சாட்ஜிபிடியின் கருணை உள்ளம், உங்களுக்குத்தெரியுமா?

இயந்திர கற்றல் என்று சொல்லப்படுவதை ஏஐ தொடர்பான செய்திகளிலும், கட்டுரைகளிலும் நீங்கள் பல முறை எதிர்கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டர்கள் தரவுகளில் இருந்து தானாக கற்றுக்கொள்ளும் இயந்திர திறனை இது குறிப்பிடுகிறது. இந்த அளவுக்கு பரவலாக இல்லாவிட்டாலும், ஏஐ உலகின் புதிய கருத்தாக்கமாக இயந்திர பரிவு (machine empathy ) இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

டிஜிட்டல் நலம் தொடர்பான இணையதளம் ஒன்றில், சாட்ஜிபிடி மனநலத்திற்கான எதிர்காலம் என்பதை விவரிக்கும் பதிவு ஒன்றில், இதற்கான காரணங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. சாட்ஜிபிடி மனநலனில் தாக்கம் செலுத்துவதற்கான மூன்றாவது முக்கிய காரணமாக, இயந்திர பரிவு பற்றி குறிப்பிடப்படுகிறது.

சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்கள், மொழி மாதிரி மூலம் மனிதர்களுடனான உரையாடலை மேம்படுத்த கற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் ஒருவிதமான பரிவையும் கற்றுக்கொள்வதாக அண்மை ஆய்வுகள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, உலகை மற்றவர் கண் கொண்டு பார்க்கும் தன்மையாக இது அமைகிறது. உளவியலில் இது மிக முக்கிய ஆற்றலாக கருதப்படுகிறது.

சாட்பாட்கள் தொடர்ந்து மொழியை வார்த்தைகளாக கையாள்வதால், மனிதர்கள் போல உணர்ந்து சிந்திக்கும் ஒருவிதமான பரிவை பெறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய இயந்திர பரிவால் சாட்ஜிபிடி எதிர்காலத்தில் மனநலனில் முக்கிய பங்கு வகிக்கும் என பதிவு தெரிவிக்கிறது.

இயந்திர பரிவு என்பது மிகவும் புதிதாக இருக்கிறது. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும்.

இதே பதிவில், சாட்ஜிபிடியின் மனநல ஆற்றலுக்கான முதல் காரணமாக, உலகின் முதல் சாட்பாட்டான எலிசா, ஒரு மனநல மருத்துவரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடப்படுள்ளது. அந்த காரணத்தினாலேயே சாட்ஜிபிடியின் மனநலத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்பது இயல்பாக தோன்றினாலும், எலிசா முதல் சாட்பாட்டை உருவாக்கிய ஜோசப்  வெயின்சப்பாம், தனது சாட்பாட் அதன் இயந்திர தன்மையை மீது மனிதர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, இது போன்ற சாட்பாட்களை உருவாக்க கூடாது எனும் முடிவுக்கு வந்தார் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

சாட்பாட்கள் மீது மனிதர்கள் உணர்வு நோக்கிலான பிணைப்பு கொள்வதன் அபாயத்தை சுட்டிக்காட்டி ஏஐ நுட்பத்தின் வரம்புகளையும் அவர் விவரித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனி புத்தகமும் எழுதியிருக்கிறார். ஏஐ வரலாற்றில் அவரது எலிசா சாட்பாட் முக்கிய படி என்றாலும், அவர் தனது வாழ்வின் பிற்பகுதி முழுவதும் ஏஐ ஆய்வில் செய்யக்கூடாத விஷயங்களில் தான் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *