Tag Archives: internet

சோம்பேறிகளுக்கான இணைய டைரி.

நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத்தக்கது என்னும் பொருளில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.எழுத்து பழக்கம் என்பது தொடர்ந்து எழுதுவதை என்று புரிந்து கொள்ளலாம்.

வணிக நோக்கில் எழுதுபவர்கள் சோம்பல் இல்லாமல் தினமும் ஒரு பக்கமாவது எழுதி விடுபவர்களாக இருக்கின்றனர் என்பது சு ரா வின் கருத்து.ஆனால் படைப்பாளிகளிடமே இத்தகைய சுறுசுறுப்பை காண முடியாமல் சோம்பலே அதிக இருப்பது என்பது அவரது ஆதங்கம்.

எழுத்து என்பது கலை தான் என்ற போதிலும் அதனை பட்டைத்தீட்டிக்கொள்ள படைப்பாற்றலோடு கொஞ்ச்ம பயிற்சியும் தேவை என்னும் சு ரா வின் கருத்தோடு எனக்கும் உடன்பாடு உள்ளது.

நல்ல எழுத்தாளர்கள் தினமும் ஒரு பக்கமாவது எழுதி பார்த்துவிட வேண்டும் என்று கூறும் சு ரா வின் கருத்து இணைய உலகிற்கும் பொருந்தும்.

யோசித்துப்பாருங்கள் இணையம் நமது கருத்துக்களை பதிவு செய்யவும் பகிரவும் எத்தனை வசதிகளை தந்துள்ளது.வலைப்பதிவு மூலமாக வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறோமோ இல்லையோ முக்கிய அனுபவங்களை பதிவு செய்யலாம்.டைரி எழுதுவது போல மனதில் தோன்றுவதை குறித்து வைத்து கொள்ள உதவும் இணைய சேவைகள் இருக்கின்றன.

தினமும் புகைப்பத்தோடு வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்ய தூண்டும் தளங்களும் இருக்கின்றன.எனன் இருந்து என்ன பயன்,எதையும் இடைவிடாமல் செய்யும் குணம் தான் இல்லையே.சோம்பலும் மறதியும் வழிமறித்து கொள்வதால் இத்தகைய சேவைகளை பயன்படுத்தி கொள்ளும் சுறுசுறுப்பு கிடைக்கப்பெறுவது பெரும் பாடாக அல்லவா இருக்கிறது.

இத்தகைய சோம்பேறிகளுக்காக என்றே அருமையான ஒரு இணைய டைரி சேவை அறிமுகமாகியுள்ளது.

வாழ்க்கை குறிப்புகளை எழுத உதவும் அந்த தளம் நாள் தவறாமல் அதனை எழுதி முடிக்கவும் வழி செய்கிறது.டிவிட்டர் யுகத்தில் பலரும் மறந்து விட்ட இமெயில் துணையோடு இதனை அழகாக நிறைவேற்றுகிறது இந்த இணையதளம்.அதற்கேற்ப மிகவும் பொருத்தமாக மெயில்டைரி என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மெயில் டைரியில் தினமும் உங்கள் வாழ்வனுபவத்தை நீங்கள் குறித்து வைக்கலாம்.டைரி எழுதுவது போல தான் என்றாலும் ஒரு நாள் உற்சாகமாக ஆரம்பித்து விட்டு மாறுநாளே மறந்து போய்விடும் அபாயம் இந்த சேவையில் இல்லை.

காரணம் இந்த தளம் தினமும் இமெயில் வாயிலாக நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.இதில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்ட நாள்தோறும் இமெயில் வாயிலாக இன்றைய தினம் என்ன நடந்தது என்று கேள்வியை இந்த தளம் கேட்கும் .அதற்கு பதில் அளிப்பதற்காக கொஞ்சம் யோசித்து பார்த்து முக்கிய நிகழ்வுகளை குறித்து வைக்கலாம்.

