Tag Archives: us

இணையத்தை உருக வைத்தா தாத்தா!

324F545900000578-0-image-a-86_1458568581263சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெகிழ வைக்கும் இந்த கதையில் பேரப்பிள்ளைகளுக்கான பாடம் அடங்கியிருப்பதோட்டு, இணைய புகழ் சூறாவளியை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலும் இருக்கிறது.

முதலில் முன் கதை சுருக்கம்! அதற்கு முன்னர் உங்களுக்கு தாத்தவோ,பாட்டியோ இருந்து அவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருந்தால், அந்த தவற்றை சரி செய்து கொண்டு பாசக்கார பேரப்பிள்ளைகளாக மாறுங்கள். ஏனெனில் இந்த கதை உணர்த்தும் நீதி அது தான்- தாத்தாக்களும்,பாட்டிகளும் அன்புக்கு ஏங்கி கொண்டிருக்கிறார்கள், அதை ஒரளவுக்காவது தீர்த்து வைப்பது பேரப்பிள்ளைகளின் கடமை!
சாதாரணமாக சொன்னால் போதனையாக மாறி அலுப்பூட்டக்கூடிய இந்த விஷயத்தை நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் உணர்த்தியிருப்பது தான் இந்த கதையின் சிறப்பம்சம்.

இணையத்தை மெல்லப்பிடித்து உலுக்கியிருக்கும் இந்த கதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டிவிட்டரில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்துடன் துவங்குகிறது.

முதியவர் ஒருவர் தனியே சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் அது. முதியவரின் பேத்தியான கல்லூரி மாணவி கெல்சே ஹார்மன் தான் இதை தனது டிவிட்டர் பக்கத்தில் ( https://twitter.com/kelssseyharmon) பகிர்ந்து கொண்டார். அந்த படத்துடன் அவர் தெரிவித்திருந்த தகவலின் பின்னே வருத்ததின் சாயலும் இருந்தது; ”பாப்பாவுடன் ( தாத்தா) டின்னர் சாப்பிடுகிறேன். அவர் தனது ஆறு பேரப்பிள்ளைகளுக்காக 12 பர்கர்களை தயார் செய்திருந்தார். ஆனால் நான் மட்டும் தான் அதை சாப்பிட வந்திருக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன்”.

கையில் பாதி கடித்த படி தாத்தா தனிமையில் சோகத்துடன் காட்சி தரும் புகைப்படத்தை பார்த்து விட்டு இந்த செய்திய படிக்கும் போது, மனதில் தானாக ஒரு மெல்லிய சோகம் உண்டாகும். ஆறு பேரப்பிள்ளைகளுக்காக தாத்தா அன்புடன் பர்கர் செய்து காத்திருந்தால் அவர்களில் ஒருவரைத்தவிவிர மற்றவர்கள் எட்டிப்பார்க்காமல் அவரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றனரே , பாவம் அந்த தாத்தா என்றும் நினைக்கத்தோன்றும்.
அந்த படத்தை டிவிட்டரில் பார்த்தவர்கள் மனதில் எல்லாம் இது போன்ற எண்ணங்கள் அலைமோதின. முதியவரின் சோகமோ அல்லது பேரப்பிள்ளைகளின் பாராமுகமோ ஏதோ ஒன்று பார்த்தவர்கள் நெஞ்சத்தொட்டு இந்த படத்தை ரிடிவீட் மூலம் பகிர்ந்து கொள்ளத்தூண்டியது. அவ்வளவு தான் அடுத்த 24 மணி நேரத்தில் 70,000 முறை இந்த படம் பகிரப்பட்டது. அதைவிட அதிகமான முறை இந்த படம் மீது விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பார்த்தால் இணையமே இந்த படம் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தது.

பலரும் தாத்தா மீது பரிவு கொண்டு கருத்து தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் தாங்களும் கூட தாத்தா பாட்டியை அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருப்பதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர். குடும்ப உணர்வு, வயதானவர்களின் நிலை, பேரப்பிள்ளைகளின் கடமை ஆகிய விஷயங்கள் பற்றிய பாசம் ததும்பும் விவாதமாக இது உருவெடுத்தது. இதனிடயே சிலர் வராமல் போன அந்த பேரப்பிள்ளைகளை வறுத்தெடுக்கவும் தவறவில்லை.

இதன் வைரல் தன்மையும், அதற்கு பின்னே இருந்த பெரியவரின் சோகமும் மீடியாவின் கவனத்தையும் ஈர்த்து இந்த நிகழ்வு பற்றி செய்தி வெளியிட வைத்தது. சோகமான தாத்தா எனும் அடைமொழியுடன் வெளியாகிய செய்திகள் மேலும் பல லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது.
இணையம் ஒரு தாத்தாவின் சோகத்திற்கு உருகியதும், பேரப்பிள்ளைகள் தாத்தாக்களை மறக்காமல் இருக்க வேண்டும் எனும் செய்தியை இது உணர்த்துவதாக அமைவதும் வலுயுறுத்தப்பட்டன.

ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா.- ஒரு பேத்தி தனது தாத்தாவின் நிலை பற்றி தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படம்,இணையம் மூலம் பரவி, நம் காலத்தில் முதியவர்களின் நிலை தொடர்பான விவாதத்தின் மையமாக மாறியிருக்கிறது!

ஆனால் இந்த கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. இதில் கொஞ்சம் திருப்பங்களும் காத்திருந்தன.
பரவலாக கருதப்பட்டது போல மீது ஐந்து பேரப்பிள்ளைகளும் தாத்தாவை முற்றிலுமாக புறக்கணித்துவிடவில்லை. இணையத்தில் சிலர் கல் நெஞ்சக்காரர்கள் என தூற்றியதை மீறி அவர்கள் பாசக்கார பேரப்பிள்ளைகளாகவே இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. விஷயம் என்ன என்றால், பேரப்பிள்ளைகளில் இன்னொருவர் சற்று தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார். மற்ற நான்கு பேர் வாரத்தற்கு காரணம் , தாத்தாவின் டின்னர் பற்றி அவர்களுக்கு சரியாக தகவல் தெரிவிக்கப்படாதது தான். தாத்தா தனது மகனிடம் இது பற்றி தெரிவித்த தகவலை அந்த மறத்திக்கார அப்பா தனது மகன்களிடம் தெரிவிக்க மறந்திருக்கிறார். அதனால் தான் அவர்கள் வரவில்லை. புகழ்பெற்ற டெய்லிமெயில் நாளிதழ் இந்த வெளிவராத பின்னணி தகவல்களை தேடிப்பிடித்து செய்தி வெளியிட்டது.

இதனிடையே பேரப்பிள்ளைகள் தரப்பில் தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டது. தாங்கள் குடும்பத்தை முக்கியமாக கருதுபவர்கள் என்றும், தாத்தாவை தாங்கள் நிராகரித்ததில்லை என்றும் தெரிவித்திருந்தனர். இணையம் கருதும் அளவுக்கு தாத்தாவை தனிமையில் தவிக்கவிடவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இதற்குள் இணையம் அவர்களை விசாரணை கூண்டில் நிற்க வைத்து ,இந்தக்கால பிள்ளைகளே இப்படி தான் என விவாதம் நடத்தி, திருந்த வேண்டிய நெஞ்சங்கள் என்று தீர்ப்பும் வழங்கியிருந்தது. இன்னொரு பக்கம், இதெல்லாமே இணைய புகழுக்கான முயற்சி என்றும் சிலர் தூற்றியிருந்தனர்.

