Tag Archives: films

top

டிவிட்டர் பரிந்துரைக்கும் பாடல்கள்.

இன்றைய முன்னணி நாற்பது பாடல்களை கேட்டு ரசிக்கலாம் வாங்க என்று அழைப்பு விடுக்கிறது டாப்பார்டி.இட் இணையதளம்.அதற்கேற்ப 40 முன்னணி பாடல்களை முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடுகிறது.

பாடல்களோ புத்தகங்களோ திரைப்படங்களோ பொதுவாக டாப் டென் பட்டியல் வெளியிடப்படுவது தான் வழக்கம்.டாப் டென்னை விட்டால் டாப் 100 க்கு போய்விடுவார்கள்.ஆனால் டாப் 40 என்ன கணக்கு என்று புரியவில்லை.

டாப் 40 என்பது கொஞ்சம் விநோதமாக இருந்தாலும் இந்த தளம் முன்னணி பெரும் பாடல்களை தேர்வு செய்யும் விதம் சுவாரஸ்யமாகவே உள்ளது. நேயர்கள் கேட்டு ரசிக்கும் பாடல்களை டிவிட்டர் மூலம் கண்டறிந்து அதனடிப்படையில் முன்னணி பாடல்களை பட்டியலிடுகிற‌து.

இப்படி ஒவ்வொரு தினமும் நேயர்கள் மத்தியில் முன்னிலை பெறும் பாடல்களின் பட்டியலை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.எனவே தினமும் புதிய பட்டியலை பார்க்கலாம்.

பட்டியலில் உள்ள பாடலை கிளிக் செய்தால் அதனை கேட்க துவங்கிவிடலாம்.

பட்டியல் என்றாலே சர்ச்சைக்குறியவை தான்.ஆனால் இந்த பட்டியல் மிகவும் ஜனநாயகமயமானவை என்று சொல்லலாம்.காரணம் இந்த பட்டியல் தனிநப‌ராலோ குழுவாலோ தேர்வு செய்யப்படாமல் தானாக தேர்வு செய்யப்படுவது தான்.

அதாவது டிவிட்டர் பயனாளிகள் தாங்கள் கேட்டு ரசித்து கொண்டிருக்கும் பாடல் பற்றி பகிர்ந்து கொள்ளும் தகவலின் அடிப்படையில் பாடல்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

பாப் இசை பிரியர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தக்கூடிய தளம் தான்.இந்த பட்டியலில் எப்போதாவது நம்மூர் பாடல்கள் இடம் பெற வாய்ப்புண்டா என்று தெரியவில்லை.ஆனால் டிவிட்டரில் பகிரப்படும் தமிழ் பாட‌ல்களை கொண்டு நாமும் ஒரு பட்டியல் தயாரிக்கலாம்.

இணையதள முகவ‌ரி

;http://topforty.it/#/

whatsout

படம்,பாட்டு,புத்தகம்,விளையாட்டு… எல்லாம் ஒரே தளத்தில்

திரைப்பட ரசிகர்களை பொருத்தவரை புதிதாக என்ன படம் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.இதற்காக என்று இணையதளம் இருக்கிறது. அதே போல புத்தக பிரியர்கள் என்றால் என்ன புத்தகம் புதிதாக வெளியாகியுள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.இசை பிரியர்களை பொருத்தவரை புதிய ஆல்பங்களை அறிய விரும்புவார்கள்.இவற்றுக்கும் இணையதளங்கள் இருக்கின்றன.

திரைப்பட ரசிகரோ,புத்தக பிரியரோ,இசை பிரியரோ யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோர் கேள்விக்கும் அழகாக பதில் சொல்கிறது வாட்ஸ் அவுட் இணையதளம்.

ஆம் இந்த தளம் புதிதாக வெளியாகியுள்ள படங்கள்,பாடல்கள்,புத்தகங்கள் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் வழங்குகிறது. இவற்‌றோடு புதிய வீடியோ கேம் வெளியீட்டு தகவலகளையும் வழங்குகிறது.