நாட்காட்டி வசதியோடு இபப்டி குறிப்புகளை இடம் பெறச்செய்வதற்கான வசதியும் உள்ளது.

இது தான் என்று இல்லாமல் எல்லா வகையான விஷயங்களையும் இதில்,பகிர்ந்து கொள்ளலாம்.அனுபவங்களை மட்டும் அல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைப்பவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்.புகைப்படங்களையும் சேர்த்து கொள்ளலாம்.செல்போனில் இருந்தும் அனுபவங்களை அப்டேட் செய்யலாம்.

ஒரு கட்டத்திற்கு பின் திரும்பி பாத்தால் இந்த பதிவுகள் செறிவானவையாக வியக்க வைக்கலாம்.பிள்ளைகளிடமோ நண்பர்களிடமோ காட்டி மகிழ கூடியவையாக இருப்பதோடு நமக்கே பயனுள்ளதாக இருக்கலாம்.

நினைத்தை அடையவும் இந்த தளம் கைகொடுக்கும்.யார் கண்டது உங்கள் அனுபவங்கள் ஒரு ஆழமான நாவலுக்கு உரியதாக கூட இருக்கலாம்.

டைரி எழுதுவதன் அருமையை புரிந்து கொள்ள பிரும்புகிறவர்கள் அனந்தரஙக பிள்ளை டைரி பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதியுள்ள குறிப்புகளை படித்து பார்க்க வேண்டும்.

டைரி எழுத இனைய முகவரி;http://maildiary.net/

ஒரு இளஞ்ஜோடியின் சண்டையும் டிவிட்டர் நேரடி வர்ணனையும்.

டிவிட்டரின் ஆதார பலங்களில் ஒன்று அதன் நேரடி ஒலிபரப்புத்தன்மை.எந்த நிகழ்வையும் எவரும் டிவிட்டர் மூலம் அவை நிகழும் போதே உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனை செய்யப்படுவது போலவே நாம் பார்க்கும் நிகழ்வுகளை நம் கண் முன் அரங்கேறும் சம்பவங்களை டிவிட்டரில் வர்ணனை செய்யலாம்.

இதற்கு அழகான உதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்க ரெஸ்டாரன்டின் நடந்த சம்பவம் ஒன்று டிவிட்டரில் நேரடியாக பகிர்ந்து கொள்ளப்பட்டதை குறிப்பிடலாம்.இளம் கனவன் மனைவியிடையே உண்டான பிணக்கு அல்லது மோதல் என்று அதனை சொல்லலாம்.

மோதலோ பிணக்கோ அந்த நிகழ்வு அதன் அத்தனை சுவையோடும் உயிர்ப்போடு டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்பதே விஷயம்.

‘ஒரு திருமணம் உடைகிறது’.இப்படி தான் ஆன்டி பாயல் என்னும் குறும்பதிவாளர் அந்த வர்ணனையை துவக்கியிருந்தார்.பர்ஜர் கிங் ரெஸ்டாரன்டில் அமர்ந்திருந்த அவர் அருகே இருந்த மேஜையில் அந்த இளஞ்ஜோடியிடையே ஏற்பட்ட மோதலை கவனிக்க நேர்ந்த போது ,இந்த ரெஸ்டாரன்டில் எனது மேஜை அருகே ஒரு திருமணம் உடைவதை பார்த்து கொண்டிருக்கிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் குறும்பதிவாக பகிர்ந்து கொண்டார்.

அவருடைய அடுத்த குறும்பதிவு ,அந்த குழந்தைகளின் வயது 21 என்று குறிப்பிட்டது.அந்தை பையனின் புகார்,அம்மா சொல்லும் போது அவள் பாத்திரங்களை தேய்ப்பதில்லை என்பதாக இருக்கிறது என பிணக்கிற்கான காரணத்தையும் அதில் குறுப்பிட்டிருந்தார்.