நல்லவேளையாக பேத்தி கெல்சே மற்றும் அவரது சகோதரர்கள் இந்த சூறாவளியை பக்குவமாக கையாண்டனர். தாத்தா மீதான பாசத்தை வெளிப்படுத்தவே புகைப்படத்தை பகிர்ந்து கொண்டதாகவும், இதன் மூலம் புகழ் பெறும் எண்ணம் இருக்கவில்லை என்றும் கெல்சே தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். அதோடு தன்னை தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்தபர்களுக்கு எல்லாம் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முடியாததால், அனைவருக்கும் பொதுவாக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்னொரு பேரனான பிராக் ஹார்மன் (https://twitter.com/BHarmon_10 ) தங்கள் தாத்தா மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதன் அடையாளமாக விருந்து ஒன்றை அளிக்க விரும்புவதாகவும் , இதற்கு யார் வேண்டுமானலும் வருகை தரலாம் என தெரிவித்திருந்தார்.

டிவிட்டர், வைரல் புகழ் பற்றி எல்லாம் அதிகம் அறிந்திராத அந்த முதியவர் ,எல்லோரும் தன்னைப்பற்றியே பேசுவதை பார்த்து கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போயிருக்கிறார். இந்த திடீர் புகழ் வெளிச்சம் அவருக்கு வியப்பை அளித்தாலும், உற்சாகத்தோடு எல்லோரையும் விருந்துக்கு அழை நான் பர்கர் தயார் செய்கிறேன் என கூறியிருக்கிறார்.

வரும் 26 ம் தேதி நடைபெற உள்ள இந்த விருந்து இணைய பேரப்பிள்ளைகளுக்கானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ( பர்கருக்கு 2 டாலர் கட்டணம் உண்டு) . இதற்காக என்றே சேட்பாப்பா.காம் ( www.sadpapaw.com.) எனும் இணையதளமும் அமைக்கப்பட்டு தாத்தாவின் பாசத்தை வெளிப்படுத்து டிஷர்ட் மற்றும் தொப்பி விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றால் பர்த்துக்கொள்ளுங்கள்.

———
நன்றி;தமிழ் இந்துவில் எழுதியது

2

உங்கள் லைசன்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்

உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது அந்த உரிமம் உள்ளூரில் செல்லுபடி ஆவது தவிர உலக நாடுகளில் வேறு எங்கெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது உங்களுக்குத்தெரியுமா?

இது சுவாரஸ்யமான கேள்வி மட்டும் அல்ல; அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அந்த நாடுகளில் தங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் செல்லுபடியாகுமா? என தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த விவரங்களை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? கேப்டன்கம்பேர்.காம் இணையதளம் இதை அழகாக செய்கிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார் இன்சூரன்ஸ் இணையதளமான இது, உலக நாடுகளின் வாகன உரிமத்தின் செல்வாக்கை தொடர்பான விவரங்களை அளிக்கிறது.

இந்த விவரங்களின் அடிப்படையில் பல்வேறு நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமம் எந்த அளவுக்கு சக்தி மிக்கது என்பதை பட்டியலிட்டுள்ளது. அதன்படி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தான் சக்திவாய்ந்த வாகன ஓட்டுனர் உரிமங்களை பெற்றுள்ளன. இந்நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமம் அநேகமாக முக்கிய நாடுகள் எல்லாவற்றிலும் செல்லுபடியாகிறது. இந்த இரு நாடுகளுக்கும் 97 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 96 புள்ளிகளுடன் ஜெர்மனி 2 வது இடத்திலும் ஸ்வீடன் 93 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும் உள்ளது. இந்தியாவின் வாகன ஓட்டுனர் உரிமத்திற்கு 70 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிகள் எப்படி கணக்கிடப்படுகின்றன ?ஒரு நாட்டின்வாகன ஓட்டுனர் உரிமம் எந்த எந்த நாடுகளில் எல்லாம் எந்த அளவு செல்லுபடியாகின்றன என்பதன் அடிப்படையில் புள்ளிகள் கொடுக்கப்பட்டு அவற்றின் கூட்டுத்தொகையே இப்படி செல்வாக்காக சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன் படி பார்த்தால் இந்திய வாகன ஓட்டுனர் உரிமம் சீனாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அங்கு புதிதாக தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் ரஷ்யாவில் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு சோதனையில் பங்கேற்காமல் அந்நாட்டு உரிமைத்தை பெற்றுக்கொள்ளலாம். அதே போல கனடாவில் ஆறு மாதங்களுக்கு செல்லும். அமெரிக்காவில் கொஞ்சம் கட்டுப்பாடுகளுடன் செல்லுபடியாகும். பிரேசில் நாட்டிலும் ஆறு மாதங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ஜெர்மனியிலும் இதே போல ஏற்றுக்கொள்ளப்படும்.
இப்படி இந்திய உரிமம் மற்ற நாடுகளில் எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதே போலவே மற்ற நாடுகளின் உரிமங்களின் செல்வாக்கையும் தெரிந்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டு உரிமத்திற்கு இந்தியா 12 மாத காலம் அனுமதி அளிக்கிறது.
உலக வரைபடத்தின் மீது இந்த விவரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

