இண்டெர்ன்ஷிப் வாய்ப்புகளை அறிய வேண்டுமா?

in1கோடை விடுமுறை காலம் துவங்க இருக்கிறது. விடுமுறையை எப்படி கழிப்பது? சுற்றுலாவுக்கு எங்கே செல்வது? போன்ற கேள்விகளுக்கு மத்தியில் மாணவர்களைப்பொருத்தவரை தொழில்முறை வாய்ப்பு அல்லது உயர்கல்வி வாய்ப்பு பற்றிய கேள்விகளும் அலைமோதிக்கொண்டிருக்கும். இந்த இரண்டுக்கும் உதவும் வகையில் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிப்பதற்கான வழிகளை மாணவ உள்ளங்கள் தேடிக்கொண்டிருக்கலாம். இண்டெர்ன்ஷிப் எனப்படும் பயிற்சி நிலை பணி வாய்ப்புகள் இதற்கு ஏற்றதாக அமைகின்றன.

மாணவர்கள் தங்கள் துறையில் பணி அனுபவம் பெறுவதற்காக வர்த்தக நிறுவனங்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி நிலை பணியாளர்களாக பணியாற்ற வாய்ப்பளிப்பது வழக்கமாக இருக்கிறது. இந்த வகை பயிற்சி நிலை பணிகளே இண்டெர்ன்ஷிப் என குறிப்பிடப்படுகின்றன. இரு வழி போக்குவரத்து என்று சொல்லப்படக்கூடியதை போல, இந்த வாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் என இருத்தரப்பினருக்குமே பயன் அளிக்க கூடியது.

மாணவர்கள் தரப்பில் இருந்து பார்த்தால், படித்துக்கொண்டிருக்கும் போதே அல்லது படித்து முடித்தவுடன் பணி அனுபவம் பெறுவதற்கான அருமையான வாய்ப்பாக இது அமைகிறது. மாணவர்கள் தங்கள் ரெஸ்யூமை மேம்படுத்திக்கொள்வதற்கான சிறந்த வழியாக பயிற்சி நிலைப்பணி கருதப்படுகிறது. நிறுவனங்கள் நோக்கில் பார்த்தால் இளம் திறமைகளை கண்டறிவதற்கான வழியாக இது கருதப்படுகிறது.

பொதுவாக பயிற்சி நிலைப்பணிகள் ஊதியம் இல்லாமல் அல்லது குறைந்த ஊதியம் அளிப்பதாக கருதப்பட்டாலும், இதற்கு அதிக அளவில் ஊதிய அளிக்கும் நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால், ஊதியத்தைவிட பணி அனுபவமே முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பல நேரங்களில் பயிற்சி மேற்கொள்ளும் நிறுவனத்திலேயே முழு நேர வேலை பெறும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட, தொழில்முறை தொடர்புகள் அல்லது வழிகாட்டுதலை பெறலாம். இவை விலை மதிப்பில்லாதவையாக இருக்கும்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, படிப்பை முடித்த மாணவர்கள் தங்கள் எதிர்கால துறையை தேர்வு செய்வதற்கு இந்த பயிற்சி அனுபவம் உதவியாக இருக்கும். கல்லூரியில் படிக்கும் போது மட்டும் அல்ல உயர் நிலை மாணவர்கள் கூட பயிற்சி நிலை பணிகளுக்கு முயற்சிக்கலாம். வழக்கறிஞர்கள், இதழியல் உள்ளிட்ட துறைகளில் முழுநேர பணி வாய்ப்பை பெறுவதற்கு முன் பயிற்சி நிலையில் பணியாற்றுவது அவசியமாகிறது. மற்ற துறைகளிலும் பயிற்சி நிலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

எல்லாம் சரி, எனக்கேற்ற பயிற்சி நிலை வாய்ப்புகளை தெரிந்து கொள்வது எப்படி எனும் கேள்வி உங்கள் மனதில் எழுந்திருந்தால், இதற்கு வழிகாட்டக்கூடிய இணையதளங்கள் பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில தளங்களை இங்கே பார்க்கலாம்:

inஇண்டெர்ன்ஷாலா (https://internshala.com/ )

பயிற்சி நிலை பணி வாய்ப்புகள் மற்றும் இத்தகைய வாய்ப்புகளை வழங்கும் வர்த்தக நிறுவனங்களை எளிதாக கண்டறிய வழி செய்கிறது இண்டெர்ன்ஷாலா இணையதளம். பணி வாய்ப்புகளை இரண்டு விதமாக தேடலாம். முதலில் மாணவர்கள் தாங்கள் எந்த நகரில் பயிற்சி நிலைப்பணிகளை பெற விரும்புகின்றனரோ அந்த நகரங்களை கண்டறிந்து தேடலாம். சென்னை உள்ளிட்ட நகரங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இரண்டாவதாக, மாணவர்கள் தாங்கள் பணியாற்ற விரும்பும் துறைகளின் அடிப்படையிலும் வாய்ப்புகளை தேடலாம். பொறியியல், அறிவியல், வடிவமைப்பு, எம்பிஏ உள்ளிட்ட துறைகளில் இருந்து விருப்பமான துறையை தேர்வு செய்து வாய்ப்புகளை தேடலாம்.

