பிரமிட் தொடர்பான புதிய கண்டுபிடிப்பும், கீழடி கேள்விகளும்!

2_khufus-aerial-3d-cut-view-with-scanpyramids-big-void-1 உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடில் மறைந்திருக்கும் வெற்றிடம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வெற்றிடம் தானே என அலட்சியம் செய்வதற்கில்லை, ஆய்வுலகை பொருத்தவரை இது முக்கிய செய்தி. பிரமிடுகளில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களுக்கான திறவுகோளாக இது அமையலாம் என கருதப்படுகிறது. அதனால் தான், இந்த கண்டுபிடிப்பு தொடர்பான செய்தியை ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும் மிகுந்த ஆர்வத்தோடு விவாதிக்கத்துவங்கியுள்ளனர்.

இந்த ஆய்வு செய்தியை அறிந்து கொண்டால் பிரமிடுகள் மீது கூடுதல் ஆர்வம் உண்டாகும். அப்படியே கிடப்பட்டில் போடப்பட்டிருக்கும் நம் கீழை ஆய்வு தொடர்பாக வேதனையும் உண்டாகும். பிரமிடுக்கும், கீழடிக்கும் நேரடி தொடர்பில்லை என்றாலும், இந்த ஆய்வு கீழடி பற்றி ஏங்க வைக்கும். ஏனெனில் பிரமிடுகளுக்குள் ஒளிந்திருக்கும் வரலாற்று ரகசியங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வர விடாமல் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். நாமோ கீழடியில் சரித்திர பொக்கிஷம் புதைந்து கிடக்கலாம் என தெரிந்திருந்தும் ஆய்வில் அக்கறை காட்டாமல் இருக்கிறோம்.

எல்லாம் சரி, முதலில் பிரமிட்டில் அப்படி என்ன கண்டுபிடித்திருக்கின்றனர் என்று பார்க்கலாம். ஒரு வெற்றிடம் அல்லது நீளமான குகை போன்ற அமைப்பு பிரமிட்டில் இருக்கலாம் என்பது தான் இந்த கண்டுபிடிப்பு. இது கூட உறுதியான கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது, ஒரு அறிவியல் அனுமானம்! ஆனால் காஸ்மிக் கதிர்களை கொண்டு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த அனுமானத்திற்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறது. அதனாலே முக்கியமாக அமைகிறது.

எகிப்து நாகரீகம்

பிரமிடுகள் எகிப்தின் தலைநகர் கெய்ரோ அருகே இருக்கும், கிஸா பகுதியில் அமைந்துள்ளன. சுமார் 4,500 ஆண்டுகளுக்கு ,முன் இவை கட்டப்பட்டதாக கருதுகின்றன. அப்போதையை எகிப்து அரச குடும்பத்தினரின் கடைசி இருப்பிடமாக இவை அமைக்கப்பட்டன. பிரமிடில் மன்னரின் கல்லறை, மகாராணியின் கல்லறை மற்றும் இதர அம்சங்கள் உள்ளன. இப்படி பல விஷயங்கள் வரலாற்றாசிரியர்கள் மூலம் தெரிய வந்திருந்தாலும், பலவிதங்களில் இன்னமும் பிரமிடுகள் புரியாத புதிராக இருக்கின்றன. பிரமிடுகள் எதற்காக அமைக்கப்பட்ட என்று தெரிந்திருந்தாலும், அவற்றுக்குள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பது தெரியாது. இதுவரை கண்டறியப்பட்டது தவிர அதனுள் ரகசிய அறைகளும், வேறு பல சங்கதிகளும் இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் பிரமிடுகள் மூடப்பட்டிருப்பதால், அவற்றுக்குள் புகுந்து பார்ப்பதெல்லாம் சாத்தியமில்லை என்பதால் இவை எல்லாம் அனுமானங்களாக மட்டுமே இருக்கின்றன.

இந்த அனுமானங்களுக்குள் தான் காஸ்மிக் கதிர்கள் துணையோடு எட்டிப்பார்த்து முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். பிரமிடுக்குள் மிகப்பெரிய வெற்றிடம் இருக்கிறது என்பது தான் அந்த கண்டுபிடிப்பு. சும்மாயில்லை, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் விஞ்ஞானிகளை கொண்ட குழு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்து இந்த வெற்றிடத்தை கண்டறிந்துள்ளது.

