ஸ்கிரீன்சேவரில் தோன்றிய செய்திகள் – ஒரு பழைய சாட்பாட்டின் கதை

சாட்பாட்கள் வரலாற்றில் கொஞ்சம் ஸ்கிரீன்சேவர்களை திரும்பி பார்க்கலாம்.

ஸ்கிரீன்சேவர் எனும் போது, இரண்டு கேள்விகள் எழலாம். சாட்பாட்களுக்கும் ஸ்கிரீன்சேவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது ஒரு கேள்வி என்றால், சாட்பாட் யுக்த்தில் ஸ்கிரீன்சேவர் பற்றி என்ன பேச்சு என்றும் இன்னொரு கேள்வி கேட்கலாம். நவீன தலைமுறையினரில் பலர் ஸ்கிரீன்சேவர் என்றால் என்ன என்று கூட கேட்கலாம்.

ஸ்கிரீன்சேவர்களின் தேவையும், முக்கியத்துவமும் இன்று குறைந்து போய்விட்டாலும், அவற்றை பழங்கால நுட்பம் என்று புறந்தள்ளுவதற்கில்லை. அல்லது ஸ்கிரீன்சேவர்களின் புதுமை மறைந்து அவை வெகு இயல்பாக மாறிவிட்டன என்றும் சொல்லலாம்.

ஸ்கிரீன்சேவர்கள் எனும் மென்பொருள் புதுமையாக இருந்த காலத்தை தான் இப்போது திரும்பி பார்க்கப்போகிறோம். 1990 களின் பிற்பகுதியில் இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த போது ஸ்கிரீன்சேவர்களும் பிரபலமாகத் துவங்கின. இணையத்தில் வால்பேப்பர் அல்லது ஸ்கிரீன்சேவர்களை தேடி தரவிறக்கி பயன்படுத்துவது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தது.

இணைய பயன்பாடுகளில் ஸ்கிரீன்சேவர்களும் ஒன்றாக இருந்தன. ஸ்கிரீன்சேவர்களுக்கு என்றே இணையதளங்களும் இருந்தன. இந்த பின்னணியில், ஸ்கிரீன்சேவர் சார்ந்து ஒரு சாட்பாட்டும் இயங்கி இருக்கிறது என்பதை பாட்ஸ்பாட் பட்டியல் வாயிலாக அறிய முடிகிறது. ( கவனிக்க, பாட்ஸ்பாட் பட்டியலையும் சரி, அதிலிருந்து கண்டறிந்த சாட்பாட் சேவை பற்றியும் உங்களால் கூகுள் தேடலில் கண்டறிய முடியாது. இதற்கு கொஞ்சம் இணைய அகழ்வு தேவை).

ஆப்டர் டார்க் ஆன்லைன் (After Dark Online) என்பது தான் அந்த சாட்பாட். இந்த சேவை பாட்களின் கீழ் வரும் ஆனால் சாட்பாட்டா? என்று தெரியவில்லை. சாட்பாட் என்பது உரையாடல் வசதி கொண்ட மென்பொருள், பாட் என்பது நம் சார்பில் தானியங்கியாக இயங்கும் மென்பொருள்.

ஆப்டர் டார்க் ஆன்லைன், பயனாளிகளின் டெஸ்ட்பாட்டிற்கு அன்றைய தின செய்திகளை தானாக கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தால் அதை பாட் என கொள்ளலாம். இந்த பாட் ஸ்கிரீன்சேவர் வடிவில் செயல்பட்டது.

ஆப்டர் டார்க் ஆன்லைன் ஸ்கிரீன்சேவரை தரவிறக்கம் செய்து கொண்டால், அது ஸ்கிரீன்சேவராகவும் இருக்கும், அதே நேரத்தில் முன்னணி செய்தி தளங்களில் இருந்து அன்றையை செய்திகளையும் கொண்டு வந்து தரும். செய்திகள் மட்டும் அல்லாமல், பங்குச்சந்தை தகவல்களையும் இவ்விதம் பெறலாம். பயனாளிகள் தங்கள் விருப்பம் போல செய்திகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இன்று நோட்டிபிகேஷன் யுகத்தில், செல்பேசி திரையிலேயே செய்திகள் தேடி வருகின்றன. ஆனால், 1990 களின் பிற்பகுதியில் ஒருவரது கம்ப்யூட்டரில் தானாக செய்திகள் வந்து சேர்வது என்பது புதுமையான வசதி தான். அதிலும் ஸ்கிரீன்சேவர் வடிவில் இது சாத்தியமானது கூடுதல் புதுமை.

இணையத்திற்கான செய்தி கொண்டு வரும் சேவையாக இதன் பின்னணியில் இருந்த பாட் செயல்பட்டது. இதற்கு தனியே கட்டணமும் கிடையாது. இணைய சேவை வழங்கும் நிறுவனம் மூலம் இந்த சேவையை பெறலாம்.

இப்போது சாட்ஜிபிடி பற்றி பெரிதாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில், 1990 களிலேயே எப்படி செய்தி சேவை பாட்கள் செயல்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளும் போது வியப்பாகவே இருக்கிறது.

இன்னும் வியப்பான விஷயம், இந்த செய்து சேவை, இந்த செய்தி கொணர் பாட்டை வழங்கிய பெர்க்லி சிஸ்டம்ஸ் (Berkeley Systems ), 1990 களில் ஸ்கிரீன்சேவர் உருவாக்கத்தில் முன்னணியில் திகழ்ந்தது என்பது தான். இந்நிறுவனத்தின் ஸ்கிரீன்சேவர்களை ஆப்பிளின் மேக் மற்றும் விண்டோஸ் கம்ப்யூட்டர்களுக்கு கட்டணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.