அடுத்த பதிவு ,அவள் சத்தமாக விசும்புவதையும் அவன் எழுந்து செல்வதையும் குறிப்பிட்டிருந்தது.கூடவே ரெஸ்டாரண்டில் இருந்த யாரும் அவளை தேற்ற முயலவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.

இதற்குள் அவன் திரும்பி வந்திருந்தான்.இந்த தகவலை உடனே தெரிவித்த அடுத்த பதிவு ,நான் உனக்கு துரோகம் செய்யவில்லை என்று அவள் சொன்னதையும் அதை அவன் நம்பாமல் இருந்ததையும் தெரிவித்தது.இருப்பினும் உன்னை நேசிக்கிறேன் என்று அவன் குறுகிறான்.அமர்ந்து கொள்கிறான்,எங்கும் அமைதி நிலவுகிறது இப்படி கதை போல அந்த பதிவு தொடர்ந்தது.

இதை பார்த்த வேறு ஒரு ஜோடி பரஸ்பரம் கட்டித்தழுவி கொள்வது போன்ற ஒரு காட்சியையும் திரைப்படங்களில் கட் செய்து காட்டுவது போல நடுவே ஒரு பதிவில் வர்ணித்தார்.

‘அன்பே,நீ ஒரு நல்ல மனைவியாக் இருக்க வேண்டும் என்று தான் நான் இதனை சொல்கிறேன்’ என்று அவன் விளக்கம் அளிக்கிறான்.யாரும் இதனை நம்பவில்லை என்னும் வர்ணனையோடு பாயல் இந்த தகவலை பகிர்ந்து கொள்கிறார்.

அவன் மட்டும் வீடியோ கேம் பார்த்து கொண்டிருக்க அவள் மட்டும் மாமியார் சொல்வதை கேட்டு பாத்திரங்களை தேய்த்து கொண்டிருப்பது நியாயமா என்று அவள் குமுறுகிறாள்.

நீ என்னை நேசித்தால் நான் மகிழ்ச்சியாக இருக்க வழி செய்ய வேண்டும் என்கிறான் அவன்.

இந்த வாதத்தால் அவள் வெறுத்துப்போகிறாள்.நான் இதை கேட்க விரும்பவில்லை என்று கூச்சலிடுகிறாள்.அவன் மீது பதிலுக்கு புகார்களை வீசுகிறாள்.நீ ஏன் என்னை திருமணம் செய்து கொண்டாய என அவள் ஆவேசமாக கேட்க ஏன் என்றால் நான் உன்னை காதலித்தேன் என அவன் பதில் சொல்கிறான்.காதலித்தேன் என இறந்த காலத்தில் சொல்லப்பட்டதை அவள் விரக்தியுடன் சுட்டிகாட்டுகிறாள்.

இதனிடையே அவர்கள் மோதலுக்கான மையகாரணமாக இருவரும் பரஸ்பரம் துரோகம் இழைத்திருப்பதாக சந்தேகிப்பதை பாயல் சுட்டிக்காடுகிறார்.

அவள் அவனை வெளியேறுமாறு கத்துகிறாள்.அவன் அப்படியே அமர்ந்திருக்க அவள் வேறு மேஜைக்கு சென்று விடுகிறாள்.

இதனிடையே மற்றவர்கள் கவனிப்பதி அவள் கவனித்திருக்க வேண்டும்.வெளியே சென்று பேசலாம் என்கிறாள்.அவனோ கடுப்பாக,ஏன் இங்கேயே பேசலாம் எலல்லோரும் உனைப்பற்றி தெரிந்து கொள்ளட்டும் என்கிறான்.

தொடர்ந்து அவள் ஆடை அணியும் விதத்தை அவன் குறை கூறுகிறான்.அவள் எனக்கு பிடித்தபடி அணிகிறேன் என்கிறாள்.அவன் அதை நான் தீர்மானிக்க வேண்டும் என்கிறான்.

