Tag Archives: internet

டிவிட்டரில் மக்களை சந்தித்த அமெரிக்க கவர்னர்

டிவிட்டரில் நகரசபை கூட்டத்தை நடத்த முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சிகளை டிவிட்டரில் நடத்துவது சாத்தியமே.அமெரிக்கவின் புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் இப்படி டிவிட்டர் மூலம் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறார்.

டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளை அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்களர்களை கவர்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக மக்களோடு தொடர்பு கொள்ளவும்,அவர்களின் மனப்போக்கை அறியவும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கை பதவியில் இருப்பவர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

சமூக வலைப்பின்னல் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் தன்மையை வெளிப்படுத்தி கொள்வதோடு உள்ள படியே மக்கள் சேவையில் ஒரு அங்கமாகவும் இதனை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கருத துவங்கியுள்ளனர்.

இதன் வெளிப்பாடே டிவிட்டர் நேர்காணல் போன்றவை .அதாவது டிவிட்டரில் கேள்வி கேட்கப்பட்டு அதன் மூலமே பதில் அளிப்பது.டிவிட்டரில் பதிவிடும் போது பதில் அளிக்க உள்ள வசதியை கொண்டு டிவிட்டர் பேட்டிகள் நிகழத்தப்படுகின்றன.

இதே முறையில் பலரை கேள்வி கேட்க வைத்து டிவிட்டரில் பதில் அளிக்கலாம்.

புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் இந்த முறையில் தான் மாகாண மக்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் மூலம் பதில் அளித்துள்ளார்.

குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பது போல ஸ்காட் கடந்த வாரம் டிவிட்டரில் என்னிடம் கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்தார்.அதன்படியே வியாழக்கிழமை அன்று 38 நிமிடம் டிவிட்டரில் கேள்விகளை எதிர்கொண்டார்.

கவர்னரின் நூலக அறையில் லேப்டாப் முன் அமர்ந்த ஸ்காட் தனது டிவிட்டரில் கணக்கில் வந்து குவிந்த கேள்விகளுக்கு டிவிட்டர் பதிவுகளாக பதில் தந்தார்.

சரிந்து கிடக்கும் வீடுகளின் மதிப்பை உயர்த்த ஏதேனும் திட்டமிட்டிருக்கிறாதா என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு முதலில் வேலைவாய்ப்பினை பெருக்கி,வீடுகளை வாங்க வைத்து சொத்து வரியை குறைக்க இருப்பதாக ஸ்காட் பதில் அளித்தார்.

பள்ளிகளுக்கு ஐபேட் வழ்ங்கும் திட்டம் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் இல்லையா என்று வேறு ஒருவர் கேட்ட கேள்விக்கு பிள்ளைகளுக்கு நவீன தொழில்நுட்பததிஅ அறிமுக செய்வது நமது கடமை என்று அவர் பதிலளித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது சொன்ன விஷயங்களை சுட்டிக்காடி கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.குறிப்பிட்ட ஒருவர் பிரசாரத்தின் போது அதிக குழந்தைகள் இருந்திருக்க கூடாதா என அவர் கூறியதை குறிப்பிட்டு அதனை நிரைவேற்றும் எண்ணம் இருக்கிறதா என ஆர்வத்தோடு கேட்ட கேள்விக்கும் அவர் இல்லை என்று பதில் தந்தார்.

டிவிட்டர் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டாலும் எதிர்பார்க்க கூடியது போலவே சிக்கலான மற்றும் சர்ச்சைக்குறிய வினாக்களை தவிர்த்து விட்டு தனது வேலை திட்டத்திற்கு பொருத்தமானவற்றுக்கு மட்டும் உற்காமாக பதில் தந்தார்.

இருப்பினும் டிவிட்டர் மூலம் அவர் மேற்கொண்ட இந்த முயற்சியை வரவேற்க வேண்டும்.

குறும்பதிவு சேவையான டிவிட்டர் தகவல் பகிர்விற்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் வழி செய்து கொண்டிருக்கும் போது மக்கள் பிரதிநிதிகளும் தங்களுக்கு வாக்களித்தவர்களோடு தொடர்பு கொள்ள அதனை பயன்படுத்திக்கொள்வதே இரு தரப்பினருக்குமே நலன் பயக்கும்.அதிலும் டிவிட்டரின் உடனடித்தன்மை மற்றும் சுலபத்தன்மை புதியதொரு உறவு பாலத்தை ஏற்படுத்தி தரக்கூடியது.

அந்த வகையில் புளோரிடா கவர்னர் டிவிட்டர் மூலம் குறை கேட்பு நிகழச்சியை நடத்தியுள்ளார்.புளோரிடா மக்களிடமும் இதற்கு நல்ல வர்வேற்பு காணப்பட்டது.இந்த அறிவிப்புக்கு பின் டிவிட்டரில் அவரது பிந்தொடர்பாளர்கலின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

வருங்காலத்தில் இததகைய டிவிட்டர் நிகழ்ச்சிகள் மேன்மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கட்சிகளின் பொதுக்குழு செயற்குழு போல டிவிட்டர் குழுக்களும் பிரபலமாகலாம்.

மூளையை வளர்க்கும் இணைய தேடல்

netbrainஇண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?

முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை.இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை.30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும்.

மூன்றாவ‌து த‌லைமுறை இண்டெர்நெட் என்றாலே ப‌ய‌ந்து ஒதுங்கி கொள்ளும் முத்த‌ த‌லைமுறை.விதிவிலக்கான‌ ஒரு சில‌ரைத்த‌விர‌ பெரும்பாலான‌ தாத்தா பாட்டிக‌ளை இந்த‌ பிரிவில் தான் சேர்க்க‌ வேண்டும்.

இப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்து வைப்ப‌தை விட‌ பெரிய‌ சேவை வேறு இருக்க‌ முடியாது தெரியுமா?

இண்டெர்நெட் அறிமுக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு புதிய‌ உல‌கை திற‌ந்துவிடும் என்ப‌து ஒருபுற‌ம் இருக்க‌ அது அவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் என்ப‌தே விஷ‌ய‌ம்.அதாவ‌து இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ ப‌யிற்சியாக‌ அமையும் என‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அதிக‌ம் இல்லை ஒரு வார‌ கால‌ம் கூகுல் தேட‌லில் எடுப‌ட்டாலே போதும் பெரிய‌வ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் ம‌ற்றும் புரிந்து கொள்ளும் ஆற்ற‌ல் மேம்ப‌டுபவ‌தாக‌ க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து.

அமெரிக்காவைச்சேர்ந்த‌ யுசிஎல்ஏ என்னும் அமைப்பு இது தொட‌ர்பான‌ ஆய்வை ந‌ட‌த்தியுள்ள‌து.55 வ‌ய‌து முத‌ல் 78 வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கொண்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌ ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் முளையின் செய்ல்பாடு ஆல‌சி ஆராய‌ப்ப‌ட்ட‌து. ஆய்வில் ப‌ங்கேற்றோர் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது அவ‌ர்க‌ள் மூலையில் நிக‌ழும் ராசாய‌ண‌ மாறுத‌ல்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

அப்போது தேடலில் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு மிக‌வும் சுறுசுறுப்பாக‌ இருப்ப‌து க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.முளையில் முடிவெடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் ப‌குதியில் இந்த‌ செய‌ல்பாடு அமைந்திருந்த‌தை ஆய்வால‌ர்க‌ள் க‌வ‌னித்துள்ள‌ன‌ர்.

