸ்புகை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.

இவை எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள், பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கிறோம் என எப்போதாவது நீங்கள் நினைத்து வருந்தியதுண்டா? பேஸ்புக் பயன்பாடு ஒரு போதை போல மாறி நிஜ உலக உறவுகளை பாதிக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? எல்லாவற்றையும் பகிர்ந்து கொளவது உங்களை பாதித்திருக்கிறதா? பேசாமல் பேஸ்புக்கிற்கு முழுக்கு போட்டுவிடலாம் என்று எண்ணம் அடிக்கடி எட்டிப்பார்த்தாலும், மீண்டும் மீண்டும் மனம் பேஸ்புக் பரப்பையே நாடுகிறதா?
இப்படி ஏதேனும் ஒரு காரணத்திற்காக பேஸ்புக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது பேஸ்புக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்றோ நினைத்தால், பேஸ்புக்கிற்கான மாற்று சேவைகளை அறிந்து கொள்வது நல்லது. இல்லை பேஸ்புக்கிறகு ஈடான ஒரு சேவை கிடையாது என வாதிடக்கூடிய அளவுக்கு அதி தீவிர பேஸ்புக் ரசிகராக இருந்தாலும் சரி, மாற்று சேவைகளை அறிந்து கொள்வதில் தப்பில்லை.
இணையத்தின் சிறப்பே அதன் எல்லையில்லாத பரந்துவிரிந்த தன்மை எனும் போது, சமூக வலைப்பின்னல் பரப்பு என்பது பேஸ்புக்குடன் முடிந்துவிடுவதில்லை என அறிந்து கொள்வது தானே சரியானது. அந்த வகையில் சில முக்கிய மாற்று சமூக வலைப்பின்னல் சேவைகளை அறிமுகம் செய்து கொள்ளலாம்:
தொழில்முறை பயன்
இந்த பட்டியலில் முதலில் வருவது லிங்க்டுஇன் தளம். சமூக வலைப்பின்னல் தளங்களில் முன்னோடி சேவைகளில் இதுவும் ஒன்று. பேஸ்புக்கிற்கு முன்னதாகவே துவங்கப்பட்ட தளமும் கூட. தொடர்புகளை ஏற்படுத்தி தருவதில் இணையத்திற்கு உள்ள ஆற்றலை பயன்படுத்திக்கொண்டு பயனாளிகள் தங்களுக்கான வலைப்பின்னலை உருவாக்கி கொள்ள வழி செய்யும் நோக்கத்துடன் இந்த சேவை துவக்கப்பட்டது. இதன் நிறுவனர் ரீட் ஹாப்மென். முற்றிலும் தொழில்முறை தன்மை கொண்டது என்பது தான் லிங்க்டுஇன் தளத்தின் சிறப்பு. அதாவது பணியில் இருப்பவர்கள் தங்கள் துறை சார்ந்த தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு உதவும் சேவை. இதில் சுயபுராணங்களுக்கு எல்லாம் இடமில்லை. பணி சார்ந்த அனுபவம் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொண்டு, அதன் மூலம் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்த தளத்தில் இதுவரை பணியாற்றிய இடங்கள் மற்றும் திறன் சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். நிலைத்தகவல்களை பகிரும் வசதி உண்டு என்றாலும் எல்லாமே தொழில்முறையிலானவை.
பணியிடத்தில் முன்னேற வேண்டும் எனில் சிறந்த தொடர்புகளை பெற்றிருக்க வேண்டும். அத்தகையை வலைப்பின்னலை லிங்க்டுஇன் மூலம் உருவாக்கி கொள்ளலாம். அதே போல கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமை மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தி அதற்கேற்ற வேலை வாய்ப்புகளை பெறவும். வழிகாட்டிகளை அடையாளம் காணவும் லிங்க்டுஇன் உதவும். பல வர்த்தக நிறுவனங்கள் திறமையான புதிய ஊழியர்களை தேடி கண்டுபிடிக்க லிங்க்டுஇன் தளத்தை ஒருவழியாக பயன்படுத்துகின்றன. எனவே மாணவர்கள் மற்றும் தொழில்முறை நபர்கள் இந்த தளத்திலும் தங்களுக்கான இருப்பை உண்டாக்கி கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
லிங்க்டுஇன் தளம் சில ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனதால் கையகப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம். நிகரில்லாத தொழில்முறை வலைப்பின்னலாக லிங்க்டுஇன் இருப்பதே இதற்கு காரணம். இதில் நீங்களும் இணையலாம். ஏற்கனவே இணைந்திருந்தால் இன்னும் தீவிரமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அன்மையில் இந்த தளத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், செல்வாக்கு மிக்க பயனாளியாக இணைந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம். இத்தகைய செல்வாக்கு மிக்க நட்சத்திரங்களின் அனுபவ பகிர்வுகளையும் லிங்க்டுஇன் தளத்தில் வாசிக்கலாம்.
இணைய முகவரி: https://www.linkedin.com/

