சமூக ஊடகத்திற்கு ஒரு மாத காலம் ஓய்வு !

a870cd0a-c8fa-4cc2-91f202fb5c445865சமூக ஊடக சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்திற்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட்டிவிட வேண்டும் என கேட்க வேண்டாம். இப்படி நிலைத்தகவல் வெளியிடுவதையும், ஒளிப்படங்களை பகிர்வதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தான் சவாலே!

ஆம், இப்படி ஒரு அறைகூவலை இங்கிலாந்து சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்நாட்டின் ராயல் பப்ளிக் ஹெல்த் சொசைட்டி, ஒரு மாத காலம் சமூக ஊடக செயல்பாடுகளுக்கு குட்பை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக செப்டம்பர் மாதத்தை ஸ்கிரோல் பிரி மாதமாக அறிவித்து, இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது.

நவீன வாழ்க்கையில் சமூக ஊடகங்களின் தாக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். இணையத்தில் புழங்குபவர்களில் பெரும்பாலனோர் பேஸ்புக் அல்லது டிவிட்டர் அல்லது வாட்ஸ் அப் என ஏதாவது ஒரு சமூக உடக சேவையை தீவிரமாக பயன்படுத்துகின்றனர். இன்னும் பலர் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதற்காக தான் இணையத்திற்கே வருகை தருகின்றனர். நாட்டு நடப்புகளில் துவங்கி தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் வரை எல்லாவற்றையும், நிலைத்தகவலாகவோ அல்லது ஒளிப்படமாகவோ அல்லது மீம் வடிவிலோ பகிர்ந்து கொள்வது இயல்பாகி இருக்கிறது. இன்னும் சிலர், வாட்ஸ் அப்பில் காலை வணக்கத்தில் துவங்கி, இரவு பேஸ்புக்கில் குட்நைட் சொல்லி உறங்கச்செல்லும் வழக்கம் கொண்டுள்ளனர்.

இப்படி பலரும் சமூக ஊடகத்திற்கு அடிமையாகிவிடும் நிலை ஏற்பட்டிருப்பது தான் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இளசுகள் சமூக ஊடகமே கதி என இருப்பது அவர்கள் மனநலம் மற்றும் உடல்நலத்தையும் பாதிக்கும் விஷயமாகவும் இருக்கிறது.  கடந்த ஆண்டு யங் ஹெல்த் மூவ்மெண்ட் எனும் இளைஞர் நல அமைப்புடன் இணைந்து பொது சுகாதார கழகம் நடத்திய ஆய்வு முடிவும் இதை உறுதி படுத்தியுள்ளது. ஸ்டேட்டஸ் ஆப் மைண்ட் (#StatusOfMind) எனும் பெயரிலான இந்த அறிக்கை, சமூக ஊடக பயன்பாட்டால் கவலை, மனசோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதோடு உடல் தொடர்பான எதிர்மறை பிம்பங்களை வளர்ப்பது, இணைய சீண்டல், தூக்கமின்மை ஆகிய பாதிப்பைகளை உண்டாக்குவதாக தெரிவிக்கிறது. இவைத்தவிர, ’போமோ’ (FOMO ) என பிரபலமாக குறிப்பிடப்படும் தவறு விட்டுவிடுவோம் எனும் பதற்றத்தையும் உண்டாக்குகிறது. சமூக ஊடக தளத்தை பார்த்துக்கொண்டே இருக்காவிட்டால், ஏதேனும் முக்கிய நிகழ்வு அல்லது நிலைத்தகவலை தவற விட்டு விடுவோம் எனும் எண்ணமே, இப்படி குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ’பியர் ஆப் மிஸ்ஸிங் அவுட்’ என்கின்றனர். நோட்டிபிகேஷன் ஒலிக்கு பழகிவிட்ட பலருக்கு இந்த பாதிப்பு இருக்கலாம்.

இந்த நிலையில் இருந்து மீண்டு சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக தான், ஒரு மாதத்திற்கு சமூக ஊடகத்திற்கு விடை கொடுக்கலாமே எனும் யோசனையை முன் வைத்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இதை சாத்தியமாக்குவதற்காக, ஸ்கிரோல் பிரி செப்டம்பர் எனும் கோஷத்தோடு, இங்கிலாந்து அமைப்பு தனது இணையதளம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது. ; https://bit.ly/2vaJdA5

5b57235c-c4bb-4cd1-a0916504fd76b714ஒரு மாத காலம் சமூக ஊடகத்தின் பக்கம் போகாமல் இருப்பதோடு, இந்த காலத்தில் சமூக ஊடக பயன்பாடு தொடர்பாக சிந்தித்து பார்க்க பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகம் மூலம் பெறுவது என்ன மற்றும் இழப்பது என்ன எனும் புரிதலை ஏற்படுத்தவும் இந்த சமூக ஊடக நோண்பு உதவும் என கருதப்படுகிறது.

சமூக ஊடக அம்சங்களில் எவை சாதகமானவையாக இருக்கின்றன என புரிந்து கொள்வது நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்திலும் சமூக ஊடகத்துடனான இன்னும் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக்கொள்வதோடு, தனி வாழ்க்கை நலனை மேம்படுத்திக்கொள்ளவும் இது கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகத்தை பயன்பாடு என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க கூடிய நிலையை ஏற்படுத்தவும் இது வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆக, ஒரு மாத காலம் சமூக ஊடகத்திற்கு விடை கொடுக்க நீங்கள் தயாரா? இங்கிலாந்தில் உள்ளவர்கள் தான் இதை செய்ய வேண்டும் என்றில்லை. சமூக ஊடக பயன்பாட்டின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என நினைக்கும் யார் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம். இதற்காக சமூக ஊடக தனிப்பட்ட கணக்குகள் பக்கம் ஒரு மாதம் செல்லாமல் இருக்க வேண்டும். அத்திவாசியமான பணிகளுக்கு இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சரி ஒரு கை பார்த்துவிடலாம் என நினைத்தால் உங்கள் முயற்சி வெல்ல வாழ்த்துக்கள். சமூக ஊடகம் இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியாது என நினைப்பவர்கள், பகுதி அளவேனும் இதற்கான முயற்சியில் ஈடுபடலாம். அதாவது சமூக நிகழ்வுகளின் போது சமூக ஊடகத்தை பயன்படுத்துவதில்லை என உறுதி எடுத்துக்கொள்ளலாம். மாலை ஆறு மணிக்கு மேல் சமூக ஊடக பயன்பாட்டை தவிர்ப்பது, இரவு படுக்கையறையில் சமூக ஊடக பயன்பாட்டிற்கு குட்பை சொல்வது போன்ற கட்டுப்பாடுகளை பின் பற்றி பார்க்கலாம். அலுவலகம் அல்லது கல்விக்கூடங்களில் இருக்கும் போது சமூக ஊடகத்தை நினைத்து பார்ப்பதில்லை என்றும் உறுதி எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு மாத காலம் மூயன்று பார்த்து அந்த அனுபவத்தை, அதில் கற்றதையும் பெற்றதையும் அதன் பிறகு சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டு விழுப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

தளம் புதிது; ஒலி குறிப்புகளுக்கான இணையதளம்

SoundBibleதோற்றத்திலோ, வடிவமைப்பிலோ ’சவுண்ட்பைபில்’ இணையதளத்தை விஷேசமானது என்று சொல்வதற்கில்லை. ஆனால் பயன்பாட்டு நோக்கில் பார்த்தால் இது அருமையான தளம். அதிலும் குறிப்பாக ஒலி கோப்புகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த தளத்தின் அருமை பளிச்சென புரியும்.

எண்ணற்ற ஒலிகளை கொண்டுள்ள இந்த தளத்தில் விருப்பமான ஒலி கோப்புகளை தேடி பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாமே இலவசமாக பயன்படுத்தக்கூடிய வகையில் காப்புரிமை விடுபட்ட அல்லது, பொது காப்புரிமை ( கிரியேட்டிவ் காமன்ஸ்) கீழ் வரும் ஒலிகள். பவர் பாயிண்ட் காட்சி விளக்கத்தின் இடையே பயன்படுத்த அல்லது வீடியோ தொகுப்பில் பயன்படுத்த பொருத்தமான ஒலி தேவைப்பட்டால் இந்த தளத்தில் தேடிப்பார்க்கலாம்.