ஆனால் எல்லா உலக நாடுகள் பற்றிய தகவல்களும் கிடையாது. 36 முக்கிய நாடுகளின் விவரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன.
inஇந்த இணையதளத்தில் கூடுதல் சுவாரஸ்யம் என்ன என்றால் ஒவ்வொரு நாட்டின் போக்குவரத்து தொடர்பான சுவையான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
உதாரணத்திற்கு சீனாவில் பகலில் ஹெட்லை எரிந்தால் அபராதம் உண்டு. ஆஸ்திரேலியாவில் காரோட்டிச்சென்றால் பெட்ரோல் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அங்கு பெட்ரோல் பங்குககளை பலமைல் இடைவெளியில் தான் பார்க்க முடியும். அதே போல சராசரியாக ஆஸ்திரேலிய காரோட்டிகள் ஆண்டுக்குஇ 13,000 கி.மீ பயண,ம் செய்கின்றனர். இப்படி பல சுவாரஸ்யமான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: http://www.captaincompare.com.au/power-driving-licence/

indexபாஸ்போர்ட்; இதே போலவே உலக நாடுகளின் பாஸ்போர்ட்டின் செல்வாக்கை பாஸ்போர்ட் இண்டெக்ஸ் இணையதளம் அடையாளம் காட்டுகிறது. பாஸ்போர்ட்டின் செல்வாக்கு, குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம் அல்லது அங்கு போய் இறங்கியவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இந்த பட்டியலின் படி பிரிட்டனுக்கு தான் முதலிடம் . அந்நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தால் உலகில் 147 நாடுகளில் விசா வேண்டாம். அமெரிக்காவும் இதே செல்வாக்கை பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 59 வது இடம். 59 நாடுகளில் இந்தியர்கள் விசா பெறாமல் செல்லலாம்.
பாஸ்போர்ட் செல்வாக்கு பட்டியல் தனியே கொடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வரைபடத்தின் மீது கிளி செய்தும் இந்த விவரங்களை தெரிந்து கொள்ள வழி இருக்கிறது. மேலும் முகப்பு பக்கத்தில் வரிசையாக் எல்லா நாடுகளின் பாஸ்போர்ட்டும் இடம்பெற்றுள்ளன. அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.

இணையதள முகவரி: http://www.passportindex.org/index.php

——-

வானொலி நிலையங்களுக்கான தேடியந்திரம்

rவானொலி அந்த கால சங்கதியாக கருதப்பட்டால் என்ன? இன்னமும் வானொலிக்கான தேவையும் இருக்கிறது. வானொலியை நேசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் ( நானும் தான் !) . இத்தகைய வானொலி பிரியர்களுக்கு ரேடியோ-லொகேட்டர் உற்சாகம் தரும்.