காட்சி பலகை
சமூக வலைத்தளங்களில் லிங்க்டுஇன் முதலில் துவங்கப்பட்ட சேவைகளில் ஒன்று எனில், பின்டிரெஸ்ட் இந்த பிரிவில் தாமதமாக அறிமுகமான தளம். மைஸ்பேஸ் மறக்கப்பட்டு, பேஸ்புக்கும், டிவிட்டரும் முன்னணி சேவைகளாக கோலோச்சும் காலத்தில் பின்டிரெஸ்ட் அறிமுகமானது. ஆனால், ரஜினி பேசும் வசனம் போலவே லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக உதயமான சேவை இது. பிண்டிரெஸ்ட் தளத்தில் நிலைத்தகவல், குறும்பதிவுகள் என எதுவும் கிடையாது. சொல்லப்போனால் அங்கு டைப் செய்வதற்கே வேலையில்லை. ஏனெனில் பிண்டிரெஸ்ட் முற்றிலும் காட்சிரீதியிலானது.
பிண்டிரெஸ்ட்டை இணைய காட்சி பலகை என வர்ணிக்கலாம். அந்த தளமும் அப்படி தான் சொல்கிறது. இணையத்தில் உங்களுக்கு என ஒரு பலகையை அமைத்து அதில் விரும்பிய காட்சிகளை எல்லாம் குத்தி வைத்து வரிசைப்படுத்தி வகைப்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? அதை தான் பின்டிரெஸ்ட் செய்கிறது.
சின்ன வயதில் ஒரு நோட்டுப்புத்தகத்தில் பக்கம் பக்கமாக கருப்பு வெள்ளை படங்களை ஓட்டி வைத்த அனுபவம் இருக்கிறதா? சிலர் தபால் தலைகளை கூட இப்படி ஒட்டி வைத்திருக்கலாம். இந்த பழக்கத்திற்கு இணைய யுகத்தில் புதிய அர்த்தமும், சாத்தியமும் கொடுத்திருப்பது தான் பின்டிரெஸ்ட்.
இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து, உங்களுக்கான பலகையை உருவாக்கி கொள்ளலாம். அதன் பிறகு அதில் நீங்கள் விரும்பும் காட்சிகளை எல்லாம் குத்தி வைக்கலாம். (பின் செய்வது). இணையத்தில் உலாவும் போது கவனத்தை ஈர்க்கும் ஒளிப்படங்களில் துவங்கி, இகாமர்ஸ் தளங்களில் பார்க்கும் புதிய ஆடை, கண்ணை கவரும் பேஷன் வடிவங்கள் என விருப்பம் போல எதை வேண்டுமானாலும் உங்கள் பலகையில் இடம்பெறலாம். குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பலகை அமைத்து அதன் கீழ் தொடர்புடைய படங்களை சேகரிக்கலாம். இப்படி எத்தனை இணைய பலகைகளை வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம்.
அது மட்டும் அல்ல, இந்த பலகைகளில் உள்ள படங்கள் சக பயனாளிகளின் கவனத்தை கவர்ந்தால், அவர்கள் அந்த படங்களை தங்கள் பக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இதே போலவே நீங்களும் சக பயனாளிகளின் படங்களை உங்கள் பலகையில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கலாம். இப்படி முற்றுலும் காட்சிரீதியிலான தொடர்பின் அடிப்படையில் நட்பு கொள்ளுதலை இது சாத்தியமாக்குகிறது.
முதல் முறை பயன்படுத்தும் போது குழப்பத்தை அளித்தாலும், இந்த சேவையை புதுமையாக பலவழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். திருமணத்திற்கான ஆடை அலங்காரத்தை திட்டமிடுவது, இல்லங்களுக்கான உள் அலங்காரத்தை திட்டமிடுவது, புதுமையான இணையதளங்களை பகிர்வது என எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தலாம்.
இணைய முகவரி: https://www.pinterest.com/

நூல்கள் மூலம் நட்பு
இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகம் தொடர்பான தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர் எனில் லைப்ரரிதிங் தளம் உங்களுக்கு ஏற்ற சேவையாக இருக்கும். இந்த தளத்தை புத்தக புழுக்களுக்கான பேஸ்புக் என்று சொல்லலாம். ஒரு புரிதலுக்காக தான் இந்த வர்ணனை. ஏனெனில் பேஸ்புக்கிற்கு முன்பாகவே துவக்கப்பட்டு விட்ட சேவை இது.
லைப்ரிதிங்கில் ;என்ன சிறப்பு என்றால் இதில் பயனாளிகள் தங்களுக்கான புத்தக அலமாரியை உருவாக்கி பராமரிக்கலாம். அதாவது தாங்கள் படித்து ரசித்த மற்றும் படிக்க விரும்பும் புத்தகங்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். இதே போல சக உறுப்பினர்கள் உருவாக்கி வைத்திருக்கும் புத்தக அலமாரியை பார்த்து படிக்க வேண்டிய புதிய புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த தளத்தில் புத்தகங்கள் தான் எல்லாமும். புத்தகம் மற்றும் வாசிப்பு சார்ந்து புதிய நட்பையும் உருவாக்கி கொள்ளலாம். குடுரீட்ஸ் தளமும் இதே போல புத்தகம் சார்ந்த நட்பை வளர்த்துக்கொள்ள உதவும் தளமாக இருக்கிறது. வாசிப்பு ஆர்வத்திற்கு ஏற்ப புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள இந்த தளங்கள் உதவும். குட்ரீட்ஸ் தளத்தில் எழுத்தாளர்களுடனும் கலந்துரையாடலாம். இளம் எழுத்தாளர்கள் எனில் தங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தையும் அமைத்துக்கொண்டு வாசகர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
இணைய முகவரி: https://www.librarything.com/
https://www.goodreads.com
கதை சொல்லுங்கள்
உங்களுக்கு கதை எழுதும் ஆர்வம் இருக்கிறதா? அல்லது சுவாரஸ்யமான புதிய கதைகளை வாசித்து இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க விருப்பம் இருக்கிறதா? எப்படி இருந்தாலும் வாட்பேட் இணையதளம் உங்களை கவர்ந்திழுக்கும். இந்த தளம் கதைகளுக்கான மாபெரும் இணைய சமூகமாக இருக்கிறது. இதில் கதைகளை உருவாக்கி சமர்பிக்கலாம். அதன் மீது சக வாசகர்கள் கருத்து சொல்லி ஊக்குவிப்பார்கள். இதே போல நீங்களும் மற்றவர்களின் கதைகளை வாசித்து ஊக்கப்படுத்தலாம். பிரதானமாக ஆங்கிலம் சார்ந்த சேவை என்றாலும் கதை சொல்லிகளுக்கு ஊக்கம் அளிக்க கூடியது. கதைகள் தவிர, கட்டுரை,கவிதைகள் போன்றவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்.
வழக்கமான படிக்க வாய்ப்பில்லாத பல அரிய படைப்புகளை இந்த தளத்தின் மூலம் கண்டறியலாம்.
இணைய முகவரி: https://www.wattpad.com/

