Tagged by: image

நான் ஏன் ஏஐ சேவைகளை பயன்படுத்துவதில்லை!

எல்லோரும் ஏஐ சாதனங்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். என்னளவில், ஏஐ எனப்படும் செயற்கை அறிவு அல்லது செய்யறிவு தொடர்பாக அறிந்து கொள்வதிலும், அறிந்தவற்றை எழுதுவதிலும் உள்ள ஆர்வம், ஏஐ சேவைகளை பயன்படுத்துவதில் இல்லை. அதிலும் குறிப்பாக எழுத்துப்பணிகக்காக ஏஐ சேவையை பயன்படுத்தும் விருப்பம் கிடையாது. எழுதுவது தொடர்பான இணைய ஆய்வுக்கும் ஏஐ நுட்பத்தை நாடுவதில்லை. இதுவரை அதற்கான தேவையை உணர்ந்ததில்லை. அதோடு, எனக்கான உள்ளடக்கம் தொடர்பான தேடலில் ஏஐ நுட்பத்தைவிட எனது தேடலே மேம்பட்டது எனும் நம்பிக்கையும் இருக்கிறது. இது […]

எல்லோரும் ஏஐ சாதனங்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். என்னளவில், ஏஐ எனப்படும் செயற்கை அறிவு அல்லது செய்யறிவு தொடர்பாக அறி...

Read More »

புகைப்பட தேடியந்திரம் ’பிக்சர்ச்’

இணையத்தில் படங்களை தேடுவது என்று வரும் போது, பிக்சர்ச்சை (picsearch.com) தான் முன்னணி தேடியந்திரம் என்று சொல்ல வேண்டும். தகவல்களை மட்டும் அல்ல, படங்களை தேடவும் கூகுளுக்கு பழகியவர்களுக்கு இது ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. ஏனெனில், உருவப்படங்களை தேடும் நுட்பத்தை பொருத்தவரை பிக்சர்ச் முன்னோடி தேடியந்திரமாக விளங்குகிறது. புத்தாயிரமாண்டில் செயல்படத்துவங்கிய இந்த தேடியந்திரம் ஸ்வீடன் நாட்டில் உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய இதே காலத்தில் தான் கூகுள் தேடியந்திரமும் தன் பங்கிற்கு உருவப்படங்களை தேடும் […]

இணையத்தில் படங்களை தேடுவது என்று வரும் போது, பிக்சர்ச்சை (picsearch.com) தான் முன்னணி தேடியந்திரம் என்று சொல்ல வேண்டும்....

Read More »

’பேஸ்ஆப்’ எப்படி செயல்படுகிறது?

ஒரு செயலி வைரலாகி புகழ் பெறுவது புதிதல்ல தான், ஆனால், ஒரு செயலி மீண்டும், மீண்டும் வைரலாவது என்பது அரிதானது. பேஸ்ஆப் செயலிக்கு இது சாத்தியமாகி இருக்கிறது. முகங்களை மாற்றிக்காட்டும் இந்த செயலி, இப்போது மூன்றாவது முறையாக வைரலாகி இருக்கிறது. பேஸ்புக்கிலும், இன்னும் பிற சமூக வலைதளங்களிலும், திடிரென நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் உங்கள் நண்பர்களின் பாலினம் மாறிய படங்களே இதற்கு சாட்சி. ஆணாக இருக்கும் ஒருவரின் பெண் பால் தோற்றத்தை இந்த செயலி வெகு எளிதாக உருவாக்கிதருகிறது. […]

ஒரு செயலி வைரலாகி புகழ் பெறுவது புதிதல்ல தான், ஆனால், ஒரு செயலி மீண்டும், மீண்டும் வைரலாவது என்பது அரிதானது. பேஸ்ஆப் செய...

Read More »

இது முகங்களை தேடும் தேடியந்திரம்

ரிவர்ஸ் இமேஜ் சர்ச் இஞ்சின் என்று சொல்லப்படும், மறு உருவ தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் போன்ற வழக்கமான முறையில் தகவல்களை தேடித்தருவதற்கு மாறாக, உருவங்களை தேடித்தரும் பிரத்யேக தேடியந்திரங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக தேடியந்திரங்கள், கீவேர்டு எனப்படும் குறிச்சொற்களை சமர்பித்து தேடுகிறோம். நாம் தேடும் குறிப்பிட்ட குறிச்சொல் தொடர்பான முடிவுகள் பட்டியலிடப்படும். தகவல்களை தேடும் இதே முறையில், படங்களை அதாவது உருவங்களையும் தேடலாம். இப்படி உருவங்களை தேடும் போது, கூகுள் போன்ற தேடியந்திரங்களில், இமேஜ் […]

ரிவர்ஸ் இமேஜ் சர்ச் இஞ்சின் என்று சொல்லப்படும், மறு உருவ தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் போ...

Read More »

ஒரு மீம் அகழ்வாராய்ச்சியும், சில அதிர்ச்சிகளும்!

‘கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன்’ (distracted boyfriend meme ) மீமை நீங்கள் நிச்சயம் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த மீமின் எண்ணற்ற வடிவங்களையும் அறிந்திருக்கலாம். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை- ஏனெனில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட, எடுத்தாளப்பட்ட மீம்களில் ஒன்றாக இது இருக்குகிறது. இளம் பெண்ணுடன் நடந்து செல்லும் இளைஞர் ஒருவர் தங்களை கடந்து செல்லும் வேறு ஒரு யுவதியை திரும்பி பார்ப்பதும், அதை பார்த்து உடன் இருக்கும் பெண் ஆவேசமாக முறைப்பது போன்ற புகைப்படம் தான் இந்த மீம் […]

‘கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன்’ (distracted boyfriend meme ) மீமை நீங்கள் நிச்சயம் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த...

Read More »