வீடியோக்களை எளிதாக தரவிறக்கம் செய்ய உதவும் இணையதளம்.

tubeஇணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது மிகவும் எளிதானது தான். இதற்காக என்றே பிரபலமான வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் உள்ளிட்ட தளங்கள் இருக்கின்றன. இது தவிர பேஸ்புக் அல்லது இமெயில் மூலம் நண்பர்களிடம் இருந்து வீடியோக்கள் வந்து சேர்கின்றன. சில நேரங்களில் வீடியோக்களை பார்த்து ரசிப்பதோடு நில்லாமல் அவற்றை தரவிறக்கம் செய்யவும் விரும்பலாம். வீடியோக்களை தரவிறக்கம் செய்யவும் எளிதானது தான். இதற்காக தரவிறக்கம் செய்யவும் பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது.

ஆனால் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் போது சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பிட்ட அந்த வீடியோ கோப்பு தரவிறக்கம் ஆக நேரம் ஆகலாம். வேறு பணிகளில் மூழ்கியிருக்கும் போது இப்படி வீடியோ கோப்புக்காக காத்திருப்பது தமாதத்தை ஏற்படுத்தலாம். இப்படி தாமதமாவதை தவிர்க்க , பார்த்து ரசித்த வீடியோவை பின்னர் ஓய்வாக இருக்கும் போது தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தீர்மானிக்கலாம். ஆனால் சில நேரங்களில் சோதனையாக அந்த வீடியோவை கண்டுபிடிக்க முடியாமல போகலாம். அல்லது இன்னும் மோசமாக அந்த வீடியோ இணையத்தில் இருந்தே காணாமல் போயிருக்கலாம்.
இது போன்ற சங்கடங்களை தவிர்ப்பதற்காக வீடியோக்களை தரவிறக்கம் செய்து தருவதற்காக என்றே பிரத்யேகமாக டியூப் ஆப்லைன் (http://www.tubeoffline.com/ ) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளாது. இணையத்தில் பார்த்து ரசித்த வீடீயோவை தரவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் அதற்கான இணைய முகவரியை மட்டும் இந்த இணையதளத்தில் சமர்பித்தால் போதுமானது, அதை தரவிறக்கம் செய்து கொடுத்து விடும். பின்னர் பார்த்து ரசிக்க நினைக்கும் வீடியோக்களை எந்த சிக்கலும் தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் சிறந்த வழி.
இந்த தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்வதும் எளிதானது தான். இந்த சேவையை பயன்படுத்த இதில் உறுப்பினராக வேண்டிய தேவையில்லை. எந்த மென்பொருளையும் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டாம். இதில் உள்ள யூடியூப்பில் இருந்து தரவிறக்கம் செய்க கட்டத்தில் வீடியோவுக்கான முகவரியை டைப் செய்தால் போதுமானது.

யூடியூப் தவிர வேறு பல வீடியோ சேவைகள் இருக்கின்றனவே , அவற்றில் பார்க்கும் வீடியோக்களை எப்படி தரவிறக்கம் செய்வது என்று கவலைப்பட வேண்டாம். யூடியூப்பில் இருந்து தரவிறக்கம் செய்யும் வசதி பிரதானமாக கொடுக்கப்பட்டிருந்தாலும் மற்ற வீடியோ தளங்களை மறந்துவிடவில்லை. மற்ற வீடியோ தளங்களை தனி பட்டியலாக கொடுக்கப்பட்டுள்ளது. பரவலாக அறிந்த விமியோ உட்பட பெரும்பாலான வீடியோ பகிர்வு தளங்கள் அகர வரிசையில் இடம்பெற்றுள்ளன. பல வீடியோ சேவைகள் இதுவரை அறிமுகம் ஆனதாக கூட இல்லாமல் இருக்கலாம். இவை தவிர செல்போன் செயலிகளான இன்ஸ்டாகிராம் மற்றும் வைன் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலை பார்க்கும் போது இத்தனை வீடியோ பகிர்வு சேவைகள் இருக்கின்றவா என்ற வியப்பும் ஏற்படலாம்.

அது மட்டுமா வாரந்தோறும் புதிய வீடியோ சேவைகளை சேர்த்து வருவதாகவும் டியூப் ஆப்லைன் குறிப்பிடுகிறது. ஆக வீடியோ பிரியர்களுக்கு இந்த இணையதளம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் ஆடியோ பிரியர்களை கவரும் வகையில் எம்பி3 கோப்புகளை தரவிறக்கம் செய்யும் வ்சதியையும் இந்த தளம் வழங்குகிறது. வீடியோவுக்கு எப்படி யூடியூப்போ அதே போல ஆடியோ கோப்புகளுக்கான சேவையாக இருக்கும் சவுண்ட்கிளவுட் உள்ளிட்ட தளங்களில் இருந்து ஒலி கோப்புகளை எம்பி3 வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த சேவை சோதனை முறையில் அறிமுகம
் செய்யப்பட்டுள்ளதால் ஒரு சில கோப்புகள் தரவிறக்கம் ஆகாமல் போகலாம்.

இந்த இணையசேவை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அதற்கு பதில் அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வீடியோக்களில் விளம்பர இடையூறு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோவை ஒருவர் தனது இணையதளம் அல்லது வலைப்படிவிலும் இடம்பெற வைக்கும் வ்சதியும் இருக்கிறது.

இணையதள முகவரி; http://www.tubeoffline.com/

———————

சைபர்சிம்மன் கையேடு குறிப்புகள்

websiteசைபர்சிம்மன் கையேடு தொகுப்பில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான இணையதளம் எது ? பயனுள்ள தளம் எது? உங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்திய தளம் எது? போன்ற தகவல்களை , இந்த தொகுப்ப்பை படித்த வாசக்ர்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். ‘

மேலும் வலைப்பதிவில் படித்ததற்கும் புத்தக வடிவில் படிப்பதற்குமான உணர்வு எப்படி இருக்கிறது என்றும் பகிர்ந்து கொள்ளலாம். தொகுப்பிற்காக பதிவுகளை தனியே திருந்து செம்மை செய்து மேம்படுத்தியுள்ளேன்.

புத்தகத்தை வாசித்த வலைப்பதிவு நண்பர்களின் கருத்துக்களை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்

அன்புடன் சிம்மன்.

———————

புத்தகம் கிடைக்கும் இடம்;

விவேக் எண்டர்பிரைசஸ் .( மதி நிலையம்)

2/3, 4வது தெரு

கோபாலபுரம்

சென்னை. -86

போன்; 044-28111506

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

One Comment on “வீடியோக்களை எளிதாக தரவிறக்கம் செய்ய உதவும் இணையதளம்.

  1. நல்லதொரு வழிகாட்டி தகவல்

    Reply

Leave a Comment

Your email address will not be published.