இந்த‌ வ‌கை செய‌ல்பாடு முடிவெடுப்ப‌து ம‌ற்றும் புரிந்து கொள்ளுத‌லில் முக்கிய‌ பாங்காற்றும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.என‌வே இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ ப‌யிற்சியாக‌ அமையும் என்று க‌ருதப்ப‌டுகிற‌து.ஒரு வார‌ கால‌ம் தேட‌லில் ஈடுப‌ட்டாலே போதுமான‌து என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அல்சைம‌ர்ஸ் போன்ற‌ நினைவுத்திற‌ன் குறைபாட்டினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இணைய‌ தேடல் உத‌வ‌லாம் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

என‌வே உங்க‌ள் வீட்டில் பெரிய‌வ‌ர்க‌ள் இருந்து அவ‌ர்க‌ள் இண்டெர்நெட் விஷ‌ய‌த்தில் ப‌ய‌ந்தாங்கொலிக‌ளாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளுக்கு இண்டெர்நெட்டை க‌ற்றுக்கொடுப்ப‌து மிக‌ச்சிற‌ந்த‌ உத‌வியாக‌ இருக்கும்.

ஒரு நூறு முத்த‌ங்க‌ளும் ஒரு ‘நெட்’ச‌த்திர‌மும்

taiwanஇண்ட்நெர்நெட் தினம் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.இண்றைய நட்சத்திரம் யார் தெரியுமா?தைவானைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர்.

பாரிசில் வசிக்கும் யாங் யா சிங் என்னும் பெயர் கொண்ட அந்த பெண்மணி தனது முத்தங்களால் இண்டெர்நெட் உலகை பற்றிக்கொள்ள வைத்திருக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் என்பது போல இந்த இளம்பெண்ணுக்கும் ஒரு லட்சியம் உண்டானது. விநோதமானது,விவகாரமானது,துணிச்சலானது , என எப்படி வேண்டுமானாலும் அந்த லட்சியத்தை வர்ணிக்கலாம்.

பாரிஸ் நகரில் வசிக்கும் நூறு பேரை முத்தமிட வேண்டும் .இது தான் அவரது லட்சியம்.இது வரை 54 பெரை முத்தமிட்டிருக்கிறார்.

இந்த‌ முத்த‌ யாத்திரை ப‌ற்றி அவ‌ர் த‌ன‌து வ‌லைப்ப‌திவு த‌ள‌த்தில் புகைப்ப‌ட‌த்தோடு த‌க‌வ‌ல்க‌ளை ப‌கிர்ந்து கொண்டு வ‌ருகிறார்.இது வ‌ரை 20 ல‌ட்ச‌ம் பேர் அந்த‌ வ‌லைப்ப‌திவை பார்த்திருக்கின்ற‌ன‌ர். க‌ட‌ந்த‌ திங்க‌ள் கிழ‌மை ப‌ட்டும் 22000 பேர் பார்த்திருக்கின்ற‌ன‌ர்.

அந்த‌ வ‌லைப்ப‌திவு அவ‌ர‌து சொந்த‌ மொழியில் இருப்ப‌தால் அவ‌ர‌து முத்த‌ யாத்திரையின் நோக்க‌ம் குறித்து அறிய‌ முடிய‌வில்லை. ஆனால் இந்த‌ ப‌ய‌ன‌ம் அவ‌ரை இண்டெர்நெட் ந‌ட்ச‌த்திரமாக‌ ஆக்கியிருக்கிற‌து என்ப‌தை ம‌ட்டும் தெரிந்து கொள்ள‌ முடிகிற‌து.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍—-
link;
http://www.wretch.cc/blog/angelduck777/24982946
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

——

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
இந்த இளம்பெண்ணைப்பற்றி படிக்கும் போது ,கண்ணில் படுபவர்களை எல்லாம் அரவணைத்து அன்பின் செய்தியை இண்டெர்நெட்டின் மூலம் சொன்ன ஜுவான் ம‌ன் ப‌ற்றி நினைக்க‌த்தோன்றுகிற‌து.இது ப‌ற்றிய‌ என் முந்தைய‌ ப‌திவான ‘நான் அர‌வணைக்க‌ வ‌ந்தேன் ‘ இணைப்பு கிழே…

————
link;
http://cybersimman.wordpress.com/2008/12/09/star/