மேலும் கொஞ்சம் சண்டை போட்டுவிட்டு அவர்கள் அமைதியாகின்றனர்,ரெஸ்டாரண்டில் மெல்லிய பின்னணி இசை கேட்பதாக பாயல் வர்ணிக்கிறார்.

இதற்குள் அவள் எதையோ சொல்ல அவன் சிரிக்க அவளும் சிரிக்கிறாள்.மற்றவர்களும் சிரிக்கின்றனர்.

அவன் குழந்தை பிறப்பது பேசுகிறான்.அவள் வெளியேறுகிறாள்.அவன் பின் தொடர்ந்து ஓடுகிறான்.

அவள் மீண்டும் உள்ளே வருகிறாள்.அவனும் வருகிறான்.அவள் மன்னிப்பு கேட்க வன் தோளை குலுக்குகிறான்.அவளை கட்டியனைத்தபடி வெளியேறுகிறான்.

அவர்கள் இருக்கைகள் காலியாக இருக்கின்றன,அவர்கள் வாழ்க்கையில் உள்ள அன்பை போல என்று பாயல் கவித்துவமாக முடிக்கிறார்.

இப்படியாக டிவிட்டரில் அந்த இளம் தம்பதியின் ஊடலை(!)அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அந்த தம்பதி இதனை எதிர்பார்த்திருந்தால் பொது இடத்தில் இப்படி சன்டையிட்டுருப்பார்களா?

இது டிவிட்டர் கால கதை சொல்லலா அல்லது டிவிட்டர் கால அத்துமீறலா?

இணையதளங்களை கண்காணிக்க ஒரு இணையதளம்.

இன்டெர்நெட்டை திரும்பி பார்க்க உதவும் வேபேக் மெஷின் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இணையதளங்களின் கடந்த கால தோற்றங்களை சேமித்து வைக்கும் இந்த தளத்தை இணையத்தின் கால் இயந்திரம் என்றும் சொல்கின்றனர்.

ஒரு இணையதளம் குறிப்பிட்ட காலத்திற்கு முன் எப்படி இருந்தது என்று அறிய விரும்பினால் இந்த இயந்திரத்தின் மூலம் காலத்தில் பின்னோக்கி சென்று அந்த தளத்தின் அப்போதைய தோற்றத்தை பார்க்க முடியும்.

இந்த தளத்தை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.ஆனால் புதிதாக அறிமுகமாகியிருக்கும் டெய்லி ஸ்கிரீன்ஷாட் தளத்தை பார்க்கும் போது இந்த தளமே நினைவுக்கு வருகிறது.

டெய்லி ஸ்கிரீன்ஷாட் இணையதளம் குறிப்பிட்ட இணையதளங்களின் தோற்றத்தை பின் தொடர உதவுகிறது. அதாவது அந்த தளத்தை தினந்தோறும் கண்காணிக்க வழி செய்கிறது.

எந்த தளத்தை பின் தொடர விருப்பமோ அந்த தளத்தின் முகவரியை சமர்பித்தால் இந்த தளமானது அந்த தளத்தின் தோற்றத்தை தினந்தோறும் படம் பிடித்து காட்டுகிறது.இணையதள தோற்றத்தை அப்படியே படம் பிடித்து ஸ்கிரின் ஷாட்டாக பார்க்கலாம் அல்லாவா,அதே போலவே தளங்களின் ஸ்கிரின் ஷாட்டை சேமித்து வைக்கிறது இந்த தளம்.

இதன் மூலம் எந்த ஒரு இணையதளத்தில் ஏற்படும் மாற்றத்தையும் கண்காணித்து கொண்டே இருக்கலாம்.

இந்த சேவையை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.சொந்தமாக இணையதளம் வைத்திருப்பவர்கள் தங்கள் தளங்களின் பரிணாம வளர்ச்சியை இதன் மூலம் பின் தொடரலாம்.இணைய தள வடிவமைப்பாளர்களும் தாங்கள் உருவாக்கிய தளங்களின் செய்லபாட்டை அறிய இதனை பயன்படுத்தலாம்.

வர்த்தக நிறுவனங்கள் போட்டி நிறுவங்களின் தளங்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும் இதனை பயன்படுத்தலாம்.

இணையவாசிகளும் தங்கள் அபிமான தளங்களின் தோற்றத்தை தினமும் கண்காணிக்கலாம்.ஆனால் கட்டண சேவை என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

இணையதள முகவரி;http://dailyscreenshot.com/

rediro

இணையதளங்களை அறிய புதுமையான வழி.

இணையம் ஒரு தகவல் பெருங்கடல்.அந்த கடல் முன் எப்போதாவது நீங்கள் திசை தெரியாமல் குழம்பி தவித்தது உண்டா?அதாவது இப்போது எந்த இணையதளத்தை நோக்கி செல்லலாம் என்று தெரியாமல் திகைத்து நிற்பது!

இந்த குழப்பமும் திகைப்பும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இணைய கத்துகுட்டிகளுக்கும் ஏற்படலாம்.இணையத்தின் மூளை முடுக்குகளை நன்கறிந்த இணைய கில்லாடிகளுக்கும் உண்டாகலாம்.

இத்தகைய ஒரு நிலை ஏற்படும் போது வழிகாட்டுவதற்காக என்றே ரெடிரோ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்போது எந்த தளத்தை காணலாம் என்னும் கேள்விக்கு இந்த தளமே முடிவு செய்து ஒரு புதிய இணையதளத்தை பரிந்துரைக்கிறது.

எந்த வகையை சேர்ந்தது என்றெல்லாம் பாராமல் சீட்டு குலுக்கி போடுவது போல இந்த தளம் ஏதாவது ஒரு புதிய இணையதளத்தை உத்தேசமாக தேர்வு செய்து அறிமுகம் செய்கிறது.இதன் முகப்பு பக்கத்தில் உள்ள’ கோ’ என்று கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்தால் போதும் ஏதாவது ஒரு தளத்திற்கு அழைத்து செல்கிறது.

இந்த தள்ம் வேண்டாம் என்றாள் இன்னொரு முறை கிளிக் செய்தால் வேறொரு புதிய இணையதளம் வந்து நிற்கிறது.தினமும் வருகை தந்தால் புதிய தளங்களை தெரிந்து கொள்ளலாம்.

புதிய இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ள ஏற்கனவே எண்ணற்ற தளங்கள் இல்லாமல் இல்லை.யாஹூ காலத்தில் அறிமுகமான கூல் சைட்ஸ் இணையதளத்தில் துவங்கி பல தளங்கள் புதிய தளங்களை அடையாளம் காட்டி வருகின்றன.பிரபலமான செய்தி தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் இதற்கென தனிப்பகுதியும் இருக்கின்றன.

உதாரணத்திற்கு பிபிசி தலத்தில் வெப்ஸ்கேப் பகுதி புதிய தளங்களை அறிமுகம் செய்கிறது.மேக் யூஸ் ஆப் வலைப்பதிவு தினந்தோறும் கூல் சைட்ஸ் என்ற பெயரில் புதிய தளங்களை அறிமுக செய்கிறது.இந்தியாவின் மும்பை மிரர் நாளிதழின் தொழிநுட்ப பகுதியில் புதிய தளங்கள் தொகுத்தளிக்கப்டுகிறது.

ஆனால் இவற்றில் எல்லாம் ஒவ்வொரு தளமாக பார்வையிட்டு உங்கள் விருப்பத்திற்கேற்ற தளத்தை தேர்வு செய்ய வேண்டும்.அந்த தளம் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றலாம்.இல்லை ஏமாற்றத்தை தரலாம்.ஏமாற்றம் ஏற்பட்டால் வேறு சில தளங்களை பார்வையிட வேண்டும்.

