சந்திப்புகளை திட்டமிட உதவும் இணைய சேவை

og_imageஅலுவலக நிமித்தமாக அல்லது நட்பு நோக்கில் ஆலோசனை செய்ய சின்னதாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா? இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ள உதவும் வகையில் லெட்டஸ்மீட் இணைய சேவை செயல்படுகிறது.

தொலைபேசி அழைப்புகள், நேர் பேச்சு போன்றவை எல்லாம் இல்லாமல் இந்த சேவை மூலம் எளிதாக சந்திப்பை திட்டமிடலாம்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், லெட்டஸ்மீட் இணையதளத்திற்கு சென்று, முதல் படியாக அதில் காண்பிக்கப்படும் காலண்டரில், எந்த நாளில் சந்திப்பு நடத்த நீங்கள் தயார் என்பதை குறிப்பிட வேண்டும். அடுத்ததாக, குறிப்பிட்ட எந்த நேரம் என்பதை தெரிவிக்க வேண்டும். சந்திப்புக்கான தலைப்பு மற்றும் நோக்கத்தையும் சுருக்கமாக குறிப்பிட வேண்டும்.

இந்த விவரங்களை சமர்பித்தவுடன் உருவாக்கப்படும் இணைய முகவரியை, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இமெயில் அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த இணைப்பை பெறும் நண்பர்கள், சந்திப்புக்கான கோரிக்கையை பார்த்துவிட்டு, தங்கள் சம்மதம் மற்றும் தங்களுக்கு ஏற்ற நேரத்தை தெரிவிப்பார்கள். நண்பர்கள் தெரிவிக்கும் தகவல், நீங்கள் உருவாக்கிய நாட்காட்டியின் மீது பொருத்தி காண்பிக்கப்படும். இதை பார்ப்பதன் மூலம் எல்லோருக்கும் உகந்த நேரத்தை சந்திப்பிற்காக தேர்வு செய்யலாம்.

நாம் உருவாக்கும் சந்திப்பு தொடர்பான அந்தரங்க தகவல்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

இணையதள முகவரி: https://lettucemeet.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.