ஆயிரம் தளம் கொண்ட அபூர்வ இணையதளம்!

layout-screenshotஇண்டெர்நெட்பட்டன்ஸ் (InternetButtons.org) எனும் பெயரில் இணையதளம் ஒன்று இருந்தது. மிக எளிமையான தளம் இது. இணையதளங்களை எல்லாம் பட்டன்கள் வடிவில் அணுக வழி செய்யும் சேவையை அளித்தது. பயனாளிகள் தங்கள் அபிமான இணையதளங்கள் முகவரியை இந்த தளத்தில் சமர்பித்து அவற்றுக்கான பட்டனை உருவாக்கி கொள்ளலாம். உதாரணமாக, பேஸ்புக் முகவரியை சமர்பித்து, பேஸ்புக்கிற்காக ஒரு பட்டனை உருவாக்கி கொள்ளலாம்.
அதன் பிறகு எப்போது பேஸ்புக்கை அணுக வேண்டும் என்றாலு சரி, பிரவுசரில் தனியே பேஸ்புக் முகவரியை டைப் செய்ய வேண்டாம். பேஸ்புக் பட்டனை கிளிக் செய்தால் போதும், அந்த தளத்திற்கு சென்றுவிடலாம். இப்படி ஒருவர் அடிக்கடி பயன்படுத்தும் இணையதளங்களுக்கு எல்லாம் ஒவ்வொரு இணைய பட்டனை உருவாக்கி கொள்ளலாம்.
அடிப்படையில் இந்த சேவை இணையத்தை பார்த்து மிரண்டுவிடக்கூடிய முதியவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இணைய முகவரியை டைப் செய்யும் தேவை இல்லாமல் அவர்களுக்கு தேவையான இணையதளங்களை பெரிய எழுத்துக்கள் கொண்ட பட்டன்கள் வடிவில் அணுக இந்த சேவை வழி செய்தது. தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கும் பேரன், பேத்திகள் இத்தகைய பட்டன்களை அமைத்து இணையத்தில் உலாவ உதவி செய்யலாம் என்பது இந்த தளத்தின் நோக்கம்.
ஆனால், அருமையான இணையதளம் என சொல்லக்கூடிய இந்த தளம் இப்போது இல்லை. இணையத்தில் மூடுவிழா கண்ட தளங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது. இல்லாமல் போன இணையதளம் பற்றி இப்போது எழுத காரணம், இந்த தளம் பற்றி, ‘ இணையத்தால் இணைவோம்’ புத்தகத்தில் எழுதியிருந்ததை நினைவு கூற மட்டும் அல்ல. உண்மையில், இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்ட தளங்களை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், இந்த தளங்கள் தொடர்ந்து இருக்கின்றனவா? என ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். தளங்கள் இன்னமும் இருக்கும் பட்சத்தில் அவற்றின் தற்போதைய நிலை மற்றும் மாற்றங்களை பதிவு செய்ய திட்டம். காணாமல் போய்விட்ட தளங்கள் எனில் அவற்றுக்கான மாற்று தளங்களை தேடி பரிந்துரைக்க விருப்பம்.
அந்த நோக்கில், இண்டெர்நெட்பட்டன்ஸ் தளத்தை திரும்பி பார்க்கும் போது, அந்த தளம் இல்லாமல் போனது ஏமாற்றம் அளிக்கலாம். ஆனால், அந்த தளத்தின் நோக்கம் மற்றும் தேவையை உள்வாங்கி கொண்டால் போதும், மாற்று தளங்களை தேடி கண்டுபிடித்துவிடலாம்.
இண்டெர்ண்ட் பட்டன்ஸ் போலவே வேறு தளங்கள் இருக்கின்றனவா? என தேடினால் ஏமாற்றம் அளிக்காமல், நெட்வைப்ஸ், மைவேப்.ஸ் , ஸ்டார்ட்பேஜ், ஆல்மைபேவ்ஸ், சிம்பாலூ உள்ளிட்ட தளங்கள் இருப்பதை மாற்று தளங்களுக்கான ஆல்டர்நெட்டிவுடூ தளம் பட்டியலிடுகிறது.
இவை எல்லாமே ஸ்டார்ட் பேஜ் என குறிப்பிடப்படும், இணைய துவக்க பக்கங்களின் கீழ் வருகின்றன. அதாவது பயனாளிகள் தங்கள் இணைய உலாவுக்கான துவக்க பக்கத்தை உருவாக்கி கொள்ள வழிசெய்யும் தளங்கள்.
பயனாளிகள் அடிக்கடி பயன்படுத்தும் இணையதளங்களை எல்லாம் குறித்து வைப்பது அல்லது புக்மார்க் செய்வது உண்டல்லவா? மறக்காமல் இருக்க நினைக்கும் தளங்களையும் இப்படி குறித்து வைப்பதுண்டு. இப்படி குறித்து வைக்கும் தளங்கள் எல்லாம், அவற்றுக்கான லோகோவுடன் ஒரு இணையபக்கத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? எந்த இணையதளத்தை அணுக வேண்டும் என்றாலும் சரி, இந்த பக்கத்திற்கு சென்று தேவையான தளத்தின் லோகோவில் கிளிக் செய்தால் போதும் அந்த தளத்தை அணுகலாம். இந்த பட்டியலில் எந்த தளத்தை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். தேவையில்லாததை நீக்கிவிடலாம்.
இப்படி காட்சி பலகை போல, நமக்கான இணையதளங்களை ஒரே இடத்தில் எளிதாக அணுக வழி செய்வது தான் துவக்க பக்கங்களின் நோக்கம்.
நீங்கள் இருபது அல்லது முப்பது இணையதளங்களை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அவை அனைத்தையும், ஸ்டார்ட் பேஜ் சேவை அளிக்கும் தளங்கள் மூலம் ஒரே பக்கத்தில் கொண்டு வந்துவிடலாம். அந்த பக்கத்தை நுழைந்தாலே 30 தளங்களின் லோகோக்களும் வரிசையாக இருக்கும். இந்த தளங்களை இன்னும் தெளிவாக பல பிரிவுகளின் கீழ் வகைப்படுத்திக்கொள்ளலாம்.
மைபேவ்.ஸ் (https://www.myfav.es/ ) தளம் இந்த வசதியை அளிக்கிறது. இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டு, உங்களுக்கான இணையதள முகவரிகளை சமர்பித்து அவற்றை துவக்க பக்கமாக அமைத்துக்கொள்ளலாம்.
சிம்பாலூ (https://www.symbaloo.com/home/mix/13eOcMZU9A) தளம் காட்சிரீதியான மேம்பட்ட வசதியை அளிக்கிறது. இந்த தளத்தில், தளங்களை தனிதனி பிரிவுகளாக வகைப்படுத்திக்கொள்ள வசதி இருக்கிறது. உதாரணமாக செய்தி தளங்களை ஒன்றாக வகைப்படுத்தலாம். பொழுதுபோக்கு தளங்களை இன்னொரு வகையாக பிரிக்கலாம். இவை அனைத்தும் தனித்தனி பலகைகளாக தோன்றும். தளங்களை தொகுக்கவும், வகைப்படுத்தவும் பலவகையான வசதிகளை இந்த சேவை அளிக்கிறது.
ஸ்டார்ட்.மீ (https://start.me/start/in/start-page ) தளமும் இதே போன்ற வசதியை அளிக்கிறது. இணையதளங்களை தனித்தனியே வகைப்படுத்திக்கொள்ளும் வசதியோடு, அவற்றுக்கான பரிந்துரைகளும் இடம்பெறுகின்றன. இந்த பரிந்துரைகளில் இருந்தும் தேவையான தளங்களை தேர்வு செய்யலாம்.
இதே போன்ற மற்ற தளங்கள்:
• நெட்வைப்ஸ் (https://www.netvibes.com/en )
• ப்ரோடோபேஜ் (https://www.protopage.com/ )
• ஆல்மைபேவ்ஸ் (https://www.allmyfaves.com/)
இவற்றில் ஆலைமைபேவ்ஸ் தளம் முதல் பார்வைக்கு கொஞ்சம் நெரிசல் மிக்கதாக தோன்றினாலும், கொஞ்சம் பொறுமையாக பார்த்தால் அந்த தளம் எத்தனை அருமையானது எனப்புரியும். இந்த தளம் முழுவதும் வரிசையாக இணையதள லோகோக்களாக இருக்கின்றன. எல்லாமே அந்த அந்த பிரிவில் தேர்வு செய்யப்பட்ட தளங்கள். அவற்றை கிளிக் செய்தால் போதும். இணையத்தில் அதிகம் நாடப்படும் தளங்கள் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன. இணையத்தில் தனியே தேடாமல் இந்த தளத்திலேயே முக்கிய தளங்களை அணுகி கொள்ளலாம் என இந்த தளம் சொல்கிறது. ஆனால், இதில் நமக்கான துவக்க பக்கத்தை உருவாக்கி கொள்ள வழியில்லை.
இதே போலவே, புல்க் (http://www.fulck.com/) எனும் இணையதளம் இருக்கிறது. இந்த தளம், பிரபலமான ஆயிரம் தளங்களை ஒரே பக்கத்தில் தொகுத்தளிக்கிறது. இவற்றின் லோகோக்களை முகப்பு பக்கத்தில் பார்க்கலாம். லோகோவை கிளிக் செய்யும் முன் அவற்றுக்கான சுருகமாக அறிமுகமத்தையும் பார்க்கலாம். லோகோக்களின் கீழ், பல பிரிவுகளில் இணையமுகவரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இணையத்தை இப்படியும் அணுகலாம் என வியக்க வைக்கும் அபூர்வ தளம் இது. ஆயிரம் தளம் காட்டும் அபூர்வ தளம்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts