வலை 3.0-வலைக்கு முன் ….

Screenshot_2019-03-23 வலை 3 0 இணையம் தொடங்கிய கதைவலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதில், வலைக்கு முன் இணையம் பெரும்பாலும் வரி வடிவில் இருந்தது என்பது தான்.

ஆரம்ப கால இணைய பக்கங்களை பார்த்தால், அவை எந்த விதத்திலும் உற்சாகம் அளிப்பதாக இருக்காது. புரோகிராமிங்கிற்கான எழுத்து வடிவம் போல் இருக்கும் ஆதிகால இணைய பக்கங்களை இப்போது பார்க்கையில், வியப்பும் அலுப்பும் ஏற்படலாம்.

அப்போது இணையம் இருந்தது, ஆனால் இணையதளங்கள் இல்லை. இணையதளத்தில் இணையாக சொல்ல வேண்டும் எனில், பி.பி.எஸ் எனப்படும் இணைய தகவல் பலகைகளை சொல்லலாம். இணையத்தில் தகவல்கள் இருந்தன. ஆனால் அவற்றை அணுகுவது எளிதாக இல்லை. இணையத்தில் எது செய்வதாக இருந்தாலும், புரோகிராமிங் உள்ளிட்ட திறன்கள் தேவைப்பட்டன. இணையம் அற்புதமான இடமாக இருந்தது. ஆனால் அதில் புகுந்து விளையாடுவது என்பது தொழில்நுட்ப புலிகளுக்கு மட்டுமே சாத்தியமானது.

கம்ப்யூட்டரிலும், இணையத்திலும் ஆரம்ப கால புதுமைகளும், பாய்ச்சல்களும் பெரும்பாலும் தொழில்நுட்ப பித்தர்களாலேயே நிகழ்த்தப்பட்டன. ஏனெனில் அவர்கள் தான் இணையத்தையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தக்கூடியவர்களாக இருந்தனர். சாமானிய மக்கள் பெரும்பாலும் இணையத்தை அறியாதவர்களாக, அப்படியே அறிந்திருந்தாலும் விலகி நின்று அதை வியந்து பார்ப்பவர்களாகவும் இருந்தனர்.

அது மட்டும் அல்ல, அந்த காலத்தில் இணையத்தை அணுகுவது மட்டும் பெரிய விஷயமாக இருக்கவில்லை, அதை சாத்தியமாக்கிய கம்ப்யூட்டரை அணுகுவதும், பயன்படுத்துவதும் கூட செயற்கரிய சங்கதியாக தான் இருந்தது. இன்று பாக்கெட்டிற்குள் இருக்கும் ஸ்மார்ட்போனை கையில் எடுத்ததும் இணையத்தில் உள்ளே நுழையும் எளிய அனுபவத்திற்கு பழகியவர்களால், பல்கலைக்கழகங்களில் வீற்றிருந்த ராட்சத கம்ப்யூட்டரை ( மெயின்பிரேன் கம்ப்யூட்டர்) பயன்படுத்த நள்ளிரவில் சுவரேறி குதித்துச்சென்ற அக்கால இளைஞர்களின் துடிப்பு புதிராக கூட இருக்கலாம்.

ஆனால் ராட்சத கம்ப்யூட்டர்கள் மினி மைக்ரோ காம்ப்யூட்டர்களாகவும், பர்சனல் கம்ப்யூட்டர்களாகவும் சுருங்கி அவற்றின் செயல்திறன் அதிகரித்து வந்த நிலையில், இணையான போக்காக இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னலை அணுகி பயன்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இணையத்தை அணுகுவது என்பது சவாலானதாக இருந்தாலும், அதில் ஈடுபடுவது ஆர்வம் நிறைந்த தொழில்நுட்ப சாகசமாக அமைந்திருந்தது.

1989 க்கு முந்தைய இணைய அனுபவத்தை” அப்போது ( கம்ப்யூட்டர்) திரை இருந்தது, கீபோர்டு இருந்தது, பின்னணியில் இதெர்நெட் இணைப்பு இருந்தது’ என மார்க் மில்லர் எனும் குவோராவாசி வர்ணிக்கிறார். இணையத்தை அணுகுவதற்கான கம்ப்யூட்டரை தான் அவர் இப்படி குறிப்பிடுகிறார். இந்த கம்ப்யூட்டர்களால் தனியே எதையும் செய்ய முடியாது, வலைப்பின்னல் மூலம் வரி வடிவ தகவல்களை பெறக்கூடிய மினிகம்ப்யூட்டர் ஒன்றுடன் இதை இணைக்க வேண்டும் என்கிறார் அவர்.

