பாஸ்வேர்டு அலட்சியம் வேண்டாம்)

1(7)-kkID--621x414@LiveMintஉலகின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டும் இருப்பதாக கூறினால் எப்படி இருக்கும்? உண்மையில் அப்படி நிகழந்தால் நீங்கள் ஷாக்காக வேண்டும். ஏன் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பாஸ்வேர்டு என்றாலே ரகசியமானது என்று தானே பொருள். பிரபலமான பாஸ்வேர்டுகளின் பட்டியல் என்றால் அவற்றின் ரகசியம் மீறப்பட்டுள்ளது என்று தானே பொருள். அது தான் விஷயம். இப்படி பொதுவெளியில் பகிரங்கமாக அறியப்பட்ட பாஸ்வேர்டுகளின் பட்டியல் தான் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பிளேஷ்ட்டேட்டா எனும் நிறுவனம், இணைய உலகில் ஹேக்கர்களின் கைவரிசைக்கு உள்ளாகி திருடப்பட்ட லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. உண்மையில், இந்த பட்டியலை உலகின் மோசமான பாஸ்வேர்டுகள் அடங்கிய பட்டியல் என்று தான் சொல்ல வேண்டும். இணைய பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் ஸ்பிளேஷ்டேட்டா, ஆண்டுதோறும், குறிப்பிட்ட அந்த ஆண்டில் தாக்குதலுக்கு உள்ளாகும் லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகளை அலசி ஆராய்ர்ந்து அவற்றில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளை பட்டயலிட்டு வருகிறது.

இந்த பட்டியல் சொல்லும் செய்தி என்னவெனில், இதில் இடம்பெறும் பாஸ்வேர்டுகளை தவிர்க்க வேண்டும் என்பது தான். ஆனால், வேதனையான யதார்த்தம் என்னவெனில் பெரும்பாலானோர் இத்தகைய மோசமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துகின்றனர் என்பது தான். அதனால் தான், 12345  எனும் எண்கள் வரிசை மற்றும் பாஸ்வேர்டு எனும் பாஸ்வேர்டு ஆகியவை இந்த ஆண்டும் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கிறது. இதே போன்ற எண்க வரிசை மற்றும் எளிதாக பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டுகளே முதல் பத்து இடங்களில் உள்ளன. இந்த ஆண்டு புதிதாக டொனால்டு மற்றும் சன்ஷைன் ஆகிய பாஸ்வேர்டுகளும் டாப்- 20 யில் இடம்பெற்றுள்ளன.

ஆக, உங்கள் பாஸ்வேர்டு எளிதில் ஊகிக்க முடியாமல் இருக்க வேண்டும் என்பது தான் பாஸ்வேர்டு பாதுகாப்பில் முதல் பாலபாடம். இதன் முக்கியத்துவத்தை அறிய வேண்டும் எனில் இந்த மோசமான பாஸ்வேர்டு பட்டியலை பாருங்கள்: https://www.teamsid.com/splashdatas-top-100-worst-passwords-of-2018/

( தளம் புதிது)

புதுமையான ஸ்கிரீன்ஷாட் சேவை!

இணையதளங்களின் முகப்பு பக்கத்தை அப்படியே படம் எடுப்பது போல ஸ்கிரீன்ஷாட்டாக சேமித்துக்கொள்ளும் வசதியை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வகை சேவையை வழங்கும் இணையதளங்களும் பல இருக்கின்றன. இந்த பிரிவில் புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ஸ்கிரோலா. ஆப் (https://scrola.app/ ) இணைய சேவை, புதுமையான முறையில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க வழி செய்கிறது. பல இணையதளங்களில், அதன் பக்கத்தை அப்படியே நீளமாக பார்க்கும் வசதி இருக்கிறது அல்லவா? இது ஸ்கோரிலிங் என குறிப்பிடப்படுகிறது. இந்த வகை தளங்களை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் அடுக்க வழி செய்வது தான் ஸ்கிரோலாவின் சிறப்பாக இருக்கிறது. முழு தளமும் நீளமாக பதிவாவதோடு, ஸ்கிரோல் செய்யும் போது எப்படி பக்கத்தை பார்ப்போமோ அதே உணர்வை அளிக்கும் வகையில் ஸ்கிரோல் செய்யும் அம்சமும் சேர்த்து ஸ்கிரீன்ஷாட்டில் பதிவாகிறது. எனவே ஸ்க்ரீன்ஷாட்டை பார்க்கும் போதும் ஸ்கிரோல் செய்யும் உணர்வை பெறலாம். வடிவமைப்புத்துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும். வழகமான ஸ்க்ரீன்ஷாட் சேவை தேவை எனில் பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ள ஸ்கிரீன்ஷாட் வசதியை பயன்படுத்தி இணைய பக்கங்களை சேமித்துக்கொள்ளலாம்.

(செயலி புதிது)

சிறுதொழில் நிறுவனங்களுக்கான செயலி

கூகுள் நிறுவனம், சிறிய அளவிலான வர்த்தக நிறுவனங்களுக்கான மை பிஸ்னஸ் ஆப் செயலியை அறிமுகம் செய்துள்ளது,. இந்த செயலி மூலம் சிறிய வர்த்தகர்கள் தங்கள் டிஜிட்டல் பயணத்தை துவக்கலாம். மேலும் தங்கள் வர்த்தகத்தை கூகுள் தேடல் சேவை மற்றும் கூகுள் வரைபட சேவையில் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் சிறிய தொழில் நிறுவனங்கள் தங்களுக்கான அறிமுகம் பக்கத்தை உருவாக்கி கொள்வதோடு இதன மூலமே வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக உரையாடலையும் மேற்கொள்ளலாம். வர்த்தகர்கள் இதில் தங்கள் வர்த்தகம் தொடர்பான ஒளிப்படங்களை பதிவேற்றலாம். நிகழ்ச்சி அல்லது சலுகை தொடர்பான தகவலை அளிக்கலாம். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கும் இந்த செயலி மூலமே பதில் அளிக்கலாம். கூகுள் வரைபடம் மீது ஒருங்கிணைக்கப்படுவது கூடுதல் அணுகூலமாக அமைகிறது.

மேலும் தகவல்களுக்கு: https://www.google.com/business/

(தொழில்நுட்பம் புதிது)

எதிர்கால தொழில்நுட்பம் எப்படி இருக்கும்?

மேற்கத்திய இசை பாடகரான, வில்லியம் (Will.i.am  ) இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் ஆர்வம் உள்ளவர் மட்டும் அல்ல, அவற்றில் நிபுணத்துவமும் மிக்கவர். சில ஆண்டுகளுக்கு முன் தனது பெயரில் ஒரு ஸ்மார்ட் வாட்சையும் இவர் அறிமுகம் செய்திருக்கிறார். இந்நிலையில் வில்லியம் பேட்டி ஒன்றில் , தொழில்நுட்ப நோக்கில் எதிர்காலம் எப்படி இருக்கும் எனும் கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார்: “ 2028 ல் தொழில்நுட்பம் எப்படி இருக்கும்? டிவி என்றால் என்ன? என்னுடைய சுவரே ஒரு டிஸ்பிளேவாக மாறியிருக்கும். டிவி வாங்குவதற்கான ஒரே காரணம் என்னவெனில், உங்கள் பில்டர் திரைகள் கொண்ட சுவர்களை அமைக்காமல் விட்டதாக தான் இருக்கும். கண்ணாடி வாங்காமல் விட்டதற்கான காரணமும் இப்படி தான் இருக்கும். எல்லாமே திரைகளாக இருக்கும். இது பழைய நுட்பம் தான். தனியுரிமை பிரச்சனைகளும் இருக்கும். ஆனால் அவற்றுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும்.”.  வருங்கால தொழில்நுட்பத்தின் போக்கை இப்படி படு சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார் வில்லியம்: முழு பேட்டியை படிக்க: https://www.rollingstone.com/music/music-features/william-future-entertainment-and-his-problems-hip-hop-762117/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *