பாலோயர்களை பரிந்துரைக்கும் இணையதளம்

caspar-rubin-680342-unsplash(கேட்ஜெட் புதிது)
கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்!
ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்டே வரும் நிலையில், கைக்கு அடக்கமான சைசில், லேசு ரக போன் ஒன்று ஜப்பானில் அறிமுகமாகியிருக்கிறது. 2.8 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனின் மொத்த எடை 47 கிராம் தான். போனின் தடிமன் என பார்த்தால் 5.3 மி.மீ தான். கிரெடிட் கார்டு அளவு இருக்கும் இந்த போன் உலகிலேயே மெல்லிய போன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 380mAh பேட்டரி மற்றும் 2.8 இன்ச் இங்க் டிஸ்பிளே கொண்டிருக்கிறது.
இந்த போனில் 4 ஜி வசதி இருக்கிறதே தவிர, ஸ்மார்ட்போனில் காணக்கூடிய பெரும்பாலான அம்சங்கள் கிடையாது. கேமிரா, செயலிகளுக்கான ஆப் ஸ்டோர் எல்லாம் இதில் கிடையாது. ஜப்பானின் கேயோசேரா எனும் நிறுவனம் மற்றும் தொலைதொடர்பு நிறுவனமான என்.டி.டி டோகோமோ இணைந்து இந்த போனை அறிமுகம் செய்துள்ளது.
குறைந்த அம்சங்கள் கொண்ட மினிமலிஸ்ட் ரக போனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த போன் வழக்கமான போனுக்கான துணை போனாக கருதப்படுகிறது,. ஸ்மார்ட்போன் சார்ந்த கவனமச்சிதறல்கள் இல்லாமல் போனை மட்டும் பயன்படுத்தும் சூழலில் இந்த வகை போனை கையில் எடுத்துக்கொள்ளலாம். இதே கருத்தாக்கத்தின் அடிப்படையில் ’பாம்’ (Palm) பிராண்டின் கீழும் அதிக அம்சங்கள் இல்லாத சின்னஞ்சிறிய ஸ்மார்ட்போன் ஒன்று அமெரிக்காவில் அறிமுகம் ஆகியிருக்கிறது. டிஜிட்டல் நலனுக்கு இந்த வகை போன்கள் தான் ஏற்றது என்கின்றனர்.

(தளம் புதிது)
பாலோயர்களை பரிந்துரைக்கும் இணையதளம்
குறும்பதிவு சேவையான டிவிட்டரில் பாலோயர்களின் எண்ணிக்கை எத்தனை முக்கியமோ அதே அளவு முக்கியம் நீங்கள் யாரை எல்லாம் பாலோ செய்கிறீர்கள் என்பது. டிவிட்டர் செயல்பாடு பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனில் பாலோயர்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு ஆர்வமுள்ள மற்றும் நீங்கள் அறிய விரும்பும் துறை சார்ந்த நபர்களை பின் தொடர்வது நலம்.
இது தொடர்பாக உங்களுக்கு வழிகாட்டுதல் தேவை எனில், பாலோபிரைடே எனும் இணையதளம் இதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளம் டிவிட்டரில் போலோ செய்வதற்கான நபர்களை பரிந்துரைக்கிறது. பிளாக்செயிம், முதலீட்டாளர்கள், வடிவமைப்பு, எழுத்தாளர்கள், சி.இ.ஓக்கள் என பல்வேறு தலைப்புகளின் கீழ் அந்த அந்த பிரிவுகளில் யாரை எல்லாம் பின் தொடரலாம் என பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
பரிந்துரைக்கப்படும் பெயர்கள் புகைப்படத்துடன் தோன்றுகிறது. புகைப்படத்தில் கிளிக் செய்தால் அந்த நபரின் டிவிட்டர் பக்கத்திற்கு செல்லலாம். நீங்கள் விரும்பினால் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களின் டிவிட்டர் முகவரியை பரிந்துரைக்கலாம்.
இணையதள முகவரி: https://followfriday.io/

(செயலி புதிது)
ஆபத்து காலத்தில் உதவும் செயலி
தனிநபர் பாதுகாப்பு நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ள செயலிகள் வரிசையில் வருகிறது ஷேக்2சேப்டி செயலி. இந்த செயலியை நிறுவுவதன் மூலம், அவசர காலத்தில் உதவி தேவை எனில், போனை ஷேக் செய்வதன் மூலம் நெருங்கிய நபர்களுக்கு உதவி கோரிக்கை அனுப்பி வைக்கலாம். இருப்பிடம் பற்றிய தகவல் மற்றும் புகைப்படமும் அனுப்பி வைக்கப்படும். பவர் பட்டனை நான்கு முறை அழுத்துவதன் மூலம் இதை இயக்கலாம்.
செயலியை நிறுவியவுடன் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் உள்ளிட்டவற்றை அமைத்துக்கொள்ளலாம். பெண்கள், முதியவர்கள், சிறார்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். பேரிடர் காலங்களில் உதவி கோரவும் இந்த செயலி கைகொடுக்கும்.
மேலும் விவரங்களுக்கு: https://photonapps.wordpress.com/