ரேடியோ- லெகேட்டர் வானொலி நிலையங்களுக்கான தேடியந்திரம். அமெரிக்காவை பிரதானமாக கொண்டது என்றாலும் அகில உலகமும் முழுவதும் உள்ள ( நமது அகில இந்திய வானொலி உட்பட) வானொலி நிலையங்களை இதில் தேடலாம். அமெரிக்காவில் வசிப்பவர்கள் எனில் அந்நாட்டில் மாநிலவாரியாக வானொலி நிலையங்களை தேடலாம். நகரவாரியான தேடல் வசதியும் இருக்கிறது. கனடாவுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.
மற்ற நாட்டில் உள்ளவர்களும் கவலைப்பட வேண்டாம் ,தேடல் பட்டியலில் அவர்கள் நாட்டை தேர்வு செய்து வானொலி நிலயங்களை தேடலாம். இந்தியாவில் ஆகாச வாணி உட்பட 18 வானொலி நிலையங்கள் வருகிறது.முழுமையான பட்டியல் என்று சொல்வதற்கில்லை. விடுப்பட்ட் நிலையங்களில் பட்டியலில் சமர்பிக்கும் வசதியும் இருக்கிறது.

இந்த வானொலி நிலையங்களில் இணைய ஒலிபரப்பு உள்ளவற்றையும் அறியலாம். மொத்தம் 13,900 வானொலி நிலையங்கள் மற்றும் 9200 இணைய ஒலிபரப்புகள் பற்றிய தகவல் உள்ளன.

இந்திய வானொலிகளில் ரேடியோமிர்ச்சியின் இணையதளம் சிறப்பாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இணைய ஒலிப்ரப்பு வசதியையும் முக்கப்பு பக்கத்திலேயே பிரதானமாக அடையாளம் காட்டியுள்ளனர்.,

——-
வானொலி நிலையங்களை தேட:http://www.radio-locator.com/

ரேடியோ மிர்சி இணையதளம்: http://www.radiomirchi.com/

இரண்டு குறும்பதிவுகளின் கதை

cia]அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்திருப்பது (@CIA
) ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஒன்று தான். ரகசியங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற சி.ஐ.ஏ டிவிட்டரில் என்ன விதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ? அதிலும் வெளிப்படையானத்தன்மை மற்றும் உரையாடல் குணம் டிவிட்டரில் ஆதார குணம் எனும் போது சி.ஐ.ஏ வின் டிவிட்டர் வருகை எப்படி இருக்கும்?
இந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, சி.ஐ.ஏ வில் முதல் குறும்பதிவு குறிப்பிட்த்தக்க வகையில் அமைந்து கவனத்தை ஈர்க்கவே செய்தது.

‘ இது தான் எங்கள் முதல் குறும்பதிவு என்பதை நாங்கள் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை’
இது தான் அந்த முதல் குறும்பதிவு. பதிவான நாள் ஜூன் 6,2014.

சி.ஐ.வுக்கே உரிய தன்மையுடன் அமைந்த இந்த குறும்பதிவு , சி.ஐ.ஏவின் டிவிட்டர் வருகையை விட அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறும்பதிவில் இருந்த கேலியும் கிண்டலும் கலந்த நகைச்சுவை டிவிட்டருக்கு உகந்தது என்றால் , இந்த நகைச்சுவை திரை விலக்கிப்பார்த்தால் புரியக்கூடிய சி.ஐ.ஏத்தனம் குரூரமாக புன்னகைக்கும்.

உண்மையில் இது சி.ஐ.ஏ தன்னையே பகடி செய்து கொள்ளும் வகையிலான குறும்பதிவு.
ஒரு உளவு அமைப்பிடம் இருந்து வெளிப்படையான தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றாலும் ,சி.ஐ.வின் செயல்பாடுகள் ரகசியத்தின் உச்சம் தொட்டவை. 1970 களில் அமெரிக்காவில் , ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் மூழ்க அடிக்கப்பட்ட்து தொடர்பாக ஒரு சர்ச்சை வெடித்த போது சி.ஐ.ஏ தன் மீதான குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதித்த்து. அப்போது இந்த பிரச்ச்னை பற்றி விடாமல் கேட்ட நிருபருக்கு சி.ஐ.ஏ அளித்த பதில் மிகவும் பிரபலமானது.

