பேஸ்புக்கிற்கு உங்களைப்பற்றி என்ன எல்லாம் தெரியும்?

3பேஸ்புக்கை நீங்கள் பலவிதங்களில் பயன்படுத்தலாம். பேஸ்புக் பற்றி உங்கள் கருத்தும் பலவிதமாக இருக்கலாம். பேஸ்புக்கை நீங்கள் கொண்டாடலாம் அல்லது விமர்சனம் செய்யலாம். ஆனால் ஏதாவது ஒரு கட்டத்தில் பேஸ்புக் சேவையை கண்டு வியக்காமல் இருந்திருக்க முடியாது. நீங்கள் அறிந்திருக்கக்கூடிய நண்பர்களை பேஸ்புக் பரிந்துரைக்கும் போதோ அல்லது உங்கள் நியூஸ்பீடில் மிகப்பொருத்தமான தகவல் தோன்றும் போதோ, அட, பேஸ்புக்கிற்கு இது எப்படித்தெரியும் என நீங்கள் மனதுக்குள் வியந்திருக்கலாம். சிலர் இது என்னடா வம்பா போச்சு பேஸ்புக்கிற்கு இதெல்லாம் எப்படித்தெரியும் என்று லேசாக திகைத்தும் போகலாம்.

உண்மை என்னவெனில், பேஸ்புக்கிற்கு இன்னும் நிறைய தெரியும் என்பது தான். சொல்லப்போனால் நம்மைப்பற்றி நமக்கு தெரிந்ததைவிட அதிகமாக பேஸ்புக் தெரிந்து வைத்திருக்கிறது. இதன் தாக்கத்தை தான் பேஸ்புக் நியூஸ்பீடிலும், விளம்பரங்களிலும் பார்க்கிறோம். ஆனால், இது பேஸ்புக் பயன்பாட்டோடு முடிந்து போகவில்லை என்பது கேம்பிரிட்ஜ் அனல்டிகா விவகாரத்தில் தெரிய வந்துள்ளது.

50 மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் தவறான விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த விவகாரம், இணைய உலகில் பேஸ்புக்கின் நீள் கரங்கள் பற்றிய விவாதத்தை தீவிரமாக்கியிருக்கிறது. அதோடு தகவல் திருட்டு, தகவல் அறுவடை பற்றி எல்லாமும் யோசிக்க வைத்திருக்கிறது. பேஸ்புக் என்றால் லைக்குகளும், பகிர்வுகளும் தான் என நினைத்துக்கொண்டிருந்த பலரும், தங்கள் தகவல்கள் சேகரிக்கப்படுவது குறித்தும், அவை மூன்றாம் தரப்பினரால் பயன்படுத்தபடுவது குறித்தும் கவலைப்படத்துவங்கியிருக்கின்றனர். முக்கியமாக பேஸ்புக் தகவல்கள், தேர்தல்களில் தாக்கம் செலுத்த பயன்படுத்தப்படலாம் என கூறப்படுவது திகைப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

இந்த பின்னணியில் பேஸ்புக் பயனாளிகளிடம் இருந்து எந்த வகையான தகவல்களை திரட்டுகிறது, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது போன்ற விஷயங்களை புரிந்து கொள்வது நல்லது. முதல் விஷயம், பேஸ்புக் பயனாளிகளிடம் இருந்து சகலவிதமான தகவல்களையும் திரட்டுகிறது என்பது தான். இரண்டாவது விஷயம், பயனாளிகள் பகிர்வது, விருப்பம் தெரிவிப்பது ஆகியவற்றை மட்டும் கொண்டு தகவல்களை சேகரிப்பதோடு பேஸ்புக் நிற்கவில்லை, அநேகமாக பயனாளிகளின் ஒவ்வொரு இணைய நடவடிக்கையையும் பின் தொடர்ந்து அவர்களைப்பற்றிய குறிப்புகளை திரட்டுகிறது.

ஆனால் பேஸ்புக் இதை சட்டவிரோதமாக எல்லாம் செய்யவில்லை. (நிபந்தனை மற்றும் விதிகளில் தகவல்கள் சேகரிப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது). தவறான நோக்கத்திலும் செய்யவில்லை. விளம்பர நோக்கத்தில் செய்கிறது. இதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு எத்தனை விரிவாகவும் நுட்பமாகவும் செய்கிறது என்பதும், அதைவிட முக்கியமாக இந்த விளம்பர வலை எப்படி எல்லாம் பயன்படுத்தப்படலாம் என்பதும் தான் பிரச்சனையாக இருக்கிறது.