நாங்கள் எப்படி இணையத்தை அணுகினோம் என்றால், எங்கள் துறையில் யுனிக்ஸ் அமைப்பு ஒன்றுக்குள் நுழைய வேண்டும். அங்கிருந்து, டெல்நெட் ( பல்கலைக்கழகத்தின் துணை வலைப்பின்னலில் உள்ள கம்ப்யூட்டர்களை அணுகுவதற்காக) பயன்படுத்தி, இமெயில், செய்தி, எப்.டி.பி, உரையாடல் ( இணைய அரட்டை) ஈடுபடுவோம் என்கிறார் அவர். அதே வீட்டில் இருந்தால், பல்கலைக்கழக தொலைப்பேசி மோடம் வங்கியை அழைத்து, மைக்ரோ கம்ப்யூட்டர் மற்றும் டெர்மினல் எமுலேட்டர் மென்பொருளை பயன்படுத்தி அங்கிருந்து கம்ப்யூட்டர் துறையின் யூனிக்ஸ் அமைப்பை தொடர்பு கொள்வோம் என்றும் அவர் விவரிப்பு தொடர்கிறது.

ஏழு மலை தாண்டி, ஏழு கடல் கடந்து உள்ள ஒரு தீவில், மரக்கிளையில் ஒளிந்திருக்கும் கிளியின் வயிற்றில் மந்திரக்கல் இருப்பதாக சொல்லப்படும் மாயாஜால கதை வர்னணை போல இது அமைந்திருக்கிறதா? அந்த காலத்தில் இணையத்தை அணுகுவது இப்படி தான் இருந்தது.

இணையத்தை அணுகுவதற்கான எளிய நுழைவு வாயில்களான பிரவுசர்களும், தேவையான இணையதளத்தை சென்றடைய அதில் இணைய முகவரிகளை உள்ளீடு செய்வதும், அங்குள்ள பக்கங்களை பின்னிணைப்பாக அணுகும் வசதியும் அப்போது அறிமுகமாகி இருக்கவில்லை. இணைய தேடலுக்கான உத்திகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அல்டாவிஸ்டா, கூகுள் போன்ற எளிதாக தேடும் வசதி அறிமுகமாகியிருக்கவில்லை. ( இணையத்தின் முதல் தேடியந்திரமான ஆர்ச்சி 1990 ல் அறிமுகமானாலும் அது பிடிபி கோப்புகளை தேடுவதாகவே இருந்தது). இவற்றை எல்லாம் வலையின் வருகை தான் கொண்டு வந்தது. அதன் பயனாகவே சாமானிய மக்கள் இணையத்தை பயன்படுத்துவது சாத்தியமானது.

கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தம் வருகுது என்ற அகிம்சை பாடல் போல, கோடிங் தெரியாமல், புரோகிராமிங் இல்லாமல் இணையத்தை எவரும் எளிதாக அணுக வழி செய்தது வலையின் கண்டுபிடிப்பு தான்.

ஆனால் வலையை புகழ்வதற்காக இணையத்தை இகழ்வதற்கில்லை. அதன் ஆரம்ப வடிவம் எளிதில் அணுக முடியாததாக இருந்தாலும், இணையம் ஒரு தொழில்நுட்ப அற்புதம் என்பதையும் மறுப்பதற்கில்லை. மற்ற எந்த தொழில்நுட்பத்தையும் விட, தகவல் தொடர்பிலும், தகவல் கண்டறிதல், பரிமாற்றத்தில் இணையம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இணையம் எனும் தொழில்நுட்ப அற்புதம் ஓரிரவில் உருவாகிவிடவில்லை. அது எந்த ஒரு தனிநபராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல அறிஞர்களின் கூட்டு முயற்சியாக, ஒவ்வொரு நுட்பமாக உருவாக்கப்பட்டு மாபெரும் வலைப்பின்னலாக உருவானது. நான்கு ராட்சத கம்ப்யூட்டர்களின் இணைப்பாக துவங்கிய இணையம் அதன் பின் எப்படி எல்லாம் வளர்ச்சி அடைந்தது என்பதை பார்த்தால் பெரும் வியப்பாக இருக்கும்.

அதன் பின் உருவான வலை தரும் வியப்பை உணர முதலில் இணையத்தின் பூர்வகதையை பார்க்கலாம்

வலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதில், வலைக்கு முன் இணையம் பெரும்பாலும் வரி வடிவில் இருந்தது என்பது தான்.

அதன் பின் உருவான வலை தரும் வியப்பை உணர முதலில் இணையத்தின் பூர்வகதையை பார்க்கலாம்.

தமிழ் இந்துவில் எழுதி வரும் தொடர்…. https://tamil.thehindu.com/society/lifestyle/article26576325.ece

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.