காஸா தாக்குதல்- ஒரு அமெரிக்க இணையதளத்தின் அறைகூவல்!

’மூவ் ஆன்’ இணையதளத்தை விரிவாக அறிமுகம் செய்ய வேண்டும் என்றாலும் இப்போதைக்கு மிக சுருக்கமாக அமெரிக்காவில் மாற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் இணைய வழி போராட்டத்தை ஊக்குவித்து, வழிகாட்டும் இணையதளம் என குறிப்பிடலாம்.

’எல்லோரும் செழிக்க கூடிய, மேம்பட்ட சமூகத்திற்காக லட்சக்கணக்கானோரை திரட்டும் மேடை’ என மூவ் ஆன் தளத்தின் அறிமுக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் முன்னோடி தளங்களில் மூன் ஆனும் ஒன்று. இணைய இயக்கங்களாக மாறிய இணையதளங்களில் ஒன்று என்றும் வர்ணிக்கலாம்.

மக்கள் போராட்டத்திற்கான இந்த இணையதளம் அமெரிக்காவை அடிப்படையாக கொண்டது. இது அமெரிக்க தளம் என்றாலும், அகில உலகிற்குமான முன்னுதாரண தளம். அதோடு அமெரிக்க தளம் என்பதாலேயே இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் இந்த தளத்தின் அண்மை அறைக்கூவல் முக்கியமாகிறது.

”ஹமாஸின் அதிர வைக்கும் தாக்குதலையும், அதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாவுன் தலைமையிலான ரணுவ தாக்குதலிலும் ஏற்கனவே 9,000 பால்ஸ்தீனர்களும், 1400 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் உங்கள் மனம் நொறுங்கியுள்ளதா? எனில், நீங்கள் தனியாக இல்லை. நாம் மனித உயிர்களின் இழைப்பை தடுத்து நிறுத்த வேண்டும். செயல்படுவதற்கான நேரம் இது” என குறிப்பிடும் மூவ் ஆன் இணையதளம், போர் நிறுத்தத்திற்காக அழைப்பு விடுத்துள்ளது.

வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, போர் நிறுத்தமும், ராணுவ குறைப்பும் தேவை என்றும் வலியுறுத்தி இதற்காக உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. முக்கியமாக, போர்நிறுத்தம், தாக்குதல் குறைப்புக்கு வலியுறுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நிர்பந்திக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளது.

மூவ் ஆன் முயற்சி வெற்றி பெறட்டும்.

இணையதள முகவரி: https://front.moveon.org/about/

பி.கு: மூவ் ஆன் இணையத்தால் இணைவோம் நூலில் மூவ் ஆன் இணையதளம் தொடர்பான அறிமுகம் இடம்பெற்றுள்ளது. வெள்ளிவிழா காணும் இந்த தளம் இடைப்பட்ட காலத்தில் வெகுவாக வளர்ந்து மாற்றமும் கண்டிருப்பதால், இதன் அறிமுகத்தை அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.