சாதனைகளை பகிர்ந்து கொள்ள அழைக்கும் இணையதளம்.

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நீங்கள் விரும்பியதை எல்லாம் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் நீங்கள் செய்து முடித்த சாதனைகளை பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதனை பேஸ்புக்கிலோ டிவிட்டரிலோ செய்யாதீர்கள்,எங்களிடம் வாருங்கள் என்று அழைக்குறது ‘அச்சூ’ இணையதளம்.

காரணம்,உங்களது சாதனைகளை பகிர்ந்து கொள்வதற்கான வலைப்பின்னல் சேவையாக அச்சூ உருவாக்கப்பட்டிருப்பது தான்.(அச்சூ என்பது அச்சீவ்மென்ட்ஸ் என்னும் ஆங்கில எழுத்தின் சுருக்கம்.)

இந்த இடத்தில் சாதனை என்பது மகத்தான செயல் என்னும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை கவந்த்தில் கொள்ளுங்கள்.மாறாக பயனுள்ள வகையில் (உங்களால்)செய்து முடிக்கப்பட்ட எந்த ஒரு செயலும் என்று அர்த்தப்படுத்தி கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அவுட்லுக் இமெயில் சேவையயை பயன்படுத்தி பார்த்ததாக இருக்கலாம்.நீங்கள் கேட்டு ரசித்த இசை நிகழ்ச்சி பற்றி டிவிட்டரில் நேரடி விமர்சமாக குறும் பதிவுகளை பகிர்ந்து கொண்டதாக இருக்கலாம்.புதிய மொழியை கற்பதற்கான முயற்சி,ஒரே மூச்சில் படித்து முடித்த நாவல்… இப்படி நீங்கள் செய்து முடித்த எந்த செயலை வேண்டுமானாலும் அச்சூவில் பகிர்ந்து கொள்ளலாம்.

இது ஒரு வகையான சுய தம்பட்டமடிக்கும் செயல் இல்லையா என்று கேட்கலாம்.சந்தேகமே வேண்டாம் இது சுய தம்பட்டம் தான்.இதை தான் அச்சூவும் செய்யத்தூண்டுகிறது.

இத தான் நீங்கள் செய்து முடித்தவற்றை பகிர்ந்து கொண்டு அது வைரஸ் போல பரவச்செய்யுங்கள் என்கிறது அச்சூ.

ஆனால் இது முற்றிலும் சுய தம்பட்டமும் இல்லை.உங்களது ஆர்வத்தை,அதனடைப்படியில் நீங்கள் செய்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் செயல் தான் இது.

எல்லாம் சரி இப்படி செய்வதால் என்ன பயன் என்று கேட்கலாம்.உங்களை பற்றி மற்றவர்களுக்கு தெரிவித்து அதன் மூலம் புதிய வாய்ப்புகளை தேடிக்கொள்வதற்காக தான் என்கிறது அச்சூ .

இவற்றை பேஸ்புக் அல்லது டிவிட்டரிலேயே பகிர்ந்து கொள்ளலாம் தான்.பலரும் இதனை செய்து வருகிறோம்.ஆனால் பேஸ்புக்/டிவிட்டரில் வெளீயிடும் போது இந்த பதிவுகள் மற்ற பதிவுகளோடும் புகைப்படங்களோடும் கலந்து பின்னுக்கு தள்ளப்பட்டு காணாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அச்சூ தளத்தில் ஒருவர் சாதித்த செயல்கள் மட்டுமே இடம் பெருகின்றன.அந்த செயலையும் பகிர்பவர் தனது துறை சார்ந்த குறிச்சொற்களை இணைத்து வெளியிடலாம் என்பதால் இந்த சாதனை பகிர்வு ஒருவரை சரியான வகையில் அறிமுகம் செய்யும் விதத்தில் அமைந்து விடுகின்றன.

ஒரு விதத்தில் இவை உங்களுக்கான அறிமுக சீட்டு போல தான்.உங்கள் ஆர்வத்தையும் திறமையையும் செயல்கள் வாயிலாக வெளிப்படுத்த உதவும் அறிமுக சீட்டாக இந்த பதிவுகளை கருதலாம்.

இந்த பதிவுகளை காணும் நண்பர்கள் அதனை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் தங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.அதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கலாம்.மற்ற வலைப்பின்னல் தளங்கள் போலவே நண்பர்களை பிந்தொடர‌வும் செய்யலாம்.

இந்த பதிவுகளை சக உறுப்பினர்கள் கிளிக் செய்து பார்க்கும் போது உங்கள் திறமைகளை தெரிந்து கொள்வதோடு அது தனக்கோ தனது நிறுவனத்திற்கோ தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ள முன் வரலாம்.இதன் மூலம் புதிய வேலை வாய்ப்பு அல்லது வர்த்தக வாய்ப்புகள் சாத்தியமாகலாம்.

சின்ன சின்ன சாதனைகளை இப்படி பகிர்ந்து கொள்வதன் அவசியம் பற்றி இந்த தளத்தின் வலைப்பதிவு பக்கத்தில் அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பயோ டேட்டா என்னும் தன் விவர குறிப்பை பார்த்து வேலை வாய்ப்பு கிடைத்ததெல்லாம் அந்த காலம் .இப்போதெல்லாம் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை அறியவே பலரும் விரும்புகின்றனர் என்று ச‌மூக ஊடக வல்லுனர் சேத் கோல்டின் கூறியதை மேற்கோள் காட்டி நீங்கள் செய்த சாதனைகளின் தடங்களை பதிவு செய்யும் நோக்கத்துடன் அச்சூ உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல டிவிட்டர் குறும்பதிவுகளில் கூட தங்கள் சாதனைகளை பகிர்ந்து கொள்ளும் குறும்பதிவுகளுக்கு அதிக கவனம் கிடைப்பதாக தெரிவிக்கும் ஆய்வு முடிவும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆக செய்த சாதனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,அதாவது சமூக வலைப்பின்னல் யுக‌த்தில் உங்களை சரியாக வெளிப்படுத்தி கொள்ளுங்கள்.

இணையதள முகவரி;http://www.achoo.co/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சாதனைகளை பகிர்ந்து கொள்ள அழைக்கும் இணையதளம்.

 1. மிக்க நன்றி…
  தொடர வாழ்த்துக்கள்…

  Reply
 2. நல்ல தளம். நாம் செய்கின்ற ஒவ்வொரு செய்லுமே ஒரு வகையான சாதனைதான் என்பது போலுள்ளது இத் தளம்.

  Reply
  1. cybersimman

   ஒரு சின்ன திருத்தம் ,ஒவ்வொரு செயலும் அல்ல,தொழில் அல்லது திறமை சார்ந்த எந்த செயலுமே சாதனை தான்.ஆனால் சாதனை என்பதை ரெகார்ட் என்பது போல பார்காதீர்கள்.

   அன்புடன் சிம்மன்.

   Reply
   1. நிச்சயமாக , ஒவ்வொரு செயலுமென்றால் , செய்கிற பாவங்கள் , அக்கிரமங்கள் கூட சாதனையாகிவிடும் நண்பரே. நன்றி.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *