இணைய கற்காலத்தின் இனிய நினைவுகள்

1445887906366202

பேஸ்புக்,டிவிட்டருக்கு முந்தைய இணையத்தை உங்களுக்கு நினைவிருக்கிறதா?இரண்டும் தான் உலகம் என நினைக்கும் ஸ்மார்ட்போன் தலைமுறையிடம் இந்த கேள்வியை,அந்த கால இணையம் எப்படி இருந்தது என்பதை அறிவீர்களா? என்று கேட்க வேண்டும்.

இணையத்தில் அந்த காலம் என்றால் எச்.டி.எம்.எல் யுகம்;கூகுள் தேடலுக்கு முந்தைய காலம்.பிரவுசர் என்றால் நெட்ஸ்கேப்பும்,இணையத்தில் உலாவுதல் என்றால் யாஹுவும் என இருந்த ஆண்டுகள்.இணைய சாமனியர்களின் சொந்த வீட்டுக்கனவை ஜியோசிட்டீஸ் நிறைவேற்றித்தந்த நாட்கள்.

இணையத்தின் ஆரம்ப கால அற்புதங்களின் நினைவு சின்னங்கள் இவை.இணைய பரிணாமத்தில் வலை 1.0 என குறிப்பிடப்படும் இந்த கால கட்டம் முடிந்து இப்போது வலை 2.0 அலை வீசிக்கொண்டிருக்கிறது.சமூக வலைததளங்களும் ,உள்ளங்கையில் இணையத்தை அணுகும் வசதியும் இதன் அடையாளமாக உருவாகியிருக்கின்றன.எல்லாவற்றுக்கும் ஒரு செயலி இருக்கிறது.இ-காமர்ஸ் கோலோச்சுகிறது.எதிர்காலத்தில் தொழில்நுட்பம் இன்னும் என்ன எல்லாமோ மாற்றங்களை கொண்டுவர இருக்கின்றன.

எதிர்கால அற்புதங்கள் பற்றிய மாநாடுகள் நடத்தப்படும் நிலையில்,இணையத்தின் அந்த காலத்தை திரும்பி பார்க்கும் வகையில் ஒரு மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.அமெரிக்காவைச்சேர்ந்த புரோகிராமர் கெய்லே டிரேக் மற்றும் சைபர் மானுடவியலாளரான ஆம்பர் கேஸ் இருவரும் இணைந்து இந்த இரண்டு நாள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றனர்.

வலை 1.0 மாநாடு, 2105 ( தி வெப் 1.0 கான்பிரன்ஸ் 2015) எனும் பெயரிலான இந்த மாநாட்டில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த மாநாட்டை இணைய பிளேஷ்பேக் என்றோ அல்லது அந்த கால நினைவுகளில் மூழ்கும் முயற்சி என்றோ அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம்.
1445887923610154
இணையத்தின் ஆரம்ப கால அற்புதங்களை எடுத்துரைத்து,அதற்கும் இன்றைய இணையத்திற்குமான வேறுபாடுகளையும் இந்த மாநாடு கவனத்தில் கொண்டு வந்ததுள்ளது.மாநாட்டுக்கு என்று அமைக்கப்பட்ட இணையதளமும் அந்த கால தன்மையுடனேயே அமைந்திருந்தது.இலவச இணையதளங்களை உருவாக்க வழி செய்த ஜியோசிட்டீஸ் இணையதளம் ( http://websiteconf.neocities.org/) போலவே அந்த தளம் அமைந்திருந்தது.
மாநாட்டில் இதே பாணியிலான இணையதளத்தை உருவாக்கும் முயற்சியிலும் பிரதிநிதிகள் ஈடுபட்டனர்.
இதற்கு என்ன அவசியம் என்று கேட்கலாம்?