‘ இந்த குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை”
இப்படி அளிக்கப்படும் பதிலை எப்படி புரிந்து கொள்வது. அரசு அமைப்பின் மூர்கத்தனம் என்றா? அல்லது சர்ச்சையில் இருந்து நழுவும் சாமர்த்தியம் என்றா?
இதே பதிலை நினைவுப்படுத்தும் வகையில் டிவிட்டருக்கு சற்றே மாற்றம் செய்து சி.ஐ.ஏ தனது முதல் குறும்பதிவை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தது.

இந்த குறும்பதிவு உடனடியாக மறுகுறும்பதிவிடப்பட்டு( ரிடிவீட்) , அபிமானமும் தெரிவிக்கப்பட்ட்து( பேவரைட்). இரண்டின் எண்ணிக்கையுமே பல்லாயிரக்கணக்கில் பெருகி சில லட்சங்களை தொட்டது.
ஆக, இப்படியாக சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு உலகை கவர்ந்த முதல் குறும்பதிவானது.
ஆனால் சி.ஐ.ஏவின் டிவிட்டர் வருகையை எல்லோருமே கைத்தட்டி வரவேற்கவில்லை. பல பதில் குறும்பதிவுகள் அதன் செயல்பாடுகள் மீதான கடுமையான விமர்சனமாக அமைந்திருந்தன. இவற்றில் பல நேரடி தாக்குதலாக இல்லாமல் சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு பாணியிலேயே நக்கலும் நையாண்டியுமாக, ஆனால் அதன் செயலபாடுகளை நச்சென சுட்டிக்காட்டும் வகையில் இருந்தன.

“ இனி சி.ஐ.ஏ டிவிட்டர் கணக்கில் இருந்து உலகில் எங்கோ உள்ள பகுதிகளில் இருந்தெல்லாம் அருமையான சித்தரவதை படங்களை எதிர்பார்க்கலாம்’ என்று ஒரு டிவிட்டர் பயனாளி (@madmanweb ) குறிப்பிட்டிருந்தார்.
சி.ஐ.ஏ என்னை எல்லாம் பின் தொடர பாடுபட வேண்டாம், அவர்களின் சகோதர அமைப்பான என்.எஸ்.ஏ அதை செய்து கொண்டிருக்கிறது’என இன்னொருவர் (@AKBakota ) குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் சில குறும்பதிவுகள் ஈரான் புரட்சி மற்றும் சிலியின் ஆட்சி கவிழ்ப்பு ஆகியவற்றில் சி.ஐ.ஏ க்கு இருப்பதாக சொல்லப்படும் பங்குகளை இடித்துக்காட்டின.

இந்த விமர்சனங்களை மீற
ி சில நாட்களில் எல்லாம் சி.ஐ.ஏ வின் பின் தொடர்பாளர் எண்ணிக்கை சில லட்சங்களை தொட்டது.
ஒரு மக்கள் தொடர்பு முயற்சியாக தான் சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்துள்ளது. இதே காலத்தில் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களும் சி.ஐ.ஏ சார்பில் அமைக்கப்பட்டன.
ஆனால், சி.ஐ.ஏவை பின் தொடர்பவர்கள் அதனிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றனர்?
நிற்க, சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு மட்டும் அல்ல ,அதன் டிவிட்டர் பயோவும் கூட கவனிக்கத்தக்கதாக தான் இருக்கிறது.
“ நாங்கள் தேசத்தின் முதல் பாதுகாப்பு அறன். மற்றவர்களால் செய்யமுடியாததை செய்கிறோம். மற்றவர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு செல்கிறோம்’
உள்ளடக்கத்தில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அருமையான டிவிட்டர் பயோ இல்லையா!

