பயண ஏற்பாட்டிற்கு உதவும் இணையதளங்கள்

travel-planning-bingeclockகோடை விடுமுறைக்கான சுற்றுலா பயணம் சிறப்பாக அமைவது அதை திட்டமிடுவதிலும் தான் இருக்கிறது. எனவே, சுற்றுலா செல்வதற்கான இடத்தை தேர்வு செய்வதில் காட்டும் கவனத்தை, திட்டமிடுவதலிலும் காண்பிக்க வேண்டும். முன்கூட்டியே சரியாக திட்டமிடுவதன் மூலம் பயணத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களையும், தேவையில்லாத அலைச்சலகளையும் தவிர்க்கலாம் என்பதோடு, சுற்றுலா செல்லும் இடத்தையும் முழுமையாக சுற்றிப்பார்க்கலாம். அதோடு முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களையும் தவறவிடாமல் இருக்கலாம்.

இணையம் மூலமே இந்த திட்டமிடலை கச்சிதமாக மேற்கொள்ளலாம். இதற்கு உதவக்கூடிய புதுமையான இணையதளங்கள் மற்றும் செயலிகள் பற்றி ஒரு பார்வை:

சைஜிக் டிராவல் (https://travel.sygic.com)

ஒரு பயண ஏற்பாட்டு நிறுவனம் அல்லது பயண வழிகாட்டி உங்களுக்கான தனிப்பட்ட சுற்றுலா பயண திட்டத்தை வகுத்துக்கொடுத்தால் எப்படி இருக்கும். சைஜி டிராவல் இணையதளம் இதை தான் சாத்தியமாக்குகிறது. பயண திட்டமிடலுக்காக இந்த தளத்தை பயன்படுத்துவது எளிதானது மட்டும் அல்ல சுவாரஸ்யமானது.

இந்த தளத்தில் நுழந்ததுமே, முதலில் நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள் எனும் கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு உதவும் வகையில், உலக சுற்றுலா நகரங்களின் பெயர்களும் வரிசையாக தோன்றுகின்றன. அவற்றில் விருப்பமான நகரை தேர்வு செய்ததும் பயணத்திற்கான கால அளவை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அந்த கால அளவிற்கு ஏற்ப சுற்றிப்பார்ப்பதற்கான திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.

இதனிடையே பயணத்தை துவங்கும் நாள், தங்குமிடம் போன்றவற்றையும் தேர்வு செய்து கொள்ளும் வசதி அளிக்கப்படுகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில் நமக்கான பயண திட்டம் வகுத்து கொடுக்கப்படுகிறது. அதை வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம். பயண திட்டத்தை உருவாக்க கூகுள் அல்லது பேஸ்புக் நுழைவு வசதியையும் பயன்படுத்தலாம். இதன் பிறகு வரைபடத்தில் சுற்றுலா நகரங்கள் தோன்றுகின்றன. எந்த நகரத்தை கிளிக் செய்தாலும் அந்நகரில் பார்க்க கூடிய இடங்களை இடது பக்கத்தில் பார்க்கலாம். இந்த நகரங்கள் தொடர்பான தங்குமிடங்கள், ரெஸ்டாரண்ட்கள், அருங்காட்சியகங்கள், ஷாப்பிங் மையங்கள் போன்ற தகவல்களையும் அலசி ஆராயலாம். மேலும் பல காரணிகள் அடிப்படையிலும் வசதிகளையும், சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவைத்தவிர சுற்றுலா மையங்கள் பற்றிய தகவல்களை தேடும் வசதியும் இருக்கிறது. நமக்கான பயண திட்டத்தை உருவாக்கி கொண்ட பிறகு அதை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

பயண திட்டத்தை வரைபடத்தில் ஒரு பறவை பார்வையாக பார்க்கும் வசதியும் இருக்கிறது. நாம் செல்ல விரும்பும் நகரங்கள் பற்றிய கூடுதல் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடனும் பயண திட்டமிடலை பகிர்ந்து கொள்ளலாம். இந்த சேவைக்கான ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் செயலி வடிவமும் இருக்கின்றன.

traபிளின்க் (https://www.blinktravel.guide/ )

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் செயலி வடிவில் சேவை வழங்கும் பிளின்க் மூலம் சுற்றுலா பயண திட்டமிடல் தொடர்பான ஆய்வை சுவாரஸ்யமாக மேற்கொள்ளலாம். சுற்றுலா நகரங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அந்நகரங்களுக்கான பயண வழிகாட்டி ஆகிய இரண்டுமே இந்த செயலியில் உள்ளன.

முதலில் சுற்றுலா செல்ல விரும்பும் நகரை தேர்வு செய்ய வேண்டும். இடத்தை தேர்வு செய்ததுமே அந்த நகரம் தொடர்பான சுருக்கமான அறிமுகத்துடன் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய தகவல்கள் தோன்றுகின்றன. தகவல்கள் புகைப்பட அட்டை வடிவில் தோன்றுகின்றன. எனவே பிடித்தமான இடம் எனில் அதை அப்படியே சேமித்துக்கொள்ளலாம். இல்லை எனில் அந்த அட்டையை விலக்கி விட்டு அடுத்த இடத்தை பார்வையிடலாம்.

குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்ததுமே அந்த இடத்தின் சிறப்புகள் புகைப்படங்களுடன் பட்டியலிடப்படுகிறது. அருகாமையில் பார்க்க வேண்டிய இடங்களும் பட்டியலிடப்படுகின்றன. அந்த இடத்திற்கான தொடர்பு முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு நகரமாக ஆய்வு மேற்கொள்ளலாம். இதன் வழிகாட்டி பகுதியும் விரிவாக உள்ளது.

டிரிப்டிரிப் (https://triptrip.io/)

முன்னோட்ட வடிவில் உள்ள இந்த இணையதளுமும் சுற்றுலா பயணங்களை திட்டமிட உதவுகிறது. இந்த தளம் மூலம் உங்கள் அடுத்த பயணத்தை அழகாக திட்டமிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட பயண திட்டங்களை பார்வையிடும் வசதி மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை புக் செய்யும் வசதி ஆகிய சேவைகள் அடுத்த கட்டமாக அறிமுகமாக உள்ளன. பயணங்களை காட்சிரீதியாக உருவகப்படுத்தி பார்க்கும் வசதியும் உள்ளது. மொத்த பயணத்தையும் பலகைகளாக வரிசைப்படுத்தி பார்க்கலாம். புதிய செயலி என்பதால் இதன் பரிந்துரைகள் அத்தனை மகத்தானவை என்று சொல்வதற்கில்லை. ஆனால் பயனுள்ள சேவையாகவே தோன்றுகிறது.

செக் அண்ட் பேக் (http://checkandpack.com/ )

பயணத்திற்கான திட்டமிடல் போலவே பயணத்தின் போது எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்களும் மிகவும் முக்கியம். மிகவும் தேவையான பொருட்களை மறந்துவிட்டால் பயணத்தில் திண்டாட வேண்டியிருக்கலாம். இந்த நிலை வராமல், பயணத்திற்கு தேவையான பொருட்களை பட்டியலிட உதவுகிறது செக் அண்ட் பேக் இணையதளம். இதில் பயணம் செல்லும் இடம் மற்றும் பயணத்தின் தன்மை ஆகிய விவரங்களை சமர்பித்தால் அந்த பயணத்திற்கான பொருட்களின் பட்டியலை பரிந்துரைக்கிறது. துணிமணிகளில் துவங்கி, உணவு, பொழுதுபோக்கு அம்சங்கள், மருத்துவ சாதனங்கள், முதலுதவி பொருட்கள் என அனைத்தையும் பட்டியலிடுகிறது.

இந்த பட்டியல் தவிர பயண ஏற்பாடு தொடர்பான வழிகாட்டி கட்டுரைகளையும் வாசிக்கலாம். கப்பல் பயணத்திற்கான வழிகாட்டி உள்பட பலவிதமான வழிகாட்டி கட்டுரைகள் இருக்கின்றன.

என்ன பார்க்கலாம், படிக்கலாம் (https://www.bingeclock.com/) / https://www.readinglength.com/

சுற்றுலா பயணத்தின் போது சுற்றி பார்க்கும் இடங்கள் தவிர பயணத்தின் இடையே பொழுதை கழிக்க நிகழ்ச்சிகள் அல்லது புத்தகங்கள் தேவைப்படலாம். டிவி நிகழ்ச்சிகளை பார்க்க விரும்பினால் அதற்கான தகவல்களை பிங்கி கிளாக் தளம் மூலம் அறிந்து கொள்ளலாம். நிகழ்ச்சிகள் அல்லது திரைப்படங்களை பார்த்து ரசிக்க தேவைப்படும் நேரத்தி இந்த தளம் தெரிவிக்கிறது. மேலும் பலவிதமான தகவல்களையும் இந்த தளம் அளிக்கிறது.

travel-planning-triptripஇதே போல, பயணத்தின் இடையே வாசிப்பதற்கான புத்தகத்தை தேர்வு செய்யும் வகையில் எந்த புத்தகத்தை எவ்வளவு நேரத்தில் வாசிக்கலாம் எனும் தகவலை ரீடிங் லெந்த் தளம் பரிந்துரைக்கிறது. ஆங்கில புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்க்கலாம்.

தகவல் புதிது: இந்தியாவில் ஸ்பாட்டிபை சேவை

ஸ்பாட்டிபை சேவை ஸ்ட்ரீமிங் முறையில் பாடல்கள் மற்றும் இசைக்கோர்வைகளை கேட்டு ரசிக்க வழி செய்கிறது. உறுப்பினர்கள் கட்டணம் அல்லது விளம்பரம் சார்ந்த வசதியை தேர்வு செய்யலாம் என்பதால் இதில் காப்புரிமை பிரச்சனை எல்லாம் கிடையாது. சட்டப்பூர்வமாக இசையை கேட்டு ரசிக்கலாம். ஸ்பாட்டிபையில் மேலும் பல இசை சார்ந்த வசதிகள் இருக்கின்றன. இசைப்பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஸ்பாட்டிபை சேவை இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவில்லை. எனவே இந்தியாவில் இதை குறுக்குவழி இல்லாமல் பயன்படுத்த முடியாது. இந்நிலையில் ஸ்பாட்டிபை சேவையை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக அதன் சி.இ.ஓ டேனியல் இக் அண்மையில் தெரிவித்திருக்கிறார். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விரிவாக்கம் செய்யும் ஆர்வத்தை இந்நிறுவனம் வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

தளம் புதிது: இமோஜி கலை வடிவங்கள்

வாட்ஸ் அப்பிலும் இதர சமூக ஊடகங்களிலும் உலாவும் போது, அழகான இமோஜி உருவங்களை தவறான பார்க்க முடிகிறது. சில நேரங்களில் இந்த இமோஜிகளே கலை படைப்புகளாக இருப்பதையும் பார்த்து ரசித்திருக்கிறோம். இத்தகைய கலைநயமான இமோஜிகளை நீங்களும் பயன்படுத்த விரும்பினால் இமோஜிஆர்ட் தளம் அதற்கு வழிகாட்டுகிறது. இந்த தளம் விதவிதமான இமோஜி கலை வடிவங்களை அளிக்கிறது. இவற்றை பார்த்து ரசிக்கலாம். அப்படியே நகலெடுத்தும் பயன்படுத்தலாம்.

இணைய முகவரி: http://emojiart.org/

செயலி புதிது: எழுத்துருக்களை அறிய உதவும் செயலி

இணையத்தில் பல வகையான எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சில எழுத்துருக்கள் எளிமையாகவும், ஈர்ப்புடையதாகவும் இருக்கலாம். இத்தகைய எழுத்துருக்களை நீங்களும் பயன்படுத்த விரும்பலாம். ஆனால் குறிப்பிட்ட அந்த எழுத்துரு தொடர்பான தகவல் தெரிந்தால் மட்டுமே இது சாத்தியம். இது போன்ற நேரங்களில் வாட்திபாண்ட் செயலி வழிகாட்டுகிறது. எழுத்துருக்களை போன் காமிராவில் படம் எடுத்து இந்த செயலியில் சமர்பித்தால் அந்த எழுத்துருவின் பெயர் என்ன என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த தளம் தெரிவிக்கிறது. வடிவமைப்பாளர்களுக்கும், எழுத்துருக்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலியின் மூல சேவையான மைபாண்ட்ஸ் செயல்படும் மைபாண்ட்ஸ் இணையதளம் எழுத்துருக்கள் தொடர்பான தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.

மேலும் தகவல்களுக்கு: http://www.myfonts.com/WhatTheFont/mobile/

சைபர்சிம்மன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.