டெக் டிக்ஷனரி-24 லிங்க் எக்கானமி (link economy) – இணைப்புசார் பொருளாதாரம்

Link-economy-diagram-001இணையத்தில், இணைப்புசார் பொருளாதாரம் சார்ந்து ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தெரியுமா? இதை புரிந்து கொள்வதற்கு, முதல் லிங்க் எக்கானமி என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு தமிழில் இணைப்பு பொருளாதாரம் என பொருள் கொள்ளலாம். அதாவது, இணையத்தில் உள்ளட்டக்கதத்தை நோக்கி செல்ல வழிகாட்டும், லிங்க் எனப்படும் இணைப்புகளை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் என பொருள். அந்த வகையில் இணைப்புசார் பொருளாதாரம் என்பது சரியாக இருக்கும்.

இணைப்புகளால் எப்படி பொருளாதாரம் உருவாகும் என கேள்வி எழலாம். இதற்கான எளிய பதில், இணைய இணைப்புகள் அல்லது தளங்களை சுட்டிக்காட்டுவதால் கிடைக்ககூடிய பணம் சார்ந்த பலன்கள் என்பதாகும். உதாரணமாக, ஒரு இணையதளம் அல்லது வலைப்பதிவில், சில இணைப்புகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த இணைப்புகள் பயனுள்ளதாக இருந்தால், இணையவாசிகள் அதை கிளிக் செய்து குறிப்பிட்ட பக்கத்திற்கு செல்வார்கள். இப்படி பயனுள்ள இணைப்புகள் சுட்டிக்காட்டப்படுவதற்காகவே பலரும் அந்த தளத்திற்கு வருகை தருவார்கள். பலரும் வருகை தந்தால், அந்த போக்குவரத்தே கூகுள் விளம்பரம் மூலம் வருவாயை பெற்றுத்தரும்.

ஆக, நல்ல உள்ளடக்கத்திற்கான இணைப்புகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் இணையவாசிகளையும் இழுக்கலாம். அதன் மூலமே வருவாயும் ஈட்டலாம். தனி இணையதளங்களுக்கோ, வலைப்பதிவுகளுக்கோ இது பெரிய அளவில் சாத்தியல் இல்லை. ஆனால், கூகுள் செய்திகள் போன்ற திரட்டிகள் இதை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கின்றன.

இதில் என்ன நடக்கிறது என்றால், கூகுள் செய்திகள் போன்ற இணைய சேவைகள், தாங்கள் சொந்தமாக செலவு செய்து எந்த உள்ளடக்கத்தையும் உருவாக்காமலே, மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கான இணைப்புகளை தொகுத்து வழங்கி, அதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றன. இது இணைப்பு சார் பொருளாதாரத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது.

சுருக்கமாக சொல்வது என்றால், மூல உள்ளடக்கத்தை உருவாக்காமாலே, மற்றவர்கள் உருவாக்கிய உள்ளடக்கத்தை தொகுத்து அளிப்பது இணையத்தில் பிரதான சேவையாகி இருக்கிறது. அக்ரகேட்டர்ஸ் எனப்படும் திரட்டிகள் இதை தான் செய்கின்றன. இதைத்தவிர, இணையதளங்கள், கட்டுரைகள், வலைப்பதிவுகளிலும் கூட பல்வேறு காரணங்களுக்காக இணைப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

சொந்த உள்ளடக்கம் இல்லாவிட்டாகும், கூட மற்றவர்கள் உள்ளடக்கத்தை பட்டியலிடுவதன் மூலம் இணைய போக்குவரத்தை ஈர்க்கலாம் என்பது இணையம் சாத்தியமாக்கிய புதிய வழியாக இருக்கிறது. ஒருவிதத்தில் பேஸ்புக்கும் இதை தான் செய்து கொண்டிருக்கிறது. அது சொந்தமாக எந்த உள்ளடக்கத்தையும் உருவாக்குவதில்லை. ஆனால் தனது மேடையை பயனாளிகள் நிலைத்தகவல்கள் உருவாக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வைத்து, அவர்களுக்கு நியூஸ்பீட் வாயிலாக பிற தளங்களின் செய்திகளை காண்பித்து விளம்பர வருவாயை அள்ளுகிறது.

உள்ளடகத்தை உருவாக்குபவர்கள், அதிலும் குறிப்பாக ஊடகங்கள் இந்த போக்கை அநியாயமானது என்கின்றனர். எங்களை உள்ளடக்கத்தை வைத்து நீங்கள் போக்குவரத்தையும், வருமானத்தையும் பெறுவது என்ன நியாயம் என்பது கேள்வியாக இருக்கிறது. ஒரு சில ஊடகங்கள், இப்படி எங்கள் உள்ளடக்கத்திற்கு இணைப்புகளை சுட்டிக்காட்ட எங்களுக்கு காசு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டன. சில ஆண்டுகளுக்கு முன் ஆசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் இத்தகைய கருத்தை முன்வைத்து அதற்காக விமர்சனத்திற்கு இலக்கானது.

ஆனால் அதே நேரத்தில் இணைப்புகளை சுட்டிக்காட்டுவது இணையவாசிகளை கவர்வதற்கான வழியாகவும் கருதப்படுகிறது, உள்ளடக்கத்தை தயாரிக்கும் நிறுவனம், நேரடியாக பெறக்கூடிய வாசர்கள் தவிர, மூன்றாம் தரப்பு இணைப்புகள் முலம் கணிசமான வாடிக்கையாளர்களை பெறலாம் என கூறப்படுகிறது. அதை வைத்து காசு பார்ப்பது அவர்கள் சாமர்த்தியம்.

இணையத்தின் அடிநாதமே, இணைப்புகள் மூலம் மற்ற தகவல்களை சுட்டிக்காட்டுவது தான் என்பதால், இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம் என்றும் கூறப்படுகிறது. ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த வாதத்தை நம்புகிறது. அந்த நிறுவனம், இணைப்பு பொருளாதாரத்தை நாங்கள் நம்புகிறோம், எங்கள் செய்திகளை தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள் என்று வெளிப்படையாகவே அறிவித்தது.: http://blogs.reuters.com/mediafile/2009/08/04/why-i-believe-in-the-link-economy/

இப்படி உள்ளடக்க பொருளாதாரத்திற்கும், இணைப்பு சார் பொருளாதாரத்திற்கும் இடையே தீவிர விவாதமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இணைய இதழியலில் வல்லுனரான ஜெப் ஜார்விஸ், இந்த தலைப்பில் விளக்கமான வலைப்பதிவு எழுதியிருக்கிறார். உலகம் உள்ளடக்க பொருளாதாரத்தில் இருந்து இணைப்பு சார் பொருளாதாரத்திற்கு மாறிவிட்டது, ஊடங்களுக்கும் இதற்கு மாற வேண்டும் என்பது அவரது வாதம்.: https://buzzmachine.com/2008/06/18/the-link-economy-v-the-content-economy/

ஆனால், ஊடக நிறுவனங்கள் பல நஷ்டத்தில் தவிக்கும் நிலையில், கூகுள் நியூஸ் போன்ற மற்றும் கூகுள் தேடியந்திரம் தகவல்களை பட்டியலிட்டும், தொகுத்தளிப்பதன் வாயிலாகவும் கோடிகளை அள்ளிக்கொண்டிருக்கும் போது, உள்ளடக்கவாதிகளுக்கு இணைப்பு சார் பொருளாதாரம் கசக்கவே செய்கிறது.

இந்த விவாதத்தில் நீங்கள் எந்த பக்கம்?

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.