இதற்கு மாறாக தோராயமாக தேர்வு செய்யப்பட்டு முன வைக்கப்படும் இணையதளத்தை பார்வையிட முடிவது சுவாரஸ்யமானது தானே.இதில் உள்ள ஒரு புதிர் தன்மை ஏற்படுத்தும் ஆர்வமும் அதன் பிறகு பயனுள்ள தளத்தை பார்க்க நேர்ந்தால் ஒருவித திருப்தியும் உண்டாகத்தானே செய்யும்.அதைதான் இந்த தளம் சாத்தியமாக்குகிறது.

ரெடிரோவை பற்றி படிக்கும் போதே சாட்ரவுலட் தளம் பற்றியும் நினைவுக்கு வரலாம்.இணைய அரட்டை அதன் புதுமையையும் சுவாரஸ்யத்தையும் இழந்து அலுப்பை த்ந்து கொண்டிருந்த நிலையில் அதை தலைகிழாக பிரட்டிப்போடுவது போல வந்து சேர்ந்த சாட்ரவுலட் இணைய அரட்டையில் மீண்டும் சுவாரஸ்யத்தை உயிர் பெற வைத்தது.

ரவுலட் சூதாட்ட விளையாட்டு பாணியில் முன் பின் அறிமுகம் இல்லா யாரோ ஒருவரோடு வெப்கேம் மூலம் அரட்டை அடிக்க உதவுவதே இந்த தளத்தின் தனிச்சிறப்பு.யாருடன் அரட்டை அடிப்பது என நாம் முடிவு செய்ய வேண்டாம்.நல்லவர் ,வல்லவர் என்றெல்லாம் பார்த்து தேர்வு செய்ய வேண்டாம்.ஒவ்வொரு முறையும் யார்வது ஒருவரை சாட்ரவுலட்டே பரிந்துரை செய்யும்.

இணையய்தள அறிமுகத்திலும் இதே தன்மையை ரெடொரோ கொண்டு வந்துள்ளது.

இதில் உள்ள ஒரு புதிர் தன்மை ஏற்படுத்தும் ஆர்வமும் அதன் பிறகு பயனுள்ள தளத்தை பார்க்க நேர்ந்தால் ஒருவித திருப்தியும் உண்டாகத்தானே செய்யும்.அதைதான் இந்த தளம் சாத்தியமாக்குகிறது.

இதுவரை 70 தளங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இருந்து ஒவ்வொரு முறையும் ஒரு தளம் முன் வைக்கப்படுகிறது.இந்த பட்டியலில் இடம் பெறக்கூடிய புதிய தளங்களை இணையவாசிகளும் பரிந்துரை செய்யலாம்.

இணையதள முகவரி;http://www.rediro.com/

உலக போராட்டங்களை அறிய ஒரு இணையதளம்.

உலகம் போராடிக்கொண்டே இருக்கிறது.அதாவது, உலகில் எங்காவது ஒரு மூளையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிற‌து.

ஆனால் எல்லா போராட்டங்களுமே உலகின் கவனத்தை ஈர்ப்பத்தில்லை.சில இருட்டடிப்பு செய்யப்படுகின்ற‌ன.சில மறைக்கப்படுகின்றன.பல அலட்சியப்படுத்தப்படுகின்றன.ஆனால் இவற்றை மீறி ஆர்ப்பாட்டம்,பேரணி,பொதுக்கூட்டம்,கிளர்ச்சி என மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கொண்டு தான் இருக்கின்றன.

நாளிதழ்களும் ,செய்தி தளங்களும் இந்த போராட்டங்களை பதிவு செய்து கொண்டு தான் இருக்கின்றன.போர்க்குணம் கொண்டவர்கள் அதாவ்து போராட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களும்,போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறவர்களும் போராட்ட செய்திகளை தேடிப்பிடித்து படித்தும் வருகின்றனர்.