பேஸ்புக் தனது சேவையை இலவசமாக வழங்குவதால் விளம்பரம் மூலம் தான் வருவாய் ஈட்டுகிறது. விளம்பர வருவாய் அள்ள அள்ள குறையததாக இருக்க வேண்டும் என்பதற்காக பயனாளிகளால் சுற்றி விளம்பர வலையை பின்னி வைத்திருக்கிறது. இதனால் தான், அமேசானில் ஒரு புத்தகத்தை தேடினால், அந்த புத்தகம் தொடர்பான விளம்பரம் பேஸ்புக் நியூஸ்பீடில் எட்டிப்பார்க்கிறது. பேஸ்புக் விளம்பரங்கள் நம்மை ரவுண்டி கட்டி அடிக்கின்றன.

சுவாரஸ்யமான, பயனுள்ள மற்றும் பொருத்தமான விளம்பரங்களை தோன்றச்செய்வதே குறிக்கோள் என பேஸ்புக் கூறினாலும், இது செயல்படுத்தப்படும் விதம் அப்பாவி பேஸ்புக் பயனாளிகளை திகைப்பில் ஆழ்த்தும். ஏனெனில் பொருத்தமான விளம்பங்களை வழங்குவதற்காக பேஸ்புக் அந்த அளவுக்கு தகவல்களை சேகரிக்கிறது.

கடந்த ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட கட்டுரையின் படி, விளம்பரங்களை குறி வைப்பதற்காக பயனாளிகளிடம் இருந்து 98 விதமான முனைகளில் இருந்து பேஸ்புக் தகவல்களை சேகரிக்கிறது. இவற்றின் அடிப்படையில் விளம்பர நிறுவனங்கள் பேஸ்புக் பயனாளிகளை இருப்பிடம், பாலினம், வயது, மொழி, கல்வித்தகுதி, பள்ளி, வீட்டின் மதிப்பு உள்ளிட்ட 16 அம்சங்களின் அடிப்படையில் குறி வைக்க முடியும். இதனடிப்படையில் தான் பேஸ்புக் சென்னை மடிப்பாக்கத்தில் வசிக்கும் கல்லூரி மாணவருக்கு அவர் வாங்க விரும்பும் மியூசிக் ஆல்பம் தொடர்பான விளம்பரத்தை நியூஸ்பீடில் தோன்றச்செய்கிறது.

பொதுவாக பேஸ்புக் மூன்று விதமாக பயனாளிகள் தகவல்களை சேகரிக்கிறது. பேஸ்புக்கில் சக நண்பர்களுடன் உரையாடும் விதம், அவர்கள் விரும்பி வாசிக்கும் உள்ளடக்கம் மற்றும் எந்த வகை பகிர்வுகளுக்கு விருப்பம் தெரிவிக்கின்றனர் மற்றும் கருத்து தெரிவிக்கின்றனர் ஆகியவை மூலம் தகவல்கள் சேகரிக்கிறது. இதற்காக பேஸ்புக் பகிர்வுகளையும், விருப்பங்களையும் கவனிப்பதோடு, குறிப்பிட்ட பதிவில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர் என்பதையும் குறிப்பெடுக்கிறது. எனவே வீடியோக்களை அதிக நேரம் பார்ப்பவருக்கு வீடியோவாக தோன்றும்.

சரி இவை எல்லாம் நாம் பகிர்ந்து கொள்வது தானே என நினைக்கலாம். ஆனால் பேஸ்புக் தனது தளத்தில் பயனாளிகள் செய்பவற்றை மட்டும் கவனிப்பதோடு நிற்கவில்லை, பேஸ்புக்கை விட்டு வெளியேறிய பிறகும் அவர்களை அது விடாமல் பின் தொடர்கிறது. இங்கு முக்கியமான ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். பொதுவாகவே இணையத்தில் உலாவும் போது மூன்றாம் தரப்பினரால் நாம் பின் தொடரப்படுவதில் இருந்து தப்பித்தல் என்பதே கிடையாது. ஏனெனில் இணைய சேவை வழங்கும் நிறுவனம், நாம் பார்க்கும் இணையதளம் மற்றும் கூகுள் , பேஸ்புக் போன்ற மூன்றாம் தரப்பி விளம்பர வலைப்பின்னல் சேவை ஆகிய மூன்று வகை அமைப்புகள் இணையவாசிகளை விடாமல் கவனிக்கின்றன.

பேஸ்புக் என்ன செய்கிறது என்றால், பயனாளி வெளியேறிய பிறகும் அவர் எந்த வகை தளங்களுக்கு செல்கிறார், அங்கு என்ன செய்கிறார் என்றெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கிறது. பேஸ்புக் பகிர்வு பட்டன் அல்லது லைன் பட்டன் கொண்ட இணையதளங்களை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அது கவனிக்கிறது. இந்த தகவல்களின் அடிப்படையிலும் அது பயனாளிகள் எப்படிப்பட்டவர் என்பதை தீர்மானிக்கிறது.