——–

( தகவல் புதிது)
கூகுள் தேடல் வரலாற்றை எளிதாக நீக்கலாம்!
இணைய நிறுவனங்கள் தகவல்களை திரட்டுவது தொடர்பான சர்ச்சை வலுப்பெற்று வரும் நிலையில், தேடியந்திரமான கூகுள், பயனாளிகள் தங்கள் தேடல் வரலாற்று தொடர்பான தகவல்களை நீக்குவதை எளிதாக்கி இருக்கிறது.
தேடியந்திரமான கூகுள், பயனாளிகளின் தேடல் தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரித்து, சேமித்து வைக்கிறது. பயனாளிகளுக்கு ஏற்ற தேடல் முடிவுகளை அளிக்கவும், அவர்கள் தேடல் விருப்பங்களுக்கு பொருத்தமான விளம்பரங்களை அளிக்கவும் கூகுள் இந்த தகவல்களை பயன்படுத்துகிறது. சுருக்கமாக சொல்வது என்றால், ஒருவரின் தேடல் வரலாறு முழுவதையும் கூகுள் சேமித்து வைக்கிறது. தனிப்பட்ட அடையாளங்களோடு இந்த தகவல்கள் சேமிக்கப்படுவதில்லை என்று கூகுள் சொல்கிறது.
மேலும் கூகுள் தன்பங்கிறகு, தங்களைப்பற்றி எந்த விதமான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வசதியை அளிக்கிறது. அதோடு விரும்பினால் தேடல் வரலாற்றை நீக்கும் வசதியையும் அளிக்கிறது. ஆனால் இந்த வசதியை கண்டுபிடிக்க வேண்டுமானால் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். கூகுள் கணக்கு பகுதிக்கு உள்ளே சென்று தேடிப்பார்க்க வேண்டும்.
இப்போது இந்த வசதியை மிகவும் எளிதாக கண்டறியக்கூடிய வகையில் கூகுல் தனது முகப்பு பக்கத்திலேயே அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது. தனியுரிமை கவலை உள்ளவர்கள் மற்றும் தங்கள் தரவுகளை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது தொடர்பான கூகுளின் வலைப்பதிவு: https://bit.ly/2JeHIY2

_104035723_0f69bc65-8b59-4cd4-adb7-d155f930e60b(தொழில்நுட்பம் புதிது)
ஏ.ஐ தீட்டிய ஓவியம் இது
கிறிஸ்டி நிறுவனம் நடத்திய ஏலத்தில் ஓவியம் ஒன்று 4,32,000 லட்சம் டாலர்களுக்கு விலை போயுள்ளது. இதைவிட அதிக விலைக்கு விற்ற ஓவியங்கள் எல்லாம் இருக்கின்றன என்றாலும், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இது ஓவியர் தீட்டியது அல்ல என்பது தான். மாறாக இந்த ஓவியம் ஏ.ஐ என சுருக்கமாக சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு தீட்டிய ஓவியம்.
இதை ஏலத்திற்கு கொண்டு வந்த நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிக விலை இந்த ஓவியம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸை சேர்ந்த கலைக்கூடமான ஆப்வியஸ் சார்பில், போர்ட்யட் ஆப் எட்மண்ட் பெலாமி எனும் பெயரில் இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட அல்கோரிதம், 14 ம் நூற்றாண்டு முதல் 20 ம் நூற்றாண்டு வரை தீட்டப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களின் தரவுகளை ஆய்வு செய்து, அவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இந்த ஓவியத்தை தீட்டியுள்ளது. ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்ட முதல் செயற்கை நுண்ணறிவு தீட்டிய ஓவியமாக இது அமைகிறது. வருங்காலத்தில் கலைபடைப்பு சந்தையில் தாக்கம் செலுத்தக்கூடிய தொழில்நுட்பங்களில் செயற்கை நுண்ணறிவும் ஒன்று என்கின்றனர்.
ஆக படைப்புத்துறையிலும் அல்கோரிதம்கள் வெற்றிகரமான நுழைத்துவங்கிவிட்டன.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.