உள்ளே உறங்கும் ரகசியம்

FILE PHOTO: A group of camels and horses stand idle in front of the Great Pyramids awaiting tourists in Giza, Egypt on March 29, 2017. REUTERS/Mohamed Abd El Ghany/File Photo

பிரமிடுகளில் மிகப்பெரியதாக கருதப்படும் கிரேட் பிரமிட் என சொல்லப்படும் கூபு பிரமிட்டில் இந்த வெற்றிடம் அமைந்திருக்கிறது. பிரமிடுகள் தொடர்பான வியப்புகளில் ஒன்று அவை எப்படி கட்டப்பட்டிருக்கும் எனும் கேள்வி தான். விடை தெரியாத கேள்வி என வைத்துக்கொள்ளலாம். பிரமிட்டின் கட்டுமானம் மற்றும் அதன் விஸ்தாரம் மாபெரும் அதிசயம் தான். கிரேட் பிரமிட்டின் அடிப்பகுதி 5 ஹெக்டேர் பரப்பை கொண்டிருக்கிறது. 150 மீட்டர் உயரத்தோடு, 5 மில்லியன் டன் எடை கொண்டதாக கருதப்படுகிறது. எல்லாம் கற்களால் ஆனவை. இத்தனை எடை கொண்ட கட்டுமானத்தை, 4500 ஆண்டுகளுக்கு முன் எப்படி கட்டி முடித்தார்கள் என்பது ஆச்சர்யம் தான்.

இந்த ஆச்சர்யத்திற்கு தான் விஞ்ஞானிகள் விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாகவே ஸ்கேன் பிரமிட் எனும் ஆய்வு திட்டம் மேற்கொள்ளப்பட்டு பிரமிடுக்குள் இருப்பதாக அறியப்படும் கிராண்ட் காலெரிக்கு மேல் வெற்றிடம் அல்லது ஒரு குகை போன்ற பகுதி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த குகை அமைப்பு தொடர்பாக மேலதிக விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இது இருப்பது உறுதியானதே முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. இதன் நோக்கம் அல்லது பயன்பாடு என்ன என்பது இனிமேல் தான் ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்போதைக்கு, ராட்சத கற்களின் எடை, உள்ளே இருக்கும் கல்லறைகள் உள்ளிட்டவற்றை தாக்காமல் இருப்பதற்காக இது போல அமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கட்டுமானத்தின் போது திட்டமிட்டு இந்த வெற்றிடத்தை அமைத்திருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இருள் குகை

எப்படியோ, பிரமிடுக்குள் ஒரு குகை போன்ற அமைப்பு இருப்பது உறுதியாகி இருப்பதால், இது குறித்து மேலும் ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். பிரமிடுக்குள் மெலிதாக துளை போட்டி அதற்குள் சின்னதாக ஒரு ரோபோவை அனுப்பி ஆய்வு செய்யலாமா என உத்தேசித்து எகிப்து அரசிடம் அனுமதி கேட்டிருக்கின்றனர்.

பிரமிடுக்குள் கை வைக்க அனுமதி அளிக்கப்படுமா? என்பது சந்தேகம் தான். சில நூற்றாண்டுகளுக்கு முன் பிரமிடுக்குள் குண்டு வைத்தெல்லாம் உள்ளே சென்று ஆய்வு செய்திருக்கின்றனர். ஆனால் இப்போது இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தை அப்படி எல்லாம் அஜாக்கிரதையாக கையாள மாட்டார்கள். வெகு காலம் வரை மனிதன் உண்டாக்கிய மிகப்பெரிய கட்டுமானமாக கருதப்பட்ட இந்த சரித்திர பொக்கிஷத்தை அதன் பழைய வடிவத்தில் தொடர்ந்து பாதுகாப்பதே முக்கியம்.

அதனால், தான் அறிவியல் துணையோடு ஆய்வு நடத்திக்கொண்டிருக்கின்றனர். எப்படி என பார்க்கலாம்.

பிரமிடுக்குள் மேலும் பல ரகசிய அடுக்குகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வந்தாலும், அதற்குள் சென்று பார்க்க வழி இல்லாமல் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பிரமிடுக்குள் வேறுபாடுகள் இருக்கலாம் என தெரிய வந்தது. ஆனால் அப்போது துளையிட்டு பார்த்தும் அறை போன்ற எதுவும் கண்டறியப்படவில்லை. ’