இவைத்தவிர, முகப்பு பக்கத்திலேயே பிரதானமாக தேடல் வசதியும் இருக்கிறது. அதில் மனதில் உள்ள பணி அல்லது துறையை டைப் செய்து வாய்ப்புகளை தேடலாம். உதாரணத்திற்கு ஆண்ட்ராய்டு டெவலப்பர் என தேடினால் எந்த எந்த நிறுவனத்தில் அத்தகைய பயிற்சி பணி வாய்ப்பு இருக்கிறது எனும் பட்டியல் வந்து நிற்கிறது. பயிற்சி காலம், ஊதியம் உள்ளிட்ட விவரங்களும் இடம்பெறுகின்றன.

தேவை எனில், துறையின் உள்பிரிவு, விரும்பும் கால அளவு, எப்போது துவங்க விரும்பம் போன்ற தகவல்களை தெரிவித்தும் தேடும் வசதி இருக்கிறது. கோடைக்காலம் என்பதால், முகப்பு பக்கத்திலேயே பலவிதமான கோடைக்கால முகாம்கள் பற்றிய தகவல்களயும் இந்த தளம் தெரிவிக்கிறது. இந்த இணையதளமே பலவிதமான பயிற்சிகளையும் அளிக்கிறது. வீட்டில் இருந்தே மேற்கொள்ளக்கூடிய பயிற்சி வாய்ப்புகளும் இருக்கின்றன. சர்வதேச பயிற்சி வாய்ப்புகளும் இருக்கின்றன.

இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டால் விரும்பிய துறையில் புதிய பயிற்சி வாய்ப்புகள் பற்றிய தகவலை இமெயிலிலும் பெறலாம்.

லெட்ஸ் இண்டெர்ன் (https://www.letsintern.com/ )

இந்த தளத்திலும் பயிற்சி வாய்ப்புகளை பணி வகை அல்லது பணி புரிய விரும்பும் நகரங்களின் அடிப்படையில் வாய்ப்புகளை தேடலாம். பொறியியல், மார்க்கெட்டிங், மீடியா, வடிவமைப்பு , நிதி, கல்வி, ஐ.டி என பல்வேறு துறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. விரும்பிய துறையை தேர்வு செய்து அதில் உள்ள வாய்ப்புகளை அறியலாம். அதன் பிறகு பகுதி நேர பணி, முழு நேர பணி, பிராண்ட் தூதர் பணி, புதியவர்களுக்கான பணி என பலவிதமான தேர்வுகளையும் மேற்கொள்ளலாம். பணி வாய்ப்புகள் அருகிலேயே அவற்றுக்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

நகரங்களை தேர்வு செய்தும் இதே முறையில் தேடலாம். பணி வாய்ப்பு அறிவிப்பு எப்போது வெளியானது என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது. இவைத்தவிர நேரடியாக தேடல் கட்டத்தை பயன்படுத்தியும் தேடலாம். உதாரணமாக மீடியா என தேடினால் சமூக ஊடக மார்க்கெட்டிங் உள்ளிட்ட வாய்ப்புகள் வரிசையாக வந்து நிற்கின்றன. வாய்ப்புகள் ஊதியம் கொண்டதா, இல்லையா எனும் விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சம், பயிற்சி பணி வாய்ப்புகள் தொடர்பான வலைப்பதிவாகும். இந்த பகுதியில் பயிற்சி நிலை பணிகள் குறித்த வழிகாட்டுதல் கட்டுரைகளை வாசிக்கலாம். பயிற்சி நிலை பணிகளின் முக்கியத்துவம், தேவையான திறன்கள் ஆகிய விஷயங்களை சுட்டிக்காட்டும் கட்டுரைகள் இருக்கின்றன. ரெஸ்யூம்களை எப்படி தயார் செய்வது, நேர்காணல்களை எங்கனம் எதிர்கொள்வது போன்ற வழிகாட்டுதலையும் காணலாம். கல்லூரியில் படிக்கும் போதே பணி அனுபவத்தை பெறுவது எப்படி? போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளிலும் கட்டுரைகளை வாசிக்கலாம்.

அரசுத்துறைகளில் உள்ள பயிற்சி பணி வாய்ப்புகள் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

in2 (2)ஹலோ இண்டெர்ன் (https://www.hellointern.com/)

இந்த தளம் எளிமையான வடிவமைப்புடன் பயிற்சி பணி வாய்ப்புகளை எளிதாக தேட வழி செய்கிறது. பயிற்சி பணிகளை துறைகள் அல்லது நகரங்களின் அடிப்படையில் தேடலாம். வர்த்தக நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து வாய்ப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

வேலை வாய்ப்பு முகாம் போல, பயிற்சி நிலை பணிகளுக்கான நிகழ்வுகள் மற்றும் முகாம்களும் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலான வாய்ப்புகளையும் நாடலாம். அண்மையில் வெளியான வாய்ப்புகள், அதிகம் முன்னிலை பெறும் வாய்ப்புகள் என்றும் தனியே பயிற்சி பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் வழங்கும் வாய்ப்பும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இந்த தளமே பல கூட்டு முயற்சி வாய்ப்புகளையும் அளிக்கிறது.