கேளுங்கள் சொல்லப்படும்
என் கேள்விக்கென்ன பதில் என கேட்கும் ரகத்தைச்சேர்ந்தவராக இருந்தால் குவோரா தளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்துவிடும். ஏனெனில் இணையத்தின் சிறந்த கேள்வி பதில் சமூகமாக குவோரா உருவாகி இருக்கிறது. பழைய ஆஸ்க்.காம், யாஹு ஆன்சர்ஸ் போல இணையத்தில் பல கேள்வி பதில் சேவைகள் உண்டென்றாலும் கூட அவற்றில் இருந்தெல்லாம் வேறுபட்டது மட்டும் அல்ல மேம்ப்பட்டது. குவோரா தளத்தில் நீங்கள் பதில் பெற விரும்பும் எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம். சக உறுப்பினர்கள் யாரேனும் அதற்கு பொருத்தமான விடை அளிப்பார்கள். பல நேரங்களில் பலர் பதில் அளிக்க கூடும்.
அதைவிட முக்கியமான விஷயம், பெரும்பாலான நேரங்களில் அந்த கேள்விக்கு தொடர்புடைய வல்லுனர்களே பதில் அளிக்கும் வாய்ப்பிருப்பது தான். உதாரணத்திற்கு குறிப்பிட்ட ஒரு நிறுவனம் தொடர்பாக கேள்வி அமைந்திருந்தால், அதன் நிறுவனரே பதில் அளிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த வகையான கேள்வி தான் என்றில்லாமல் எல்லா வகையான கேள்விகளையும், அவை தொடர்பான துணை கேள்விகளையும் குவோராவில் காணலாம். மிகவும் சுவாரஸ்யமான கேள்விகளில் துவங்கி, சிந்தனையை தூண்டும் வகையான கேள்விகளையும் காணலாம். ரஜினிக்கு ஏன் இத்தனை செல்வாக்கு என்பது போன்ற கேள்விகளும், இளம் வயதில் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது போன்ற கேள்விகளையும் அடிக்கடி எதிர்கொள்ளலாம். கேள்விகளை விட அவற்றுக்கு அளிக்கப்படும் பொறுப்பான பதில்கள் பயனுள்ள தகவல்களை அளிப்பதோடு, புரிந்து கொள்ளும் தன்மையையும் விசாலமாக்கும்.
இந்த தளத்தில் வெளியாகும் கேள்வி பதில்களை பின் தொடர்வதன மூலமே பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். உறுப்பினராகும் போதே நமக்குள்ள ஆர்வங்களை வெளிப்படுத்தி அதற்கேற்ற கேள்விகளை பெறலாம். குறிப்பிட்ட விஷயத்தில் உங்களுக்கு நிபுணத்துவம் அதிகம் என்றால் அது தொடர்பான கேள்விகளுக்கு குவோராவில் பதில் அளித்து உங்களுக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்ளலாம்.
இணைய முகவரி: https://www.quora.com/
பார்த்து ரசித்த படங்கள்
புத்தக புழுக்களுக்கான தளம் லைப்ரரி திங் என்றால் ஐசெக்மூவீஸ் தளம் திரைப்பட ரசிகர்களுக்கானது. நீங்கள் பார்த்து ரசித்த படங்களை பகிர்ந்து கொள்ளவும், பார்த்து ரசிக்க வேண்டிய படங்களை தெரிந்து கொள்ளவும் இந்த தளம் ஏற்றது. இதில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, நீங்கள் பார்த்து ரசித்த திரைப்படங்கள் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலமே மற்ற திரைப்பட ரசிகர்களுடன் நட்பு வளர்த்துக்கொள்ளலாம். அவர்கள் பரிந்துரைகள் மூலம் பார்க்க வேண்டிய அரிய படங்களை அறிமுகம் செய்தி கொள்ளலாம். இந்த தள ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் படங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படும் பிரபலமான மற்றும் முன்னணி படங்களின் பட்டியலும் கவர்ந்திழுக்கும். முற்றிலும் ரசிகர்களின் ராஜ்ஜியம் இந்த தளம்.
இணைய முகவரி: https://www.icheckmovies.com/

சந்திப்போமா?
இணையம் மூலம் தொடர்பு கொண்டு நேரடியாக சந்தித்துப்பேசுவதில் ஆர்வம் கொண்டவர்களுக்கான சமூக வலைப்பின்னலாக மீட் அப் தளம் விளங்குகிறது. இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்த பின், தங்களுக்கான குழுக்களை உருவாக்கி கொண்டு, நேரடி சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம். இத்தகைய சந்திப்புகள் மீட்டப்கள் என குறிப்பிடப்படுகின்றன. இவற்றை தொழில்முறையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். சென்னையிலேயே கூட பல மீட்டப் நிகழ்ச்சிகள் சுறுசுறுப்பாக நடைபெறுவதை இந்த தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மலையேறும் பயிற்சி துவங்கி, சமையல் கலை வரை பலவிதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இணைய முகவரி: https://www.meetup.com/

புதிய தலைமுறை இதழில் எழுதிய எண்டெர் நெட் தொடர் கட்டுரையில் இருந்து மீள் பதிவு

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.