தேவையான ஒலியை தேடிப்பார்க்கும் வசதி இருக்கிறது. புதிதாக சேர்க்கப்படும் ஒலிகள் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன. பிரபலமாக ஒலிகளும் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. ஒலி கோப்புகள் தொடர்பான காப்புரிமை விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய ஒலி தேவை எனில் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. ஆனால் அதற்கு தளத்தை ஆதரிக்க முன் வர வேண்டும்.

மானவர்களும், ஆசிரியர்களும், ஏழை கலைஞர்களும் எளிதாக ஒலி கோப்புகளை பயன்படுத்த வழி செய்வதே இந்த தளத்தில் அவற்றை இலவசமாக வழங்குவதற்கான நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: http://soundbible.com/

வீடியோ புதிது; துயிலெழுதலில் ஐம்பது வகை

யூடியூப் வீடியோ பிரியர்கள் கெவின் பாரியின் பெயரையும் குறித்து வைத்துக்கொள்ளலாம். யூடியூப்பில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் கொண்டுள்ள கெவின், அனிமேஷன் கலையில் திறன் பெற்றவர். இவரது வீடியோக்கள் எல்லாமே புதுமையாக இருக்கின்றன. அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில் கெவின் தான் தூங்கி எழுவதை படம் பிடித்து காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒருவர் தூங்கி எழுவதில் ரசித்து பார்க்க என்ன இருக்கிறது என கேட்கலாம். விஷயம் என்னவெனில், ஒவ்வொருவரும் எப்படி தூங்கி எழுவார்கள் என விதவிதமாக தூங்கி எழுந்து அந்த காட்சிகளை வீடியோவாக்கி இருக்கிறார். சோம்பலுடன் தூங்கி எழுவது, இன்னும் 5 நிமிடம் கழித்து எழலாம் என நினைப்பவர்கள், யாரோ ஊடுருவியது போல நினைத்து திடிரென கண் விழ்ப்பவர்கள் என மொத்தம் 50 விதமான தூங்கி எழும் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

இதற்கு முன்னர், பலவிதமான கரோட்டும் காட்சிகள், பலவிதமாக கதவை திறக்கும் காட்சிகளை எல்லாம் இவர் வீடியோவாக்கி இருக்கிறார்.

கெவினி யூடியூப் சேனல்: https://www.youtube.com/user/kevinparry

தகவல் புதிது; ஜிமெயிலில் டிராப் பாக்ஸ் வசதி

FGS49a1vஇணைய கோப்பு சேமிப்பு சேவையான டிராப் பாக்ஸ், கூகுளின் ஜிமெயில் சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜிமெயில் பயனாளிகள், கோப்பு சேமிப்பிற்காக டிராப் பாக்ஸ் சேவையை பயன்படுத்துபவர்களாக இருந்தால், தங்கள் மெயிலில் இருந்தே டிராப் பாக்ஸ் கோப்புகளை அணுகலாம்.

கிளவுட் முறையில் கோப்புகளை சேமித்து, எந்த இடத்தில் இருந்தும் அணுக வழி வகுக்கும் சேவைகளில் முன்னணியில் விளங்கும் டிராப் பாக்ஸ், மைம்க்ரோசாப்ட், பேஸ்புக் உள்ளிட்ட பல சேவைகளுடன் தனது சேவையை ஒருங்கிணைப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் கூகுள் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் பயனாக தற்போது ஜிமெயிலுடன் டிராப் பாக்ஸ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஜிமெயிலுக்கான டிராப் பாக்ஸ் ஆட் ஆன் மென்பொருளை நிறுவுவதன் மூலம் இதை பயன்படுத்தலாம்.

இந்த ஒருங்கிணைப்பால் இரண்டு சேவைகளை பயன்படுத்துபவர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு: https://blogs.dropbox.com/dropbox/2018/07/gmail-add-on/

சைபர்சிம்மன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.