இது இன்னொரு முதல்குறும்பதிவு

சி.ஐ.ஏ பற்றி குறிப்பிட்டு விட்டு, எழுத்தாளர் ஜார்ஜ் .ஆர்.ஆர் .மார்டின் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது தான். ஆனால் சி.ஐ.ஏ வருகை தந்த அதே காலத்தில் டிவிட்டரில் நுழைந்ததாலும் , மார்டினுடைய முதல் குறும்பதிவும் கவனத்திற்குரியதாக இருந்தாதாலும் இங்கே மார்டின் டிவிட்டர் வருகை பற்றி குறிப்பிடலாம். அமெரிக்க தொலைக்காட்சிகளில் கலக்கி கொண்டிருக்கும் கேம் ஆப் த்ரொன்ஸ் தொடருக்கான மூலக்கதை வடிவை தந்தவரும் ,லயித்து மகிழக்கூடிய கற்பனை உலகை தனது நாவல்களில் சிருஷ்டிப்பவராக பாராட்ட்டப்படும் எழுத்தாளரான மார்டினின் முதல் குறும்பதிவும் மகத்தானதாகவே இருந்தது. ஜிஆர்.எம் ஸ்பீகிங் (@GRRMspeaking
) எனும் முகவரியில் அமைந்திருந்த தனது டிவிட்டர் பக்கத்தில் மார்டினின் முதல் குறும்பதிவு இப்படி இருந்தது:
‘நான் அடிக்கடி டிவீட் செய்யமாட்டேன். தயவுசெய்து எனது லைவ்ஜர்னல் (வலைப்பதிவு) பக்கத்தை பாருங்கள்’ .
எழுத்தாளர்கள் டிவிட்டருக்கு வரும் போது வாசகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக பெரும்பாலான எழுத்தாளர்கள் குறும்பதிவுகளாக தங்கள் எண்ணங்களை அருவி போல் எல்லாம் பகிர்வதில்லை.

இந்த ஏமாற்றத்தை அளிக்காமல் இருக்கும் வகையில் மார்டின் முதல் குறும்பதிவிலேயே அதிகம் குறும்பதிவு செய்யமாட்டேன் என கூறிவிட்டார். அதிகம் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக தனது வலைப்பதிவையும் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் உண்மையிலேயே அருமையான முதல் குறும்பதிவு தான். அவரது பயோவும் கூட , தயவுசெய்து லைவ்ஜர்னலில் என்னை தொடருங்கள் என்றே அமைந்திருந்தது.
ஆனால் , அடிக்கடி குறும்பதிவிட மாட்டேன் எனும் அறிமுகத்தை மீறி , எழுத்தாளர் மார்டினுக்கு டிவிட்டரில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் சில நாட்களில் கிடைத்தனர்.

ஆக, ஒரே குறும்பதிவில் லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்களை அள்ளியவர்கள் பட்டியலில் திரைப்ப நட்சத்திரங்களுக்கு மட்டும் தான் இடம் கிடைக்கவேண்டுமா என்ன? மார்டின் போன்ற நட்சத்திர எழுத்தாளர்களுக்கும் அந்த பெருமை உண்டு என டிவிட்டர் உலகம் காட்டியிருக்கிறது.

இணையத்தில் டாப் டென் நாடுகள்.

ChartOfTheDay_1551_41_Million_Americans_Are_Digital_Natives_nபொருளாரத்திலும் சரி தொழில் வளர்ச்சியிலும் சரி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் இப்போது போட்டி. இந்த போட்டியில் பல துறைகளில் சீனா தான் முந்தியிருக்கிறது. இணைய பயன்பாட்டிலும் சீனாவே இந்தியாவை விட முன்னணியில் இருக்கிறது.அதாவது இணைய பயனாளிகள் எண்ணிக்கையை பொருத்தவரை சீனாவே முன்னணியில் இருக்கிறது.
சீனாவில் 75.2 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியாவை பொருத்தவரை இந்த எண்ணிக்கை 22.7 கோடியாகவே இருக்கிறது.
ஸ்டாஸ்டா எனும் புள்ளி விவர இணையதளம் வெளியிட்டுள்ள இணைய பயன்பாட்டில் பத்து முன்னணி நாடுகளின் பட்டியலில் தா இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. (41.3 கோடி பயனாளிகள் )
இணைய பயன்பாட்டில் முன்னணி பத்து நாடுகளின் பட்டியல்: http://www.statista.com/topics/1145/internet-usage-worldwide/chart/1551/41-million-americans-are-digital-natives/