இந்த நிலையில் ஸ்கேன் பிரமிட் ஆய்வுக்குழு, பிரமிட்டை நவீன முறையில் ஆய்வு செய்தது. மனித உடலை எக்ஸ் ரே ஆய்வுக்கு உட்படுத்துவது போல பிரமிட்டை காஸ்மிக் கதிர் ஆய்வுக்கு உள்ளாக்கியது. விண்வெளியில் இருந்து காஸ்மிக் கதிர்கள் மழை போல பூமி மீது பொழிந்து கொண்டே இருக்கிறது. இந்த கதிர்கள் காற்று மூலக்கூறுகளை சந்திக்கும் போது, முவான் எனப்படும் அணுத்துகள்களை உருவாக்குகின்றன. ஒளியை விட வேகமாக பயணிக்க கூடிய முவான்கள் பூமியின் அடி ஆழம் வரை ஊடுருவி செல்லக்கூடியவை. இவற்றில் சில பாறைகளால் உறிஞ்சப்பட்டு விடுவதும் உண்டு. இருப்பிடத்தின் அடர்த்திக்கு ஏற்ப இது அமையலாம்.

நவீன ஆய்வு

முவான்களின் இந்த குணத்தை கொண்டு தான் பூமியின் ரகசியங்களை ஆய்வு செய்கின்றனர். எரிமலை அல்லது பனிப்பாறைகளின் தன்மையை அறிய அவற்றை முவான் டிடெக்டர் கருவுகள் மூலம் ஆய்வு செய்கின்றனர். இந்த கருவியில் சிக்கும் முவான்களின் போக்கை கொண்டு எரிமலை அல்லது பனிப்பாறையின் உள் அமைப்புகள் குறித்து அறிய முடிகிறது. ஜப்பான் அணு உலையிலும் இது போலவே ஆய்வு செய்தனர்.

அதாவது முவான்கள் உள்ளே நுழைந்து வெளியே வரும் விதத்தை வைத்து அடர்த்தியின் அளவை அனுமானிக்கலாம். இப்படி தான் பிரமிட் அமைப்பில் முவான்களை பல மாதங்களாக பல கோணங்களில் சேகரித்து அவற்றின் போக்கை வைத்து, ராட்சத வெற்றிடம் உள்ளே இருப்பதை கண்டறிந்துள்ளனர். முவான்கள் தவிர, இன்பிராரெட் தெர்மோகிராபி, மாடுலேடட் தெர்மோகிராபி ஆகிய நுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளனர். அதிக ஊடுருவல் இல்லாத ஆய்வு முறை இவை. எனவே கட்டுமானத்தின் மூலத்தன்மைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அதன் உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஆக, இந்த கண்டுபிடிப்பை அறிவியல் சாதனை என்று தான் சொல்ல வேண்டும். பிரமிடுகள் பற்றி விடாமல் ஆய்வு செய்யும் இந்த வேட்கையின் விளைவாகவே இப்போது, பிரமிடு உள்ளுக்குள் உறங்கி கொண்டிருக்கும் ரகசியங்கள் தொடர்பாக முக்கிய தடையம் கிடைத்துள்ளது.

இப்போது கீழடிக்கு வருவோம். தமிழர்களின் பண்டை கால கலாச்சார கூறுகளுக்கான வரலாற்று ஆதாரங்கள் கீழடியில் பொந்திந்து கிடக்கலாம் என கருதப்படுகிறது. சங்க இலக்கியம் மூலம் தெரிய வந்துள்ள வரலாற்று காலத்தின் தடையங்களையும், நாகரீக கூறுகளையும் இங்கே அகழ்ந்தெடுக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. ஆனாலும் என்ன, நாம் ஆய்வை தொடராமல் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறோம். அதிலும் நவீன அறிவியல் ஆய்வுக்கான நவீன உத்திகளையும், உபகரணங்களையும் உருவாக்கி அளித்திருக்கும் நிலையில் நாம் அவற்றை பயன்படுத்தி வரலாற்று பெருமையை உறுதிப்படுத்திக்கொள்ள வழியில்லாமல் இருப்பதை என்னவென சொல்வது!

பிரமிட் ஆய்வு கண்டுபிடிப்பு பற்றிய செய்தி: http://www.bbc.com/news/science-environment-41845445

பிரமிட் ஆய்வு பற்றிய விவரம்: http://www.scanpyramids.org/assets/components/pyramids/pdfs/About_ScanPyramids-en.pdf

 • நன்றி; மின்னம்பலம் இணைய இதழில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “பிரமிட் தொடர்பான புதிய கண்டுபிடிப்பும், கீழடி கேள்விகளும்!

 1. Ravichandran R

  சிம்மன் சார் அருமையான தகவல். நாம் எப்போதுமே மேற்கிலிருந்து ஒரு அழுத்தம் எந்தவிதத்திலாவது வந்தாலொழிய எந்த பணியையும் முன்னெடுக்க மாட்டோம்!

  Reply
 2. Suresh

  Really superb. You have done a wonderful job. Thanks

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *