இணையம் இல்லாத இடத்திலும் செயல்படும் ’பயர்சாட்’ செயலி

unnamedஇணைய வசதி அடிப்படை உரிமை என்று சொல்லப்படுவதை எல்லாம் விட்டுத்தள்ளங்கள். இணைய வசதி முடக்கப்படுவது அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பது தான் நிதர்சனம். இந்தியாவின் பல பகுதிகளில் பல காரணங்களுக்காக இணைய வசதி முடக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் இணையம் முடக்கப்பட்ட நிலை வெற்றிகரமாக (!) 100 நாட்களை கடந்திருக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே இணையம் முடக்கப்படுவதாக அரசு தரப்பில் காரணம் சொல்லப்பட்டாலும், இந்த கருத்து விவாதத்திற்கு உரியது. இணைய முடக்கம் நடைமுறையில் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய இடர்களும், இன்னல்களும் இன்னும் முக்கியமானது. காஷ்மீரையே எடுத்துக்கொள்வோம், அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டதால், தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் திண்டாடுகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்கள், வதந்தி பரவும் இடங்கள், போராட்டம் வெடிக்கும் பகுதிகள் என பல இடங்களில் இணையவசதி தற்காலிகமாக முடக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இது தான் புதிய இந்தியாவின் யதார்த்தம்.

டிஜிட்டல் இந்தியாவை ஒரு கொள்கையாக முன்னிறுத்தும் ஒரு தேசத்தில், இணையவசதி முடக்கப்படும் சாத்தியம் ஒரு மோசமான முரண் நகை தான்.

இந்த பின்னணியில் நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய செயலிகளில் ஒன்றாக ’பயர்சாட்’ (FireChat ) இருக்கிறது. பயர்சாட், ஒன் டு ஒன் சாட் வசதி அளிக்கும் செயலியாகும். அதாவது, ஒருவருக்கு ஒருவர் நேரடியாக அரட்டை அடிக்க வழி செய்யும் செயலி. ஆனால் வழக்கமாக அறியப்பட்ட வாட்ஸ் அப் போன்ற செயலிகளில் இருந்து பயர்சாட் வேறுபட்டது மட்டும் அல்ல மிகவும் விஷேசமானது.

இணைய வசதி இல்லாத இடத்திலும் பயன்படுத்தலாம் என்பது தான் பயர்சாட் செயலியின் தனித்தன்மை. ஆம், பயர்சாட் செயலி இணைய இணைப்பு இல்லாமலேயே செயல்படக்கூடியது. போனில் உள்ள வைபை மற்றும் புளுடூத் வசதியை அடிப்படையாக கொண்டு இயங்குவதால் இந்த செயலிக்கு இணைய இணைப்பு தேவையில்லை.

நீங்கள் உலக நடப்புகளை கவனிப்பவர் என்றால், ஹாங்காங்கில் தொடர்ந்து நடைபெற்றும் வரும் ஜனநாயக போராட்டத்தை அறிந்திருக்கலாம். ஹாங்காங் போராட்டக்காரர்கள், அரசின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு, தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள அதிகம் பயன்படுத்திய செயலிகளில் பயர்சாட்டும் ஒன்று.

இணையம் இல்லாமல் எப்படி ஒரு செயலி இயங்கும் எனும் சந்தேகம் உங்களுக்கு உண்டாகலாம். இந்த சந்தேகத்திற்கான பதில் மெஷ் நெட்வொர்க் எனும் தொழில்நுட்பத்தில் இருக்கிறது. அதாவது அருகாமையில் இருப்பவர்கள் போன்கள் மூலம் உருவாக்கி கொள்ளும் வலைப்பின்னல் என எளிமையாக புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே சொன்னபடி, போனில் உள்ள வைபை மற்றும் புளூடூத் வசதியை மையமாக கொண்டு இந்த வலைப்பின்னல் வசதி அமைகிறது.

இணையம் இல்லாமலேயே பயன்படுத்தலாம் என்றாலும் பயர்சாட் வசதியில் சில குறைகளும் இருக்கின்றன. இந்த செயலியை அருகாமையில் மட்டும் தான் பயன்படுத்த முடியும். உத்தேசமாக 200 அடி தொலைவுக்குள் இருப்பவர்களுடன் தான் இந்த செயலி மூலம் தொடர்பு கொள்ள முடியும். எனவே, குறிப்பிட்ட எல்லைக்குள் தான் இந்த செயலி வேலை செய்யும்.

ஆனால் ஒன்று, இந்த செயலியில் எத்தனை பேர் இணைகின்றனரோ அந்த அளவுக்கு இதன் வீச்சு அதிகரிக்கும். எனவே, அருகாமை எல்லையில் நூற்றுக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்தும் பட்சத்தில், அதன் பயனாக கொஞ்சம் தொலைவில் உள்ளவர்களையும் இதன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

hkஇந்த செயலியின் மேலும் ஒரு பாதகம், இதில் பகிரப்படும் தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படுவதில்லை என்பதால், இதில் ரகசியம் கிடையாது. எனவே போராட்டக்காரர்கள் இந்த செயலியை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆனால், தகவல் தொடர்பு முடக்கப்படும் இடங்களில் இந்த செயலி பேரூதவியாக இருக்கும்.

போராட்ட களங்களில் என்றில்லை, பேரிடர் பாதிப்புகளால் இணையம் செயல்படாமல் போகும் இடங்களிலும் இந்த செயலியை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்,. பயர்சாட் செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் அதில் ஒரு கணக்கு துவங்கி பயன்படுத்தலாம். அரட்டை அறைகளை பொதுவெளியில் அல்லது தனிப்பட்டதாக உருவாக்கி கொள்ளலாம்,

இந்தியாவில், குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான எதிர்ப்பை அடுத்து பல இடங்களில் இணையம் முடக்கப்படும் சூழலில், பல்வேறு இணையதளங்களும், செய்தி தளங்களும், பயர்சாட் செயலியை அறிமுகம் செய்து வருகின்றன. ஓபன் கார்டன் எனும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.

ஆனால், 2014 ம் ஆண்டிலேயே பயர்சாட் செயலி இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டதாக குவார்ட்ஸ் இணைய இதழின் பழைய கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. ஹாங்காங் போராட்டத்திற்கு முன்பாகவே இந்தியாவில் பயர்சாட் பரவலாக பயன்படுத்தப்பட்டதாகவும், மோசமான இணைய வசதி பாதிப்பால் இணையம் செயல்படாத பகுதிகளில் இந்த செயலி பயன்படுத்தப்பட்டதாக அந்த கட்டுரை தெரிவிக்கிறது.

போதிய இணைய வசதி இல்லாத காரணத்தால் பயன்படுத்த நேர்த பயர்சாட் செயலியை, இணைய முடக்கம் காரணமாக பயன்படுத்தும் நிலைக்கு நாம் முன்னேறி வந்திருக்கிறோம். வாழ்க டிஜிட்டல் இந்தியா!

பயர்சாட் செயலி இணைய தளம்: https://www.opengarden.com/

பயர்சாட் பற்றிய குவார்ட்ஸ் இதழ் கட்டுரை;

பயர்சாட் பற்றிய இந்தியா டுடே அறிமுகம்: https://www.indiatoday.in/technology/news/story/meet-firechat-an-app-people-use-when-internet-is-blocked-or-network-not-available-1628903-2019-12-17

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.