டிஜிட்டல் குறிப்புகள்-9 சர்க்கரையை கடன் வாங்குங்கள்- ஒரு டிஜிட்டல் கலைஞரின் அறிவுரை

Lazarovic.png.860x0_q70_crop-scaleகடன் அன்பை முறிக்கும் என ஸ்டிக்கர் ஒட்டி பழகியவர்கள் நாம். கடன்பட்டார் நெஞ்சம் போல்…என கம்பனும் இதற்கு எதிராக சொல்லியிருக்கிறார். எனவே, நம் பொதுபுத்தியில் அல்லது உளவியல் அமைப்பில் கடன் வாங்குவதற்கு எதிரான ஒரு கருத்து பதிந்திருக்கிறது.

கடன் வாங்குவதும், கொடுப்பதும் தவறு எனும் நம் நம்பிக்கையை மீறி, கொஞ்சம் கடன் வாங்குங்கள் என்று கேட்டுக்கொள்வதற்காக தான் இந்த பதிவு. கடன் எனும் போது, இங்கு வர்த்தகமாக்கப்பட்டுள்ள வங்கி கடனையோ அல்லது நவீன யுகத்தின் புதிய வசதியான டிஜிட்டல் கடனையோ குறிப்பிடவில்லை. மல்லையாக்களின் கார்ப்பரேட் கடன்களையும் குறிப்பிடவில்லை.

இந்த பதிவில் பேசுவது பக்கத்துவிட்டுக்காரரிடம் சர்க்கரை கேட்டு வாங்குவது போன்ற சிறு கடனை. கடன் என்பதை விட கைமாத்து என்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும். நமக்கு தேவையான போது வாங்கி கொண்டு, நம்மால் முடிந்த போது திருப்பிக்கொடுப்பது. இத்தகைய கடன் வாங்கலில் நாம் அதிகம் ஈடுபட வேண்டும் என்கிறார் சாரா லாசோரோவிக். இந்த கருத்தை வலியுறுத்தி சாரா, அழகான கிராபிக் கட்டுரையை வரைந்திருக்கிறார்.

இந்த இடத்தில் சாராவை கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்ளலாம். சாரா லாசரோவிக்கின் இணையதளத்தை  ( http://longliveirony.com/) எட்டிப்பார்த்தால், வடிவமைப்பு, வரைவது, கார்ட்டூன், கற்றுத்தருவது, உரை நிகழ்த்துவது, பதிப்பது … என எண்ணற்ற விஷயங்களை செய்பவராக குறிப்பிடப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஆக, சாரா பன்முகம் கொண்டவர். தொழில்முறை வடிவமைப்பாளரான அவர், பழக்கவழக்க உளவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கம், ஒரு கார்ட்டூன் சித்திர கண்காட்சியை பார்ப்பதற்கு நிகரானதாக இருக்கிறது. சித்திரங்களாக சாரா வரையும் ஒவ்வொரு படத்திலும் ஒரே மெசேஜ் இருக்கிறது. அந்த மேசேஜ்களின் அடிநாதமாக ஒரு கருத்துச்சரடும் இருக்கிறது. பொருட்களை வீணாக்காதீர்கள், அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள் என்பது தான் அது.

இந்த பகிர்வு கலாச்சாரத்தை வலியுறுத்தும் விதமாக தான், அவர் மேலே சொன்ன ‘ சர்க்கரையை கடன் வாங்குங்கள்’ வரைபட கட்டுரையை எழுதியிருக்கிறார்.

சித்திரக்கதை பாணியில் அழகாக வரைப்பட்டுள்ள இந்த கட்டுரை, முன் எப்போதையும் விட, நமக்கு தேவையானவற்றை எல்லாம் கடன் வாங்காமலே பெறுவது எளிதாகவும், செலவு குறைந்ததாகவும் ஆகியிருந்தாலும், நாம் கடன் வாங்க வேண்டும், என்று துவங்குகிறது. இந்த பழக்கம், சமூகத்தன்மையை உருவாகி, தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுத்து, தனிமையை எதிர்கொள்ள உதவுகிறது, என இதற்கான காரணமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு கொசூராக பூமியின் வளங்களையும் பாதுகாக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் பக்கத்துவீட்டுக்காரரிடம் சர்க்கரையை கேட்டு வாங்குங்கள்!

படக்கதை போன்ற இந்த கட்டுரையில், தொடர்ந்து பெண்மணி ஒருவர், நான் சர்க்கரை கடன் வாங்க வந்திருக்கிறேன், நான் தனிமையை விரட்டவும், புவி வெப்பமாதலை தடுக்கவும், கொஞ்சம் இனிப்பு தயாரிக்கவும் முயற்சிக்கிறேன் என கூறுகிறார்.

நாம் பழக்கப்பட்டிருக்கும் வகையில், பக்கத்து வீட்டுக்காரரிடம் பொருட்களை கேட்டுச்செல்லும் போது இருக்க கூடிய தயக்கமோ, சுய குற்ற உணர்வோ அவரிடம் இல்லை. அதற்காக கடன் கேட்பது உரிமை என்ற ஆணவமும் இல்லை. மாறாக, கடன் கேட்பது என் கடமை என்பது போல இயல்பாக கேட்கிறார்.

ஏன்? என்பதற்கு கதையின் அடுத்த கட்டம் பதில் அளிக்கிறது. சுவரில் துளையிட பயன்படுத்தப்படும் டிரில் கருவி, அதன் வாழ்நாளில் சராசரியாக 13 நிமிடங்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே வால்மார்ட்டில் ( நம்மூரில் சரவண ஸ்டோர்சில்) மிக மலிவாக கிடைத்தாலும் இதை வாங்காதீர்கள். உங்கள் பக்கத்துவீட்டுக்காரரிடம் இந்த சாதனத்தை கேட்டு வாங்குங்கள். முதலில் இது சங்கடமாக இருக்கலாம். ஆனால் பகிர்தல் கலாச்சாரத்திற்கு பழக கொஞ்சம் பயிற்சி தேவை’ என இந்த விளக்கம் அமைந்துள்ளது.

நீங்கள் பக்கத்துவீட்டுக்காரரிடம் டிரில் சாதனத்தை கடன் வாங்குவதற்கான முக்கிய காரணம், அதன் பயன்பாட்டை அதிகரிக்க அல்ல, மாறாக அவரை அறிந்து கொள்வதற்காக என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடன் வாங்கும் கோரிக்கையை வைக்கும் போது, கொஞ்சம் உங்களைப்பற்றியும் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் என்கிறார்.

அடுத்த கட்டமாக, ராபர்ட் புட்னம் எனும் அமெரிக்க அறிஞர் நடத்திய தனிமை தொடர்பான ஆய்வை குறிப்பிட்டு, அவர் சுட்டிக்காட்டும் சமூக மூலதனம் எனும் விஷயத்தையும் குறிப்பிடுகிறார். சமூக மூலதனம் என்பது சக மனிதர்களுடன் நாம் கொண்டுள்ள தொடர்பாக அமைகிறது. இது மிகவும் குறைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. உண்மையில் சர்க்கரையை கேட்டு வாங்குவதன் மூலம் இந்த சமூக மூலதனத்தை நாம் வளர்த்துக்கொள்ளலாம்.

கடன் கேட்கும் போது, பேச்சு கொடுக்கும் தன்மையும் இதற்கு கைகொடுக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை இன்னும் நன்றாக அறிந்து கொள்ளலாம். அதோடு, இத்தகைய பேச்சுகள் உடல் மற்றும் உள்ள ஆரோக்கியத்திற்கும் உகந்தது என்பது போன்ற செய்தியை வலியுறுத்தும் இந்த வரைபடக் கட்டுரை, ஆகையினால் சர்க்கரையை கடன் வாங்குங்கள் என்பதாக முடிகிறது.

உண்மையில் இங்கு கடன் வாங்குவதன் மூலம் வலியுறுத்தப்படுவது பகிர்தலும், அது சாத்தியமாக்கும் சமூக உறவுகளும் தான்.

டிரி ஹக்கர் இணையதளத்தில், சாராவின் இந்த படக்கட்டுரையை அறிமுகம் செய்து ஒரு பதிவு வெளியாகியுள்ளது. சாரா ஏற்கனவே, நாம் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒரு புத்தகமும் எழுதியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவைகளின் படிநிலை என பொருள்படும் தி பையரோகிராசி ஆப் நீட்ஸ் எனும் அந்த புத்தகத்தில் தேவையில்லாமல் பொருட்களை வாங்குவதை குறைத்துக்கொண்டு, மறுசுழற்சி, மறு பயன்பாடு போன்றவற்றை அதிகம் நாட வேண்டும் என்கிறார்.

சாரா இந்த எளிய கோட்பாட்டை எத்தனை தீவிரமாக, எத்தனை சுவாரஸ்யமாக வலியுறுத்துகிறார் என்பதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் உணரலாம்!. https://www.instagram.com/sarahlazarovic/?hl=en

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.