ஆம்,இணையம் ஆரம்ப நாட்களில் இவ்விதமாக தான் இருந்தது.அதற்காக 3ஜியையும் கடந்து 4ஜி-5ஜி என பேசிக்கொண்டிருக்கும் காலத்தில் ஆமை வேக டயல் அப் இணைய யுகத்திற்கு திரும்ப முடியுமா?என கேட்கலாம்.
இல்லை,இது இணைய கற்காலத்திற்கு திரும்பச்சொல்லும் கோரிக்கை அல்ல;மாறாக நவீன இணையத்தில் எவை எல்லாம் தவறாக இருக்கின்றன என்பதை அந்த கால இணையத்தில் சரியாக இருந்தவை மூலம் சுட்டிக்காட்டுவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

’இணையம் என்பதே மக்களை நுகர வைப்பதற்கான சதியாக மாறிவிட்டது’ என்கிறார் மாநாட்டு அமைப்பாளரான கெய்லே டிரேக்.அது மட்டும் அல்ல பிக் டேட்டா மற்றும் பிக் பிஸ்னஸ் ஆதிக்கம் செலுத்த கண்காணிப்பு யுகமும் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை அவர் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்.
இணையத்தின் ஆரம்ப காலத்தில் இவ்வாறு இருக்கவில்லை என்பதோடு எல்லாவற்றிலும் ஒரு படைப்பூக்கமும்,புதுமையயும் இருந்தன என்கிறார்.இவற்றுக்கான அடையாளமாக தான் ஜியோசிட்டிஸ் கால இணையதளங்களை முன்வைக்கிறார்.

இந்த கால நவீன இணையதளங்களுடன் ஒப்பிடும் போது இவை தோற்றத்திலோ, உருவாக்கத்திலோ பல மடங்கு பின் தங்கியிருப்பவை.ஆனால் என்ன ,இவற்றின் உள்ளடக்கத்தில் இருந்த தனிநபர் படைப்பாற்றலும்,கற்பனைத்திறனும் இப்போது சாத்தியமாகிறதா என்ன?

தொழில்நுட்ப நோக்கில் இவை அதிக பின்புலம் இல்லாத நிலையான பக்கங்களை கொண்டவை. ஸ்டேட்டின் வெப் என குறிப்பிடப்படுகின்றன.இன்றைய பிராண்ட்பேண்ட் இணையத்தில் இருந்து திரும்பி பார்த்தால் இவை மாட்டுவண்டிகளுக்கான ஒரு வழிப்பாதை போல தோன்றலாம்.
ஆனாலும் என்ன, இணையத்தில் தாங்கள் நினைத்த வகையில் தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு வலைமனையை உருவாக்கி கொள்ள இவை வழி செய்தனவே. அதன் காரணமாகவே இவற்றில் தனிமனித படைப்பாக்கம் அதன் அப்பாவித்தனத்துடன் அழகாக வெளிப்பட்டனவே!

விக்கி மற்றும் சமூக வலைதளங்களின் எழுச்சி, இ-காமர்ஸ் அலை எல்லாம் சேர்ந்து அந்த கால இணையத்தை வெகுவாக பின்னுக்கு தள்ளிவிட்டதுடன், புதிய விதிகளையும் உருவாக்கி இருக்கின்றன.கண்காணிப்பு யுகத்திற்கும் வித்திட்டுள்ளன.

பலரும் இணையத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த படைப்பாற்றல் மற்றும் வெளிப்படுத்தும் தன்மையை இழந்துள்ளதாக உணர்கின்றனர், அவர்களுக்காக தான் இந்த மாநாடு என்கிறார் கெய்லே டிரேக்.
ஆரம்ப இணையத்தின் நல்ல விஷ்யங்களை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம் என்று சொல்பவர் போர்ட்லாண்டில் மாநாட்டிற்கு கிடைத்த வரவேற்பின் தொடர்ச்சியாக மற்ற நகரங்களிலும் இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்கிறார்.

டிரேக் பற்றி மற்றொரு சுவாரஸ்யமான தகவல் ஜியோசிட்டீஸ் பாணியில் அந்த கால இணையதளங்களை உருவாக்கி கொள்ள வழி செய்யும் நியோசிட்டீஸ் ( Neocities ) தளத்தை அவர் நடத்தி வருகிறார்.
——–
productcamhead
செயலி புதிது; மின்வணிக செயலி

இ-காமர்ஸ் எனப்படும் மின்வணிக யுகத்தில் நீங்களும் பங்கேற்கலாம்- வாடிக்கையாளராக மட்டும் அல்ல;விற்பனையாளராகவும் தான்!.மின்வணிக தளங்கள் மூலம் அல்லது சமூக வலைதளங்கள் வாயிலாக உங்கள் தயாரிப்புகளை நீங்களே விற்பனை செய்யலாம்.நீங்கள் வடிவமைத்த ஆடைகள்,உருவாக்கிய பொருட்கள் என எதை வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.இதற்கு புகைப்படத்துடன் உங்கள் தயாரிப்பின் சிறப்பை விவரித்தாலே கூட போதுமானது.புகைப்படத்தை ஸ்மார்ட்போனிலேயே எடுத்துவிடலாம் தான்.ஆனால் மின்வணிக விற்பனைக்காக படம் எடுக்க சரியான முறை ஒன்று இருக்கிறது தெரியுமா? அதாவது, பின்னணி விவரங்கள் இல்லாமல் விற்பனை பொருள் மட்டுமே தெரியும் வகையில் படம் இருந்தால் நல்லது.அந்த பொருளை மட்டும் கத்திரித்து எடுத்து வெள்ளை காகிதத்தில் ஒட்டியது போல இருக்க வேண்டும். அப்போது தான் விற்பனை பொருள் பளிச்சென தெரியும்.காண்பவர்களையும் ஈர்க்கும்.

இத்தகைய படத்தை எடுப்பது எப்படி? என்று கவலைப்பட வேண்டாம்.அதற்காக என்றே பிராடக்ட் காமிரா (Product Camera ) செயலி அறிமுகமாகியுள்ளது.பின்னணி காட்சி இல்லாமல் விற்பனை பொருள் மட்டும் தோன்றும் வகையில் இந்த செயலி மூலம் புகைப்படத்தை கிளிக் செய்து கொள்ளலாம்.மின்வணிகத்திற்கு தான் என்றில்லை,நீங்கள் உருவாக்கிய படைப்புகளை,புதிதாக வாங்கிய பொருட்களை சமூக வலைத்தளங்களில் புகைப்படமாக பகிர்ந்து கொள்ளவும் இந்த செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆண்டாராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.productstudio.android

2
வீடியோ புதிது; எது அழகு?

அழகு என்பது காண்பவர் கண்களில் தான் இருக்கிறது என்று சொல்லப்பட்டால் தான் என்ன? பலருக்கு அழகு ஒரு பிரச்சனையாக தான் இருக்கிறது.சிலர் அழகாக இருப்பதை நினைத்து கர்வம் கொள்ளலாம்.சிலர் தாங்கள் அழகில்லாமல் இருப்பதாக நினைத்து கவலை கொள்ளலாம்.இப்படி அழகு பற்றி எப்படி நினைத்துக்கொண்டிருந்தாலும் சரி,தி ஸ்கூல் ஆப் லைப் உருவாக்கியுள்ள அழகு வீடியோவை அவசியம் பார்க்க வேண்டும்.கார்ட்டூன் சித்திரங்கள் மூலம் நகரும் இந்த வீடியோ அழகு பற்றிய பொதுவான அபிப்ராயங்களை அழகாக தகர்த்தெறிகிறது.அழகு என்பது தனிப்பட்டதல்ல என்றும் வாழ்க்கையில் ஜனநாயகத்தன்மை மிகவும் குறைவாக இருக்கும் அம்சங்களில் இதுவும் ஒன்று என்று கூறும் இந்த வீடியோ நல்ல தோற்றம் கொண்டிருப்பது லாட்டரி போன்றது என்றும் தெரிவிக்கிறது. இது தான் நானா?என்றெல்லாம் தோற்றத்தை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அழகு என்பது காலத்தால் மாறக்கூடியது என்றும் இந்த வீடியோ எடுத்துச்சொல்லி அழகை புதிய இடங்களில் தேடுங்கள் என ஊக்கம் அளிக்கிறது.

வீடியோவை காண: https://www.youtube.com/watch?v=DPiSFGrHCbE

தளம் புதிது; கருத்து கணிப்பு நடத்தலாம் வாங்க!
google-about-me

கருத்து கணிப்புகளை ஆய்வு நிறுவனங்கள் தான் நடத்த வேண்டுமா என்ன? நீங்கள் நினைத்தாலும் கருத்து கணிப்புகளை நடத்த முடியும் தான்.கேள்வி பதில் பாணியில் எளிதாக கருத்துக்கணிப்புகளை நடத்தி க்கொள்ள வழி செய்யும் இணையதளங்கள் பல இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இந்த பட்டியலில் இப்போது ரிடில் தளமும் சேர்ந்திருக்கிறது. மிக எளிதாக இணையவாசிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய உள்ளட்டக்கத்தை உருவாக்கி கொள்ள வாருங்கள் என அழைப்பு விடுக்கும் இந்த தளம்,கருத்து கணிப்புகள்,வினாடி வினா மற்றும் உங்களுக்கான பட்டியல்களையும் உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. இவ்வளவு ஏன் நீங்களே கூட ஆளுமை சோதனைக்கான கேள்விகளையும் உருவாக்கி கொள்ளலாம். வலைப்பதிவு மற்றும் சொந்தமாக இணையதளம் வைத்திருப்பவர்கள் தங்கள் வாசகர்களுடன் மேலும் சிறந்த முறையில் தொடர்பு கொள்ள இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.ஆசிரியர்களும் கூட மாணவர்கள் மத்தியில் சுவையான வினாடி வினாக்களை நடத்த பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணைய முகவரி: http://www.riddle.com/welcome

கூகுளில் உங்கள் விவரங்கள்

கூகுள் பயனாளிகளுக்காக புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.இது பயன்பாட்டில் நோக்கிலானது இல்லை என்றாலும் முக்கியமானது.பயனாளிகள் தங்களைப்பற்றிய விவரங்களை கட்டுப்படுத்தும் வசதியை கூகுள் அளிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யும் போது நம்மைப்பற்றிய பல விஷயங்களை சமர்பிக்கிறோம்.பெயர்,இ-மெயில் முகவரி,இருப்பிடம்,செல்போன் எண் உள்ளிட்ட பல தகவல்கள் நம்மிடம் இருந்து கோரப்படலாம்.இந்த விவரங்கள் நம்முடைய சேவை பக்கத்தில் மட்டும் அல்லாது பொதுவிலும் இடம்பெற வாய்ப்பிருக்கிறது.பொதுவில் என்றால்,இணையத்தில் தேடப்படும் போது நம்முடைய பெயர் தொடர்பான விவரங்களில் இவையும் தோன்றுவதற்கான வாய்ப்பாகும்.
தனியுரிமை நோக்கில் இது அத்தனை பாதுகாப்பானது அல்ல; இந்நிலையில் கூகுள் அதன் பயனாளிகளுக்கு அவர்களைப்பற்றிய விவரங்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பை அளிக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் அபவுட் மீ (https://aboutme.google.com/ ) பக்கத்தில் நுழந்து இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பக்கத்தில் நுழைந்தால் கூகுள் சேவை மூலம் தெரிவிக்கப்பட்ட உங்களைப்பற்றிய தகவல்களில் எவை எல்லாம் பொதுவில் இருக்கின்றன என காண்பிக்கப்படுகிறது. அவற்றை நீங்கள் எடிட் செய்யலாம் அல்லது நீக்கலாம்.
இவை கூகுள் பிளஸ் விவரங்கள் தொடர்பானது என்றாலும் தனியிரிமை விழிப்புணர்வில் முதல் படியாக கருதலாம்.

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது;

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *