பறக்கும் தட்டு வீடியோக்களுக்கு விளக்கம் அளிக்கும் வல்லுனர்

imageபறக்கும் தட்டுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?
பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா? பறக்கும் தட்டுகள் வேற்று கிரகவாசிகளின் இருப்புக்கான அடையாளமாக அமைகின்றனவா?

இந்த கேள்விகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், ஜேம்ஸ் ஆபர்கை (james oberg ) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பறக்கும் தட்டு தொடர்பான சங்கதிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை கொண்டவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி ஆபர்கை அறிந்து கொள்வது நல்லது. ஏனெனில் அவர் பறக்கும் தட்டு நிகழ்வுகள் பின்னால் இருக்கும் அறிவியவிலுக்கான விளக்கத்தை அளித்து வருகிறார். இந்த விளக்கத்தை அவர் அளித்து வரும் விதம் தான் கவனத்திற்கு உரியதாக இருக்கிறது. இணைய உலகிற்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கிறது.
பறக்கும் தட்டுகள் தொடர்பான விவாதம் பல ஆண்டுகளாக நடந்துக்கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் பிளையிங் சாஸர்ஸ் என்று குறிப்பிடப்பட்டு அதன் பிறகு யு.எப்.ஒ (அன் ஐடிண்டிபைடு பிளையிங் ஆப்ஜக்ட்ஸ்) என பொதுவாக குறிப்பிடப்படும் பறக்கும் தட்டுகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் கற்பனையையும் கருத்தையும் ஈர்த்து வருகின்றன.

பூமியில் பார்த்தறியாத ஒரு பொருளை பார்க்கும் போது அல்லது பார்த்ததாக சொல்லப்படும் போது அது பறக்கும் தட்டாக இருக்கலாம் எனும் நம்பிக்கை பலவித கதைகளுக்கும், கட்டுக்கதைகளுக்கும் வித்திட்டிருக்கின்றன. இணையத்திற்கு முந்தைய காலத்தில் வெறும் செய்திகளையும், புகைப்பட ஆதாரங்களையும் வைத்துக்கொண்டு தான் இது பற்றி விவாதிக்க வேண்டியிருந்தது. ஆனால் இணைய யுகத்தில் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதற்கு வீடியோ ஆதாரங்களும் அநேகம் இருக்கின்றன. யூடிடூப் தளத்தில் யு.எப்.ஒ என தேடிப்பார்த்தால் ஒரு கோடிக்கும் அதிகமான வீடியோக்கள் பட்டியலிடப்படுகின்றன. யு.எப்.ஒ பார்த்தல் தொடர்பான பிரபலமான யூட்டியூப் சேனல்களை நூற்றுக்கும் மேல் இருக்கின்றன. இந்தியாவின் விமானத்திற்கு அருகே காணப்பட்ட பறக்கும் தட்டு, வானத்தில் பெரிய பறக்கும் தட்டை பார்த்தவர் என விதவிதமாக பறக்கும் தட்டு வீடியோக்கள் காணக்கிடைக்கின்றன.

இந்த ஆர்வத்தையும், நம்பிக்கையையும் மீறி பறக்கும் தட்டுகள் இன்னும் அறிவியலின் எல்லைக்குள் வரவில்லை. விஞ்ஞானிகள் இவற்றை ஏற்பதில்லை.
ஆனால் இவற்றின் அறிவியல் அடிப்படை பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல், பறக்கும் தட்டுகள் பற்றி தீவிரமாக விவாதித்துக்கொண்டிருப்பவர்கள் இல்லாமல் இல்லை.

இந்த இடத்தில் தான் ஜேம்ஸ் ஆபர்க் வருகிறார். அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமான நாசாவின் முன்னாள் ஊழியரான ஆபர்க் அந்த பணியில் இருந்து விலகிய பிறகு விண்வெளி ஆய்வு தொடர்பான பத்திரிகையாளர் மற்றும் ஆய்வாளராக செயல்பட்டு வருகிறார். விண்வெளி ஆய்வு திட்டங்கள் பற்றி, குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவின் விண்வெளி ஆய்வு திட்டங்கள் பற்றி அவர் நன்கறந்தவராக கருதப்படுகிறார். விண்வெளி ஆய்வு திட்டங்கள் மற்றும் அவற்றிம் அடிப்படை பற்றி தொடர்ந்து கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

இவற்றுக்கு நடுவே அவர் பறக்கும் தட்டு தொடர்பான உண்மைகளை விளக்குவதிலும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

பொதுவாக விஞ்ஞான உலகில் இருப்பவர்கள் பறக்கும் தட்டு தொடர்பான விவாதங்களை புறங்கையாக ஒதுக்கித்தள்ளி விடுகின்றனர். ஆனால் ஆபர்க் அப்படி செய்வதில்லை. மாறாக அவர் பறக்கும் தட்டு நிகழ்வுகள் என்று சொல்லப்படுவதன் பின்னே உள்ள உண்மையை புரிய வைக்க முயனறு வருகிறார். இதை அவர் செய்து வரும் விதம் தான் பாராட்டுக்குறியதாக இருக்கிறது. பறக்கும் தட்டு தொடர்பான யூடியூப் வீடியோக்களில் பின்னூட்டமாக அவர் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

பறக்கும் தட்டு நிகழ்வுகளை விளக்கி கட்டுரை எழுதலாம். வீடியோ விளக்கங்களை தயார் செய்யலாம். ஆனால் அவை எல்லாம் பொதுவான வாசகர்களுக்கானவையாகவே இருக்கும். பறக்கும் தட்டுகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அந்த உலகிலேயே தான் முழ்கியிருப்பார்கள். அதனால் தான் ஆபெர்க், யூடியூப்பில் பறக்கும் தட்டு தொடர்பாக தீவிர உரையாடல் நடக்கும் வீடியோக்களை தேர்வு செய்து, அதன் விவாத சரட்டில் விஞ்ஞான பூர்வமான உண்மைகளை விளக்கி பதில் அளித்து வருகிறார்.

பறக்கும் தட்டு நம்பிக்கையை ஒரேடியாக அலட்சியம் செய்து விடாமல் உண்மையில் இந்த ஆர்வத்திற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். பறக்கும் தட்டு அபிமானிகள் சுட்டிக்காட்டும் தகவல்களை எல்லாம் சேகரித்து அவற்றை உண்மையான நிகழ்வுகளுடன் அவர் ஒப்பிட்டுப்பார்த்து இந்த பணியை செய்து வருகிறார். இதன் பயனாக அவர், ஒரு சுவாரஸ்யமான முடிவை முன்வைக்கிறார். மெதுவாக நகரும் பொருட்கள், குறிப்பிட்ட ஒளி சூழல் மற்றும் காற்று மணடலத்திற்கு பழகிய மனித உணர்வுகள், பூமிக்கு பொருத்தமான சூழலில் சரியாக செயல்படுகின்றன. ஆனால், பூமியை விட்டு விலகிச்செல்லும் போது நமது உணர்வு குழப்பமாகி விடுகின்றன என்கிறார் ஆபெர்க். இந்த குழப்பமே பறக்கும் தட்டுகளை நம்ப வைக்கிறது என்றும் சொல்கிறார்.

யூடியூப்பில் தான் பார்த்த பறக்கும் தட்டு வீடியோக்களை அலசி ஆராய்ந்து அவற்றில் காணப்படும் பொதுத்தன்மைக்கு ஏற்ப மூன்று முக்கிய பிரிவாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த நவம்பர் மாதம் 7 ம் தேதி வானத்தில் திடிரென தோன்றிய ஒரு பொருள் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு அந்த பொருள் வெடித்துச்சிதறி நீல நிற பிழம்பாகி மறைந்தது. இது பெரும் பரபரப்ப ஏற்படுத்தியதோடு இந்த நிகழ்வு தொடர்பான யூடியூப் வீடியோ பத்து கோடி முறை பார்க்கப்பட்டது.
ஆனால், ராக்கெட் வெளியேற்றிய புகையின் தாக்கத்தால் உண்டானது இது என்று விளக்கம் தருகிறார் ஆபெர்க். பூமியில் இருந்து வானத்தை பார்க்கும் போது, அது முழு சூரிய ஒளியில் இருக்க நாம் இருளில் இருப்பதால் வானத்திற்கு பழக்கப்பட்டாத நம் கண்களுக்கு அது பிழம்பாக காட்சி அளித்தாலும் அது ராக்கெட்டில் இருந்து வெளியேறும் புகையின் தோற்றமே என்கிறார் அவர்.

இதே போல நாசாவின் விண்கலம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி நடுவே வெள்ளைத்துகள்கள் மிதந்து நடனமாடுவது போல அமைகின்றன. இது தொடர்னாப யூடியூப் வீடியோக்கள், வேற்று கிரக விண்கலங்களில் இருந்து வந்த ஒளி என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

ஆனால் ஆபெர்க் இதற்கும் பொறுமையாக விளக்கம் தருகிறார். பூமியில் இருந்து பார்க்கும் மனநிலையே இதற்கு அடிப்படை காரணம் என்கிறார் அவர். பூமியில் நாம் நிலையாக நிற்கிறோம். ஆனால் வெளியில் விண்கலம் 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது. அதை கடந்து செல்லும் எந்த பொருளும் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கும். இவ்வாறு கடந்து செல்லும் பொருட்களில் ஏதேனும் ஒன்று அதன் பார்வையில் சிக்க வேண்டும் என்றால் அது விண்கல காமிராவில் பதிவானால் மட்டுமே சாத்தியம். விண்கலத்தில் இருந்து உதிர்ந்த சில பொருட்களே இப்படி அதன் காமிராவில் சிக்கி மிதக்கும் புள்ளிகளாக தெரிகிறது என்கிறார் அவர்.

பறக்கும் தட்டு என நம்பப்படும் நிகழ்வுக்கு பின்னே உள்ள இத்தகைய அறிவியல் தகவல்களை அவர் வீடியோக்களில் பின்னூட்டமாக தெரிவித்து வருகிறார். இந்த புள்ளிகளை அவர் விண்வெளி பொடுகுகள் என்கிறார்.

அதே போல, பூமியில் சூரிய ஒளி ஒரு பொருளின் மீது படும் போது அதன் நிழல் வேறு ஒன்றின் மீது படர்கிறது. ஆனால் விண்வெளியில் பயணிக்கும் விண்கலத்தின் நிழல் வேறு எதன் மீதும் விழ வாய்ப்பில்லாத நிலையில், அவப்போது எதிர்படும் விண்வெளி பொடுகளால் ஈர்த்துக்கொள்ளப்பட்டு,வெளியேற்றப்படுகிறது. இதைப்பார்த்தும் ஏமாந்து போகின்றனர் என்கிறார்.

இணைய வெளியில் தகவல்களுக்கும் பஞ்சமில்லை. தகவல் பிழைகளுக்கும் குறைவில்லை. தவறான தகவல்களை நம்புவதற்கும் பல்வேறு குழுக்கள் இருக்கின்றன. இவர்களுக்கு மத்தியில் சென்று கருத்து போராட்டம் நடத்துபவராக ஆபெர்க் விளங்குகிறார்.

ஜேம்ஸ் ஆபெர்க் இணையதளம்:http://www.jamesoberg.com/
ஆபெர்க் விளக்கம் பற்றிய கட்டுரை: http://www.atlasobscura.com/articles/how-one-man-has-explained-almost-every-internet-ufo-theory

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.