இவைத்தவிர தனது விளம்பர வலைப்பின்னலில் உள்ள நிறுவனங்கள் பேஸ்புக் பயனாளிகள் தொடர்பான தகவல்களை பெற வழி செய்கிறது. அடுத்த ஒரு மாதத்தில் யாருக்கு பிறந்த நாள் வருகிறது, யாருக்கு திருமணம் நடைபெற உள்ளது, அரசியலில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் யார், போன்ற தகவல்களை எல்லாம் சேகரிக்க முடியும்.

ஏற்கனவே பேஸ்புக் பயனாளிகள் பற்றி திரட்டி வைத்திருக்கும் தகவல் சித்திரத்தில் இந்த கூடுதல் விவரங்களை பொருத்தினால், அவர்களை நெத்தியடியாக குறி வைக்கும் விளம்பரங்களையும், தகவல்களையும் இடம்பெற வைக்க முடியும். இதன் மூலம் ஒருவரின் வசிப்பிடம், பணி புரியும் இடம், ஆர்வங்கள், ஷாப்பிங் தேர்வுகள், வைத்திருக்கும் வாகனம், என்ன வேலை செய்கிறார் போன்ற தகவல்களையும் அதனால் யூகித்து அறிய முடியும். இவை யூகங்களாக இருந்தாலும், விளம்பரங்களை குறி வைக்க போதுமானதாக இருக்கிறது.

இவை மட்டும் தான் என நினைத்துவிடாதீர்கள். ஒருவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் இயங்குதளம், பிரவுசர், இமெயில் சேவை, விளையாடும் ஆன்லைன் கேம்கள், கிரெடிட் கார்டு வைத்திருக்கிறாரா போன்ற தகவல்களை எல்லாம் கூட பேஸ்புக் அறிந்து கொள்கிறது. இத்தனை முனைகளில் தகவல்களை சேகரிப்பதால் பயனாளிகளுக்கு ஏற்றது என பேஸ்புக் கருதும் விளம்பரங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை பயனாளிகள் மனதில் சலனத்தையும், சார்பு நிலையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

விளம்பரங்கள் மட்டும் விஷயம் அல்ல, பயனாளிகளின் நியூஸ்பீடில் என்ன வகை உள்ளடக்கம் தோன்றுகிறது என்பதையும் பேஸ்புக் தனது அல்கோரிதம் மூலம் தீர்மானிப்பதாக சொல்லப்படுவது வில்லங்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தில் நடுப்பகுதியாக அமையும் நியூஸ்பீடில் தோன்றும் பதிவுகளும், பகிர்வுகளும் தானாக அமைபவை அல்ல. எவை எல்லாம் தோன்ற வேண்டும் என பேஸ்புக் தீர்மானத்தின் அடிப்படையில் அமைபவை. பயனாளிகள் தெரிவிக்கும் விருப்பங்கள், கருத்துக்கள், பகிர்வுகள் அடிப்படையில் பேஸ்புக் அல்கோரிதம் மேற்கொள்ளும் அனுமானத்தின் படி இவை தோன்றுகின்றன.

உதாரணத்திற்கு ஒருவர் குறிப்பிட்ட அரசியல் கோட்பாட்டில் ஆர்வம் உள்ளவர் எனில் அது தொடர்பான தகவல்களே அவருக்கு அதிகம் முன்வைக்கப்படும். இதனால் அவரது சார்பு நிலை வலுப்பெறுவதோடு, மாற்று கருத்துக்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகிறது. அது மட்டும் அல்ல, ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கம் சார்ந்த தகவல்களை இடைவிடாமல் அளிப்பதன் மூலம் ஒருவரின் மனதில் சாய்வை ஏற்படுத்தலாம். பேஸ்புக் நியூஸ்பீட் நிர்வாகத்தில் அடிக்கடி மாற்றங்களை செய்து மிகவும் கவனமாக இருந்தாலும், சம்பந்தம் இல்லாத மூன்றாம் தரப்பினர் இதில் விளையாட வாய்ப்பிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இப்படி தான் போலி பக்கங்களை அமைத்து அதன் மூலம் பயனாளிகள் நியூஸ்பீடில் நுழைந்து வாக்களிப்பு தொடர்பான முடிவில் தாக்கம் செலுத்த முயன்றதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

கேம்பிரிட்ஜ் அனல்டிகா விவகாரத்தில் இந்த வகையான மனச்சாய்வு பயன்பாடே முக்கிய பிரச்சனையாக விவாதிக்கப்படுகிறது. பேஸ்புக்கும் இதை உணர்ந்து மாற்று மருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு, விளம்பரங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பு குறித்து புரிந்து கொள்ளவும், முடிந்த வரை அவற்றை பயனாளிகள் தங்கள் விருப்பம் போல் கட்டுப்படுத்தவும் பேஸ்புக் வாய்ப்பளிக்கிறது. இது தொடர்பான தகவல்களை பெற அணுகவும்: https://www.facebook.com/ads/about/?entry_product=ad_preferences

தமிழ் இந்து நாளிதழ் இளமை புதுமையில் எழுதியது!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *