விக்கிபீடியா தரும் புதிய அனுபவம்!

1_l3x2oiesild9kmqdgzmh_a-720x720இணைய களஞ்சியமான விக்கிபீடியாவில் பேஜ் பிரிவியூ எனும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. திரையரங்குகளில் படங்களுக்கு டிரைலர் காண்பிக்கப்படுவது போல், இணையத்தில் புகைப்படங்களை தம்நைல்கள் எனப்படும் துண்டு படங்களாக பார்ப்பது போல், இந்த வசதி விக்கி கட்டுரை இணைப்புகளை முன்னோட்டமாக பார்க்க வழி செய்கிறது. மிகவும் எளிமையான அம்சம் தான் என்றாலும், இந்த வசதி இணையவாசிகளின் விக்கிபீடியா அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் என கருதப்படுகிறது. அதைவிட முக்கியமாக விக்கிபீடியாவில் உலாவும் போது தொலைந்து போவதை கட்டுப்படுத்த உதவும் என்றும் கருதப்படுகிறது.

விக்கிபீடியாவில் தொலைந்து போவது என குறிப்பிடுவது ஆச்சர்யம் அல்லது திகைப்பை ஏற்படுத்தினாலும், விக்கிபீடியாவை பயன்படுத்தும் பலர் இந்த அனுபவத்தை உணர்ந்திருக்கலாம். விக்கிபீடியா பக்கத்தில் ஒரு கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் போது அதில் உள்ள இணைப்புகளை ஒவ்வொன்றாக வரிசையாக கிளிக் செய்து கொண்டே இருப்பதை தான் இப்படி சொல்கின்றனர். அதாவது வாசிக்க ஆரம்பித்த கட்டுரையில் இருந்து விலகி, இணைப்புகளை பின் தொடர்ந்து சென்று கொண்டிருப்பது.

ஹைபர் லிங்ஸ் எனப்படும் இத்தகைய இணைப்புகள் தான், இணையத்தின் ஆதார பலம் என்றாலும், மற்ற எந்த சேவையையும் விட விக்கிபீடியாவில் இதன் தாக்கத்தை தீவிரமாக உணரலாம். இப்போது வழக்கமான விக்கிபீட்டியா கட்டுரையை ஒன்றின் வடிவத்தை நினைத்துப்பாருங்கள். தலைப்பு, அறிமுகம், துணைத்தலைப்புகள் என நீளும் கட்டுரையின் முடிவில் அடிக்குறிப்புகள் தவிர இன்னும் பிற இணைப்புகளும் இருக்கும். இவைத்தவிர கட்டுரை நெடுகிலும், முக்கியமான பதங்களில் நீல நிற இணைப்புகள் மின்னுவதையும் பார்க்கலாம். இந்த இணைப்புகள் ஒவ்வொன்றை கிளிக் செய்தாலும் அவை தொடர்புடைய கட்டுரைக்கான பக்கத்திற்கு அழைத்துச்செல்லும்.

நாம் வாசிக்கும் கட்டுரையின் சாரம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ள விரும்பினால் அல்லது, கட்டுரையில் புரியாத பல அம்சங்கள் இருந்தால், இவ்வாறு இணைப்புகளை கிளிக் செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வது தவிர்க்க இயலாதது. ஒருவிதத்தில் பார்த்தால் விக்கி கட்டுரைகளுக்கு வலு சேர்ப்பதும் இந்த இணைப்புகள் தான். உதாரணத்திற்கு ஸ்டிரீமிங் மீடியா எனும் பதத்தையே எடுத்துக்கொள்வோம். இதற்கான விளக்கத்தை அளிக்கும் அறிமுக வாசகத்திலேயே மல்டிமீடியா, எண்ட் யூசர், மீடியா பிளேயர், வீடியோ ஆன் டிமாண்ட், லைவ் ஸ்டிரீமிங் போன்ற வார்த்தைகள் நீல நிற இணைப்புகளை கொண்டிருப்பதை பார்க்கலாம். இந்த இணைப்புகளை எல்லாம் கிளிக் செய்து பார்த்தால், ஸ்டிரீமிங் நுட்பம் தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

முற்றிலும் புதிய தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும் போது, புரியாத பல வார்த்தைகளுக்கான இணைப்புகளை பார்க்கலாம். இவற்றை எல்லாம் படித்துப்பார்த்தால் தான் மூலக்கட்டுரை கொஞ்சமாவது புரியும் என்ற நிலை இருக்கும். சில நேரங்களில் கட்டுரை தரும் சுவாரஸ்யத்தில் அதில் உள்ள இணைப்புகளை எல்லாம் கிளிக் செய்யத்தோன்றும். விக்கிபீடியா பயன்பாட்டில் இந்த அனுபவம் தவிர்க்க இயலாதது மட்டும் அல்ல மிகவும் பயனுள்ளது.

