வானொலி நிலையங்களுக்கான தேடியந்திரம்

rவானொலி அந்த கால சங்கதியாக கருதப்பட்டால் என்ன? இன்னமும் வானொலிக்கான தேவையும் இருக்கிறது. வானொலியை நேசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் ( நானும் தான் !) . இத்தகைய வானொலி பிரியர்களுக்கு ரேடியோ-லொகேட்டர் உற்சாகம் தரும்.

ரேடியோ- லெகேட்டர் வானொலி நிலையங்களுக்கான தேடியந்திரம். அமெரிக்காவை பிரதானமாக கொண்டது என்றாலும் அகில உலகமும் முழுவதும் உள்ள ( நமது அகில இந்திய வானொலி உட்பட) வானொலி நிலையங்களை இதில் தேடலாம். அமெரிக்காவில் வசிப்பவர்கள் எனில் அந்நாட்டில் மாநிலவாரியாக வானொலி நிலையங்களை தேடலாம். நகரவாரியான தேடல் வசதியும் இருக்கிறது. கனடாவுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.
மற்ற நாட்டில் உள்ளவர்களும் கவலைப்பட வேண்டாம் ,தேடல் பட்டியலில் அவர்கள் நாட்டை தேர்வு செய்து வானொலி நிலயங்களை தேடலாம். இந்தியாவில் ஆகாச வாணி உட்பட 18 வானொலி நிலையங்கள் வருகிறது.முழுமையான பட்டியல் என்று சொல்வதற்கில்லை. விடுப்பட்ட் நிலையங்களில் பட்டியலில் சமர்பிக்கும் வசதியும் இருக்கிறது.

இந்த வானொலி நிலையங்களில் இணைய ஒலிபரப்பு உள்ளவற்றையும் அறியலாம். மொத்தம் 13,900 வானொலி நிலையங்கள் மற்றும் 9200 இணைய ஒலிபரப்புகள் பற்றிய தகவல் உள்ளன.

இந்திய வானொலிகளில் ரேடியோமிர்ச்சியின் இணையதளம் சிறப்பாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இணைய ஒலிப்ரப்பு வசதியையும் முக்கப்பு பக்கத்திலேயே பிரதானமாக அடையாளம் காட்டியுள்ளனர்.,

——-
வானொலி நிலையங்களை தேட:http://www.radio-locator.com/

ரேடியோ மிர்சி இணையதளம்: http://www.radiomirchi.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *