டெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்

media-algorithms-and-the-filter-bubble-1-638இணையத்தில் நீங்கள் ஒவ்வொரு முறை உங்களை அறியாமல் ஏமாறுவதை தான் பில்டர் பபில் எனும் வார்த்தை குறிக்கிறது. டெக்கோபீடியா தளம் இதற்கு அறிவார்ந்த தனிமை என்றும் விளக்கம் அளிக்கிறது. அறிவார்ந்த அறியாமை என்றும் வைத்துக்கொள்ளலாம்.

தமிழில் இதை வடிகட்டல் குமிழ் என பொருள் கொள்ளலாம். நீங்கள் விஜயம் செய்யும் பெரும்பாலான இணையதளங்கள் உங்களுக்காக மேற்கொள்ளும் இணைய வடிகட்டலை இது குறிக்கிறது. அதாவது, குறிப்பிட்ட இணையதளத்தை ஒருவர் பயன்படுத்தும் போது, அந்த தளம் குறிப்பிட்ட அந்த பயனாளி பற்றி ஒரு சில அனுமானங்களை மேற்கொண்டு அவருக்கு ஏற்ற வகையிலான தகவல்களை முன்வைக்கிறது.

ஓட்டலுக்கு வாடிக்கையாக வரும் ஒருவருக்கு மசாலா தோசையும், பூரி உருளைக்கிழங்கும் பிடிக்கும் எனும் கணிப்பில் ஊழியர் அவரிடம் மசாலா தோசை கேட்பது போல தான் இதுவும் என வைத்துக்கொள்ளலாம். ஒருவரை தொடர்ந்து கவனிப்பதால் இயல்பாக ஏற்படும் புரிதலின் அடிப்படையிலான தனிப்பட்ட சேவை என புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இணையத்தில் இது மோசமான பரிமானம் பெறுகிறது. ஒரு கற்பனை உதாரணம் மூலம் இதை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஒருவர் ஓட்டலுக்குச்செல்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் சேரில் அமர்ந்ததுமே, ஓட்டல் ஊழியர் அவரிடம் கேட்காமலேயே ரவா கேசரியும், இன்னும் சில் ஐட்டங்களையும் கொண்டு வந்து வைக்கிறார் என வைத்துக்கொள்வோம். சாப்பிட வந்தவர் கடுப்பாகிவிட மாட்டார். நான் கேட்காத ஐட்டங்களை எதற்கு கொண்டு வந்து தருகிறீர்கள் என கேட்பார் அல்லவா?

உண்மையில், இணையத்தில் இதற்கு நிகரான சங்கதிகளே நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட இணையதளங்களை அணுகும் போது அவை பயனாளிகள் பற்றிய தங்கள் கணிப்பிற்கு ஏற்பவே அவர்களுக்கான தகவல்களை அளிக்கின்றன. இணையவாசிகள் எந்த வகையான இணையதளங்களை பார்க்கின்றனர், எந்த விதமான தகவல்களை கிளிக் செய்கின்றனர் என்பதன் அடிப்படையில் அவர்கள் பற்றிய கணிப்பை உருவாக்கி கொண்டு அதற்கேற்ப இந்த தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறு, இணையதளங்கள் பயனாளிகளை கண்காணிக்கும் அல்கோரிதம் உதவியுடன் அவர்கள் பார்க்க விரும்பும் தகவல்கள் எனும் அனுமானத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை அளிக்கும் போது ஏற்படும் அறிவார்ந்த தனிப்படுத்தலே பில்டர் பபில் என்கிறது டெக்பீடியா விளக்கம்.

imagesஇப்படி சுற்றி வளைத்து சொன்னால், இருக்கட்டுமே என அலட்சியமாக இருக்கும். ஆனால் இணைய உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் கூகுல் தேடியந்திரத்தில் தகவல்களை தேடும் போது, இவ்வாறு வடிகட்டல் குமிழ் முறையிலேயே தகவல்கள் அளிக்கப்படுகிறது என்று சொன்னால் உங்களுக்கு அதிரச்சியாக இருக்கலாம்.

ஆம், கூகுளில் தேடும் போது குறிச்சொல்லுக்கு ஏற்ற தேடல் முடிவுகள் வருவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும். இது மேலோட்டமான உண்மை தான். நடைமுறையில், கூகுல் முடிவுகளை வடிகட்டித்தருகிறது. அதாவது, பயனாளிகளின் கடந்த கால தேடல் வரலாற்றின் அடிப்படையில் அவர்களுக்கு பொருத்தமான தேடல் முடிவுகளையே கூகுள் முன்வைக்கிறது. எனவே ஒரே சொல்லுக்கான தேடலுக்கு கூகுள், இரு வேறு நபர்களுக்கு வேறு வேறு விதமான தேடல் முடிவுகளை அளிக்கலாம்.

எலி பிரைசர் என்பவர் இது பற்றி ஆய்வு செய்து விரிவாக எழுதியிருக்கிறார். கூகுளை அடிப்படையாக கொண்டு அவர் எழுதிய புத்தகம் மூலமே வடிகட்டம் குமிழ் எனும் வார்த்தை புழக்கத்திற்கு வந்தது. பில்டர் பபில்; இணையம் உங்களிடம் மறைப்பது என்ன என்பது அவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு.

கூகுள் மட்டும் அல்ல, சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கும் தனது நியூஸ்பீட் வசதியில் இதை தான் செய்கிறது. இன்னும் பிற நிறுவனங்களும் இதையே செய்கின்றன.

இப்படி தான் இருக்கிறது நம் இணைய சுதந்திரம்!

வாத்தியார்’ சுஜாதா தாக்கத்தில் ஒரு டெக் டிக்‌ஷனரி

டெக் டிக்ஷனரி – 4 டிஜிட்டல் புட்பிரிண்ட் (Digital Footprint ) : டிஜிட்டல் காலடித்தடம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.