இந்த அனுபவத்தில் சிக்கல் இல்லாமல் இல்லை. மூல கட்டுரை தொடர்பான இணைப்புகளை கிளிக் செய்யும் போது அவை ஒவ்வொன்றுக்கும் பிரவுசரில் தனித்தனி பெட்டிகளை (டேப்) திறக்க வேண்டியிருக்கும். இணைப்புகள் அதிகமானால், பிரவுசரில் பெட்டிகள் நீண்டு கொண்டே செல்லும். இது கூட பிரச்சனையில்லை, சில நேரங்களில், இணைப்புகள் வழியே முன்னேறிச்செல்லும் போது மூல கட்டுரையில் இருந்து விலகி வெகு தொலைவு சென்றுவிட நேரலாம். அதாவது வாசிக்க ஆரம்பித்த கட்டுரையில் இருந்து முற்றிலுமாக விலகி வந்து வேறு ஏதோ ஒரு கட்டுரையில் வாசித்துக்கொண்டிருக்கலாம். இது தரக்கூடிய சுவாரஸ்யத்தை மீறி நேரத்தை விரையமாக்குவதோடு பெரும் கவனச்சிதறலாகவும் அமையலாம்.

விக்கிபீடியாவில் ஏற்படக்கூடிய இந்த அனுபவத்தை தான் முயல் ஓட்டை ( ரேபிட் ஹோல் ) என்கின்றனர். பூமிக்கடியில் தோண்டிக்கொண்டே இருப்பது முயலின் இயல்பு. பொதுவாக முடிவே இல்லாமல் குழுப்பமாக நீண்டு கொண்டே இருக்கும் பிரச்சனைகளை முயல் ஓட்டை என குறிப்பிடுகின்றனர். விக்கிபீடியாவில் ஒவ்வொரு இணைப்பாக ஈர்க்கப்பட்டு, மூலக்கட்டுரையில் இருந்து விலகிச்செல்வதை இப்படி குறிப்பிடுகின்றனர். விக்கியின் பக்க விளைவும் என்றும் இதை வைத்துக்கொள்ளலாம்.

இந்த சிக்கலுக்கான தீர்வை தான் விக்கிபீடியா தளத்தை நிர்வகிக்கும் விக்கிமீடியா அமைப்பு அறிமுகம் செய்திருக்கிறது. பேஜ் பிரிவியூ எனும் பெயரிலான இந்த வசதி மூலம், இனி இணைப்புகளை தேடிச்செல்வதற்கு முன் அதில் உள்ள தகவல்களை முன்னோட்டமாக பார்த்துவிடலாம். ஒரு கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் போதே அதில் உள்ள இணைப்புகள் குறித்து மேலும் தகவல்கள் தேவை என நினைத்தால், அந்த வார்த்தை மீது மவுசை கொண்டு சென்றால் போதும், அது தொடர்பான முன்னோட்ட குறிப்பு சின்ன பெட்டியாக தோன்றும். அதில், கட்டுரையின் அறிமுக வாசகங்கள், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இணைப்பை கிளிக் செய்வதா வேண்டாம் என்பதை இந்த முன்னோட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கலாம்.

முன்னோட்டத்திலேயே தேவையான தகவல்கள் கிடைத்துவிட்டால், இணைப்பை கிளிக் செய்யாமல் மேற்கொண்டு கட்டுரையை வாசிக்கலாம். தேவையில்லாத இணைப்புகளின் பின்னே செல்ல வேண்டிய தேவையும் இருக்காது என்பதோடு அவற்றில் என்ன இருக்கிறது என்ற புரிதலையும் பெறலாம். மிகவும் முக்கியமான இணைப்பு எனில் கிளிக் செய்து பார்க்கலாம். இதன் மூலம் அதிக பெட்டிகளை திறந்து வைப்பது அல்லது, இணைப்புகள் இழுப்புக்கு திசைமாறிச்செல்வது ஆகியவற்றை தவிர்க்கலாம். கவனச்சிதறலும் இருக்காது. நேரமும் மிச்சமாகும்.

குறிப்பிட்ட வார்த்தை அல்லது கருத்தை புரிந்து கொள்வதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட பெட்டிகளை பிரவுசரில் திறக்க வேண்டிய விக்கிபீடியாவின் மைய பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இந்த வசதி அமைவதாக இது தொடர்பான விக்கிபீடியா பக்கம் தெரிவிக்கிறது. விக்கிபீடியாவை தலைகீழாக மாற்றிவிடக்கூடிய அளவிக்கு புரட்சிகரமான வசதி இல்லை என்றாலும் கூட, விக்கி அனுபவத்தில் முக்கியமான ஒன்று தான்.

இந்த வசதி பற்றி விக்கிபீடியா விரிவாகவே விளக்கம் அளித்துள்ளது. விக்கி பயனாளிகள் பல ஆண்டுகளாக கோரி வந்த வசதிகளில் ஒன்றாக இது அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசதியை அளிக்கும் வகையில் பலவிதமான பிரவுசர் நீட்டிப்பு சேவைகள் மூன்றாம் தரப்பினரால் உருவாக்கப்பட்டது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 ம் ஆண்டில் சோதனை முறையில் முதன்முதலாக முன்னோட்ட வசதி உருவாக்கப்பட்டதாகவும் அதன் பிறகு பயனாளிகள் கருத்துக்கள் பெறப்பட்டு இந்த அம்சம் தொடர்பாக பல விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டு, இப்போது முழுவீச்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இடையே மொபைலிலும் இந்த வசதி தலைகாட்டியது. விக்கிபீடியா அதன் முகப்பு பக்க இடைமுகத்தில் அத்தனை விரைவில் மாற்றங்களை செய்வதில்லை என்பதால் இந்த வசதி தொடர்பான அழகியல் உள்ளிட்ட பல அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு முன்னோட்ட வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை முயன்று பார்க்கலாம். பிடிக்கவில்லை எனில், வேண்டாம் என்று செயலிழக்கச்செய்துவிடலாம்.

இடையே நடத்தப்பட்ட ஆய்வில் இந்த வசதி பயனாளிகள் கட்டுரையை அணுகும் விதத்தை மேம்படுத்தியிருப்பது மற்றும் கிளிக் செய்யும் இணைப்புகளை குறைத்திருப்பதும் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் நீண்ட கால பயன் எப்படி இருக்கும் எனத்தெரியவில்லை என்பதால் இது குறித்த பயனாளிகளின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. நீங்களும் பயன்படுத்துப்பார்த்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.: https://www.mediawiki.org/wiki/Page_Previews

 தளம் புதிது; இணைய முகவரிகளை பகிர புதிய வழி

ஒரே இணைப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல இணைய முகவரிகளை பகிர்ந்து கொள்வதற்கான வசதியை மெனிலிங் இணையதளம் அறிமுகம் செய்துள்ளது.

சமூக ஊடகங்களும், இணைய சேவைகளிலும் பல் வேறு நோக்கங்களுக்காக இணைய இணைப்புகளை பகிர வேண்டிய தேவை ஏற்படலாம். ஒரிரு முகவரிகள் என்றால் எளிதாக பகிர்ந்து கொண்டுவிடலாம். ஆனால் ஒரே நேரத்தில் பல இணைய முகவரிகளை பகிர்ந்து கொள்வது என்றால் சிக்கல் தான். இதை தான் எளிதாக செய்து கொள்ள மெனி லிங் இணையதளம் வழி செய்கிறது.

இதில் உறுப்பினராக இணைந்த பிறகு, இணைய முகவரிகளை உள்ளடக்கிய இணைப்பை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம். இந்த இணைப்புகள் எந்த அளவு கிளிக் செய்யப்படுகின்றன எனும் விவரத்தையும் அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய முகவரி: https://manylink.co/

https://manylink.co/

செயலி புதிது: கோடிங் கற்கலாம் வாங்க!

முன்னணி தேடியந்திரமான கூகுள் நிறுவனம் கிராஸ்ஹாப்பர் எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் செயல்படும் இந்த செயலி மூலம் பயனாளிகள் கோடிங் அடிப்படையை கற்றுக்கொள்ளலாம். இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் கோடிங் அடிப்படைகளை மிக எளிதாக கேம்கள் வடிவில் கற்றுக்கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கேமாக விளையாடியபடி, ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம். மூன்று அடுக்கிலான பாடங்கள் இதில் உள்ளன. இவற்றில் வினாடிவினாக்களும் அமைந்துள்ளன. தினம் சில நிமிடங்கள் செலவிட்டால் விளையாட்டாக கோடிங் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://grasshopper.codes/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.