படம்,பாட்டு,புத்தகம் என எல்லா தகவல்களும் ஒரே பக்கத்தில் இருப்பதோடு எல்லாமே மிக எளிமையாக இருக்கின்றன.அதிகப்படியான தகவல்களோ அநாவசிய விவரங்களோ கிடையாது.எப்போது வெளியாயின எங்கே கிடைக்கும் அல்லது எங்கே பார்க்கலாம்,கேட்கலாம் போன்ற விவரங்கள் மட்டுமே நச் என இடம் பெற்றுள்ளன.

திரைப்படங்கள் திரையரங்குகள் மற்றும் படங்கள் என இரண்டு தலைப்புகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாவற்றிலும் வரிசையாக படத்தின் போஸ்டர்கள் வரவேற்கின்றன.திரையரங்க பகுதியில் உள்ள ப‌டத்தை கிளிக் செய்தால் அந்த படம் வெளியான தேதி வந்து நிற்கிறது.அதோடு அந்த படத்தின் டிக்கெட்டை வாங்குவதற்கான இனைப்பு மற்றும் டிரைலரை காண்பதற்கான இணைப்பு இடம் பெறுகிறது .அவ்வளவு தான்.

இதை தவிர கடந்த வாரம்,இரண்டு வார்த்திற்கு முன்,கடந்த மாதம் வெளியான படங்களை அடையாளம் காட்டும் வசதியும் இருக்கிறது.அடுத்த வாரம் வரும் படங்களையும் அறியலாம்.

அதே போல புத்தக பகுதியில் புத்தக அட்டையில் கிளிக் செய்தால் அவை வெளியான நாள் மற்றும் அமேசானில் வாங்குவதற்கான இணைப்பு இருக்கிறது.பாடல்கள் ,மற்றும் வீடியோ கேமிலும் இதே போன்ற இணைப்புகள் வரவேற்‌கின்றன.

இமெயில் முகவ்ரியை சம‌ர்பித்தால் புதிய படங்கள் அல்லது பாடல்கள் ,புத்தகங்கள் வெளியாகும் போது தகவல் தெரிவிக்கும் சேவையையும் இந்த தளம் வழங்குகிறது.

ப‌டங்களை எடுத்து கொண்டால் மூவி டேட்டாபேஸ் விவரம்,விமர்சனம், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் குறிப்புகள்,ரசிகர்களின் ரேட்டிங் என விலாவரியாக தகவல்களை திரட்டித்தந்து திணறடிக்கும் தளங்கள் எல்லாம் இருக்கின்றன.பாடல்களூக்கும்,புத்தகங்களுக்கும் விதவிதமான வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன.எல்லா தளங்களுமே விவரங்கள் மூச்சு முட்ட வைத்துவிடும்.

ஆனால் வாட்ஸ் அவுட் தளம் அப்படியெல்லாம் திணற வைக்காமல் என்ன படம் ,என்ன புத்தகம்,என்ன பாடல் புதிதாக வந்துள்ளன என்பதை மட்டும் அடையாளம் காட்டி ஒதுங்கி கொள்கிறது.இந்த எளிமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

வாட்ஸ் அவுட அமெரிக்க தளம் என்பது மட்டும் தான் கொஞ்சம் ஏமாற்றம்.நம்மூருக்கும் இதே போன்ற தளம் உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

இணையதள‌ முகவரி:http://whatsoutt.com/

டிவிடி விலையை ஒப்பிட ஒரு இணையதளம்.

பிலிம் அவுட்லெட்! திரைப்படத்துறையின் எதிர்காலம் எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என உணர்த்தும் இன்னொரு தளம் இது.திரைப்பட டிவிடிக்களின் விலையை ஒப்பிட்டு பார்க்கும் சேவையை இந்த தளம் வழங்குகிறது.

புதிய திரைப்படங்கள் கொஞ்ச நாட்களில் டிவிடிக்களாக வெளியாகி விடுவதும் அவற்றை இணைய கடைகள் மூலமே வாங்கலாம் என்பது தெரிந்த விஷயம் தான்.ஆனால் விலைகளை ஒப்பிட்டு பார்க்க கூடிய வகையில் அதிக இடங்களில் இருந்து டிவிடிக்கள் கிடைக்கின்றன என்பது உண்மையிலேயே வியப்பானது தான்.

எல்லோருக்கும் தெரிந்த அமேசானில் இருந்து,சென்ட் இட் சாய்ஸ்,தி ஹட்,ஜாவி,பிலே,பேஸ் வரை விதவிதமான தளங்களில் இருந்து ஒவ்வொரு படத்திற்குமான விலையை இந்த தளம் பட்டியலிடுகிறது.எந்த தளத்தில் விலை குறைவாக இருக்கிறதோ அந்த தளத்தில் இருந்தே வாங்கி கொள்ளலாம்.

எந்த படத்தின் டிவிடி தேவையோ அந்த படத்தின் பெயரை டைப் செய்து தேடினால் அந்த டிவிடி கிடைக்கும் இணையதளங்களின் பட்டியல் விலையோடு வந்து நிற்கிறது.டிவிடியா புளு ரேவா என்று கூட குறிப்பிட்டு தேடலாம்.

சமீபத்தில் தேடப்பட்ட படங்கள்,புதிய வரவுகள் போன்ற பட்டியலும் ரசிகர்களுக்கு வழிகாட்டுகின்றன.

இணையம் மூலம் புத்தகங்களை வாங்குபவர்களுக்கு இத்தகையை விலை ஒப்பீட்டு சேவை தளங்கள் இருக்கின்றன.நான்கு ஐந்து இடங்களில் பார்த்துவிட்டு குறைந்த விலையில் புத்தகங்களை வாங்க இந்த தளங்கள் உதவுகின்றன.மற்ற பொருட்களுக்கும் இதே போன்ற ஒப்பீட்டு சேவை தளங்கள் உள்ளன.

இப்போது திரைப்பட டிவிடி விலையை ஒப்பிட்டு பார்த்து கொள்ள பிலிம் அவுட்லெட் உதயாமகியுள்ளது.

படங்களை தியேட்டரில் மட்டுமே பார்த்து கொண்டிருந்தது ஒரு காலம்.இப்போது லேப்டாப்பிலும் பார்க்கலாம்,டிவிவியிலும் பார்க்கலாம் என்ற நிலை பரவலாகிவிட்டது.எந்த அளவுக்கு பரவலாகி விட்டது என்பதற்கு இந்த தளம் சான்று.

இணையதள முகவரி;http://filmoutlet.co.uk/

————-
குறிப்பு;இந்த தளம் பிரதானமாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கானது .கோலிவுட ரசிகர்கள் ஏக்கப்பெருமூச்சு மட்டுமே விடலாம்.பிறகு ஏன் இந்த பதிவு என கேட்க வேண்டாம்.தமிழிலும் இது போன்ற தளங்கள் வர வேண்டும் என்ற ஏக்கம் தான்!

அன்புடன் சிம்மன்

திரைப்படங்களுக்கான தேடியந்திரம்.

கேன் ஐ ஸ்டிரிம் இட் போலவே வாட்ச்லே தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது.திரைப்படங்கள் ,மட்டும் அல்ல டிவி நிகழ்ச்சிகளையும் எங்கே பார்க்கலாம் என்று சொல்கிறது.

திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம்.

எந்த படத்தை பார்க்க விருப்பமோ அந்த படத்தின் பெயரை சமர்பித்தால் அந்த படம் எங்கே எல்லாம் பார்க்க கிடைக்கிறது என இந்த தளம் பட்டியல் போடுகிறது.எங்கே எல்லாம் என்பது அமேசானிலா,நெட்பிலிக்சிலா,ஐடியூன்சிலா,ஹுலுவிலா என்பதாகும்.

இவை எல்லாமே படங்களை ஸ்டிரிமிங் அல்லது டவுண்லோடு முறையில் இணையத்திலேயே பார்க்க உதவும் சேவையை வழங்கும் இணையதளங்கள்.நெட்பிலிக்ஸ் அனுமதிக்கப்பட்ட புதிய படங்களை கூட ஸ்டிரிமிங் முறையில் வழங்குகிறது.அமேசான் தளத்திலும் படங்களை வாங்கலாம்.யூடியூப்பின் போட்டி தளமான ஹுலுவிலும் படங்களை பார்க்க முடியும்.

ஆப்பிளின் ஐடியூன்ஸ் பிரதானமாக் பாடல் விற்பனை கடை என்ற போதிலும் படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளையும் இதில் வாங்க முடியும்.

திரையரங்கிற்கு போகாமல் டிவிடியும் வாங்காமல் இருந்த இடத்திலிருந்தே லேப்டாப் அல்லது கம்ப்யூட்டடில் விரும்பும் படத்தை பார்க்க நினைக்கும் ரசிகர்கள் இந்த தளங்கள் ஏதாவது ஒன்றில் அந்த படம் இருக்கிறதா என்று பார்த்து வாங்கி கொள்வார்கள்.பல படங்கள் இலவசமாகவும் கிடைக்கும்.

சில நேரங்களில் எந்த படம் எங்கே கிடைக்கிறது என்று தெரியாது.நெட்பிலிக்சில் ஒரு படத்தை தேடிக்கொன்டிருந்தால் அந்த படம் ஹுலுவில் கிடைக்கும் .இந்த விஷயம் தெரியாமல் நெட்பிலிக்ஸ் ரசிகர்கள் தவித்து கொண்டிருப்பார்கள்.அதே போல சில படங்கள் அமேசான் இனைய கடையில் கிடைக்கலாம்.சில ஐடியூன்சில் கிடைக்கலாம்.

எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டும் என நினைப்பவர்கள் ஒவ்வொரு தளமாக நுழைந்து தேடிப்பார்க்க வேண்டும்.அந்த கஷ்டம் ரசிகர்களுக்கு எதற்கு என கேட்டு படத்தை சொன்னால் அது கிடைக்குமிடத்தை தானே தேடி தருகிறது வாட்ச்லே தளம்.

படத்தின் பெயரை குறிப்பிட்டதுமே அந்த படதை எந்த திரைப்பட சேவை தளங்களில் இருந்து வாங்கி கொள்ளலாம் என்று காட்டுவதோடு அப்படி வாங்குவதற்கான இணைப்பையும் அருகிலேயே தருகிறது.தேடியவுடன் அப்படியே கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.

இணையவாசிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு இலவசமாக மட்டும் பார்க்க கூடிய இடங்களை காட்ட சொல்லலாம்.காசு கொடுக்க தயார் என்றால் கட்டணத்தின் வரம்பையும் குறிப்பிட்டு தேடலாம்.

இதே போலவே டிவி நிகழ்ச்சிகளையும் தேடலாம். டிவி நிகழ்சிச்சிகளை அவை ஒலிபர்ப்பாகும் பொதே பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.பெரும்பாலான நிகழ்ச்சிகள் இணைய வடிவில் கிடைக்கின்றன.எப்போது விருப்பமோ அப்போது டவுண்லோடு செய்து பார்க்கலாம்.அத்தகைய நிகச்சிகள் கிடைக்கும் இடத்தையும் இந்த தளம் காட்டுகிறது.

திரைப்படங்கள் எந்த தளங்களில் எல்லாம் எந்த வடிவில் கிடைக்கின்றன என்பதை தேடுவதற்காக என்றே தேடியந்திரங்கள் உதயமாகின்றன என்றால் ,திரைப்படங்கள் ரசிகர்களை சென்றடையும் வழிகள் எந்த அளவுக்கு பரந்து விரிந்து இருக்கின்றன என்று பார்த்து கொள்ளுங்கள்.

இணையதள முகவரி;http://www.watchily.com/