ஆனால் போராட்ட செய்திகளை எல்லாம் ஒரே இடத்தில் காணவேண்டும் என நினைத்தால் அதற்கான வழி இது வரை இல்லை.போராட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் தளங்களாக தேடிச்செல்ல வேண்டும்.சினிமா செய்தி,உலக செய்தி ,தொழில்நுட்ப செய்தி என அனைத்து வகையான் செய்திகளையும் ஒரே இடத்தில் தொகுத்து தர பல தளங்கள் இருக்கும் நிலையில் போராட்டங்களுக்கு ஒரு தளம் இல்லாதது பெருங்குறை தான்.

இந்த குறையை போக்கும் வகையில் உலக் போராட்டங்களை ஒரே இடத்தில் தரும் தளமாக வேர்ல்டு அட் புரடஸ்ட் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள்,கிளர்ச்சிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் உலகில் அதற்கேற்ப உலகில் எங்கெல்லாம் போராட்டம் நடக்கின்றன்னவோ அந்த போராட்ட செய்திகளை தொகுத்தளிக்கிற‌து.

போராட்ட செய்திகளை பலவிதமாக தெரிந்து கொள்ளலாம்.முகப்பு பக்கத்தின் மேலேயே சமீப்பத்திய போராட்ட செய்திகள் செய்தி வரிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன.அதன் கீழே உலக வரைபடம் போராட்ட வரைபடமாக விரிகிறது.வரைபடத்தில் எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடர்பான‌ செய்திகள் வருகின்ற‌ன.
வரைபடத்தில் சில நாடுகள் சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.அதன் பொருள் அந்த நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள் அதிக அளவில் உள்ள என்பதாகும்.ஒருவிதத்தில் போராட்டத்தின் தீவிரத்தையும் இவை உணர்த்தக்கூடும்.போராட்டம் தீவிரமாகும் போது செய்திகளும் அதிகமாக வெளியாக வாய்ப்புள்ளது தானே.
வரைபடத்தை சின்னதக்கியும் பெரிதாக்கியும் பார்க்கும் வசதியும் உள்ளது.அதே போல கீழே வந்தால் அங்குள்ல ஸ்லைடர் வசதியை கொண்டு பழைய போராட்டங்க‌ளை தேதிவாரியாக பார்க்கலாம்.

போராட்டத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த தளம் பேரூதவியாக இருக்கும்.ஆய்வு நோக்கிலும் இந்த தளம் பயன்படும்.மனித உரிமை ஆர்வளர்கள் அரசுகள் பொய சொல்கின்ரனவா என்று கன்கானிக்கவும் இந்த தளத்தை பய‌ன்ப‌டுத்த‌லாம்.

இப்போதைக்கு போராட்டங்கள் பற்றி நாளிதழ்களிலும் செய்தி தளங்களிலும் வெளியாகும் செய்திகளே இங்கு தொகுத்தளிக்கப்படுகின்றன.இருட்டடிப்பு செய்யப்படும் போராட்டங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை.

எனவே போராட்ட விவரங்களை இணையவாசிகள் சம‌ர்பிக்க வாய்ப்பளித்தால் மேலும் சிற‌ப்பாக இருக்கும்.அதே போல போராட்டங்கள் தொடர்பான் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகள் கூட தொகுத்தளிக்கப்படலாம்.

எகிப்திலும்,அரபு நாடுகளிலும் நடைபெற்ற மக்கள் கிள‌ர்ச்சி டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் தானே உயிர் பெற்றன.

இதே போன்றதொரு போராட்டதளத்தினை இந்தியாவுக்காகவும் தமிழகத்துக்காகவும் ஊட உருவாக்கினால் நன்றாக இருக்கும்.

போராடங்களை அறிய இணைய‌ முகவரி http://worldatprotest.com/