டுவெண்டி19 (http://www.twenty19.com/ )

பயிற்சி நிலை பணி வாய்ப்புகளுக்கான வலைவாசல் போல அமைந்துள்ளது இந்த இணையதளம். பயிற்சி நிலை பணி வாய்ப்புகளுடன் இணைய பயிற்சி வாய்ப்புகள் மற்றும் கல்லூரி நிகழ்வுகளையும் இந்த தளம் அடையாளம் காட்டுகிறது. கல்லூரி நிகழ்வுகள் பகுதியிலேயே நகரங்கள், படிப்பு வகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவையான வாய்ப்புகளை தேடலாம். நிறுவனங்களுக்கான பகுதியும் இருக்கிறது. தனியே தேடல் வசதியும் இடம்பெற்றுள்ளது. பயிற்சி நிலை பணிகள் தொடர்பான வலைப்பதிவும் இருக்கிறது. இதில் சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் மேக் இண்டெர்ன் (http://www.makeintern.com/) , இண்டெர்ண்டெஸ்க் (http://www.interndesk.com/) , இண்டெர்ன்தியரி (https://www.interntheory.com/) தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இவைத்தவிர இண்டெர்ன் பீல் (http://internfeel.com/) தளத்தையும் குறித்து வைத்துக்கொள்வது நல்லது. இந்த தளம் பயிற்சி நிலை பணியை பெற்ற மாணவர்கள் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. இந்த அனுபவக்குறிப்புகளை வாசிப்பதன் மூலம் பயிற்சி நிலை பணி அளிக்ககூடிய பயன்களை நேரடியாக தெரிந்து கொள்ளலாம். நீங்களும் இதில் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

summarize in action

தகவல் புதிது: மாணவர்கள் உருவாக்கிய செயலி

தில்லியைச்சேர்ந்த கல்லூரி மாணவிகள் குழு வேலைவாய்ப்பு சந்தை போக்குகளை தெரிந்து கொள்ள உதவும் செயலியை உருவாக்கியுள்ளது. இந்திரா காந்தி தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழத்தைச்சேர்ந்த மாணவிகள் குழு, அண்மையில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் கலந்து கொண்டு இந்த செயலியை உருவாக்கியது. இந்த செயலி பதிவு செய்யும் உறுப்பினர்களின் திறன்களுக்கு பொருத்தமான வேலையை சுட்டிக்காட்டும். இந்த செயலி நகரங்கள் மற்றும் திறன்கள் சார்ந்த வேலைவாய்ப்பு போக்குகள் தொடர்பான தகவலையும் அளிக்கும். வேலைவாய்ப்பு தவிர திறன் வளர்ச்சி மற்றும் பயிற்சி தொடர்பான தகவல்களையும் அளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தளம் புதிது; கட்டுரைகளை சுருக்கி வாசிக்க உதவும் தளம்

இணைய முகவரிகளை சுருக்கித்தரும் சேவைகள் போலவே, நீளமான கட்டுரைகளை சுருக்கமாக வாசிக்க வழி செய்யும் இணையதளம் இருக்கிறது தெரியுமா? சம்மரைஸ்திஸ் (https://www.summarizethis.com/ ) இணையதளம் தான் இப்படி கட்டுரைகளை சுருக்கித்தருகிறது. இந்த தளத்தில் நீளமான கட்டுரையை சமர்பித்தால், அதன் சுருக்கமான வடிவத்தை முன்வைக்கிறது. கட்டுரையின் சாரம்பசத்தை இந்த சுருக்கத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கட்டுரையின் முக்கிய தகவல்களை மட்டும் சுருக்கமாக தருவதாக இந்த தளம் தெரிவிக்கிறது.

நீளமான கட்டுரைகளை படிக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.

செயலி புதிது: இணையத்தின் முகப்பு பக்கம்

இணையத்தின் முன்னணி தளங்களை பட்டியலிட்டால் அதில் ரெட்டிட் இணையதளம் தவறாமல் இடம்பெற்றிருக்கும். இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட் தளம், இணைய தகவல்கள் மற்றும் செய்திகள் சார்ந்த துடிப்பான இணைய சமூகமாகவும் விளங்குகிறது. ரெட்டிட் தளத்தில் இணைப்புகளை பகிர்ந்து கொண்டு விவாதுப்பதுடன் பல துறைகள் சார்ந்த புதிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ரெட்டிட் நேர்காணல்களான ஆஸ்க் மீ எனிதிங் பேட்டிகளும் மிகவும் பிரபலமானது. ரெட்டிட் இணையதளத்தை செயலி வடிவிலும் அணுகலாம். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான ரெட்டிட் செயலி இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு: https://www.reddit.com/mobile/download

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

One Comment on “இண்டெர்ன்ஷிப் வாய்ப்புகளை அறிய வேண்டுமா?

  1. RAVICHANDRAN R

    அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக்கு முயற்சி செய்வோருக்கு சிறந்த வழிகாட்டி!

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *