Tagged by: google

கூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்

கூகுல் நியூசுக்கு சென்றால் (கூகுல் தேடியந்திரத்தில் செய்திப்பகுதி) உலக செய்திகளை பெரும்பாலும் தெரிந்து கொண்டுவிடலாம். உலகின் முன்னணி நாளிதழ் மற்றும் செய்தி நிறுவனங்களில் இருந்து செய்திகளை வகைப்படுத்தி கூகுல் வழங்குகிறது. இதற்கு மாறாக உலகில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால் அதற்கு வரைபடம் மூலம் வழிகாட்டுகிறது நியூஸ்பேப்பர்மேப் ( ) இணையதளம். கூகுல் வரைபடம் சார்ந்த வரைபட மாஷ் அப் சேவைகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அதாவது கூகுலின் பூமி வரைபடம் மீது […]

கூகுல் நியூசுக்கு சென்றால் (கூகுல் தேடியந்திரத்தில் செய்திப்பகுதி) உலக செய்திகளை பெரும்பாலும் தெரிந்து கொண்டுவிடலாம். உல...

Read More »

மாணவர்களுக்கான சிறப்பு தேடியந்திரங்கள்!

இணையத்தில் தேடல் என்றவுடன் கூகிள் தான் பெரும்பாலனோருக்கு நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு கூகுள் தேடியந்திரம் பிரபலமாக இருக்கிறது. ஆனால் கூகிள் தவிர வேறு நல்ல தேடியந்திரங்களும் இணையத்தில் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அதைவிட முக்கியமாக உங்களைப்போன்ற மாணவர்களுக்காக என்றே சிறப்பு தேடியந்திரங்கள் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அப்படியா என்று ஆர்வத்துடம் கேட்கத்தோன்றுகிறாதா? முதலில் ஸ்வீட்சர்ச்.காம் (http://www.sweetsearch.com/ ) தேடியந்திரத்தை பார்க்கலாம். ஸ்வீட்சர்ச் தன்னை மாணவர்களுக்கான தேடியந்திரம் என்று வர்ணித்துக்கொள்கிறது. இந்த தேடியந்திரத்தில் என்ன சிறப்புத்தெரியுமா? இது கூகிள் போல […]

இணையத்தில் தேடல் என்றவுடன் கூகிள் தான் பெரும்பாலனோருக்கு நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு கூகுள் தேடியந்திரம் பிரபலமாக இர...

Read More »

கூகிள் வரைபடத்தில் சிம்பென்சிகளுடன் உலாவலாம்

கூகிள் ஸ்டீரிட்வியூ சேவை மூலம் கம்போடியாவின் அங்கோர்வாட்டில் இருந்து அரேபிய பாலைவனம் வரை உலகின் முக்கிய இடங்களை பார்த்து ரசிக்கலாம். இப்போது இந்த பட்டியலில் தான்சானியா கோம்பி தேசிய சரணாலயத்தில் உள்ள சிம்பன்சி குரங்குகளோடு உலாவுவதையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆம் கூகிள் தனது ஸ்டீரிவியூ சேவையில் உலகின் அரிய ரக சிம்பன்சி குரங்குகளின் புகலிடமான கோம்பி சரணாலயத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளது. ஆகவே டெஸ்க்டாப்பில் இருந்தே இந்த வனப்பகுதியில் உலாவும் சிம்பன்சிகளை பார்த்து ரசிக்கலாம். சிம்பன்சி குரங்குகள் என்றவுடன் , ஜேன் […]

கூகிள் ஸ்டீரிட்வியூ சேவை மூலம் கம்போடியாவின் அங்கோர்வாட்டில் இருந்து அரேபிய பாலைவனம் வரை உலகின் முக்கிய இடங்களை பார்த்து...

Read More »

அருமையான இணைய நூலகங்கள் !

காமிக் புத்தகங்கள் ,கதைப்புத்தகங்கள் ,நாவல்கள் இவற்றோடு மின்னூல்கள் என்படும் இ-புக்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். மின்னூல்களை இணையத்திலேயே படிக்கலாம் என்பதும் இப்போது ,மின்னூல்களை வாசிக்க என்றே இபுக் ரீடர்கள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இவ்வளவு ஏன் டேப்லெட் எனப்படும் பலகை கணிணிகளும் ஸ்மார்ட் போன்களிலும் கூட மின்நூல்களை சுபலமாக படிக்கலாம். எல்லா வகையான புத்தகங்களும் மின்னூல் வடிவில் கிடைக்கின்றன. இலவச மின்னூல்களும் அநேகம் இருக்கின்றன. மின்னூல்களுக்கு என்று பிரத்யேகமான இணையதளங்களும் கூட இருக்கின்றன. எல்லாம் சரி, நீங்களும் கூட […]

காமிக் புத்தகங்கள் ,கதைப்புத்தகங்கள் ,நாவல்கள் இவற்றோடு மின்னூல்கள் என்படும் இ-புக்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். மி...

Read More »

உங்கள் பாஸ்வேர்டு களவாடப்பட்டதா? அறிய ஒரு இணையதளம்

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களில் பாஸ்வேர்டு களவு பரிசோதனை தளமான ஹேவ் ஐ பீன் பாண்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதென்ன பாஸ்வேர்டு களவு என்று கேட்காதீர்கள். இந்த அறியாமையும் அப்பாவித்தனமும் ஆபத்தானது. இணைய தாக்காளர்கள் அடிக்கடி கைவரிசை காட்டி பிரபல இணையதளங்களின் பயனாளிகளின் பாஸ்வேர்டை ஆயிரக்கணக்கில் களவாடிச்செல்வது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. இந்த பாஸ்வேர்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. விழிப்புணர்வுக்காக இணையத்தில் வெளியிடப்படுவதும் உண்டு. இப்படி களவாடப்பட்ட பாஸ்வேர்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் இருக்கலாம். அல்லது இந்த […]

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களில் பாஸ்வேர்டு களவு பரிசோதனை தளமான ஹேவ் ஐ பீன் பாண்ட் இணையதளத்தையும் சேர்த்துக்...

Read More »